June 2017

14 வயது சிறுமியை ஏழு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நிர்பயா கொடுமை நிகழ்ந்த பின்பும் கூட சட்டம் ஒழுங்கில் கெடுபிடியும் இல்லை, ஆண்கள் மனதில் ஈரமும் இல்லை. பீகார் மாநிலம் லகிசாராய் மாவட்டம் லகோசக் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு தூக்கத்தில் இருந்து எழுந்த சிறுமி சிறுநீர் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். அப்போது பின்னால் இருந்து சிறுமியை கட்டிப்பிடித்த சிலர் அருகில் இருந்த மைதானத்திற்கு இழுத்துச்சென்றுள்ளனர்.ஆறு, ஏழு பேர் இருந்ததாகவும், அதில் இரண்டு பேர் தங்கள் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் என்றும் அந்த சிறுமி கூறியுள்ளார்.அப்போது சுயநினைவை இழந்த சிறுமி கண் விழித்து பார்த்த போது ரயிலில் இருப்பதை உணர்ந்துள்ளார்.

அவருக்கு அருகில் இருந்த இரண்டு பேர் ரயிலில் இருந்து சிறுமியை வெளியே தள்ளிவிட்டுள்ளனர்.குற்ற செயலில் ஈடுபட்ட ஒருவன், சிறுமி படிக்கும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிப்பவன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமியின் தாத்தா விடியற்காலை 3 மணிக்கு எழுந்து பார்த்த போது சிறுமி காணவில்லை என்று கூறியதை அடுத்து வீட்டில் உள்ளவர்கள்தேட தொடங்கியுள்ளனர். 12 மணி நேரத்திற்கு பின்னர் கியுல் ரயில் நிலையத்திற்கு அருகே சிறுமியை கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.முதலில் லகிசராய் சதார் மருத்துவமனையில் சிறுமியை சேர்த்துள்ளனர்.

ஆனால் மருத்துவர்கள் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சொன்னதால் அங்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. மீடியாவிற்கு விஷயம் தெரிந்ததை அடுத்து மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கினர் என்கிறார் சிறுமியின் சதோதரர்!சிறுமிக்கு ரத்தப்போக்கு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் இடுப்பில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சிறுமியின் வாக்குமூலத்தின் படி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ஆண்களின் கடந்த காலத்தை பெண்கள் சுமைதாங்கிகளாக தாங்கிக் கொள்கிறார்கள். அதன் சுவடு சிறிதும் தெரியாமல் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் மனப்பக்குவம் பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

அந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது கேள்விக்குறியே.

ஆண் கடந்த காலத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைப்பது போல, பெண் தன்னுடைய கடந்த காலத்தை ஆணிடம் வெளிப்படுத்த தயங்குகிறாள்.

பெண்ணானவள் எப்போதுமே குடும்பத்தின் கவுரவமாக, எதிர்காலமாக கருதப்பட்டாள். இதுவும் ஒருவகை அடிமைத்தனம் தான். இன்று முன்னேறிய சமூகத்தில் திருமணம் பல மாற்றங்களுக்குஉட்பட்டிருக்கிறது.

பெண்கள் தயக்கமின்றி மறுமணம் செய்து கொள்கிறார்கள். இழந்த வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் கடந்த காலம் எனும் திரையை மட்டும் விலக்க தயங்கும் சூழ்நிலை இன்றும் இருந்து வருகிறது. காரணம் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம்தான்.

பெண்கள் நம்மைப் போல உயிரும் உணர்வும் உள்ள ஜீவன்கள் என்பதை ஆண்கள் ஏற்றுக் கொள்ளவே பலகாலம் பிடித்தது.

ஆண்கள் தன்னைப் போலவே பெண்களும் உயிருள்ள பிரஜைகள் என்பதை கருத்தில் கொண்டாலே போதுமானது. அவர்கள் கடந்த காலத்தை பரந்த மனதுடன் உற்று நோக்கி அவர்களுடைய நேர்மையான மனதை அஸ்திவாரமாக கொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.

ஏனென்றால் கடந்த காலத்தை விட நிகழ்காலம் முக்கியமானது. அது ஒளிமயமாக மாற வேண்டுமானால் கடந்த கால அவலங்களை தூக்கிப் போட வேண்டும்.

அதற்கு உயர்ந்த உள்ளம் தேவை. இது ஒவ்வொரு ஆணிடமும் இருக்க வேண்டும். இருந்தால் அது அவர்களுடைய வாழ்க்கையை வளமாக்கும்.

இந்த உலகில் அப்பா அம்மா இறந்தால் கூட கண்ணீர் விடுவார்கள், ஆனால் காதலியோ காதலனோ இறந்தால் தான் உயிரையே விடுவார்கள் என்ற வசனங்கள் எல்லாம், கேட்பதற்கும் பேசுவதற்கும் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்.

ஆனால், நிஜ வாழ்க்கையில் சற்றும் எடுபடாத ஒன்று, சிலர் காதல் தோல்வி அடைந்துவிட்டால், உலகமே இருண்டுவிட்டது போன்று எண்ணி ஒரு மூலையில் உட்கார்ந்து விடுவார்கள்.

ஆனால், எத்தனை பேருக்கு தெரியும் காதல் தோல்விக்குள்ளும் ஒளிமயமான வாழ்க்கை மறைந்து இருக்கிறது என்று.

வாழ்க்கை என்பது நிலையானது அல்ல, எல்லாமே கடந்து போவது தான் என்பதை அழுத்தமாக உணர்த்தும் செயல் காதல் தோல்வி.

எதற்காகவும் கண்ணீர் சிந்தி பயனில்லை, நமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டியது மட்டுமே நமது பணி.

காதல் தோல்வி என்பது வாழ்க்கையின் வலிமையை தரவல்லது. மனதளவில் முதலில் பாதிப்படைந்தாலும், பின்னாளில் இதே வலிமையாக அமைகிறது.

மேலும் வாய்ப்புகள் இருக்கிறது என உணர்த்துவதும் காதலே. முதல் தோல்வி முற்றிலும் தோல்வி அல்ல. அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெறலாம் எனும் பாடத்தை கற்பிப்பது காதல் தோல்வி தான்.

வாழ்க்கையில் விளையாட்டாக இருக்கும் ஆண்களை முதிர்ச்சி அடைய வைப்பது சில காதல் தோல்விகள் தான். இவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கையின் அடுத்தக் கட்டம் என்ன என்று உணர்த்துவதும் சில காதல் தோல்விகள் தான்.

நமது வாழ்க்கையில் தானாக நடக்கும் அனைத்துமே நன்மைக்கே என்பதை உணர்த்துவது காதல் தோல்வி தான்.

நூற்றில் பத்து பேர் தங்களுக்கான சிறந்த துணையை இழப்பது உண்டு. ஆனால், மற்ற 90 பேர் காதல் தோல்விக்கு பிறகு தான் தங்களுக்கு ஏற்ற உண்மையான துணை யாரென அறிகிறார்கள், இதுவே நிதர்சனமான உண்மை.

இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் முத்தமிடுகையில் ஒரு தெளிவற்ற வைரஸ் பரவுவதாக சொல்கிறார்கள்.

இது பெண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

மேற்படி HHV-6A வைரஸ் முத்தமிடப்படுவதால் தொற்றுவதாக இனங்காணப்பட்டது இதுவே முதல் தடவையல்ல.

ஆனாலும் அது மலட்டுத்தன்மையுடன் சம்பந்தப்பட்டிருப்பது அறியப்பட்டது இதுவே முதல் தடவை.

இவ் ஆய்வின் போது பரிசீலிக்கப்பட்ட 30 கருத்தரிப்பு பிரச்சனையுள்ள பெண்களில் 13 பேர் அதாவது 43 சதவீதத்தினரில் HHV-6A வைரஸ் இருப்பது இனங்காணப்பட்டது.

மீதி 36 ஆரோக்கியமான பெண்களில் மேற்படி வைரஸ் அவதானிக்கப்படவில்லை.

இவ் HHV-6A வைரஸ் மற்றும் அதன் குடும்பமான HHV-6B வைரஸ் ஆனவை எந்தவொரு அவதானிக்கக்கூடிய அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை.

இவ் ஆய்வில் HHV-6A வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்களிலும் Cytokines அளவு அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்டது.

இவை கருக்கட்டப்பட்ட முட்டையின் வளர்ச்சியை தூண்டும் சமிக்ஞைப் புரதங்களாகும்.

அதேநேரம் Estradiol ஓமோனின் அளவும் கூடுதலாக காணப்பட்டமை, இவ் ஓமோன் HHV-6A வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியப்பாட்டை அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகளை சந்தேகப்பட வைத்தது.

ஆனாலும் HHV-6A அல்லது HHV-6B க்கு எதிரான சிகிச்சைகள் எதுவும் தற்போது நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்து கொள்வது சுலபம். திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக இருப்பது என்பது கணவன் மனைவி என இருவரும் சேர்ந்து விளையாடும் ஒரு விளையாட்டே. நீங்கள் புதிதாக திருமணம் ஆனவர் என்றால், தினமும்

உங்கள் துணையைப் பற்றி புதிதான விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் சாகசங்களை உங்கள் திருமண வாழ்க்கை உங்களுக்கு அளிக்கும்.

ஆனால்காலம் நகரும்போது , குழந்தைகள் மற்றும் பொறுப்புகள் என வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற் படும். அப்போது காதல் என்ற அந்த தீப்பொறி மெதுவாக மறையத் தொடங்கும். உங்கள் துணையுடன் ஒரே மாதிரி யான வாழ்க்கையை வாழ தொடங்கி விடுவீர்கள். ஒரே பாட்டுக்கு நடனம் ஆடி க்கொ ண்டிருப்பதால் அதன் அனைத்து நடன அசைவுகளும் உங்களுக்கு தெரிந்தவையாக தா ன் இருக்கக்கூடும்.

அப்படி ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்வதால், வாழ்க்கையின் மீது சலிப்பு தட்டி விட்டதா? அப்படியானால் உங்கள் உறவில் சில புதுமைகளையும், புத்துணர்ச்சியையும் புகுத்த வே ண்டும்.

உங்களையும் உங்கள்துணையையும் மீண்டும் ஒரு முறை கண்டுபிடியுங்கள். ஏ தாவது காபி ஷாப் செல்லுங் கள், ஒளிந்து விளையாடுங்கள், பப் போன்ற இடங்களுக்கு சேர்ந்து செல்லுங்கள். வீட்டிற்கு சென்றால் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களான குடும்பம், குழந்தைகள், பில்கள் போன்றவற் றை தவிர எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள். காதலி த்த நாட்களில் எப்படி இருந்தீர்கள் என்பதை நினைவு கூர்ந்து அந்த சொர்க்க நாட்களை மீண்டும் கொண்டு வாருங்கள்.

உங்கள் காதலை சைகள், முத்தங்கள், முக்கியமாக வார்த்தைகளால் அடிக்கடி வெளிப்படுத்துங்கள்.”ஐ லவ் யூ” என கூறுங்கள். அப்படிசெய்யும் போது அவரின் கண்ணை பார்த்து சொல்லுங்கள்.

வெளியிடங்களுக்கு செல்லும் போ து உங்களின் ஸ்பரிசம் அவர் மீது அதிகம் படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கைக ளைப் பற்றிக் கொள்வது, கட்டிப் பிடிப்பது, முகத்தை, கூந்தலை, கழுத்தை தொடுவது போன்றவற்றை செய்யலாம். இப்படி உடலுறவை சம்பந்தப் படுத்தாமல் அரவணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்மீது நீங்கள் கொண்டிருக் கும் நெருக்கம் அவருக்கு தெரிய வரும். வெட்கப் பட்டு ஒதுங்கி விடாதீர்கள். எப்படி ஒருவர்மீது ஒருவர் காத ல், அன்பு மற்றும் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை உங்கள் குழந்தைகள் பார்க்க வும், உணரவும் செய்யுங்கள்.

உங்கள் துணையை எதற்காக வும் புறக்கணிக்காதீர்கள். வாரம் ஒரு முறையாவது ஆச் சரியங்களை அளியுங்கள். அது எதுவாக வேண்டுமா னாலும் இருக்கலாம் – அது காதல் கடிதம் அல்லது பூச் செண்டு அல்லது வார இறு தி சுற்றுலா என எதுவாக வேண்டுமானாலும் இருக்க லாம். திடீரெனதோன்றுவ தை செய்யுங்கள்! அது மழை யில் நடப்பதாக இருக்கட்டு ம் அல்லது வேலைக்கு விடுப்பு விடுவதாக இருக்கட்டு ம் அல்லது படத்திற்கு போவதாக இருக்கட்டும். உங்க ள் உறவில் மீண்டும் அந்த பைத்தியகாரத்த னங்களை கொண்டு வாரு ங்கள்.

எதற்கும் காலம் கடந்து போ கவில்லை. உங்களுக்கு எந் தவகை நடனம் வருகிற தோ அதனை ஆடுங்கள். அது சல்சா, பால்ரூம் நடன ம் அல்லது டாங்கோ என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது உங்கள் கூச் சங்கள் மற்றும் தடைகளை நீக்குவதோடு மட்டுமல்லாது, உடல் மற்றும் உணர்ச்சி ரீதியா னவேறுபாடுகளை கொண்டு ள் ள நீங்கள் இருவரும் ஒன் றாக இணைய வைக்க உதவும்.

உங்கள் தோற்றத்தின் மீது அக்கறை கொள்ளாமல் சோ ம்பேறியாக இருக்காதீர்கள். வெளியே படத்திற்கு செல்லு ம் போதோ அல்லது படத்தி ற்கு செல்லும் போதோ உங்கள் துணையுடன் செல்லும் போது நீங்களும் அழகாக தெரிய வேண்டும் என அவர் விரும்புவார் அல்லவா? சின்ன சின்ன விஷயங்க ள் கூட அந்த காதல் பொறியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். நேரம்கிடைக்கவில்லை என்று ஏதாவது சாக்கு போக்குசொல்லாதீர்கள். இந்த சாக்குகளுக்கு ஒரு தீர்வை கண்டுபிடியுங்கள் . அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி உங்கள் துணை மற்றும் திருமண வாழ்க்கைக்காக தானே!

பெரும்பாலும் இன்று ஆண்களும் பெண்களும் காலம் கடந்து திருமணம் செய்துகொள்வது என்பது சாதாரணமாகிவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் நம் உணவு முறை, வாழ்வியல் முறை என்ற அனைத்தும் மாறிவிட்டது. அதனால் குழந்தையின்மை பிரச்சினை நம்முடைய முந்தைய தலைமுறைக்கு இல்லை என்று அர்த்தம் இல்லை. அவர்களுக்கு இன்று உள்ள அதிக எண்ணிக்கையில் இல்லை எனலாம். இன்று தோராயமாக நாற்பது விழுக்காடு அளவிற்கு இந்த பிரச்சினை அதிகரித்துள்ளது. இது இளம் தம்பதியரை மிகுந்த மன உளைச்சலுக்கும் பல குழப்பத்திற்கும், குடும்ப பிரச்சினைகளுக்கும் உட்படுத்தியுள்ளது.

சரியான புரிதலும், அதை எவ்வித பதட்டமும் இன்றி அணுகும் பொறுமையும் இருந்தால் இதை முழுமையாக அறிந்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இதை தக்க மருத்துவரால் ஓரளவு என்ன பிரச்சினை, அதை எப்படி சரி செய்வது என்பதை எளிதில் அறிந்துகொள்ளமுடியும்.

ஆண்களுக்கான காரணங்கள் :

ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள், உளவியல் காரணங்கள், உறுப்பில் குறைபாடு மற்றும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும். மேலும் கீழகண்டவற்றில் ஆண்கள் கவனமாக இருக்கவேண்டும்.

* மன அழுத்தம்
* உடல் பருமன்
* அளவுக்கு அதிகமாக குடிப்பது
* நீரிழிவு
* இறுக்கமாக ஜீன்ஸ் அணிவது
* உடலை பராமரிக்க ஸ்டெராய்டுகள் எடுத்துக் கொள்வது
* அதிகமாக வண்டி ஓட்டுவது
* புகைப்பிடிப்பது
* ஜங்க் உணவுகளை சாப்பிடுவது
* போதிய தூக்கம் இல்லாதது
* இறுக்கமாக உள்ளாடை அணிவது
* மொபைலை பாக்கெட்டில் வைப்பது
* நோய்த்தொற்றுகள் இருப்பது
* ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
* லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்வது

பரிசோதனைகள் :

ஆணின் விந்தணு பரிசோதனை அவசியம். இந்த சோதனையில் விந்தணு கொள்ளளவு, எண்ணிக்கை, நகரும் தன்மை, Morphology போன்றவை கணிக்கப்படும்.

விந்து அணுக்கள் எண்ணிக்கைக் குறைவு, விந்து அணுக்களின் இயக்கத் தாமதம் என இரண்டுக்குமே, உணவில் முளைகட்டிய பயறு வகைகளும், லவங்கப்பட்டை, சாதிக்காய், போன்ற நறுமணப் பொருட்களும் நிறைய சேர்க்க வேண்டும்.

தினசரி முருங்கை கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரப்பருப்பு ஆகியவற்றை உணவில் சேர்ப்பதும் இப்பிரச்சினைகளைக் குறைக்கக் கண்டிப்பாக உதவும்.

போகம் விளைவிக்கும் கீரைகள் எனச் சித்த மருத்துவம் பட்டியலிட்டுச் சொன்ன தாளி, முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஒன்றைக் கண்டிப்பாய் சமைத்துச் சாப்பிட வேண்டும். புலால் உணவைக் காட்டிலும், மரக்கறி உணவுக்கு விந்து அணுக்களை அதிகரிப்பதிலும் இதன் இயக்கத்தைக் கூட்டுவதிலும் அதிகப் பயன் உண்டு என்கின்றன இன்றைய விஞ்ஞான ஆய்வுகள்.

பெண்களுக்கான காரணங்கள் :

பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பைக் கட்டிகள், முட்டை வெளியேறுவதில் பிரச்னை, சினைப்பை, கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்னை, ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பினால் உண்டாகும் நோய்கள், உடல் பருமன், சர்க்கரை, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப் பேறு தடைபடலாம்.

பரிசோதனைகள் :

Ovulation சமயத்தில் தான் முட்டை உற்பத்தியாக கருத்தரிக்க ஏதுவாகும். Ovalution period தொடங்கி விட்டதா என்று அறிய பெண்ணின் உடல் உஷ்ணத்தை Thermometer ஆல் தெரிந்து கொண்டால் போதும். சாதாரண சூட்டிலிருந்து 0.9 டிகிரி தி (0.5டிகிரிc) அதிகம் தெரிந்தால்

Ovulation தொடங்கிவிட்டது. என அறியலாம். இதை விட வேறு பல புதிய சாதனங்களும், சோதனைகளும் (Ultra Sonography or ovulation predicter kits) வந்து விட்டன. ரத்தத்தில் உள்ள Progesterone ம், உமிழ்நீரும் சோதிக்கப்படும்.

உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

பூக்களைச் சூடும் கால அளவு

முல்லைப்பூ – 18 மணி நேரம்

அல்லிப்பூ – 3 நாள்கள் வரை

தாழம்பூ – 5 நாள்கள் வரை

ரோஜாப்பூ – 2 நாள்கள் வரை

மல்லிகைப்பூ – அரை நாள்கள் வரை

செண்பகப்பூ – 15 நாள்கள் வரை

சந்தனப்பூ – 1 நாள்கள் மட்டும்

மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ – சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ – இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.

பூக்களின் பயன்கள்:

ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.

பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.

செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

மகிழம்பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.

வில்வப்பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.

சித்தகத்திப்பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

தாழம்பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.

தாமரைப்பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.

கனகாம்பரம்பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.

தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.

பூக்களைச் சூடும் முறை:

பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது. மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.

மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும். மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும். முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம். உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.

பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:

பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.

இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.

தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும். ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.

மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது. பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது. மனமாற்றத்துக்கு உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது

பெண்கள் கும்பல் கூடி அரட்டை அடிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் தெரியாமல் அரட்டை அடிப்பார்கள், அப்படி என்னத்தை பற்றி தான் பேசுவார்களோ என்று ஆண்கள் அலுத்துக்கொள்வது உண்டு, வயசுப்பெண்கள் அரட்டை அடிக்கும் போது என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எங்கேயாவது விருந்துகளுக்கோ பார்ட்டிகளுக்கோ சென்றால் அவர்கள் கற்றுக்கொண்ட அல்லது சிறப்பாக செய்யக்கூடிய புதுவகை உணவுகள் பற்றி பேசுவார்கள், அது போல இண்டீரியர் டெக்கரேஷன் பற்றியும் விரும்பி பேசுவார்கள்.

நேரம் ஆக ஆக பெண்கள் சாப்பாடு, வீட்டு அலங்காரத்திலிருந்து உடைகள், நகைகள் பற்றி பேசி முடித்த பின் செக்ஸ் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள், இனி தான் கச்சேரி களைகட்டும், அதுவரை உம்மனா மூஞ்சியாக இருந்த பெண்களை கூட வற்புறுத்தி செக்ஸ் பற்றி பேச சொல்லுவார்கள் பிற பெண்கள், கேலியும் கிண்டலும் அதிகரிக்கும்.

ஆண்களை விட பெண்களே செக்ஸ் பற்றி அரட்டைகளில் அதிகமாக பேசுகிறார்கள், பெரும்பாலான பெண்கள் செக்ஸ் பற்றியே பார்ட்டிகளில் பேசவும், விவாதிக்கவும் விரும்புகிறார்கள். பெண்கள் தங்களுடைய பார்ட்னர்களிடம் பேச முடியாத வித்தியாசமான தலைப்புகளை இந்த பார்ட்டிகளில் வெளிப்படையாக பேசுவார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்களில் வித்தியாசமாக இருப்பவை ஆற்றல், அளவு, பருமன், நிலை போன்றவையே. மேலும் பல பெண்கள் செக்ஸ் குறித்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் சந்தேகங்களை மூத்த அனுபவசாலில் பெண்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும் இதை பயன்படுத்துகிறார்கள்.

குழுவில் தங்களை முன்னிலைப்படுத்திக் காட்டவும், மற்றவர்களின் கவனத்தைப் பெறவும் தங்களுடைய பார்ட்னருடன் ஏற்பட்ட சில தனிப்பட்ட நெருக்கமான செயல்பாடுகளை சில பெண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

படுக்கையறையில் ஆண்களின் செயல்படும் ஆற்றல் மற்றும் அளவு ஆகியவை பார்ட்டிகளில் பேசப்படும் மற்றொரு முக்கியமான தலைப்பாக இருக்கின்றன. படுக்கையறைகளில் நடக்கும் விளையாட்டுத்தனமான செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் இந்த அரட்டைகளில் பகிர்ந்து கொள்வார்கள். புதிய நிலைகள் மற்றும் நடவடிக்கைகளை எப்படி செய்வது என்றும் கூட பகிர்ந்து கொள்வார்கள்.

தற்போதைய பேஷன் மற்றும் லேட்டஸ்ட் ட்ரெண்ட் உடைகள், நகைகள், அலங்காரம் பற்றி பேசிக்கொள்வதில் அலாதியான பிரியம் உள்ளவர்களாக இருப்பார்கள்

ஆண்களின் பர்ஸ்க்கு வேட்டு வைப்பதும் வீட்டில் புயலை கிளப்பவும் செய்யும் அரட்டை இது தான், சமீபத்தில் பெண்கள் தாங்கள் செய்த ஷாப்பிங் பற்றியும் என்னென்ன வாங்கினார்கள், என்னென்ன பொருட்களை அவர்கள் கணவர்கள் பரிசாக அளித்தார்கள் என்பதும் அவற்றின் விலைகளும் அக்குவேறு ஆனி வேராக அலசப்படும் இதன் பின் அன்றிரவு அவர்கள் கணவர்களின் நிம்மதியும் பர்ஸ்சும் பறிபோகும்.

என்ன உங்களுக்கு ஒரு பெண்ணை பிடித்துவிட்டதா? அந்த பெண்ணோடு என்ன தான் பேசினாலும் பழகினாலும் அந்த பெண்ணுக்கும் உங்களை பிடிக்குமா என்று கேட்பதில் தயக்கமா?

 எதற்காக அந்த பெண்ணிடம் இதை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்? தேவையே இல்லை..!

 அந்த பெண் செய்யும் சின்ன சின்ன காரியங்களே உங்களை பிடிக்குமா? பிடிக்காதா என்பதை வெளிப்படுத்திவிடும்.

தொட்டு பேசுதல்
 ஒரு பெண்ணுக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால் நிச்சயமாக அவளது உடலின் எந்த பாகத்தையும் உங்கள் மீது பட விடமாட்டார். இவ்வளவு ஏன் அந்த பெண்ணின் விரல் நுனி கூட உங்கள் மீது படாது. உங்களுடன் பேசும் போதோ அல்லது விளையாட்டாக உங்களை அடித்து பேசுவது ஆகியவை உங்களை அந்த பெண்ணுக்கு பிடிக்கும் என்பதை காட்டும். மேலும் உங்களை பிடித்து இருக்கிறது என அவள் வெளிப்படையாக இதன் மூலம் உங்களுக்கு உணர்த்துவாள்.

தோழிகளிடன் உங்களை பற்றி பேசுதல்
 சதா சர்வ காலம் உங்களை பற்றியே தனது தோழிகளிடம் பேசி அவர்களை வெறுப்படைய செய்துவிடுவார். நீங்கள் அருகில் இல்லாத நேரத்தில் கூட உங்களை பற்றியே பேசிக்கொண்டு இருப்பார்.

அவளது கண்கள்
உதடுகள் பொய் சொன்னாலும் கண்கள் பொய் சொல்லாது என்று கூறுவார்கள். அது உண்மை தான். உங்களை அந்த பெண்ணுக்கு பிடிக்கும் என்றால் உங்களுடன் பேசும் போது அந்த பெண்ணின் கருவிழிகள் விரிந்து காணப்படும். அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

அதிகமாக இடம் தருவது
ஒவ்வொருவருக்கும் சில தனிப்பட்ட பர்சனல் விஷயங்கள் இருக்கும். அதுமாதிரி விஷயங்களில் பெண்கள் அனைத்து ஆண்களையும் பத்து அடி தள்ளியே வைத்து இருப்பார்கள். ஒரு பெண் உங்கள தனது பர்சனல் வாழ்க்கைக்குள் உங்களை அனுமதித்தால், நீங்கள் அந்த பெண்ணின் மனதை கவர்ந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

முதலில் போன் செய்வது
 அந்த பெண் உங்களை பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பதால், நீங்களாக முன்வந்து போன் அல்லது மேசேஜ் செய்யும் வரை அவரால் காத்திருக்க முடியாது. எனவே அவர் பொருமையை மீறி அவரே உங்களை தொடர்பு கொள்வார்.

மொக்கை ஜோக்குகளுக்கும் சிரிப்பார்
நீங்கள் மிக சிறப்பாக காமெடி செய்பவர்களாக இருந்தாலும் கூட சில சமயங்களில் மொக்கையாக காமெடி செய்வீர்கள். அதற்கு கூட அவர் சிரித்தால், உங்களை  பிடித்து இருக்கிறது என்று தான் அர்த்தம்.

 

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.