Articles by "srilanka"

Showing posts with label srilanka. Show all posts

வவுனியாவில் ஆசிரியை மீது துஷ்பிரயோகம் மற்றும் கொலை முயற்சி. வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் பாடசாலை செல்வதற்காக காத்திருந்த ஆசிரியை ஒருவர் மீது இளைஞன்
ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

இன்று (06) காலை 6.30 மணியளவில் வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைக்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் பாடசாலை செல்வதற்காக பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த ஆசிரியை மீது அப்பகுதிக்கு திடீரென வந்த இளைஞன் ஒருவர் ஆசிரியை மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சி செய்ததுடன் கொலை முயற்சியையும் மேற்கொண்டுள்ளார்.

மேலும்ஆசிரியை அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்ததையடுத்து குறித்த இளைஞன் ஆசிரியை மீது கண்மூடி தனமாக தாக்குதலை மேற்கொண்டதுடன், கடித்து குதறியும் உள்ளான் அதன் பின் யாரும் காணாதவாறு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளான் கூக்குரல் சத்தம் கேட்டதையறிந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவ்விடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட ஆசிரியையை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார் .

குறித்த நபர் மட்டக்களப்பை வதிவிடமாக கொண்டவன் எனவும் ஆசிரியரை ஒருதலையாக பட்சமாக காதலித்து வந்துள்ளான் எனவும் அறியப்படுகின்றது.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. விநாயகமூர்த்தி ரமணி(60)என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இன்று (௦6.03.2017) இரவு மகளுடன் உணவு உட்கொண்டுவிட்டு வீட்டின் பின்புறம் தாய் சென்றதாகவும் நீண்ட நேரம் வராததையிட்டு தேடிச்சென்ற வேளையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டதாகவும் பிள்ளைகள் தெரிவித்தனர்.

இதேவேளை இறந்த இப் பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.


  • நடிகர்கள் – கவிமாறன் சிவா,தினந்தினி மற்றும் பலர்…
  • பாடகர் – அருள் தர்சன்,ரோஷிதா
  • கதை மற்றும் பாடல் வரிகள் – எம் எப் ஜோன்சன்
  • இசை – சுதர்சன்
  • இயக்கம்,ஒளிப்பதிவு,தொகுப்பு – புலவர் ரமேஷ்
  • துணன இயக்கம் – குருநீலன் லீ
  • தயாரிப்பாளர் – அன்ரா மற்றும் புலவர் வீடியோ ரமேஷ்

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவெளி என்னும் இடத்தில் காதலனுடன் இருந்த இளம் பெண்ணை மூன்று பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில்
 இரண்டு எதிரிகளுக்கு தலா பத்து ஆண்டுகள் கடூழியச்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் இன்று விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இந்த வழக்கில் மூன்றாம் எதிரியான நபர் ஆரம்பத்தில் இருந்தே கைதாகாமல் தலைமறைவாக இருந்ததையடுத்து, அவர் இல்லாமலேயே கைது செய்யப்பட்ட இரண்டு எதிரிகளுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இந்த சம்பவம் 2014ஆம் ஆண்டு பங்குனி மாதம் 7 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று 18 வயதுடைய பெண் ஒருவர் தனது காதலனுடன் ஒதுக்குப் புறமாக இருந்த வேளையில் அங்கு வந்த மூன்று பேர் காதலனைத் தாக்கிவிட்டு அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்த 3 இராணுவத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஒன்றின் உதவியுடன் பொலிஸார் துரிதமாக செயற்பட்டு இரண்டு பேரை கைது செய்திருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் தலைமறைவாகி விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் பாலேந்திரன் பிரபாகரன், சண்முகதாஸ் ரஜிதன், சிறிகணேஸ் சுதாகரன் என்ற மூவருக்கும் எதிரா இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவு புரிந்ததாக குற்றம் சுமத்தி சட்டமா அதிபரினால் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் மூன்றாம் எதிரி கைதாகாமல் தலைமறைவாகி இருந்ததனால், அவர் இல்லாமல் ஏனைய இரண்டு எதிரிகளுக்கு எதிராக விசாரணைகள் நடைபெற்றன.

விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணும், அவருடைய தாய் தந்தையரும் மற்றும் காதலன் என கூறப்பட்டவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு எதிரிகளும் தாமாகவே முன்வந்து நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, இரண்டு எதிரிகளையும் கூட்டுப் பாலியல் குற்றம் புரிந்தமைக்கான குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் குற்றவாளிகளாக காணப்பட்ட இரண்டு எதிரிகளுக்கும் தலா பத்து ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.

மேலும், எதிரிகள் இருவரும் தலா பத்து இலட்சம் ரூபாவை நட்டஈடாகச் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

அத்துடன் நீதிமன்றுக்கு தலா பத்தாயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும் என்றும் தவறினால், 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பின்போது குற்றவாளிகளாக காணப்பட்ட இரண்டு எதிரிகளையும் நோக்கி,

யாழ்ப்பாண கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நடத்தப்பட்ட குழு பாலியல் வல்லுறவு குற்றமானது, மிகப் பாரதூரமான குற்றச்சாட்டாகும்.

எதிர்வரும் காலங்களில் எவரும் இத்தகைய குற்றச் செயல்களைச் செய்வதற்குக் கூட எத்தனிக்கக் கூடாது என்ற வகையில் இந்தக் குற்றச்சாட்டுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்படுகின்றது.

தன்னுடைய காதலனுடன் ஒதுக்குப்புறமாக நின்ற பொழுது காதலனைத் தாக்கிய 3 எதிரிகளும் 18 வயது நிரம்பிய பெண்ணை குழு பாலியல் வல்லுறவு செய்துள்ளமை மிகமோசமான குற்றச் செயலாகும்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் காதலனும் அந்தப்பெண்ணைக் கைவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளமையும் அந்தப் பெண்ணைப் பாதித்துள்ளது.

ஆகவே பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணின் எதிர்காலத்தை இந்த நீதிமன்றம் கவனத்திற் கொண்டு, அவருக்கு இழைக்கப்பட்ட குற்றச் செயலுக்கு குற்றவாளிகள் இருவரும் நட்டஈடாக தலா பத்து இலட்சம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கின்றது.

நட்டஈடாகிய பத்து இலட்சம் ரூபாவைச் செலுத்தத் தவறினால் மேலும் பத்து வருடம் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் இந்த மன்று தீர்ப்பளிக்கின்றது.

அத்துடன் எதிரிகள் இருவரும் தலா பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும். தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.

இந்தக் குற்றச் செயல் இடம்பெற்றதையடுத்து, துரிதமாக செயற்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த 3 இராணுவ உத்தியோகத்தர்களான ரத்நாயக்க, அஜித் சாகர, திலிப் குமார ஆகிய மூவரையும் அவர்களுடைய துரிதமான செயற்பாட்டுக்காக நீதிபதி இளஞ்செழியன் பாராட்டினார்.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டையின் துணையுடன் 24 மணித்தியாலம், 48 மணித்தியாலத்துக்குள் இரண்டு எதிரிகளையும் கைது செய்திருந்த பொலிஸாரையும் பாராட்டியதுடன், இந்த வழக்கை துரிதமாக விசாரணை செய்த மாவட்ட நீதவானுக்கும் நீதிபதி இளஞ்செழியன் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள மூன்றாவது எதிரிக்கான விசாரணையை நீதிபதி எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இலங்கை கடற் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலியாகியுள்ளார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இத் துப்பாக்கிச் சூட்டில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் பலியானார். பலியானவர் தங்கச்சிமடத்தை சேர்ந்த சிட்சோ(22) என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அச்சமடைந்த மீனவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை திரும்பிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மீனவர்கள் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்தல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வந்தாலும் கடந்த 5 ஆண்டுகளாக உயிரிழப்புகள் ஏதும் நடைபெறவில்லை, ஆனால் தற்போத மீனவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி சூட்டில் பலியான தங்கச்சி மடம் மீனவர் பிரிட்சோவின் சடலம் ராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சரோன் என்ற மீனவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டில் பலியான மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரச மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், படுகாயம் அடைந்த சரோன் சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்வதை இயன்றளவு தவிர்க்குமாறு வைத்தியசாலை பணிப்பாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றங்களால் தொற்று நோய்களின் தாக்கம் பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது.

இதில் குறிப்பாக டெங்கு, சளிசுரம் (இன்புளூவென்சா வகைக் காய்ச்சல்) மற்றும் பல்வேறு சுவாசத் தொற்று நோய்களின் தாக்கங்கள் அடங்குகின்றன.

எனவே பொதுமக்கள் வைத்தியசாலை விடுதியில் உள்ள நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு வருவதை இயன்ற அளவு தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் . கர்ப்பிணிகள் , குழந்தைகள் எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாவோர் அவசியமற்று வைத்திய சாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளவும் .

யாழ்ப்பணம் நீர்வேலி வடக்கு (மாசுவன்) பகுதியில் உள்ள வீடு ஒன்றினைஉடைத்த திருடர்கள் 23 பவுண் நகைகள் மற்றும் 95 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (03) பகல் நீர்வேலி வடக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது 9 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் களவாடப்பட்டுள்ள. வீட்டில் இருந்த அனைவரும் வெளியில் சென்ற நேரம் பார்த்துத் திருட்டு இடம்பெற்றுள்ளது. வாழைக்குலை வியாபாரம் செய்து தனது வாழ்க்கையினை கொண்டு நடத்தும் மேற்படி குடும்பஸ்தர் காலை சந்தைக்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்தவர்களும் தனிப்பட்ட அலுவல்கள் காரணமாக வெளியில் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காலை 6 மணிக்கும்-12 மணிக்கும் இடைப்பட்ட நேரம் பார்த்து பின்கதவினை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் சல்லடை போட்டு தேடிவிட்டு அலுமாரியை உடைத்துள்ளனர். இதன்போJ அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த அட்டியல், தோடு,காப்பு மற்றும் கைச்செயின் உட்பட 23 பவுண் நகைகளையும் வாழைக்குலை விற்ற 95 ஆயிரம் ரூபா பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விரிவான விசாரணைகளை குற்றம் நடந்த இடத்தினை ஆராயும் பொலிஸாரின் உதவியுடன் கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் பாதாள உலக கோஷ்டியினர், சிறைச்சாலை பஸ் மீது படு பயங்கர தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்த விடையம் யாவரும் அறிந்தெதே. இதில் பாதாள உலக கோஷ்டியின் ஒரு தலைவர் கொல்லப்பட்டார். அவர் நீதிமன்றம் செல்லும் வழியில் அவரை சினிமா பாணியில் கொலைசெய்திருந்தார்கள் சிங்கள பாதாள உலக கோஷ்டியினர்.

இதன் விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில், இத்தாக்குதலுக்கு இயந்திர துப்பாக்கியை பாதாள உலக கோஷ்டியினர் பாவித்துள்ளதாகவும். மீட்க்கப்பட்ட சில ஆயுதங்களை தாம் ஆராய்ந்தவேளை. அவை விடுதலைப் புலிகள் பாவித்த ஆயுதங்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இதனை கோட்டபாய ராஜபக்ஷவிடம் தான் கேட்க்கவேண்டும். ஏன் எனில் அவர் அதிகாரத்தில் இருந்தவேளையில் தான் புலிகளின் பல ஆயுதங்களை அவர் எடுத்து அதனை ராணுவத்திற்கு கொடுத்ததாக கூறினார். ஆனால் அவற்றில் பல சிங்கள பாதாள உலக கோஷ்டியினருக்கும் சென்றுள்ளது.

சத்தியாக்கிரக போராட்டத்திற்கு உரிய தீர்வு வழங்காவிடில் மிகவிரைவில் இப்போராட்டம் உண்ணாவிரத போராட்டமாக மாற்றமடையும் அப்போது உணவின்றி இறக்க வேண்டிய நிலை வந்தாலும் வரலாம் அதற்கான முழுப்பொறுப்பினையும் அரசியல்வாதிகளும், நல்லாட்சி அரசாங்கமும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிர போராட்டம் ஐந்தாவது நாளாகவும் காரைதீவு விபுலானந்தா சதுக்கத்திற்கு முன்பாக தொடர்கிறது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தனர்.

குறித்த பிரச்சினை தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

2002 தொடக்கம் 2017 வரைக்கும் பட்டம் முடித்த அனேக பட்டதாரிகள் இன்று வரை எந்த வேலையுமில்லாமல் இருந்து கொண்டிருக்கின்றோம். போட்டிப்பரீட்சை என்ற போர்வையில் வெறும் போலி பரீட்சைகள் வைக்கப்படுகின்றது.

இதற்கு உதாரணமாக அண்மையில் போட்டிப்பரீட்சை வைக்கப்பட்டது. அவ்வாறு நடந்த போட்டிப்பரீட்சையில் கொடுக்கப்பட்ட வினாப்பத்திரம் ஏற்கனவே வெளியாகி விட்டது என்று கூறினார்கள்.

தங்களுக்கு சார்பானவர்களை அரசபணியில் சேர்த்துக்கொள்வதற்கு போடும் நாடகமாகத்தான் இருக்கின்றது என நாங்கள் கருதுகின்றோம். இதனது உண்மைத்தன்மையினை வெளியில் கொண்டுவர வேண்டும்.

கலைப்பிரிவில் பட்டம் முடித்த அனேகருக்கு வேலை கிடைக்காத சூழ்நிலை இருக்கின்றது. அவர்களது பிரச்சினைகளையும் வெளியில் கொண்டுவர வேண்டும் என்பது தான் எமது கோரிக்கையாகும்.

இன்று இந்த இடத்தில் சத்தியாக்கிரக போராட்டமாக நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டமானது மிக விரைவில் உண்ணாவிரத போராட்டமாக மாறப்போகின்றது.

இந்த இடத்தில் எத்தனைபேர் உணவில்லாமல் மரணிக்கப் போகின்றோம் என்பதனை இந்த நல்லாட்சி அரசோ அல்லது எங்கள் சார்பாக இருக்கும் கட்சிகளோ இடங்கொடுக்காமல் எங்களது சார்பாக மாகாணசபையிலே, பாராளுமன்றத்திலோ தொடர்ந்து குரல் கொடுத்து எங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும்.

இன்று நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டத்தில் நலன்விரும்பிகள் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்வரும் நாட்களில் எங்களுடன் இணைந்து கொள்வார்கள் என நம்புகின்றோம்.

ஏன் என்றால் இன்று இது எங்களது பிரச்சினை நாளை அவர்களுடைய பிரச்சினையாக உருவெடுக்கும் என்பதும் உண்மை. இன்று எங்களது குடும்பங்களில் பல நெருக்கடிகளை சந்திக்கின்றோம். எங்களுக்கு வேலை இல்லாத காரணத்தினால் மேசன் வேலை, கூலித்தொழில், வெளிநாடு செல்லுதல், ஆட்டோ ஓடும் வேலைகளைத்தான் செய்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றோம்.

தான் கற்ற கல்விக்கு தொழில் கிடைக்கும் என நம்பி திருமணம் செய்து அந்த திருமணமும் விவாகரத்து செய்யும் நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு பல பிரச்சினைகளை நாங்கள் நாளாந்தம் சந்தித்து வருகின்றோம்.ஆகவே தான் நாங்கள் உண்ணாவிரதம் இருந்து உணவின்றி, நீர் இன்றி வைத்தியசாலைக்கோ அல்லது மரணத்தினை தழுவுவதற்கு முன்னர் வடகிழக்கில் உள்ள பட்டதாரிகளின் நிலைமைகளை உரியவர்களுக்கு எடுத்துக்கூறி உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரியொருவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று எங்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த சத்தியாக்கிரக போராட்டமானது எங்களுக்கான தொழில் வாய்ப்பு கிடைக்கும் வரைக்கும் இறுதி வரைக்கும் மேற்கொள்ளப்படும். இன்றும் கூட மழையோ வெயிலோ என்று பாராமல் சிறு குழந்தைகளை தூக்கிக்கொண்டே எமது இந்த போராட்டத்தினை தொடர்ந்தவண்ணம் இருக்கின்றோம்.

இங்கு நாங்கள் தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருந்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றோம். இன்று இந்த அரசாங்கம் கூறியிருக்கிறது, அதிகளவான வேலைவாய்ப்புக்கள் உள்ளதாக.

அதாவது இப்போது இருக்கும் பட்டதாரிகளை விட அதிகளவான வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக கூறியிருக்கின்றார்கள் அப்படியானால் எங்களை எவரும் கருத்தில் கொள்ளாதது ஏன் என்று புரியவில்லை.

நாங்கள் இன்றும் கூறுவது என்னவென்றால் எங்களுக்கான உரிய பதில் கிடைக்கும் வரைக்கும் இந்த இடத்தில் இருந்து வெளியேறப்போவதில்லை என்பதனை வலியுறுத்திக் கொள்ள விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை அவர்களது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க வாதிகள் என பலரும் கலந்து கொண்டு அவர்களது சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.

மேலும், அங்கு வரும் அனைத்து அரசியல்வாதிகளிடமும் பட்டதாரிகள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாகவும் கருத்துக்களை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்றுக் காலை களுவாஞ்சிக்குடி போலிஸ் நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற கோர விபத்தில்அவ்விடத்திலயே வயோதிபர் ஒருவர் பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார்.
இவ் விபத்துத் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை வாள்வெட்டுக்குழு ஒன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இன்றைய தினம் இராமநாதன் வீதியில் இருந்து பல்கலைக்கழக நுழைவாசலுக்கு வந்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்த மாணவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது,

மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கிடையில் சிறு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதோடு, அவர்களுக்கிடையில் சச்சரவும் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், முரண்பாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவர், தனக்குத் தெரிந்த வாள்வெட்டுக் குழுவினரை அழைத்துள்ளார்.

குறித்த மாணவன் மதுபோதையில் இருந்ததாகவும், இந்நிலையில் தனது சாகாக்கள் நால்வரை அழைத்துக்கொண்டு யாழ்.பல்கலைகழகத்தின் முகப்புக்கு வந்துள்ளார்.

வாள் வெட்டுக் குழுவினரோடு வந்த அவர், அங்கு வைத்து தம்மோடு முரண்பட்டுக்கொண்ட எனைய மாணவர்களுக்கு கூரிய வாள் போன்றவற்றை காட்டியும், தமக்கு ஆவா குழுவை தெரியும் என கூறியும் அம் மாணவர்களை அச்சுறுத்தியுள்ளார்.

எனினும் அவ்விடத்தில் அதிகளவான பல்கலைக்கழக மாணவர்கள் குவிந்தனர். இதனையடுத்து, குறித்த ஆயுதம் தாங்கியிருந்த குழு அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரியவருகிறது.

இதேவேளை இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பல்கலைகழக சமூகம் முறைப்பாடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அநுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். நயினாதீவை சேர்ந்த 24 வயதான தவகுலரத்திணம் ரகுராம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக மாணவருடன், மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்து போது, வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கேப்பாப்புலவு மக்களின் காணி உட்பட சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க வலியுறுத்தி வடகிழக்கில் எதிர்வரும் 08 ஆம் திகதி வடகிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க தமிழ் மக்கள் பேரவையினர் தீர்மானித்துள்ளனர்.

கேப்பாப்புலவு தொடர்பாக கலந்துரையாடல், யாழ். கோண்டாவில் சேவாலங்கா மண்டபத்தில்,தமிழ் மக்கள் பேரவையினர் மற்றும் பொது அமைப்புக்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்கள்.

அந்த கலந்துரையாடலின் போது, வடகிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணி விடயங்கள் மற்றும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து கலந்துரையாடினார்கள்.

அந்த கலந்துரையாடலின் போது, முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் விமானப்படை மற்றும் இராணுவத்தினர் மக்களின் காணிகளை அபகரித்து வைத்திருப்பதற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

போராட்டங்கள் தீவிரமடைந்த போதிலும், பல்வேறு தரப்பினர் கேப்பாப்புலவு மக்களுக்காக போராட்டங்களை மேற்கொண்டு ஆதரவினையும் வழங்கி வருகின்றார்கள்.

அந்தவகையில், ஜனாதிபதி கேப்பாப்புலவு மக்களின் காணிகளை கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த மக்களின் காணிகள் முழுமையாக விடிவிக்கப்படாவின் வடகிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பது குறித்து பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடினார்கள்.

அந்த கலந்துரையாடலின் போது, பொது அமைப்புக்கள் அனைவரும், ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

எனவே, வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்களின் காணிகளை சுவீகரிப்பதனை நிறுத்த வலியுறுத்தியும், கேப்பாப்புலவு மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாவிடின் தொடர்ச்சியாக வாகனப் பேரணி மூலம் பேரணியாக போராட்டம் தொடர்வதற்கும் தீர்மானித்துள்ளார்கள்.

அத்துடன், ஏனைய காணிகளை விடுவிப்பதற்கும், மக்களின் ஏனைய பிரச்சினைகள் குறித்தும் அந்த இடங்களில் போராட்டம் நடாத்தப்படுமென்றும் தீர்மானித்துள்ளார்கள்.

அத்துடன், ஜனாதிபதி மக்களின் காணிகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், அவ்வாறு விடிவிக்கப்படாவிடின்,

எதிர்வரும் 08 ஆம் திகதி வடகிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கும் தீர்மானித்துள்ளதுடன், ஹர்த்தாலுக்கு பொது அமைப்புக்களும் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

இந்த கலந்துரையாடலில், தமிழ் மக்கள் பேரவை சார்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மகளீர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், போக்குவரத்துத் துறைசார்ந்தவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

ஈழ விடுதலையின் வீரியத்தை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்றது தமிழீழ பண்பாட்டு இயக்கமும், தமிழீழ இசைக்குழுவினரும்தான் என்பது உண்மையாகும்.

இதற்கு புரட்சிப் பாடகர் சாந்தனின் பங்களிப்பு மிக சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது.

புரட்சிப் பாடல்களாலும், உணர்ச்சிக் குரலின் தாக்கத்தினாலும், இளைஞர்கள், யுவதிகளை விடுதலைப் போராட்டத்தில் இணைய வைத்ததில் இவரின் பாடல்கள் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன.

வீர மறவர்களின் வீரத்தை வீரத்தமிழால் உலகிற்கு பறைசாற்றிய பாடகர் சாந்தன் அவர்கள், மண்ணுலகை விட்டு மறைந்தாலும் தமிழர்களின் இதயத்தில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதற்கு எடுத்துக்காட்டாக கனடாவில் வாழும் “ஈழ மண் கலைக்கூடம்” இயற்றிய பாடல் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் மனோ, இசையமைத்து பாடியவர் நிரோஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் தென்மராட்சிப் பகுதியில் மேசன் வேலை செய்து வந்த 24 வயதுடைய இரண்டு பெண்டாட்டிகளுக்கு கணவனான குடும்பஸ்தர் ஒருவர் 15 வயதுச் சிறுமியையும் தனது இச்சைக்குப் பயன்படுத்த பற்றைக்குள் அழைத்துச் சென்ற சமயம் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார் என அதிர்வு இணையம் அறிகிறது.

அதன் பின்னர் பொதுமக்கள் இவனை நையப்புடைத்து கொடிகாமம் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். குறித்த நபருக்கு திருமணமாகி ஒரு பிள்ளை இருப்பதாகவும் அந்த மனைவியை கைவிட்டு விட்டு இன்னொரு பெண்ணை மணம்முடித்ததால்  நபருக்கு எதிராக வழக்கு இருப்பதாகவும் தெரியவருகின்றது. அந்த வழக்குக்கு சமூகமளிக்காத காரணத்தால் இன் நபருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் தனது இரண்டாவது மனைவியுடன் மறைவாக வாழ்ந்து வந்த குறித்த நபரே, தான்  வேலை செய்த வீட்டுக்கு அருகில் வசித்த சிறுமியை ஆசை வார்த்தை பேசி இச்சைக்குப் பயன்படுத்த முற்பட்டார் எனத் தெரியவருகின்றது,

கொடிகாமம் பொலிசார் குறித்த நபரை சாவகச்சேரி நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய போது குறித்த நபரை எதிர்வரும் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் பருத்தித்துறையில் உள்ள வழக்குக்காக அவரை 8ம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குழு மோதல்கள் தொடர்பில் நான்கு பேர் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிரதான வீதி மடத்தடியிலுள்ள சுகாதார நிலையம் ஒன்றுக்கு அருகில் இரு குழுக்களிடையே கடுமையான மோதல் இடம்பெற்றதால் குறித்த பகுதியில் பதற்ற நிலை நிலவியது.

இந்த சம்பவத்தின் போது அப்பகுதியில் உள்ள முச்சக்கர வண்டியொன்று சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியிலுள்ள வீடுகளின் மேலும் கற்கள் வீசப்பட்டது. இந்த அட்டகாசத்தில் ஈடுபட்ட குழுக்கள் பொலிஸார் வருவதற்கு முன்பாகவே அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதன் போது இரவிரவாக நடத்தப்பட்ட சோதனையின் போது நான்கு பேர் யாழ்பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன் குறித்த அசம்பாவித சம்பவத்தில் ஈடுபட்ட ஏனையவர்களும் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை பகுதியில் சிறைச்சாலை வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் களுத்துறை சிறைச்சாலையில் கடமை புரியும், காரைத்தீவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன், இதில் 24 வயதான சிவானந்தம் தர்மீகன் எனும் உத்தியோகத்தரே பலியாகியுள்ளார்.

அவரோடு மற்றுமொரு சிறைச்சாலை உத்தியோகத்தரான விஜயரத்ன என்பவரும் கொல்லஇதேவேளை சம்பவத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ப்பட்டுள்ளாமேலும், பாதாள உலக குழுவை சேர்ந்த ஒருவருடன் மொத்தமாக 7 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ர்.

தமிழீழ எழுச்சிப் பாடகராக விளங்கி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதி உன்னத இசைப் பணியாற்றி சாவடைந்த மாமனிதர் எஸ்.ஜீ. சாந்தனின் இறுதி வணக்க நிகழ்வுகள் கிளிநொச்சியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ள எதிர்வரும் 28.02.2017 ம் திகதி செவ்வாய்க் கிழமை அன்றைய தினம் பகல் 11.00 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இறுதி வணக்க நிகழ்வுகளில் கலைஞர்கள், கல்விச் சமூகத்தினர், வர்த்தகர்கள், விவசாயப் பெருமக்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் என அனைவரையும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பகல் மரணமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் படி எஸ்.ஜி.சாந்தன் சாந்தனின் உடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 தொடக்கம் 11.00 வரை ஓட்டுமடம் அன்பன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அன்னாரின் பிரேதம் இரவு 11 மணியளவில் மாங்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பின்னர் நாளை திங்கட்கிழமை அவரது உடல் மு.ப 11 மணியளவில் இறுதிக் கிரியைகளுக்காக கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்ட காலத்திலும் கலைத்துறையில் வளர்ச்சிப் பரிமாணத்தில் பின்னிற்கவில்லை. என்பதற்கு காந்தக் குரலோன் சாந்தன் சிறந்த எடுத்துக்காட்டு.

அவரது ஆத்ம சாந்திக்கான இறுதிக் கிரியைகள் கண்ணீருடன் ஆரம்பமாகி உள்ளது.

தாயகத்தின் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2.10 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை இன்று காலை இவர் இறந்து விட்டதாக வதந்திகள் வெளிவந்தவண்ணமிருந்தன.

ஆனாலும் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இவர் இறந்ததாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியசீலன் தெரிவித்திருந்தார்.

சிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகராக விளங்கினார்.

1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் காணப்பட்டார்.முதன்முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.

இதன்போது ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இதுவே இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக அமைந்ததுடன் இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது.

இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது இரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.

அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.1977 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், 1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.

அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.