Articles by "article"

Showing posts with label article. Show all posts

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டா?, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது? என்ற கேள்வியைப்போல் சிக்கலான கேள்வி வேறொன்றுமில்லை.

மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காலங்காலமாக, நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவுமேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன.

மரணம்தான் இறுதியானது. மறுபிறவி என்பதோ சொர்க்கம்-நரகம் என்பதோ கிடையாது. மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை. மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையான கட்டுக்கதைகள். மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜெர்மன் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவ டாக்டர்கள் இணைந்த குழு மருத்துவ பரிசோதனை மூலம் மரணத்திற்கு பின்னரும் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மரணத்திற்கு பின் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது எனவும் இவர்கள் கண்டறிந்து உள்ளனர்.

இந்த வியப்பூட்டும் அறிவிப்பு என்பது மரணம் அடைந்தவரின் அருகில் இருந்து மரண அனுபவங்களை ஒரு புதிய வகை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ கண்காணிப்பு மூலம் எடுத்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாக கொண்டவையாகும்.

2012 மற்றும் 2016-க்கு இடையில் கடந்த 4 ஆண்டுகளாக இறக்கும் தருவாயில் இருந்த 944 பேரிடம் முக்கிய மருந்து கலவைகள் கொண்டு இந்த சர்சைக்குரிய ஆய்வு நடத்தப்பட்டது. எபிநெப்ரின் மற்றும் டைமெத்தில்டிரிப்டமைன் உள்ளிட்ட மருந்துகளின் கலவை கொண்டு மரணித்த உடலினை எந்தவித சேதமும் இன்றி உயிர்ப்பிக்க செய்யும் ‘ரீ அனிமேசன்’ முறை (உயிர்ப்பிக்கும் முறை) தொடங்குகிறது.

அதனைத்தொடர்ந்து 18 நிமிடங்கள் கழித்து அந்த உடல் தற்காலிக நினைவு இழந்த நிலையில் வைக்கப்படுகிறது. இதற்குள், அந்த உடலின் ரத்தத்தில் இருந்து மருந்து கலவைகளின் தூண்டுதலால் ஓசோன் பிரித்தெடுக்கப்படுகிறது. டாக்டர் பெர்தோல்டு ஆக்கர்மேன் மற்றும் அவரது குழுவினர் அதன்பிறகான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க தொடங்குகின்றனர்.

அவற்றின் வாக்குமூலங்களையும் தொகுத்து வைத்துள்ளனர். இந்த பரிசோதனையின் நீண்ட அனுபவத்தின் முடிவுகளை அறிவதற்காக கார்டியோபல்மோனரி ரிசைடேசன் (சி.பி.ஆர்). என்ற புதிய நவீன கருவி பயன்படுத்தப்பட்டது. அந்த கருவியின் உதவியுடன் இது சாத்தியப்படுத்தப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில், இந்த வகையிலான கருவி மரணித்த சிலரை உயிர்ப்பிக்க செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோ பல்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த ஆய்வில், அனைத்து வாக்குமூலங்களிலும் மரண நிலையில் உள்ள நினைவுகள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் பொதுவாக, உடலில் இருந்து பிரிவது போன்ற உணர்வு கொண்ட நினைவுகள், தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்றவை பெருமளவில் உள்ளன. பல்வேறு வாக்குமூலங்களில் மத நம்பிக்கைகள் சார்ந்த விஷயங்கள் எதுவும் இல்லை.

எதிர்காலத்தில் தங்களது முடிவுகள் பலரை அதிர்ச்சி அடையச் செய்யும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் ஆய்வுக்கு எடுத்து கொண்ட மனிதர்கள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் பிற மதநம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர்.

மனிதகுல வரலாற்றின் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்றிற்கு நாங்கள் பதிலளித்துள்ளோம். அதனால் மத நம்பிக்கை கொண்டவர்கள் எங்களை மன்னித்து விடுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது. இது ஒவ்வொருவருக்கும் உள்ளது என கருதுகிறோம் என இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற டாக்டர் பெர்தோல்டு ஆக்கர்மேன் கூறுகிறார்.-

அந்தக் காலத்தில் காளைய அடக்குவது, இளவட்டக் கல்லைத் தூக்குவது மாதிரி மக்களோட வீரம், கம்பீரத்தை வெளிகாட்டுகின்ற ஒரு விஷயமாக புல்லட் இருந்தது நிதர்சனமான உண்மை. ஆயிரம் வாகனங்கள் ரோட்டுல போனாலும் புல்லட் அந்த “தட தட தட”ங்கற சத்ததோட போறது தனியா தெரியும். பார்க்கறதுக்கு தாங்க அது முரட்டுத்தனமான வண்டியா தெரியும், ஒட்டிப்பார்த்தா சூதுகவ்வும் படத்துல ஒரு டைலாக் வருமே “நான் காரா ஓட்டுறேன், கடவுளையே ஓட்டறேன்”னு அது அப்படியே புல்லட்டிற்கும்  பொருந்தும். சுருக்கமா சொல்லப்  போனா யானைய ஓட்டற மாதிரி. ஏறி உக்கார்ந்துட்டா அப்புறம் நாம சொல்றபடி கேட்கும். அந்த காலத்து புல்லட்டில் ஸெல்ப் ஸ்டார்ட் எல்லாம் கிடையாது. ஆம்ப்ஸ்  மீட்டர் ஜீரோ வந்திருச்சா’னு பார்த்து “சலக்” னு ஒரே ஒரு உதை, உதைச்சா போதும். சிங்கம் கெளம்பீருச்சு. சண்டியர் கணக்கா போய்ட்டே இருக்கலாம். எத்தனை நூரம் போனாலும் அலுப்பே தெரியாமல் போகக் கூடிய வாகனம் இது மட்டுமே. மைனர் என்றால் நம் நினைவிற்கு வருவது தங்கச் சங்கிலியும், புல்லட் வண்டியும் ஆகிய   இரண்டுதான். புல்லட் வைத்திருக்கும் மைனர் மாப்பிள்ளைகளுக்கு கிராமத்தில் இன்றளவும் மவுசு கூடத்தான். ஆக அப்படிப்பட்ட இந்த வண்டியோட கதை தான் என்ன ?அதுக்கு ஏன் “புல்லட்” டுனு பெயர் வந்தது ?

இங்கிலாந்தைச்  சேர்ந்த ராயல் என்பீல்ட் நிறுவனம் 1893 ஆம் ஆண்டு தொடங்கி மோட்டார் சைக்கிள், பை சைக்கிள், புல் வெட்டும் இயந்திரங்கள், மற்றும் நகரும் இயந்திரங்கள்’னு பலவற்றை தயாரித்து விற்பனை செய்தனர். இவர்களுடைய முதல் என்பீல்ட் புல்லட் 19௦1 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. அது ராயல் என்பீல்ட்’ங்கற பெயருடன் வெளிவந்தது. இவர்களுடைய தயாரிப்பில் “என்பீல்ட் ரைபிள்” என்ற துப்பாக்கியும் அடக்கம். அதனால் அவர்களுடைய லோகோ-வில் “மேடு லைக் எ கன்” (Made Like a Gun) என்ற வாக்கியத்துடன் வரும். அவர்களுடைய வாகனத்தையும் புல்லட் என்ற பெயரிட்டனர், Royal Enfield Bullet என்றே வெளிவந்தது. இந்த வாகனம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. எல்லை பாதுகாப்பு பணிக்கு அது சரியானதொரு வாகனமாக இந்திய அரசு கருதியது.

இதன் வரவேற்பு அதிகரிக்கவே இந்த வாகனத்தை இந்தியாவில் தயாரிக்க 1949 ஆம் ஆண்டு என்பீல்ட் நிறுவனம் இந்தியாவின் மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து சென்னையில் “என்பீல்ட் ஆப் இந்தியா” என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்திய அரசாங்கம் காவல்துறை மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு இவைகளுக்காக பயன்படுத்தத்  தொடங்கினர். 1955 ஆம் ஆண்டு ஒரே முறையில் 800, 350-cc புல்லட் வண்டிகளுக்கு இந்திய அரசு ஆர்டர் கொடுத்தது. இது அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய ஆர்டராகும். 1957 ஆம் ஆண்டில் இருந்து வாகனத்திற்கான உதிரி பாகங்கள் இந்தியாவில் தயார் செய்யப்பட்டது. சுமார் 197௦ ஆம் ஆண்டு இங்கிலாந்துக் கம்பெனி ஒரு சில காரணங்களால் மூடப்பட்டது. எனினும் இந்தியாவில் ராயல் என்பீல்ட் பாக்டரி தங்கு தடையின்றி இந்தியாவில் தயாரிப்புகளை தயார் செய்தும் விற்பனை செய்தும், மற்றும் யூரோப், அமேரிக்கா, தென்னாப்பிரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வந்தது குறிப்பிடத்தக்கது. இடையில் நவீன ரக பைக்குகளின் வரவுகள் சில காலம் ராயல் என்பீல்ட்’டின் விற்பனை சந்தையை மந்தமாகியது. இதனால் தங்களின் மாடல்களை எப்பொழுதும் நவீனப்படுத்திக் கொண்டு வந்த நிறுவனம் புது படைப்புகளுடன் இப்பொழுது மீண்டும் விற்பனை களத்தில் முன்னணியில் உள்ளது. இன்றைய இளைய தலைமுறை புல்லட்களை பெரிதும் விரும்பி வாங்க துவங்கியுள்ளனர். இப்பொழுது சந்தையில் உள்ள ஒரு ரகங்கள் பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்.

ராயல் என்பீல்ட் புல்லட் ஸ்டாண்டர்ட் 350 cc என்பது ஆரம்ப மாடலாகும். இதில் கிக் ஸ்டார்ட் மட்டுமே உள்ளது. பரமாரிப்பு சரியாக இருந்தால் லிட்டருக்கு 5௦ கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைத்தாலும் நிறுவனம் நமக்கு தரும் உத்தரவாதம் நாற்பது தான். இதன் மற்றொரு மாடல் எலெக்ட்ரா கிக் ஸ்டார்ட் உடன் வருகிறது.

ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 cc மற்றும் கிளாசிக் 5௦0 cc – என்பீல்ட் நிறுவனம் பழைய மாடல் புல்லட்களை போல் மீண்டும் தயாரிக்க முற்பட்டதில் பிறந்தது தான் இவ்விரண்டு மாடல்கள். பழைய ரக ஒற்றை ஸ்பீடாமீட்டர், அதன் கீழ் சாவி மற்றும் ஆம்ப்’க்கான வசதிகள். ஹெட்லைட்டிற்கு மேல் இருபுறமும் சிறய நைட் விளக்குகள், நவீன ஹாலோஜன் ஹெட்லைட். இதன் நவீன என்ஜின் கிராமப்புறம் மற்றும் நகர்புறம், ஹைவே அனைத்திலும் எளிதாக பயணம் செய்வதற்கான தரத்தில் உள்ளது. நமக்கான தினசரி பயன்பாட்டிற்கு 35௦ cc மாடலும், அடிக்கடி நீண்ட தூரம் செய்பவர்களுக்கு 50௦ cc மாடல்களும் பொருந்தும். இதன் மைலேஜ் உத்தரவாதம் நாற்பது. சுமார் 9 கலர்களில் இவ்வகை வாகனங்கள் கிடைக்கிறது.

தண்டர்பேட் 350 மற்றும் 5௦0 வகைகள் –சுமார் 5௦ ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வகை உருவத்தில் வாகனங்கள் தயாரிப்பதானால் ஒரு சில மாடல்களுக்கு உருவத்தை மாற்றி அமைத்தால் மட்டுமே அடுத்த தலைமுறையை கவர முடியும் என்று உருவாக்கப்பட்டதே தண்டர்பேட் மாடல்கள். நீண்ட தூர சொகுசு பயணத்திற்கு ஏற்ற உயர ஹாண்டல்பார்கள், 20 லிட்டர் பெட்ரோல் டேங், பெரிய இருக்கைகள் என்று அதிர்வில்லாத நீண்ட தூர பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டது. இது போக பிற மாடல்களும் ரேஸ் பைக் உட்பட என்பீல்ட் கம்பெனி தயாரிப்புகளில் வருகிறது. அதோடு டீசல் என்ஜினில் வந்த ஒரே இரு சக்கர வாகனம் புல்லட் மட்டுமே

புல்லட் அல்லது உயர் ரக பைக்’குகள் வாங்குவது நம்மில் ஒரு சாராருக்கு அன்றாட தேவைக்கான விஷயமாக இருந்தாலும் மற்றொரு சாராருக்கு அது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இவ்வகை மாடல்கள் வாங்கி அதை பெரிய பொருட்செலவில் தங்களுக்கு ஏற்றார் போல் எஞ்சின் ஆல்டர் செய்துகொள்ளவும், சைலன்சர்கள், ஹெட் லாம்ப்கள், மக்கட், போன்ற பாகங்களை மாற்றிக்கொள்ளவும் ஒரு தனி சந்தை, தனி பணிமனைகள் செயல்படுகிறது.

பெரு நகரங்களில் ராயல் என்பீல்ட் ஒநெர்ஸ் க்ளப், தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளின் ரைடர்ஸ் க்ளப், போன்ற பல க்ளப்கள் உள்ளன. இவர்கள் வார அல்லது மாத இறுதி என்று முடிவு செய்து மாநிலங்களை கடந்து நீண்ட தூர பயணம் சென்று வருகிறார்கள். கோவா போன்ற நகரங்களில் ராயல் என்பீல்ட்காக பிரத்யேக ரேஸ்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மோட்டார் வாகன வரலாற்று பட்டியலில் ராயல் என்பீல்ட்க்கு ஒரு சிறப்பிடம் நிலையாக உள்ளது. பல துறைகளில் உள்ள நிறுவனங்களில் 1949 முதல் இயங்கும் பழங்கால பிராண்டுகளில் இதுவும் ஒன்று. இரு சக்கர வாகனத்திலும் சொகுசாக செல்ல முடியும் என்று மக்கள் உணர்ந்தது இவ்வகை வாகனங்கள் வந்த பிறகே. முறுக்கு மீசை, வேஷ்டி சட்டை போட்டவர்கள் மட்டுமே புல்லட் பயன்படுத்தி வந்த கலாசாரம் இப்பொழுது மாறி, நவீன உடையில் அலுவலகம் செல்லும் இன்றைய தலைமுறையும் புல்லட்டில் செல்கிறது.

புல்லட் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் உடனே முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது சென்னையில் இரண்டு இடங்களில் இதன் தயாரிப்பை விஸ்தரிப்பு செய்தாலும் வாடிக்கையாளர்கள் ஆறு மாதத்திற்கு முன்பில் இருந்தே முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உங்களுக்கு வேண்டுகின்ற நிறம், மாடல், அனைத்தையும் முடிவு செய்து ஒரு முன்பதிவு தொகையை மட்டும் செலுத்திக்  காத்திருந்தால் குறித்த நேரத்தில் உங்கள் வாகனம் உங்களை வந்தடையும்.


பிப்ரவரி மாதமே காதல் மாதம் தான். ஆனாலும் பிப்ரவரி 14 ஆம் தேதியே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதோடு பிப்ரவரி 7 ஆம் தொடங்கி 14 ஆம் தேதி வரையிலான ஏழு நாட்கள் காதல் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் காதலோடு தொடர்புடைய ஏதேனும் ஒரு நாளை குறியீடாகக் கொண்டாடி, இறுதியில் ஏழாவது நாள் காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த காதல் வாரத்தின் ஏழு நாட்கள் பற்றிய விவரங்கள்

பிப்ரவரி 7 – rose day

இந்த தினத்தில் காதலிக்கு, காதலர்கள் ரோஸ் கொடுத்து அன்பை வெளிப்படுத்தலாம்.


பிப்ரவரி 8 – propose day

காதலர்கள் இன்று தங்கள் அன்புக்குரியவர்களிடம் காதலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவார்கள். இதற்கான தினமாக கொண்டாடப்படுகிறது.


பிப்ரவரி 9 – chocolate day

காதலை வெளிப்படுத்த இனிப்பை சிறந்த வழி ஏதும் உண்டா என்ன? அதுவும் குறிப்பாக சாக்லேட்டை விட … எனவே உங்கள் காதலை விதவிதமான வண்ணமயமான சாக்லேட்களை வழங்கி காதலை வெளிப்படுத்தலாம்.


பிப்ரவரி 10 – teddy day

உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு டெடிபேர் உள்ளிட்ட செல்ல பொம்மைகளை வழங்கி மகிழ்விக்கலாம்.

பிப்ரவரி 11 – promise day

ஒருவொருக்கு ஒருவர் நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டு, மனம் ஒத்த தம்பதிகளாக இறுதிவரை பிரியமால் இருப்போம் என்று காதலர்கள் உறுதி செய்ய வேண்டிய நாள் இன்று .


பிப்ரவரி 12 – hug day

அன்புக்குரியவர்களை அரவணைத்து மனதில் உள்ள காதல் உணர்வை உருக உருக வெளிப்படுத்துங்கள். காதலின் மனதை ஐஸ் போல உருகும் அளவுக்கு வெளிப்படுத்தினால். சுவராஸ்மான, சுவையான நாளாக இருக்கும்.

பிப்ரவரி 13 – kiss day

காதலர்கள் முத்த மழைபொழிந்து ரொமாண்டிக்காக இருக்கலாம் . இந்த முத்தங்கள் உங்கள் காதல் உணர்வை இன்னும் அதிகரிக்கும்.


பிப்ரவரி 14 – valentine day

காதலர்களுக்கு இன்றைய நாள் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். காதலை உங்கள் அன்புக்கு உரியவர்களிடம் இன்று வெளிப்படுத்தி ஒகே வாங்க சிறந்த தினம் இன்று. ஏற்கனவே காதலர்கள் என்றால் பல்வேறு பரிசுகள் வழங்கி , சுற்றுலா சென்று, வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு இனிமையாக கொண்டாடலாம்.

காதலிக்காமல் நேரடியா திருமணத்தை சந்தித்தவர்களும், மனைவியிடம் அல்லது, கணவனிடம் இந்த ஒரு வாரம் உருக உருக காதல் மழையை பொழிந்து பரிசுகள் கொடுத்து மகிழுங்கள்.

தம்பதியர்கள், ஒளிவு மறைவு இல்லாமல் மனம் விட்டு பேசி, தினசரி போதும் போதும் என்ற அளவுக்கு முத்தமழை பொழிந்து, உருகி உருகி காதலித்தால் அவர்களுக்கு தினசரி காதலர் தினம் தான்.


இந்தியாவுக்கு தெற்கே இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவு இன்று அரசியல் சுழலில் சிக்கி தவிக்கிறது.

மாலத்தீவு தனி நாடாக இருந்தாலும் இந்திய கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த பகுதி ஆகும். குறிப்பாக, தமிழ் மற்றும் மலையாள கலாச்சாரம் கொண்ட நாடாக மாலத்தீவு திகழ்கிறது. அங்கு மலையாளம் முக்கிய மொழியாகவும் இருக்கிறது.

மாலத்தீவு மொத்தம் 26 தீவு கூட்டத்தை கொண்டது. அதில், சுமார் 1192 குட்டி தீவுகள் இருக்கின்றன. இந்த தீவு கூட்டங்கள் மாலை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளன. எனவே, அது மாலை தீவு என அழைக்கப்பட்டு பின்னர் மாலத்தீவாக பெயர் மாறியது. இத்தனை தீவுகள் இருந்தாலும் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.

மாலத்தீவின் மொத்த மக்கள் தொகை 4 லட்சத்து 27 ஆயிரத்து 756. இதன் தலைநகரமாக மாலி உள்ளது. இது, 5.8 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 412 பேர் வசிக்கிறார்கள். உலகிலேயே மக்கள் அடர்த்தியாக வாழும் நகரங்களில் ஒன்றாகவும் மாலி நகரம் உள்ளது.

மாலி தீவில் கி.மு. 200-ம் ஆண்டிலேயே மக்கள் வசித்ததற்கான தடயங்கள் உள்ளன. கி.மு. 2000-ம் ஆண்டுக்கு முன்பில் இருந்தே இங்கு மக்கள் வசித்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் கேரளா, தமிழகம் பகுதியை சேர்ந்த மக்கள் பெருமளவில் இந்த தீவுக்கு சென்று குடியேறி இருக்கிறார்கள்.

பின்னர், இலங்கை, மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து குடியேறி இருக்கிறர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து அதன் மூலம் கலப்பின சந்ததியினரும் உருவாகி உள்ளனர்.

ஆரம்பத்தில் கிராவரு என்ற தமிழர்கள் அங்கு ஆட்சி செலுத்தி இருக்கிறார்கள். பின்னர் சோழர் காலத்தில் அவர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலமாக மாலத்தீவு இருந்துள்ளது. இதன் பிறகு சிங்களவர்கள் மாலத்தீவை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர். சிங்கள இளவரசன் கொயிமலா நீண்ட காலமாக ஆட்சி செய்துள்ளான். அப்போதெல்லாம் அங்கு புத்த மதம் தழைத்தோங்கி இருந்துள்ளது.

இடையில் 1153-ம் ஆண்டு அங்குள்ள மக்கள் அனைவரும் முஸ்லிம்களாக மாறி விட்டனர். அதை தொடர்ந்து சுல்தான் ஆட்சி முறை வந்தது. 1558-ல் போர்சுக்கீசியர்கள் மாலத்தீவை கைப்பற்றி கொண்டனர். 1654-ல் டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள்.

1887-ல் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் மாலத்தீவு வந்தது. 1965-ல் மாலத்தீவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் சுல்தான் ஆட்சி முறை வந்து 1968-ம் ஆண்டுவரை நீடித்தது.

பின்னர், மாலத்தீவு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. முதல் அதிபராக இப்ராகிம் நசீர் தேர்வு செய்யப்பட்டார். 1978-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்துல் கயூம் அதிபராக தேர்வு செய்யப்பட்டு 30 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்தார்.

அதன் பிறகு முகமது நசீத், முகமது வாகித் உசேன், அப்துல்லா யாமீன் ஆகியோர் அதிபராக பதவி ஏற்றனர். தற்போது அப்துல்லா யாமீன் அதிபராக இருக்கிறார். இந்த நாட்டின் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. மீனை பதப்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி சம்பாதித்து வருகின்றனர்.

மேலும், உலகின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும் மாலத்தீவு திகழ்கிறது. சுற்றுலாவின் மூலம் ஏராளமான வருமானம் கிடைக்கிறது. மாலத்தீவின் அதிகாரப்பூர்வ மொழியாக திவெயி மொழி உள்ளது. இது சிங்கள மொழியை ஒட்டியே அமைந்துள்ளது.

1988-ல் இலங்கை தமிழ் போராளி குழு ஒன்று மாலத்தீவை கைப்பற்றி கொண்டது. அப்போது, இந்திய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பி சில மணி நேரங்களில் மாலத்தீவை மீட்டு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் சங்க கால வசிப்பிடமானக் கீழடித் தொல்லியல் களம் பற்றிய கட்டுரையே இது. தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற ஊருக்கு அருகில் இந்த அகழாய்வு மையம் அமைந்துள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இது.

இதையடுத்து கீழடியில் கண்டெடுக்கப்பட்ட இர‌ண்டு கார்பன்‌ மாதிரிகளின் காலத்தைக் கண்டறிய அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ‘பீட்டா அனலடிக்‘ என்ற நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அவை அனுப்பிவைக்கப்பட்டன. அந்தப் பரிசோதனையின் முடிவுகளை மத்திய கலாசாரத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா  வெளியிட்டார். அதில் “கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகளுக்கும், மற்றொரு பொருள் 2,220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை தமிழகத்தின் கீழடியில்தான் ஆய்வு நடத்தி இருக்கிறது. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் மேடானது, கிட்டத்தட்ட 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. கி.பி. 300-ம் ஆண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் கிடைத்தன. ஆனால், கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத், அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, துணை கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீராம் பணியில் அமர்த்தப்பட்டார். அதன்பிறகு மத்திய தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சிக்கு அனுமதியளித்தது. தற்போது, கீழடியில் பெயரளவிற்கு மட்டுமே ஆராய்ச்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுமார் 2200 வருடங்கள் பழமையானவை நிரூபணமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கீழடியில் கிடைக்கும் ஆய்வு முடிவுகள் தமிழகத்தின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தமிழகத்தில் கல்வெட்டுகள்,  புலவர் பாடல்கள் ஆகியவை உண்டு. ஆனால் நம்மிடம் வரலாற்று சாட்சியங்கள் இல்லை. தற்போது அவை கீழடியில் கிடைத்துள்ளன.

கீழடியில் அக்கால மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தொழிற் கூடங்கள் செயல்பட்டதற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அங்கே ஆய்வு நடத்தினால் வைகை ஆறு தடம் மாறிய தகவல்கள் கிடைக்கலாம். பழங்கால சமூகமாக இருந்தாலும் கீழடியில் வாழ்ந்த மக்கள் நாகரிக சமூகமாக இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கீழடியில் ஆய்வை தொடரும்போது கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அங்கே கிடைத்துள்ள பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகமாக அமைப்பதற்கு தேவையான இடத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்று அப்போதைய செய்தியாளர்கள் பேட்டியில் கூறினார் அமைச்சர் என்.டி.கே.ரங்கராஜன்.

இதுகுறித்து,  மத்திய தொல்லியல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கீழடியில் இரண்டு சதவிகிதம் மட்டுமே அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. இரண்டு வருடங்கள் ஆராய்ச்சி நடத்தியதற்கே 5,300 தொன்மையான பொருள்கள் கிடைத்திருக்கின்றன என்றால், இன்னும் பத்து முதல் இருபது வருடங்கள்வரை ஆராய்ச்சி நடத்தினால் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது. இன்னும் பல வருடங்கள் ஆராய்ச்சி நடத்தினால்தான் கீழடியின் உண்மையான காலத்தையும், அங்குவாழ்ந்த மக்களின் நாகரிகத்தையும் முழுமையாகக் கண்டறிய முடியும். இப்போது பரிசோதனையில் இருந்து கிடைத்திருக்கும் தகவல், மதுரைக்கு அருகே ‘சங்ககால நகரம்’  ஒன்று இருந்ததற்கான ஆதாரம் மட்டுமே. கீழடியில் முழுமையாக ஆறு மீட்டர் ஆழத்திற்கு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும். அப்போதுதான், இந்த நகரம் எப்படித் தோன்றியது என்பதை கண்டுபிடிக்க முடியும்” என்றார்.

வைகையாறு தோன்றும் தேனி மாவட்டம் தொடங்கி கடலில் கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரை வைகை ஆற்றங்கரையின் அருகமை பகுதிகளில் 2013-14இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்போது தொல்லியல் எச்சங்கள் உள்ள 293 பகுதிகள் கண்டறியப்பட்டன. இவை களஞ்சியங்கள், வணிகத் தலங்கள், துறைமுகங்கள், வாழிடங்கள், கோயில்கள் என்ற வகையிலானவை. வருசநாட்டிலும், அழகங்குளத்திலும் சிறிய அளவிலான அகழாய்வுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பெரிய அளவிலான அகழாய்வுகள் இதுவரை நடந்திருக்கவில்லை.

கிட்டத்தட்ட 48 சதுரக் குழிகள் வெட்டப்பட்டு உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் எனப் பல்வேறு தொல்லெச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பாண்டியர்களின் தொல்நகரான “பெருமணலூர்” இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கீழடியில் 10 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக இது திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது. சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது. நீர் வழங்கலும், கழிவுநீர் அகற்றலும் நாகரிக வளர்ச்சியின் முக்கிய மைல்கல்களாகக் கருதப்படுவன. கீழடியில் சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளன. இங்கு பழங்கால சுடுமண் உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பட்டினப்பாலை கூறும் உறைகிணற்றுப் புறச்சேரி’ என்ற தொடருக்குச் சான்று பகிர்கின்றதாகவும், ஆற்றங்கரைகளிலும், பெரிய குளக்கரைகளிலும் இவ்வாறு உறைகிணறுகள் அமைத்து நீரெடுக்கும் தமிழரின் பண்டைய வழக்கத்தை எடுத்துக்காட்டுவனவாகவும் உள்ளதாகத் தொல்லியல் அறிஞர் வெ.வேதாச்சலம் குறிப்பிடுகிறார். வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிதாகக் கருதப்படும் நிலையில் இங்கு பெருமளவில் செங்கல் கட்டிடங்கள் உள்ளது ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

ரோமப் பேரரசுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை மெய்ப்பிக்கும்படியான, வணிகர்களால் கொண்டுவரப்பட்ட ரௌலட் (rouletted), அரிட்டைன் (arretine) வகை மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அழகங்குளத்திலும் இத்தகைய பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் வரலாற்றின் தொடக்ககாலத்தைச் சேர்ந்தவையான கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், செம்பழுப்பு நிற கலவை பூசப்பட்ட மண்பாண்டத் துண்டுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் செம்பழுப்பு நிற ரசட் (russet) கலவை பூசப்பட்ட பாண்டங்கள் இதுவரை கொங்குப் பகுதியிலேயே கிடைத்திருப்பதைக் கொண்டு இப்பகுதி கொங்குப் பகுதியுடனும் வாணிபத் தொடர்பிலிருந்ததாகக் கருதப்படுகிறது.

‘ஆதன்’, ‘உதிரன்’, ‘திசன்’ போன்ற தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இங்கு சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டைகள், தாமிரத்தாலான கண் மை தீட்டும் கம்பி ஆகியவையும் கிடைத்துள்ளன. இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை கட்டைகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், சுடுமண் பொம்மைகள் உட்பட்ட பல்வேறு அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

முதல் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி கீழடியில் ஜூன், 2015 ஆம் ஆண்டு வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு தொடங்கியது. இரண்டாம் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி  2016 ஆம் ஆண்டு  ஜனவரி 2ந்தேதி அன்று அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவ குடுவைகள்,  பழங்கால உறை கிணறுகள், தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன.

இரண்டாம் கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அகழாய்வு சனவரி, 2017 முதல் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தலைமையில் நடைபெறுகிறது. இப்பணி 30 செப்டம்பர் 2017ல் முடிகிறது. மூன்றாம் கட்டப் பணியில் 400 சதுர மீட்டர் அளவுக்கு 16 குழிகள் தோண்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற காலம் சென்று இன்று அனைத்து பெண்களும் கல்வி கற்கும் மாற்றம் நிலவி பெண்கள் துணிச்சலாக பணிக்கும் செல்ல நேர்ந்த இந்த வேளையில் தான் அவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல்களும் பணியிடங்களில் அதிகரித்துள்ளது என்று கூறுவது சற்று வியப்புகுரிய ஒன்றே. “பாலின சமத்துவம் என்பது ஓர் இலக்கு மட்டுமல்ல! வறுமை ஒழிப்பு,  நீடித்த வளர்ச்சி,  நல்லாட்சி போன்ற பெரும் சவால்களை சந்திக்கத் தேவையான ஒரு முன் நிபந்தனை” என்று கூறியவர் ஐ.நா. பொதுச் செயலாளர்  கோபி அன்னான்.

இன்னும் சொல்லப்போனால் வரதட்சணை, பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் கொலை, குடும்ப வன்முறை எனப் நீண்டுகொண்டே செல்கிறது பெண்களின் மீதான அடக்குமுறைகள். இதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள்,  பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது போல தோன்றினாலும்,  அதன் நடைமுறை விதிகள் மக்கள் எளிதில் பயன்படுத்த இயலாத வகையில் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கச் செல்வதும் அவ்வளவு சுலபமாக இல்லை. காவல்துறையின் அணுகுமுறை, தாமதமான செயல்பாடு போன்றவற்றால், காலம் கடந்துதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல வழக்குகளில் நடவடிக்கை என்பது பாதிப்புக்குள்ளானவரையே குற்றவாளி ஆக்குகிறது.

நமது சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. அதனால், குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது. உலகளவில் எடுத்துக்கொண்டாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா இருக்கிறது. இவையெல்லாம் எவ்வளவு வேதனை கொள்ளவேண்டிய தருணம். கற்புக்கு பெயர் கொண்ட நம் நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக பல பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களும் துன்புறுத்தல்களும் பணி செய்யும் இடங்களில் நடைப்பெறுகிறது.

பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து 70 சதவிகித பெண்கள் புகார் அளிப்பதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எத்தனையோ கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகளினால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடம் கிடைப்பது அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை. பார்வையால் பலாத்காரம் செய்யும் ஆண்கள்,  சிரித்து பேசினாலே பணிந்து போய்விடுவாள் என்று நினைத்து தவறாக நடக்க முற்படும் உயரதிகாரிகள் பல இடங்களில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல வளரும் நாடுகளிலும் உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. சின்னஞ்சிறு பிள்ளைகள், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் மட்டுமல்லாது சித்தாள், விவசாய கூலிகள், நெசவு தொழிலாளிகள் ஏன் நூறுநாள் வேலைக்கு செல்லும் பெண்கள் கூட பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அலுவலங்களில் பெண்கள் பார்க்கும் போது ஆபாச செய்கைகள், கீழ்த்தரமான கருத்துகள், தவறான எண்ணத்தில் தொட்டு பேசுதல், நேரடியாக பாலியல் உறவுக்கு அழைத்தல், உடல் ரீதியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கிறது.

உண்மையில் இது அனைவராலும் மறுக்க முடியாமல் ஏற்று கொள்ளக்கூடிய செய்தியே ஒரு நடிகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிற பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் போது குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதை மறந்து விடுகிறது இந்த சமூகம். பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பெரும்பாலும் வெளியில் சொல்வது கிடையாது. ஏனெனில், அவ்வாறு தெரிவித்துவிட்டால், நான்கு சுவருக்குள் நடப்பது ஊருக்கே தெரிந்துவிடுகிறதே என்ற தயக்கம்தான். மேலும் ஒரு ஆண் செய்த தவறுக்கும் உலகத்தினரால் அந்த பெண் தான் வஞ்சிக்கபடுகிறாள் இதுவும் குற்றம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

இது குறித்து இந்திய பார் அசோசியேஷன் இந்த ஆண்டு ஆய்வு நடத்தியது. ஆய்வில், 6,047 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, மும்பை என நாட்டின் முன்னணி நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நீக்கமற, இத்தகைய பாலியல் தொல்லைகள் மறைமுகமாக நடைபெறுவதாகவும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் வேலை கிடைக்க வேண்டுமெனில் அல்லது வேலையை நிரந்தரம் செய்துகொள்ளவும், சம்பள உயர்வு போன்ற சலுகைகளுக்காகவும் என பல விதங்களில் பாலியல் ரீதியாக,  ஒத்துழைத்து செல்லும்படி தங்களது உயர் அதிகாரிகள் வற்புறுத்துவதாக, பல பெண்கள் தெரிவித்துள்ளனர்.

உயரதிகாரிகளின் காம இச்சைக்கு இணங்காத நிலையில், அதிக பணிச்சுமையை ஏற்படுத்துவது இரவில் தாமதமாக வீட்டிற்கு செல்லும் சூழ்நிலையை உருவாக்குவது என உயர் அதிகாரிகளின் தொல்லை நீளுவதாகவும் பெண்கள் குறிப்பிடுகின்றனர். பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது படிக்கும் இடத்திலோ இது போன்ற சம்பவம் நேர்ந்தால், அதைத் துணிச்சலுடன் வெளியே சொல்ல வேண்டும்.

நம் அனைவருக்கும் இது தெரிந்த செய்தி என்ற ஒன்றாக கூட இருக்கலாம் கடந்த 1997ம் ஆண்டு பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விசாகா என்பவரின் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் பணியிடத்தில் பாலியல் வன்முறை என்பது மனித உரிமைமீறல் நடவடிக்கை என்பதை முதல் முறையாக ஏற்றுக் கொண்டது. இவ்வழக்கில் தனது தீர்ப்பில் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் அளித்தது. இதுதொடர்பான சட்டம் இயற்றப்படும் வரை இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் இந்த வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கியது. இதனடிப்படையில் தான் பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான சூழல் எழுந்தது.
விசாகா வழக்கில் நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்படி நிறுவனம் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்துவதாக இருந்தது. ஆனால், பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டமானது, அலுவலகங்களில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, கட்டிடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்கள், தற்காலிக அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலி அல்லது பயிற்சி அடிப்படையில் வேலை செய்பவர்கள், ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ பணிபுரிபவர், தன்னார்வு அடிப்படையில் வேலை செய்வோர் என அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் பணியிடத்தில் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்துள்ளது. இச்சட்டத்தின்படி, 10 பேருக்கு மேல் பெண்கள் பணியாற்றும் எந்தவொரு நிறுவனமும் அலுவலக அளவிலான புகார் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

அவ்வாறு புகார் குழுவிலோ அல்லது ஊடகங்களிலோ சொல்லும் பெண்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது பெண்ணியல் ஆர்வலர்களின் கருத்து. ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியமாக வெளியே சொல்லும் பட்சத்தில் அவரைச் சமுதாயம் ஏளனமாகப் பார்க்கக்கூடாது. மாறாக, அவரை ஆதரிக்க வேண்டும். எனினும், குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றோர்கள் கூட்டி வளர்க்க வேண்டும் என்றும் பெண்கள் கூறியுள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்கள் தேசிய அளவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி ஆண் உயர் அதிகாரிகளுக்கும் மனநலப் பயிற்சி முகாம்கள் வழங்குவது போன்ற சில முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டுமே வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழாமல் தவிர்க்க முடியும் என்று கூறுகின்றனர்.

பெண்களின் உடை,  நடத்தைகளைப் பற்றி பேசும் சிலர் அதே நேரத்தில் பணியிடங்களில் உள்ள ஆண்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதையும் சற்று யோசித்து செயல்படுங்கள். மேலும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆண்கள்,  பணிக்கு செல்லும் தங்களின் மனைவி,  சகோதரி,  மகளை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதும் பல பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்தாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் நம் பெண்களும் சுதந்திரமாக தான் இருக்கட்டுமே அவர்களை உடல் ரீதியாகவும் உள்ளத்தின் ரீதியாகவும் ஏன் துன்புறுத்த வேண்டும் சற்றே சிந்தியுங்கள் தோழர்களே.

அது ஊட்டி மலையின் ஒரு பகுதி. இருளில் காடுகளுக்குள் ஒரு சாகச பயணம். குழுவாகச் சென்றதில் சிறு தூரத்திற்கு மேல் நடக்க முடியாததால் மூவர் மட்டும் அடிவாரம் திரும்பினோம். மணி இரவு 12:30. கடும் குளிர். ஒரு நபர் அழுக்கு வேஷ்டி, சட்டை, ஒரு போர்வை ஒன்றை மேலே சுற்றிக்கொண்டு கையில் ஒரு மரப்பெட்டி, ஒரு தகர டப்பா சகிதம் அப்பொழுது தான் வந்தார். உடனே அங்கிருந்த நான்கு, ஐந்து நபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். நாங்களும் அங்கு என்ன நடக்கிறது காண விரைந்தோம். எந்த நம்பரில் பணம் வைத்தாலும் இரண்டு மடங்கு தருவதாக டப்பாவை உருட்டிக்கொண்டு இருந்தார். அந்த விளையாட்டுக்குப் பெயர் “லங்கர் கட்டை” என்று முடிந்து தான் தெரிந்தது. இரண்டு நபர்கள் ஆளுக்கு சில நூறுகளைக் கட்டி இரட்டிப்பாகப் பெற்று அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தனர். மூன்றாம் நபர் தொடர்ந்து தவறாகக் கூறி பணத்தை விட்டுக் கொண்டே இருந்தார். அப்பொழுது தான் எனக்குள் இருந்த ஞானி வெகுண்டெழுந்தார். என்னுடைய பர்ஸில் இருந்து பணம் வெளியே வந்ததும் மூன்றாம் நபர் விலகிவிட்டார். சாம்பிள்’க்கு ஒரு நான்கு முறை உருட்டினார். நான்கு முறையும் நான்கு என்று சொன்னால் அங்கு நான்கு. ஆறு என்றால் ஆறு. சரியென்று பணம் கட்டத் துவங்கினேன். ஒரு முறை கூட கரெக்ட்டான நம்பரை அனுமானிக்க முடியவில்லை. கொண்டு சென்ற ஐந்நூறும் காலி. என்னுடைய நண்பர் என்னைக் காப்பாற்ற களத்தில் குதித்தார். என்னுடைய தளபதி. அவருடைய பர்ஸும் சைபர். மற்றோறு நண்பர் வந்தார். இறுதியில் மூவர் கைகளிலும் காலி பர்ஸ் மட்டும் தான். சுற்றி இருந்த மூவரும் உருட்டும் ஆளுடன் வேறு இடம் நோக்கி நகர்ந்தனர். பின் தான் மரமண்டைக்கு தெரிந்தது. அவர்கள் நால்வரும் ஒரே அணியென்று. மூன்று பேரிடமும் தேநீர் அருந்தக் கூட பணம் இல்லாமல் மற்றவர்கள் வரும் வரை குரங்குகள் போல வண்டியின் முன் அமர்ந்துகொண்டு இருந்தோம்.

சூதாட்டம் என்பது மிகக் குறுகிய காலத்தில் நமது அனுமானத்தையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் நம்பி நம் பணத்தை முதலீடு செய்யும் ஒரு விஷயம். பாகுபாடு இல்லாமல் அனைத்து வகுப்பு, அனைத்து தரப்பு மக்களையும் சூதாட்டத்தின் கவர்ச்சி சில தினங்கள் வந்து செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஒவ்வொரு மாநில சூழ்நிலை, கலாச்சாரம், பங்கேற்கும் சமூகம், வசதி வாய்ப்புகளைப் பொருத்து சூதாட்டக்களம் மாறுபடுகிறது.

நூற்றாண்டுகளாக தாயக்கரமும் பரமபதமும் இந்தியாவில் உள்ளன. மகாபாரத கதையே தாயக்கரத்தில் சூதாடுவதை மையமாக வைத்துத் தான் நகரும். பரமபதம் அச்சிடும் தொழில்நுட்பம் வருவதற்கு முன்பு வரைந்து விளையாடி இருக்கலாம். பின்பு அச்சிடும் தொழில்நுட்பம் வந்தவுடன் தங்களுக்கு விருப்பமான கதைகளுடன் அச்சிட்டு விளையாடி மகிழ்ந்தனர். ஆடுபுலியாட்டம் இன்றளவிலும் சுமை தூக்குவோர் அல்லது வாகன ஸ்டான்ட் போன்று தினசரி காத்திருக்கும் இடத்தில் விளையாடுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பொருட்செலவோ, உபகரணமோ இல்லாமல் வெறும் பென்சில், ஒரு சில கற்கள், தேவையென்றால் வரையப்பட்ட அட்டை இருந்தால் போதும் என்பதால் இவ்வகை விளையாட்டுகளில் தீவிரம் அதிகரித்து அதுவே பந்தயமாக மாறி இருக்கலாம்.

செஸ் என்கிற சதுரங்கம் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்து விளையாடப்பட்டு வருகிறது. சீனாவில் தொடங்கி இந்தியாவிற்குள் நுழைந்து இங்கிருந்து தான் பிற நாடுகளுக்குச் சென்றுள்ளது. குப்தர்கள் காலத்தில் “சதுரங்கா” என்று அழைக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அல்லது பெரிதும் சூதாட்ட களத்தில் செஸ் இல்லையென்றாலும் உள்ளூர் பந்தயங்களில் பரிசுத்தொகைக்காக விளையாடப்படுகிறது.

கேரம்போர்டு விளையாட்டு தெற்காசிய மக்களிடையே மிகப் பிரபலம். இந்த விளையாட்டு இந்தியா மகாராஜாக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இன்றளவில் தமிழ்நாட்டின் வீதிக்கு வீதி கேரம்போர்டு சாம்பியன்களை நம்மால் பார்க்க முடியும். பெரும்பாலான சிறு மற்றும் பெரு நகரங்களில் சிறு அறைகள், கிளப்கள், என பல்வேறு தளத்தில் இதற்காக போர்டின் பிரத்யேக விளக்குகள் அமைக்கப்பட்டு தினசரி பந்தயங்கள் மறைமுகமாக நடக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை உண்மையான சூதாட்டம் என்று பரவலாக நம்பப்படுவதில் சீட்டு விளையாட்டு முதல் இடத்தைப் பிடிக்கிறது. பொது இடத்தில் விளையாடத் தடை செய்யப்பட்ட ஒன்று. இதற்கான அங்கீகரிக்கப்பட்ட க்ளப்கள், விடுதிகள் போன்ற ஒரு சிலவற்றில் மட்டுமே தொழில் முறை சூதாடிகளும், மற்றவர்களும் விளையாடுகின்றனர். புள்ளிகள் கணக்கில் ஒரு புள்ளிக்கு மிகக் குறைந்த பட்சம் ஒரு ரூபாய் முதல் ஒரு புள்ளிக்கு சில ஆயிரம் ரூபாய் வரை க்ளப்களில் ஆடப்படுகிறது. சாதாரண மக்களிடம் விடுமுறை தினம், பொது நிகழ்ச்சி, சுற்றுலா, திருமணம் போன்ற நிகழ்வுகளில் ஒன்று கூடும்பொழுது பணம் வைத்து விளையாடுவதை ஒரு சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கொங்கு மாவட்டங்களில் சேவல் சண்டைகள் மிக பிரபல்யம். வெளிப்படையாகப் பந்தயங்கள் விடுவதை அரசு அனுமதிக்கா விட்டாலும் வளர்ப்பவர்கள் இடத்தில் இவை நடப்பதுண்டு. சாதரனமாக ஒரு கட்டு சேவல் என்கின்ற பந்தய சேவல் ரூபாய் 50௦0 முதல் 5௦,0௦0 வரை விற்பனை செய்யப்படுகிறது. பல விதமாக வகை சேவல்கள் மற்றும் அதன் தன்மையும் கேட்டால் மலைப்பாக இருக்கும். ஒரு சில ஆர்வலர்கள் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவின் மங்களூர் வரை சென்று சேவல்களை வாங்கி பயிற்சி அளித்து வருகின்றனர். போட்டிகளில் வென்றவருக்குத் தோற்ற சேவலும், பந்தய பணமும் அளிப்பது வழக்கம். இவ்வகை கட்டு சேவலின் இறைச்சி சுவையில் உலகின் மற்ற எந்த விலங்கின் இறைச்சியும் போட்டி போட முடியாது என்றே சொல்லலாம்.

புறா பந்தயம் ஒரு குறிப்பிட்ட சாரரிடம் மட்டுமே நடக்கிறது. இது தமிழகம் முழுவதும் பரவலாக ஆங்காங்கே நடக்கும். குறிப்பிட்ட பந்தய தூரத்தை அடைவது, அல்லது அதிக நேரம் தரை இறங்காமல் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டே இருப்பது என்று வெவ்வேறு வகையான போட்டிகள் நடக்கின்றன.

முதலில் வார லாட்டரி / மாத குலுக்கல் என்று இருந்த பொழுது அது மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பரிசு இல்லையென்றால் அடுத்த குலுக்கல் தினத்திற்காகக் காத்திருந்தனர். காலப்போக்கில் பரிணாம மாற்றம் அடைந்து மூன்று நம்பர் / ஒரு நம்பர் குலுக்கல் போன்றவை உள் நுழைந்தன. ஒரு நாளைக்கு இரண்டு முறை குலுக்கல் / பல கம்பெனி லாட்டரிகளில் இது நடைபெறும். மக்கள் தங்கள் வேலை, பொருள், நிம்மதி அனைத்தையும் இழந்து தமிழகத்தின் தெருக்களில் லாட்டரி கடை வாசல் முன்பே காத்திருந்தனர். பின்பு முழுமையாக லாட்டரிகளுக்கு தடையைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இப்பொழுது கேரளா லாட்டரிகளை ஏஜென்ட்கள் மூலம் வாங்கி ஒரு கூட்டம் தங்கள் அதிர்ஷ்ட தாகத்தை தீர்த்துக் கொள்கின்றனர்.

ஆன்லைன் சூதாட்டங்களில் கணக்கிட முடியாத வகைகள் உண்டு. இதில் நாம் பந்தயம் கட்டிய பணத்தையும் வென்ற பணத்தையும் சரியாகத் தரும் இணையதளங்களைக் கண்டுபிடிப்பது மிகக்கடினம்.

இணையதளத்தில் சீட்டு விளையாட்டு, குதிரை பந்தயம், ஸ்போர்ட்ஸ் பெட்டிங் எனப்படும் புட்பால், கிரிக்கெட் போன்ற அனைத்து முக்கியமான போட்டிகள் நடக்கும்போதும் பிரத்யேக இணையக் கவுண்டர்கள் ஓபன் செய்வார்கள். பரிவர்த்தனை அனைத்தும் இணையத்தில் நடைபெறும். பெரும்பாலான இணையதளங்கள் இவ்வகை பெட்டிங்’கில் சரிவர பணத்தை திருப்பித் தருவதில்லை. புகார் செய்யவும் முடியாமல் ஏமாறுபவர்கள் ஏராளம்.

பெங்களூர், கோவா போன்ற பெரு நகரங்கள் மற்றும் சுற்றுலா நகரங்களில் மட்டுமே வெளிநாட்டு விளையாட்டான ராயல் கேசினோ விளையாடப்படுகிறது. மேலும் இவ்வகை விளையாட்டுகள் மேல்தட்டு மக்கள் மட்டுமே விளையாடும் மிக அதி செலவீனமான விடுதியாக இருக்கும்.

மக்கள் தொகை பெருக்கம், வேலை வாய்ப்பின்மை, சுய தொழிலில் ஏற்படுகின்ற சிரமங்கள், குடும்பச் சூழல் போன்றவற்றால் குறுகிய காலத்தில் அதிக பணத்தை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலான மக்கள் உழல்கின்றனர். சூதாட்டமும் அதற்கேற்றால் போல் புது வருகையாளர்களுக்கு சில நாட்கள் பணத்தை அள்ளித் தரும். அவர்களே வாடிக்கையாளர்களாக மாறிவிட்டால் கை குட்டையைக் கூட மிச்சம் விடாது. சூது என்பது ஒரு போதை. குறுகிய கால பணம் கொழிக்கும் வழி என்றாலும் அது ஒரு புதை குழி!!!!!!!!!!!!!

உலகையே நடுநடுங்க வைத்த ஒரு சர்வாதிகாரி என்றாலே நம் நினைவில் வந்து நிற்கும் பெயர் ஹிட்லர். இரண்டாம் உலக போரின் கதாநாயகனாகவும் வில்லனாகவும் அனைவருக்கும் காட்சி அளித்தவன். நாஜி கட்சியின் நிறுவனர்,  இவன் தான் இரண்டாம் உலகப் போரைத் தொடங்கி ஹோலோகாஸ்டின் இனப்படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டவன். யுத்தம் முடிவடைந்த நாட்களில் அவனைக் கொன்ற போதிலும், அவனது வரலாற்று மரபு இருபதொண்ணம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. இரண்டாம் உலக போர் முடிவதற்கு இவன் காரணமாக இருந்த கதாநாயகன் என்று குறிப்பிட்டாலும் இரண்டாம் உலக போரில் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு முக்கிய காரணமாக இருந்தே ஒரே வில்லன் ஹிட்லர் தான். உலக நாடுகளை வென்று ஜெர்மனியின் காலில் கிடக்க வேண்டும் என எண்ணியவர் உலகப்போருக்கு காரணமானவர் ஹிட்லர் தான். எந்த கொடுமையான செயலைச் செய்தவனை குறிப்பிடும் போதும் ஹிட்லர் மாதிரி என்று பரவலாகக் கூறப்படுவதைக் கேட்டிருக்கலாம். எல்லோருக்குமே ஹிட்லர் ஏறத்தாழ ஒரு கோடி யூதர்களைக் கொன்றது தெரிந்திருக்கும். சரித்திரத்தின் பக்கங்களில் சிகப்புப் பக்கங்களாய் என்றும் பயமுறுத்தும் செயல்.இதற்கு ஹிட்லர் காரணம் என்பது உண்மை தான்.
அடால்ப் இட்லர் காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 20 ஏப்ரல், 1889 இல் தாய் (அலய்ஸ இட்லரின் மூன்றாவது மனைவி) கிளாரா போல்ஸ் (1860–1907), தந்தை ஆலாய்ஸ் ஹிட்லருக்கும் (1837–1903) ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் ஹிட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா ஹிட்லர் மட்டும்தான்.

ஹிட்லரின் அப்பா தகாத உறவில் பிறந்ததால் தன்னுடைய தாய் பெயரை பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டார். ஹிட்லரின் அப்பாவுக்கு அடக்குமுறை குணம் கொஞ்சம் அதிகம். அதுவே சிறுவன் ஹிட்லர் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. சிறு வயதிலேயே அடால்ப் ஹிட்லரின் தந்தை, வீட்டில் உள்ள அனைவரையும் அடக்கி ஆளும் தன்மை உடையவராக இருந்தார். வீட்டில் பல கடுமையான விதிமுறைகள்,  தன் பிள்ளைகள் இதைதான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் என்று அடால்ப்பின் வீடே ஒரு சிறிய ராணுவம் போல இருந்தது. தன் தந்தை எவ்வாறு தன்னையும் தன் தாயையும் அடித்துத் துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புறுவதைக் கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார் என்று தெரிகின்றது. அதே சமயம் அவர் தந்தைமேல் அளவு கடந்த வெறுப்பையும் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது என்றும் தெரிகின்றது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அடால்ப்பின் வாழ்விலும், அவரது தந்தையின் அடக்குமுறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த அடக்குமுறையின் வெளிப்பாடே பிற்காலத்தில் ஹிட்லரை சர்வாதிகாரியாக மாற்றியது. அடுத்ததாக ஹிட்லர் தனது இளமைகாலத்தைக் கழித்த வியென்னா நகரம் யூதர்களுக்கு எதிரான சிந்தனையைத் தூண்ட வழி வகுத்தது. அனைவரும் கூறும் குற்றச்சாட்டு ஹிட்லர் யூதர்களுக்கு எதிரானவர் என்பதே.
தான் மிகவும் விரும்பி சேரத் துடித்த கலைக் கல்லூரியில் இரு முறை அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. தாயின் மரணம், பொருளாதார சீர்குலைவு போன்றவை ஹிட்லரை வெறுப்பின் விளிம்பிற்குத் தள்ளியது. இந்த இன்னல்களுக்குக் காரணம் தேடி அலைந்த ஹிட்லரை,  அன்றைய வியென்னா யூதர்கள் பக்கம் திருப்பியது. தன் பூர்வீகக் குடிகள் மட்டுமே அனுபவிக்க உரிமையுள்ள நிலத்தைக், குடியேறிய மக்கள் பறிப்பதா என்று கேள்வி எழுந்தது. ஒரு கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் ஹிட்லரை பிகாசோ மாதிரி ஒரு ஓவியராகத் தான் உலகம் அறிந்து இருக்கும். ஆனால் அவரின் சில வெறுப்புகள் அவரை ஒரு சர்வாதிகாரியாக உலகம் பார்க்கும் படி செய்துள்ளது.

அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள ஒநாய் என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த ஹிட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். 1920 களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி என அழைத்தனர். ஹிட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள்  காப்பாளர் என்றும் பொருள்படும்.

ஹிட்லருடைய தந்தைவழி சொத்துக்களின் கடைசி பங்கு கிடைத்தவுடன் ஜெர்மனியின் பாரம்பரிய நகரமான முனிக் நகருக்கு குடிபெயர்ந்தார். அவர் குடிபெயர மற்றுமொரு காரணம் இருந்தது. ஹிட்லர் இராணுவத்தில் சேர விருப்பம் இல்லாமல் அங்கு சென்றார் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவரை இராணுவத்தில் சேர வைத்தது.
ஹிட்லர் கடைசி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அவருக்காக உயிர் விட துணிந்து உயிரையும் விட்ட  எவா பிரான் என்ற  காதலி  இருந்தாள். ஹிட்லரின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஹிட்லரை அவதார புருஷராக நம்பினார்கள், ஹிட்லர் பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த உண்மை மிகவும் வியக்க வைக்க கூடிய ஒன்று ஐந்து முறை மகாத்மா காந்தி நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் ஒருமுறை கூட நோபல் பரிசை வென்றதில்லை. அதே சமயம் ஹிட்லர் நோபல் பரிசை வென்றுள்ளார். அகிம்சை என்று போராடியவரை விட சர்வாதிகாரியாக நின்ற ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. மிகவும் தைரியமான மற்றும் வீரமான மனிதரான ஹிட்லர் பூனை பயம் கொண்ட நோயான அலுரோஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்.

பிப் 27, 1933 அன்று இரவு, ஹிட்லர் ஜெர்மன் அதிபராக பதவி ஏற்று நான்கு வாரங்களுக்கு பிறகு, ஜெர்மன் பாராளுமன்றத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்படுகின்றது. மாரினுஸ் என்ற மன நலம் குன்றிய, ஒரு கம்யூனிஸ்ட் கைது செய்யப்பட்டு, குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட்டு கொல்லப்படுகின்றார். இது ஒரு கம்யூனிச சதி என்று கூறி, ஹிட்லர் , அப்போதுள்ள 86 வயதுடைய ஜெர்மானிய அதிபர் பவுல் வான் ஹிந்தேன்புர்கிடம் ரீக்ஸ்டேக் சட்டத்தை அனுமதி அளிக்கச் சொல்கின்றார். இந்த சட்டத்தின் படி, ஹேபியஸ் கார்பஸ், கருத்துரிமை, ஊடக சுதந்திரம், மக்கள் ஒன்று கூடும் சுதந்திரம் அனைத்தும் தடுக்கப்படுகின்றது.
அரசு, மக்களின் கடிதங்களையும், தொலைபேசியையும் ஒட்டுக்கேட்க அனுமதி அளிக்கப்படுகின்றது. பின்னர் Enabling Act of 1933, எந்த ஒரு சட்டத்தையும், பார்லிமென்ட் அனுமதி இல்லாமல் அமுல் படுத்த, அவர் சொன்னது போல், “பொது/அரசியல் வாழ்க்கையில் தூய்மையை ஏற்படுத்த”, ஹிட்லருக்கு முழு அனுமதி அளிக்கப்படுகின்றது. இதற்குப் பின் தேசிய சோசலிச கோட்பாடை எதிர்க்கும் எந்த ஒரு மனிதனையும் கைது செய்யவும், நாடு கடத்தவும் மேலும் கொல்லபடுவதையும் வழக்கமாக்கி வந்தனர். யூதர்களைப் பொருத்தவரை, ஹிட்லரும் நாஜிகளும் அவர்களை எலி போன்ற மிருகங்களாக கருதினர். அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தொழில்கள் அபகரிக்கப்பட்டு, இறுதியில் சில முகாம்களில் அடைக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர்.

இவ்வளவு பயங்கரவாதமும் ஏன் ஜெர்மனியில் நடந்தது என்றால், அங்குள்ள மக்கள் அதை அனுமதித்ததால் தான். ஹிட்லரும், நாஜிகளும் மக்களின் அமைதியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தான் இவ்வளவு பெரிய பயங்கரவாதத்தை நடத்தினர். இவை எல்லாம். “வலிமை மிக்க தேசம்” என்ற பெயரில் நடந்ததால் மக்கள் கண்டுகொள்ளவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய விஞ்ஞானியும் கோட்பாடு இயற்பியலின் தந்தை என்றும் அழைக்கப்பட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னமாகியது ஹிரோசிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியாகிய அந்த செய்திகேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி, விம்மி அழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்துச்  சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அணுகுண்டின் அடிப்படையாக கருதும் சூத்திரம் E=mc2 நிறைக்கும் ஆற்றலுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் இந்த ஆற்றலைக்  கண்டுபிடித்தவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அறிவியல் கண்டுபிடிப்புகள் நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என்று நம்பிய இவர்தான் இருபதாம் நூற்றாண்டின் தனித்த அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ம் தேதி ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார் ஐன்ஸ்டீன். அவர் பிறந்தபோது அவர் ஒரு மேதை இல்லை. உண்மையில் மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் சராசரி மாணவராகத்தான் இருந்தார். ஐன்ஸ்டீனுக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்தபோது வயது 4. ஒருமுறை அவருக்கு காம்பஸ் என்ற திசைகாட்டி கருவியைப்  பரிசாக தந்தார் அவரது தந்தை. அதனுள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகம் நோக்கி ஈர்த்தது. பள்ளியில் தானாகவே கால்க்ளஸ் என்ற கணிதக்  கூற்றைக்  கற்றுக்  கொண்டார். அதன் பின் ஏற்பட்ட சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டார் ஆனால் ஆசிரியருக்கும் அந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமல் திகைத்துப்போனார். தன் சிறுவயதிலேயே வார்த்தைகளாலும், சொற்களாலும் சிந்திப்பதைக்  காட்டிலும் படங்களாகவும், காட்சிகளாகவும் சிந்தித்தார் ஐன்ஸ்டீன்.

அவர் அறிவியலில் பல கண்டுபிடிப்புகளும், சாதனைகளும் புரிந்திருந்தாலும் வாழ்க்கையில் தன் குடும்பச்  சூழலில் அவர் அதிகம் நாட்டத்துடன் இல்லை என்பதே உண்மை. வால்டர் ஐசக்சன் என்ற நூல் ஆசிரியர் உலகிலேயே மிக மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Einstein: His Life and Universe) என்ற புத்தகத்தை வெளியிட்டார். உலகிலேயே மிகப்பெரிய விஞ்ஞானியாக பார்க்கும் ஒருவர் மேல் குற்றம் சாட்டப்படும் வண்ணம் அமைந்தது இந்த புத்தகம். தனது வாழ்க்கையில் பல்வேறு கண்டுபிடிப்பிற்கும், புகழுக்கும் உரிய இவர் தன் திருமண வாழ்க்கையைச் சரி வர வாழவில்லை. ஐன்ஸ்டின் மாணவராக இருந்த போதே, அவரது அறிவாற்றலால் கவரப்பட்டு காதலியாக மாறிய மிலவா என்ற பெண்ணை அவரும் காதலித்தார். மேலும் அவர் ஐன்ஸ்டீனுடன் பணியாற்றிய பெண் தான் விஞ்ஞானி மிலவா மாரிக்கை அவரையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தினார் ஐன்ஸ்டீன்.
ஐன்ஸ்டீனின் முதல் மனைவி மிலவா
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை  பதினோரு ஆண்டு காலமே நீடித்தது. தனது மனைவிக்கு இவர் விதித்த நிபந்தனைகள் கேட்டாலே வியப்புக்குள்ளாக்குகிறது. ஐன்ஸ்டீன் தனது மனைவியை ஒரு வேலைகாரியை போலத்தான் நடத்தியுள்ளார். ஆனால் அவரது மனைவியோ தனது அன்புக்குரிய கணவனுக்கு அனைத்து வேலைகளையும் செய்துக்கொடுத்துள்ளார். ஐன்ஸ்டீன் அறைக்குச் சென்றே அவருக்கு உணவளித்துள்ளார். இந்தப் பெண் மட்டும் சாதாரணப் பெண் அல்ல ஐரோப்பாவில் முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து, விழுந்து கவனித்தவர் அவரது மனைவி மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மனைவி மிலவா மற்றும்
அவரது இரண்டு குழந்தைகள்
ஐன்ஸ்டீன் இடையில் 1912 ஆம் ஆண்டு தனது உறவினரான எல்சாவின் பக்கம் திரும்பினார். எல்சாவிடம் மாரிக் மனச்சோர்வு மற்றும் பொறாமைக்குணம் பிடித்தவள் என்று கூற ஆரம்பித்தார். மாரிக்கிடம்  விவகாரத்து கேட்டார் ஐன்ஸ்டீன். ஆனால் மாரிக் தர மறுத்து விட்டார். நீ என்னுடன் வாழ சில நிபந்தனை உண்டு என்று ஐன்ஸ்டீன் கூறினார். அந்த நிபந்தனைகள் அருகில் வந்து உட்காரக்கூடாது, வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது, வெளியுலக தொடர்புகளை அதிகம் தெரிந்து வைத்துக் கொள்ளக்கூடாது என்று நீளுகிறது ஐன்ஸ்டீனின் நிபந்தனைப் பட்டியல். அதையும் விட மிக முக்கியமான ஒன்று தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவரது மனைவி எதிர்பார்க்கக்கூடாது என்று கூறினார் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்கக் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று. இந்த நிபந்தனைகளையும் தாண்டி அவள் இவரை நன்கு கவனித்தாள். அவருக்கு வேண்டியவற்றை செய்து கொடுத்தாள். அவரின் துணிகளையும் துவைத்து தேய்த்து அவருக்கு கொடுத்து பணிவிடை செய்தாள். அவளால் முடிந்தவரையில் எந்த எதிர்பார்ப்புமின்றி அவருக்கு பணிபுரிந்தாள். ஆனால் அவளுக்கு எந்த வித கைமாறும் செய்யவில்லை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இப்படிப்பட்ட 11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்கு பின் ஐன்ஸ்டீனை விட்டு தனது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தன் பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார். ஐன்ஸ்டீனின் குழந்தைகளில் ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902 ஆம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்து கொடுத்துவிட்டனர். மாரிக் மற்றும் ஐன்ஸ்டீன் ஆகியோர் பிப்ரவரி 14, 1919 அன்று ஐந்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்தனர்.
அவரது இரண்டாவது மனைவி
எலிசாவுடன் இருக்கும் புகைப்படம்
ஐன்ஸ்டீன் ஜூன் 2, 1919 இல் எல்சாவை திருமணம் செய்தார். எனினும் அந்த இரண்டாவது திருமணமும் அவருக்கு மகிழ்ச்சி தருவதாக  அமையவில்லை. அவள் திடிரென்று மரணித்துவிட்டாள். இந்த வாழ்க்கையும் துயரில் சென்று முடிந்தது. பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு பல பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அவர் ஒரே ஒரு செயலுக்கு விசுவாசமாக இருந்தார் அது தான் இயற்பியல். பல முறை தன் திருமண வாழ்வில் தான் சரியாகத் தான் நடந்துக்கொள்கிறோம் என்று எண்ணினார். சில சமயம் அது தவறென்றும் உணர்ந்தார். பிறகு இவையெல்லாம் தன் வெற்றிக்கு இடையூறு தரும் வண்ணமாக உள்ளது என்று எண்ணி இருபது ஆண்டுகள் மனைவி, துணைவியின்றி தனியாகவே வாழ்ந்து ஏப்ரல் மாதம் 18ஆம் நாள் 1955ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
இருபது ஆண்டுகள் மனைவி
துணைவியின்றி தனியாகவே வாழ்ந்தார்.
வாழ்க்கை என்பது இரண்டு நிலைகள்தான். ஏற்றமும், தாழ்வுமே அது. அதில், சரியாகப் பயணிப்பவர்கள் வெற்றிபெறுகிறார்கள். இந்த வெற்றியின் பயணத்தில் ஐன்ஸ்டீனின் வாழ்வும் அடையும். இன்பமும், துன்பமும் அவரை எதிர்கொண்டபோது எந்த சூழ்நிலையிலும் தனது வழியை மாற்றாமல் இருந்தார். அதனால்தான் அவருக்கு மிக உயர்ந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிரபல விஞ்ஞானி ஆன பிறகு அவர் கூறியிருக்கிறார் –  “நான் ஒரு இயற்பியல் விஞ்ஞானி ஆகவில்லை என்றால் ஒரு இசைகலைஞனாகி இருப்பேன். நான் அடிக்கடி இசையைப்பற்றி யோசித்துக்கொண்டு இருப்பேன். என் பகல் கனவு இசையிலேயே கழியும். நான் வாழ்வை இசையின் அடிப்படையிலேயே பார்க்கிறேன். என் வயலினில் இருந்து வெளிப்படும் இசையில் நான் என் வாழ்க்கையின் அதிகப்படியான மகிழ்ச்சியினை காண்கிறேன்” என்று கூறினார். அவரது மரணம் வரை விண்வெளி மற்றும் நேரம் ஆகியவற்றின் கோட்பாடுகளுக்கான கண்டுபிடிப்பிற்கான தேடல் இருந்தது. அவர் தன்னை தானே, உடலையும் ஆத்மாவையும் விஞ்ஞானத்திற்கு விற்றுவிட்டதாக ஒருமுறை சொன்னார். ஆனால் கண்டுபிடித்த இராட்சத விஞ்ஞானம் மனித இனத்தின் பல வழிகளில் பயன்பட்டிருந்ததாலும் அவர் சாதாரண மனித இனமானதால் அவர் மீதும் பல குற்றச்சாட்டுகளும் தவறுகளும் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு நாயகனாக இருந்த விருப்ப நாயகன்தான் புரூஸ் லீ. இன்று தற்காப்புக்  கலை இந்த அளவு பிரபலம் ஆனதற்கு ஒரே முக்கிய காரணம் புரூஸ் லீயாகத்தான் இருக்க முடியும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு உண்மையே. புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும், கால்களும் எதிரியைத்  தாக்கும் வேகத்திற்கு அன்றைய திரையுலக தொழில்நுட்பத்தால் கூட ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 கட்டங்கள் என்பதே கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுப்பதற்கு ஒரு வினாடிக்கு 34 கட்டங்களாக மாற்றியமைத்தனர்.
புரூஸ்லீ 1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ந்தேதி அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மாகாணம் சைனா நகரப்  பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் லீ ஹோய்-சுவென் மற்றும் கிரேஸ் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை ஒரு நடிகர். புரூஸ்லீக்கு அவரது பெற்றோர்கள் லீ ஜூன்பேன் என பெயர் வைத்தனர். அந்த பெயர் அமெரிக்க மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியரின் வாயில் நூழையவில்லை. எனவே அந்த செவிலியர் செல்லமாக புரூஸ் எனக் கூப்பிட அதுவே பிறகு அவரது பெயராக நிலைபெற்றது.
புரூஸ் லீக்கு மூன்று மாதங்கள் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை லா செல் கல்லூரியில் மேல்நிலைக் கல்வி பயின்றார் புரூஸ் லீ. பின்னர் புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் தனது படிப்பை தொடர்ந்தார். 1959 ஆம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்கஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ. இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோவிற்கு அனுப்பி வைத்தார். சீன வம்சாவளியைச்  சேர்ந்தவர் என்றாலும் அமெரிக்காவில் பிறந்தவர் புரூஸ் லீ. அதன்பிறகு பாரம்பரிய கல்வி பெற சீனாவிற்கு அனுப்பப்பட்டார். தற்காப்புக்  கலையை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்த லீ,  சீனத்  தற்காப்பு கலையை உலகம் முழுவதும் பரப்புவதற்கு பள்ளி ஒன்று தொடங்கினார். அவரது பள்ளியில் குங்பூ, கராத்தே,  ஜுடோ, குத்துச்சண்டை போன்ற அனைத்து வடிவங்களும் ஒன்றுசேர்த்து புதிய கலையை கற்றுக்கொடுத்தார். கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களைச்  சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே ‘புரூஸ்லீ குங்பூ’ என அழைக்கப்பட்டது. இதனைத்  தத்தவப் பாடத்துடன் சேர்த்து ‘ஜே கேடி’ எனும் புதிய பயிற்சியை அறிமுகப்படுத்தினார். இதனை பயிற்றுவிக்க பல பள்ளிகளையும் திறந்தார். தற்காப்பு கலையின் உச்சத்தைத்  தொட்ட புரூஸ்லீ தத்துவம் முதுகலை படித்தவர். மேலும் இவர் ஆழ்ந்த தத்துவ ஞானம் உடையவர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு நிகழ்வே. தற்காப்புக்  கலையை இன்று உலகம் முழுவதிலும் கொண்டு சென்ற இவர் குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

சண்டைக்கு புரூஸ் லீ அளித்த விளக்கம் ஒன்று. களத்தில் எதிரி இருக்கக்கூடாது. ஆனால் சண்டை நடக்கவேண்டும். ஒரு விறுவிறுப்பான நாடகம் போல சண்டை அமைய வேண்டும். போட்டிக் களத்தில் யார் வேண்டுமானாலும் எதிரியாக வரலாம், எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் வேறு சிந்தனையோ, கனவோ இருக்கக்கூடாது. சண்டை குறித்து எந்த அச்சமும், பதட்டமும் இல்லாமல் சண்டைக்குத்  தயாராக இருக்க வேண்டும். எதிரி தடுக்கும்போது தாக்கவும், எதிரி தாக்கும்போது தடுக்கவும் வேண்டும். சண்டை இல்லாத சண்டைதான் என் கனவு என்று சொன்னார் புரூஸ் லீ.
புரூஸ்லீயின் தந்தை ஒரு நடிகர் என்பதால் புரூஸ்லீயின் நடிப்பு வாழ்க்கை சிறு வயதிலேயே ஆரம்பமானது. தனது  18 வயதிற்குள் 20 படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது பேட்மேன் பட தயாரிப்பாளர் வில்லியம் டோசியர் பார்வையில் இவர் பட்டது இவர் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. புரூஸ்லீ அமெரிக்காவில் இருந்தபோது ‘தி கிரீன் ஹார்னட்’, ‘அயர்ன் சைடு’, ‘ஹியர் கம் த பிரைடுசு’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.

அமெரிக்காவில் இருந்து ஹாங்காங் திரும்பிய இவருக்கு கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் சௌ ஒரு படத்தில் நடிக்குமாறு ஒப்பந்தம் செய்துக்கொண்டார். ரேமண்ட் தயாரிப்பில் இவரது முதல்படம் 1971ஆம் ஆண்டு  பிக்பாஸ் என்ற பெயரில்  வெளிவந்தது. வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும், ’Crawn Colony Cha Cha’ சாம்பியனாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது. இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இவரது அதிவேக சண்டைகளும் கண்களில் அவர்காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூல் பெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த 1972ல் வெளிவந்த ‘பிஸ்ட் ஆப் பியூரி‘ திரைப்படம் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து மிகப்பெரிய வெற்றியை மீண்டும் பெற்று தந்தது. அதே ஆண்டில் புரூஸ்லி கதை எழுதி இயக்கிய ‘வே ஆப் தி  டிராகன்‘ திரைப்படம் புரூஸ்லீயின் புகழ் உலகளவில் கொண்டு சென்றதோடு அவருடன் சேர்ந்து குங்பு கலையையும் பிரபலமடைய வைத்தது. வே டூ த டிராகன் படத்தின் கிளைமாக்ஸில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக்நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார். ரோமில் எடுக்கப்பட்ட இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் புரூஸ் லீயும் சக்நாரிஸும் மோதுவதை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அத்தனை ஆக்ரோஷமான அற்புதமான சண்டைக்காட்சி இது.

தன்  இளம்வயதிலேயே எதிர்பாராதவிதமாக மரணத்தைத்  தழுவிய அவரால் சில படங்கள் மட்டுமே நடிக்க முடித்தது என்றாலும், அவரது மிகப்பெரிய வெற்றிப்படம் உலகோர் அனைவராலும் மறக்க முடியாத திரைப்படம் ‘என்டர் தி  டிராகன்‘. இந்த படத்திற்கு ஏராளமான சிறப்புகளும் உண்டு. ஒட்டுமொத்த படமாக பார்க்கும்போது வித்தியாசமான காட்சி அமைப்பு, திடுக்கிடும் திரைக்கதை உத்தி, கண்களில் ஒற்றிக்கொள்ளும் ஒளிப்பதிவு, செவியைக்  குளிர வைக்கும் இசை எதுவுமே இல்லையென்றாலும், நரம்புகள் முறுக்கேறச் செய்யும் சண்டை காட்சிகளால் ரசிகனைக்  கட்டிப்போடச்  செய்தது  ‘என்டர் த டிராகன்’. இந்தப்  படம் உலகெங்கும் உள்ள ஆக்சன்  ரசிகர்களை அதிரவைத்தது. புரூஸ் லீ என்று பெயர் மந்திரம் மாதிரி உச்சரிக்கப்பட்டது. இதனால் உலகைக்  குலுக்கிய படங்களின் பட்டியலை சேர்ந்தது  ‘என்டர்  த டிராகன்’. இதன் வசூல் சாதனை அமெரிக்காவில் மட்டும் 850,000 டாலர்கள். ஆனால் அந்த வெற்றியை அவரால் பார்க்க முடியாமல் போனது.

தலை வலி என்று படுக்கச்  சென்றவருக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழுந்திரிக்கவில்லை. பிறகு ஹாங்காங் குயீன் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமல் மரணத்தைத்  தழுவினார். இன்றளவும் அவர் மரணம் ஒரு புரியாத மர்மமாகவே உள்ளது.
முப்பது வயதிலேயே புகழின் எல்லா சிகரங்களையும் தொட்டுப் பார்த்தவர், முன் கோபத்துடன் நடந்து கொண்டது, ஏராளமான எதிரிகளை அவருக்குச்  சம்பாதித்து கொடுத்தது. படத்தில் இவருடன் சண்டையிடுகிறவர்கள் மூக்கை உடைத்துக் கொள்வதும், பற்கள் பறி கொடுப்பதும் சாதாரணம். திரையில் இவ்வளவு ஆக்ரோசமாக இவ்வளவு உண்மையாக நிகழ்த்திக்  காட்டியவர் புரூஸ்லீக்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை என உறுதியாகக் கூறலாம். அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கலச்  சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை கடந்த நூற்றாண்டின் சமூகத்தைப் பாதித்த சிறந்த 100 மனிதர்களின் பட்டியலில் புரூஸ்லீயையும் சேர்த்துள்ளது. ஒரு கலையை எப்படி நேசிப்பது, அது எங்கனம்  உச்சத்துக்குக்  கொண்டு செல்வது என்பதைக்  கற்றுக் கொள்ளும் வண்ணம் அனைவருக்கும் அரிய ஆசானாகவே இன்னும் விளங்குகிறார்.

“ஞான நல்லறம்வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.. .
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்.. .
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் 
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்து 
இங்கே திலக வாணுதலார் 
தங்கள் பாரத தேசம் ஓங்க 
உழைத்திடல் வேண்டுமாம்”.

என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப இன்று தமிழ் பெண்கள் அனைத்து துறையிலும் தன் கால் தடங்களை பதித்துக் கொண்டிருப்பதை எண்ணினால் இதுதான் பாரதி கண்ட புதுமை பெண்களா என்ற மகிழ்ச்சியும் வியப்பும் ஆட்கொள்கிறது அடிமனதில். நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்பதே அனைவரது கருத்தாக இருந்தது. ஆனால் இன்றையக்காலத்தில் அந்த எண்ணம் மாறி விண்வெளி துறையில் கால் பதிக்கும் அளவு பெண்கள் வளர்ந்துள்ளனர் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய தருணம்.

ரிசப்ஷனிஸ்ட் டூ பெப்சிகோ சி.இ.ஓ. இந்திரா நூயி:

‘இந்திரா நூயி‘…உலக வர்த்தக மற்றும் பொருளாதாரத்தில் வலிமைமிக்க குரலாக ஒலித்துக்கொண்டிருப்பவர். உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானமான நிறுவனமான ‘பெப்சிகோ’வின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் பணியாற்றி வரும் இந்திரா நூயியின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணம். 1955-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி சென்னையில் பிறந்த இவரது முழுப்பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பி.எஸ்ஸி படிப்பும், கொல்கத்தா ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படிப்பும் முடித்த கையோடு சிறிது காலம் ஏ.பி.பி என்னும் வர்த்தக நிறுவனத்திலும், பின் ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ்’ நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராகவும் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து சென்னை பியர்ட்செல் ஆடை நிறுவனத்தில் பணி செய்தார். தன்னுடைய பணி வெற்றிகரமாக இருந்தாலும் கார்ப்பரேட் உலகில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள எம்.பி.ஏ படித்தது போதாது என்று தனக்கு நெருங்கிய பலரிடமும் தெரிவித்தார். அதனால் தனது வேலையை விட்டுவிட்டு, அமெரிக்காவின் ‘யேல்’ பல்கலைக்கழகத்தில் பப்ளிக் மற்றும் பிரைவேட் மேனேஜ்மென்ட் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்திலேயே படிப்பு செலவுக்காக ஒரு நிறுவனத்தில் பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்டாக பணியாற்றினார். முதுகலைப் பட்டம் பெற்றதும் மோட்டோரோலா, ஏசியா பிரவுன் பொவரி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு இறுதியாக 1994-ம் ஆண்டு பெப்சி குளிர்பான நிறுவனத்தில் Strategic Planning & Development பிரிவின் துணைத் தலைவராக சேர்ந்தார்.
பெப்சி நிறுவனத்தில் சேர்ந்த பிறகு இவரது வாழ்க்கையும், அந்நிறுவன வளர்ச்சியும் உலகம் முழுக்கவும் புகழ்பெற்றன. பெப்சி நிறுவனத்தில் சேர்ந்ததும், ‘தற்போதைய நம் வளர்ச்சியும், முன்னேற்றமும் போதாது. இன்னும் நம் தயாரிப்புகளை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கூட்டு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும்’ என அடிக்கடி சக ஊழியர்களிடம் சொல்வார். சொல்வதோடு மட்டுமில்லாமல் ஊழியர்களுடன் சேர்ந்து தயாரிப்பு, சேகரிப்பு, விற்பனை, கள ஆய்வு போன்ற பல பணிகளை தானே நேரடியாக களம் இறங்கினார். வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

சாந்தி துரைசாமி:

சக்தி மசாலாவின் நிர்வாகி. இவரின் அயராத உழைப்பும் ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்பும் தந்த கருணை மிகு பெண்மணி. சாதாரண ஏழ்மை குடும்பத்தில் பிறந்த இவர் தன் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக தன் படிப்பை ஆறாம் வகுப்புடன் நிறுத்திக்கொண்டு தன் தம்பி படிப்பிற்காகவும் தன் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டும் தன்னால் இயன்ற அளவிற்கு குடும்பத்திற்கு உதவி புரிந்துள்ளார். தன்னால் முயன்ற அளவு சில வேலைகளை வீட்டிலிருந்தே செய்தும் வீட்டிற்கு வருவாய் ஈட்டியுள்ளார். இவரது உதவும் மனப்பான்மை இன்று பல ஊனமுற்றவர்களுக்கும் தன்னாலும் உழைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. இவர் உற்சாகத்தையும், இன்முகத்தையும் ஒருங்கே பெற்ற பண்பாளர்,  கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றிகளை தன் வசப்படுத்தி வருபவர். பல்வேறு சமூக நல அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்படுபவர் என்ற பாராட்டுக்குரியவர். இவரது சக்தி மசாலா நிறுவனம் ஈரோட்டில் உள்ள மாமாரத்துபாளையம் என்ற இடத்திலுள்ளது. இவர் பல விருதுகளையும் பெற்ற போற்றத்தக்க ஒரு பெண்மணியே.
40 ஆண்டு களுக்கு முன்பு சிறு முதலீட்டில் வணிகத்தை தொடங்கிய அவர், தனது கணவர் துரைசாமியின் பங்களிப்புடன் ‘சக்தி மசாலா’ நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். சக்திதேவி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி மருத்துவமனை, மறுவாழ்வு மையம், சிறப்புப் பள்ளி ஆகியவற்றோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரம் நடும் பணி, அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது என்பது உட்பட பல சேவைகளை ஆற்றிவருகிறார். நாடும் நம் சந்ததியினரும் நலமுடன் வாழ பசுமை உலகம் படைப்பதில் தீவிரமாக கடந்த எட்டு ஆண்டுகளாக மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேமிப்புத் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முதல் இரண்டு ஆண்டுகள் வரை மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர் கேட்கின்ற போதெல்லாம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். இதுவரை 1,00,000 மரக்கன்றுகளுக்கு மேல் வழங்கியுள்ளோம். மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு, வேலியிட்டு நீர்பாய்ச்சி பராமரித்தும் வருகிறார்கள்.

மல்லிகா ஸ்ரீனிவாசன்:

மல்லிகா சீனிவாசன் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபராவார். தொழில் நுட்ப அறிஞருக்கான அங்கீகாரம் பெற்ற ஒரு சிந்தனையாளர் ஆவார்.  இந்திய விவசாயத்துறை வணிகத்திற்கும் கல்வித்துறைக்கும் சிறந்த பங்களிப்பு மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர். தற்போது இவர் 1960 ஆம் ஆண்டில் சென்னையில் துவங்கப்பட்ட TAFE – டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார். உலகிலேயே மூன்றாவது பெரிய டிராக்டர் தயாரிப்பாளரும், இந்தியாவில் இரண்டாவது பெரிய நிறுவனமான TAFE 150,000 க்கும் மேற்பட்ட டிராக்டர்களை வருடாந்திர விற்பனையாக இந்தியா உட்பட ஐரோப்பா, அமெரிக்கா போன்ற 82 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.
25 வருட இடைவெளியில், டிராக்டர் வணிகத்தின் சுழற்சியின் திறனைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய டிராக்டர்களின் தரம் வாய்ந்த தயாரிப்பாளராக TAFE ஐ, ஒரு வலுவான மற்றும் தரமான அமைப்பாக நிறுவியுள்ளது. தயாரிப்பு மற்றும் செயல்முறை மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், இந்நிறுவனத்தின் விரிவாக்கத்தை தொடர்ந்து உறுதிசெய்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒன்றாகவும், இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர்களில்  ஒருவராகவும் அறியப்பட்ட மல்லிகா ஸ்ரீனிவாசன் “டிராக்டர் ராணி” என்று அழைக்கப்படுகிறார்.

“ஒரு வியாபாரத்தை நடத்த நீங்கள் பணத்தை நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு நிறுவனத்தை உருவாக்க, ஒரு சிறந்த குழுவை உருவாக்க நீங்கள் ஒரு கனவைக் கொண்டிருக்க வேண்டும். அந்த கனவு கல்வி மற்றும் ஆரோக்கியமான சமூக சூழலை உடையதாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தனது நிறுவனத்தில் கூட பெண் தொழிலாளர்களை அதிகம் ஊக்குவிக்கிறார். தொழில் மற்றும் வணிகத் துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக டாஃபே குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் கருவறையில் பிறக்கும் தருணத்திலிருந்து கல்லறையில் உறங்கும் வரை எத்தனை இன்னல்களை கடக்க வேண்டியுள்ளது. பண்டைய காலந்தொட்டே நம் பெண்கள் ஆண்களின் அடிமையாக வாழ்ந்துள்ளனர் என்பது வேதனைக்குரிய ஒன்றே. மகளிர் தினம் என்று ஒன்று கொண்டாடுகிறோம் ஆனால் உண்மையில் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா? ஆளில்லா தெருவில் நகைகளுடன் பெண் இரவில் நடந்து வந்தால் அது பெண் சுதந்திரமா? அன்று ஆவிகளுக்கு பயந்த பெண்கள் போய் இன்று ஆண்களுக்கு பயப்படும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர் இந்த பெண் சுதந்திரம்  தேவையா? அன்றைய காலந்தொட்டு இன்றைய காலம் வரை பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் சொல்லி தீருமா? பெண்களின் சுதந்திர வரலாறு பற்றி நாம் பல்வேறு விதமான கருத்துக்களை பல்வேறு அடிப்படையிலும் நாம் காண முடிகின்றது.  மனிதர்களாய் படைக்கப்பட்ட வேதங்களின் ஆரம்பக்காலத்தில் பெண்ணை மிக உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்பட்ட தருணத்தில் தான் பெண்களுக்கு எதிரான பல முற்போக்கு செயல்களும் நடந்துள்ளது என்பது எத்தனை வேதனை அளிக்கும் செயலாக உள்ளது. எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்றளவும் பெண்ணை இரண்டாந்தர பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் நிலையும் மாறவில்லை.
மேலாடை அணியத் தடை

ஆதிகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடுவதற்காக காடுமேடு கடந்து பல தூரங்களுக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும் இருந்தன. அவர்கள் பலமான விலங்குகளிலிருந்து  தம்மை தற்காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது. இந்த சூழலில் தான் பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டிய காரணி உருவாகத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம் பெண்கள் குழந்தை பெற்ற சமயங்களில் அவர்களின் பால் வாடையை வைத்தும் குருதியின் வாடையை வைத்தும் விலங்குகள் மோப்பம் பிடித்து வந்து விடும் என்பதை அறிந்து கொண்ட இவர்கள் பெண்களையும், குழந்தை பெற்ற பெண் களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்து வரக் கூடிய விலங்குகளால் அவர்களுக்கு எந்தவித ஆபத்துக்களும் ஏற்படாவண்ணம் காவலும் வைத்து விட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள். ஆனால் இன்றும் மாதவிலக்கான பெண்களை தேடி வரும் தொலைவில் விலங்குகள் இல்லை என்றாலும் இந்த நிலையில் ஏன் எதற்கு என்ற எண்ணங்கள் எதுவுமின்றி இன்றும் இதே அர்த்தமற்ற செயற்பாடுகள் தொடர வேண்டிய அவசியம் இல்லையே.

சங்ககாலத்து இலக்கியங்கள் பெண்களைப் பலவீனமானவர்கள்வாகவே காட்டுகின்றன. பெண் பெரும்பாலும் அவரது உறுப்பு அழகும், அவள் அணியும் ஆடை, அணிகலனைமும் கொண்டே அழைக்கப்பட்டாள். பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமையும், தொழில் உரிமையும், தனது வாழ்க்கைத் துணையை தேடிக்கொள்ளும் உரிமையும் இருந்தன என்பதனை அறிய முடியாத காலகட்டம் தான் அது. பெண்கள் தங்கள் கணவரைத் தாமே தேர்வு செய்யக்கூடிய நிலை பெற்றோரின் முயற்சியால் கணவரைத் தேர்ந்தெடுக்கும் நிலை இருந்துள்ளது. உடன்கட்டை ஏறுதல் என்ற வழக்கம் வசதிபடைத்த குடியினரின் மத்தியில் நிலவி உள்ளது.

இது போன்ற சங்க காலத்தில் தான் பெண்களை போற்றத்தக்கும் வகையில் திருக்குறள் உருவானது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு தருணம். திருவள்ளுவர் காலத்தில் பெண்கள் அரசியலிலோ பொது வாழ்விலோ பங்கு கொண்டதாக தெரியவில்லை. தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் வந்த காலத்திலும் பெண்களின் நிலை வருந்தத்தக்க நிலையிலேயே இருந்துள்ளது. இராமாயணத்தில் தசரதனுடைய அந்தப்புரத்தில் அறுபதினாயிரம் பெண்கள் இருந்தனர். இதில் அரசியல் ஒப்புதல் பெற்றவர் மூவர். இராவணனோ மனைவியர் எண்ணிக்கையில் தசரதனையும் மிஞ்சியவன். அசோகவனத்தை சுட்டெரிக்கும் ஆற்றல் பெற்றவளாக சீதை இருப்பினும் இராமன் மனைவி என்ற நிலையில் அடங்கி இருப்பதே சீதைக்கு அழகு என்று காட்டுகிறது இராமாயணம். பாரதம் பெண்ணடிமைத்தனத்தை அதிகமாகவே காட்டுகிறது. கணவன் நினைத்தால் மனைவியை சூதாட்டத்தில் பணயம் வைக்கலாம் என்ற கருத்தும் நிலவியது. சீவகசிந்தாமணி எட்டுபெண்களை மணந்த சீவக மன்னனின் வெற்றிச் சிறப்பைக் காட்டுகிறது. பெரிய புராணத்தில் மங்கையர்க்கரசியார், காரைக்கால் அம்மையார் ஆகியோர் அருள் திறமும் கல்வியாற்றலும் கொண்டவராக காட்டப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக பல அநீதிகள் நிகழ்ந்த வண்ணமே இருந்துள்ளது பண்டைய காலத்தில். கேரளாவில் தாழ்த்தப்பட்ட பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க கூடாது அப்படி மறைக்க வேண்டுமெனில் வரி கட்ட வேண்டும் என்ற சட்டம் மன்னர் காலத்தில் நிலவி வந்தது. அங்கு வாழ்ந்த 30வயதுடைய நாங்கிலி என்ற பெண் வரி கட்ட மறுத்து தன் மார்பகத்தை மறைத்து மேலாடை அணிந்தாள். இதனால் வரி விதித்த அரசு நேரில் வந்து கேட்டும் அந்த பெண் தன் இரு மார்பையும் வெட்டி விட்டு இது இருந்தால் தானே வரி இப்போது என்ன செய்வீர்கள் என்று கேட்டு வீர மரணம் அடைந்தாள். இது போன்ற எண்ணற்ற அநீதிகள் பெண்களுக்கு நடந்துள்ளது நம் நாட்டில்.
பெண் விடுதலைக்கான போராட்டம்

ஆண் ஆதிக்கச் சமூகத்தின் போக்கினை எதிர்த்து எழுந்த முதன்மையான பெண் சிலப்பதிகாரத்து ‘கண்ணகி’ யுடையது தான். அதற்கு பின் டாக்டர் அம்பேத்கார், பெரியார் போன்றவர்களும் பெண் விடுதலைக்கு அரும்பாடுப்பட்டார்கள். ஈரோட்டுச் சிங்கம் பெரியார் பெண் விடுதலைக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே அதற்காக அவர் குரல் கொடுத்தார். சீர்திருத்தங்களை தனது வீட்டில் இருந்தே தொடங்கியவர். திருமணமாகி ஒரே மாதத்தில் விதவையான அவரது தங்கையின் 10 வயது மகளுக்கு (கணவன் வயது 13!) மறுமணம் செய்து வைத்தார். அந்நாட்களில் விதவைகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. தலையை (குறிப்பாக பிரமணர்கள்) மழித்து கொள்ள வேண்டும்; வெள்ளைச் சேலைத்தான் அணியவேண்டும்; நகை அணியக் கூடாது. ஒரு விதவை படும் துன்பத்தை கண்ணால் பார்த்ததால் விதவை மறுமணத்திற்காக வலிமையாகக் குரல் கொடுத்தார். இன்று அவர் போன்றவரின் போராட்டத்தால் மறுமணம் என்ற ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மேலும் பல மூடநம்பிக்கைகளும்  கூட ஒழிக்கப்பட்டுள்ளது என்று கூறியே ஆகவேண்டிய ஒன்று.
சங்க காலச் சித்திரம் 

நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பெண்கள் விடுதலை போராட்டத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் முன்னணியில் இருந்து வந்தனர். அந்த புதிய சமுதாய பிறப்பு வரை இந்த போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து கொண்டு செல்வார்கள். இது தான் வரலாறு நிரூபிக்கிறது. பெண்கள் விடுதலைக்கான போராட்டம் என்பது ஒருவர் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான போராட்டம். வாழ்க்கை, வாழ்வாதாரம், தாய்மையை நிறைவேற்றும் உரிமையுடன் 21-வது நூற்றாண்டில் ஒருவருக்குத் தேவையான முழு அரசியல், பொருளாதார உரிமைகள் கொண்ட சமுதாயத்தை நிறுவும், பழையனவற்றை அழித்துப் புதுப்பிக்கும் போராட்டத்துடன் நெருக்கமாக இது பிணைந்துள்ளது.

இப்போதுள்ள நம் பெண்கள் பாரதி கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் வளர்ந்து வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. பல போராட்டங்களை தாண்டி நம் பெண்கள் இன்று கல்வி கற்கவும் மேலை நாடுகளுக்கு தனியாகவே செல்லவும் பல சாதனைகளும் புரிய முடிகிறது எனில் இதற்கு முன் போராடி பெண் சுதந்திரம் பெற்று தந்த வீரமங்கையருக்கும் மகான்களுக்கும் நாம் எவ்வளவு கடமைப்பட்டுள்ளோம் என்று இந்த தருணம் நமக்கு நினைவூட்டுகிறது. பாரதியும் பாரதிதாசனும் பெண் கல்வி பற்றி பாடிய பாடல்

     “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன். . .
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமையற்றிடுங் காணீர்?
– பாரதி

பெண்கட்கு கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே!
பெண்கட்கு கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே!
பெண்கட்கு கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே!       – பாரதிதாசன்

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.