Articles by "amazing"

Showing posts with label amazing. Show all posts

அமெரிக்காவில் மேஜிக் செய்யும் ஒருவர் தனது குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் ஃபோலோம் என்பவர் ஒரு மேஜிக்மேன். இவர் தனது பெண் குழந்தையை மேஜிக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூங்கிக் கொண்டிருக்கும் அவரது குழந்தையை புத்தகத்தை கொண்டு இரண்டாக பிளந்து, மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுகிறார். இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் கடந்த மாதம் தீ மேஜிக் ஷோ என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த வீடியோவை 143 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 628 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர்.


ராண்டி லூயிஸ் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த கிராபிக் டிசைனர் மற்றும் கிரியேட்டிவ் டைரக்டர் ஆவார். இவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.


இவர் போட்டோஷாப் மூலமாக அளவிலாத கற்பனை திறனையை உலகில் அள்ளித்தெளித்து வருகிறார். SurReal ArtWorks என்ற பெயரில் ராண்டி லூயிஸ் பல கிரியேட்டிவ் கிராபிக் டிசைன்கள் செய்து வருகிறார்.

இவரது பல கலைகள், அட இப்படி கூட யோசிக்கலாமோ என சிந்திக்க வைக்கிறது. இவர் தேர்வு செய்யும் பொருள்களும், அதன் வெளிப்பாடும் வேறு வகையில் இருக்கிறது.

உதாரணமாக இவர் டிசைன் செய்திருந்த வாட்டர்மெலன், ஜெல்லி ஃபிஷ் மற்றும் பட்டர்ஃப்ளை போன்றவை எல்லாம் கற்பனையின் உச்சம் என கூறலாம்.

பேருக்கு எற்றப்படியும், உருவ தோற்றத்திற்கு எற்றப்படியும் கிராபிக் டிசைனில் புகுந்து விளையாடும் வல்லுநர் தான் ராண்டி லூயிஸ். இனி! ராண்டி லூயிஸின் சிலிர்ப்பூட்டும் டிசைன்கள் சிலவன....

பிகினி!
நான் ஈயில் நடித்த ஈக்கு ஜோடி இருந்தால் எப்படி இருக்கும்? இதோ ஒருவேளை இப்படி இருக்கலாம். உடன ராஜ மௌலிக்கு கால் செய்து இந்த படத்தை காண்பிக்கலாம். இதற்கும் ஒரு ஸ்கிர்ப்ட் எழுதி நான் ஈ 2 எடுத்து கோடிகளாக மாற்ற அவருக்கு ஒரு கதை கிடைக்கும்.


எதுக்கு?
அனைத்திலும் அழகை, மெருகேற்றி காண்பித்த ராண்டி லூயிஸ் இதில் தனது விஷமத்தனத்தை காட்டியுள்ளார். தவளையை பிடிக்கும் என கூறுவோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏனெனில், பெரும்பலம் யாருக்கும் தவளை என்றால் பிடிக்காது. அதன் மேல் சருமம் மட்டும் காண நன்றாக இருந்தாலும், அதன் உடலை தொட்டு பார்க்க முடியாது.

ஆனால், பெண்களின் இதழ்களை யாராலும் தொட்டுப் பாராமல் இருக்க முடியாது. இப்படி எல்லாமா கற்பனை திறனை காண்பிக்க வேண்டும் ராண்டி?


சிக்கன் பர்கர்
பர்கர் பிரியர்கள் அனைவரும் வகை வகையான சிக்கன் பர்கர் ருசித்திருப்பார்கள். ஆனால், இப்படி ஒரு சிக்கன் பர்கரை தங்கள் வாழ்வில் கண்டிருக்க மாட்டர்கள்.

இதை ருசிக்க முடியாது ஆனால் நன்கு ரசிக்க முடியும். முடிந்த வரை ரசித்துக் கொள்ளுங்கள்..


வவ்வால்
வவ்வாலும் Bat தான், பேஸ்பால் பேட்டும் Bat தான். பெரும்பாலான ராண்டியின் இந்த பெயர் சார்ந்த கிரியேட்டிவ் கிராபிக் டிசைன்கள் அனைத்தும் அடடே! போட வைக்கின்றன. அதில் இந்த வவ்வால் டிசைனும் இணைந்துள்ளது.


ஜெல்லி
பட்டாம்பூச்சிக்கு பிறகு அதிகமாக கவர்ந்த ராண்டியின் டிஸைன் இது. ஜெல்லி ஃபிஷ் நாம் அறிந்திருப்போம், [பார்த்திருப்போம். ஏன், நம்மில் பலர் வளர்த்திருப்போம். ஆனால், இப்படி ஒரு ஜெல்லி ஃபிஷ் நாம் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டோம்.


ஆமை
தர்பூசணி, பட்டாம்பூச்சியில் பெயரை வைத்து விளையாடிய ராண்டி லூயிஸ், இந்த பர்கரில் தோற்றத்தை வைத்து விளையாடியுள்ளார்.

பார்கரின் மேல் பகுதியின், ஆமையின் ஓடு பகுதியும் ஒரே வண்ணத்தில் இருந்தால் ஒருவேளை இப்படியாக தான் இருக்கும் என நாம் ஒருபோதும் யோசித்திருக்க மாட்டோம். ஆனால், ராண்டி அதை யோசித்து டிசைன் செய்து அசத்தியுள்ளார்


ஜீனியஸ்
மிக சிலரால் மட்டும் தான் ராண்டி போல யோசிக்க முடியும் Butterflyயில் இருக்கும் Butterஐ கொண்டு இந்த கிராபிக் டிசைன் செய்துள்ளார் ராண்டி லூயிஸ். ராண்டியின் கிரியேடிவ் வர்க்கில் இது மிகவும் சிறந்ததாக திகழ்கிறது.


நீங்க வெஜ்டேரியனா?
இது வெஜ்டேரியன்களுக்கான ஆடு. சாப்பிட முடியாது என்றாலும் படமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை உங்கள் வீட்டில் இன்று அம்மா விரதம் இருந்தால் இந்த காலிபிளவர் வாங்கிக் கொடுத்து சமைத்து தர கூறுங்கள்.


உவேக்!
நத்தையை இதற்கு முன்னர் இவ்வளவு க்ளோஸ் அப்பில் நாம் கண்டிருக்க வாய்ப்பில்லை. மேக்ரோ கேமரா லென்சில் பார்த்தால் மட்டுமே நத்தையின் இந்த தோற்றம் தென்படும். நத்தையின் உடல் சருமமும் பேஸ்ட் போல தான் இருக்குமோ?

அது கொஞ்சம் வழவழ கொழகொழன்னு தான் இருக்கும். ஆனால், இத்துடன் சேர்த்து டிசைன் செய்ய ராண்டிக்கு எப்படி தோன்றியதோ?


சாப்பிட்டு தான் பாருங்களேன்...
பார்த்தும் கேண்டி என்பது தெரிகிறதா...? கொஞ்சம் உற்றுப் பாருங்கள் இது விஷமான கேண்டி என்பதும், இதை நீங்கள் கடித்தாலோ, அல்லது அது உங்களை கடித்தலோ மரணம் என்பது நமக்கு தான் என்பது புரியும். பச்சை, மஞ்சள் பாம்பை கேண்டியில் சேர்த்துள்ளது ராண்டியின் கலை.


இனி அள்ளி கொஞ்சலாம்...
முள்ளம்பன்றியை கண்டு நாம் அஞ்சுவதற்கு ஒரே காரணம் அதன் முள் போன்ற தோற்றம் தான். அப்படி முற்கள் இல்லை எனில், மனிதர்கள் எப்போதோ அதையும் உண்ணும் பட்டியலில் சேர்த்திருப்பார்கள். நம்மில் பெரும்பாலானோர் முள்ளம்பன்றியை படத்தில் மட்டும் தான் பார்த்திருப்போம்.

இப்படி ஒரு முள்ளம்பன்றி இருந்தால் முயல், பூனை, நாயை காட்டிலும் இது தான் பெருவாரியாக செல்லப் பிராணியாக இருக்கும்.


தர்பூசணி
தர்பூசணி என்பதை ஆங்கிலத்தில் Water Melon என்று கூறுகிறோம். வாட்டர் என்பதை தர்பூசணியில் நாம் பெயராக மட்டுமே கண்டிருப்போம்.

ஆனால், ராண்டி லூயிஸ் கண்முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார். நெசம்தானே... வாட்டர் மெலன்ல இதுக்கு முன்ன இப்படி வாட்டர் பாத்திருக்கீங்களா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் ரிஷபேஸ்வரர் என்ற கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்டதாகும்.

ஆனாலும், இது இன்றும் பழமை மாறாமலே இருக்கின்றது.

இந்த கோயிலின் சிறப்பம்சமாக தங்க நிறத்தில் காட்சியளிக்கும் நந்தியே காணப்படுகின்றது.

இந்த நிகழ்வினைப் பார்க்க பல பிரதேசங்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை தான் இந்த நந்தி சிலை தங்க நிறத்தில் ஒளிர்வதாக குறிப்பிடப்படுகின்றது.

தங்க நிறத்தில் காட்சியளிக்கும் இந்த அதிசய நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மூன்றாம் நாள் காணக்கூடியதாக இருக்கும்.

தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிசு, எப்பொழுதும் தூங்கிக் கொண்டிருக்கும் என்று எண்ணினால், நம்மைப் போல் முட்டாள் எவருமிலர். ஒரு முழு மனிதன் செய்யும் அனைத்து செயல்களையும், தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் சிசு செய்கிறது. சிசு செய்யும் சேட்டைகளைக் காண்போம் வாருங்கள்..!!!

அழுகை
கருவில் இருக்கும் சிசுவை அல்ட்ராசவுண்ட் கருவி மூலம் ஆய்வு செய்த போது, வியக்க வைக்கும் வகையில், சிசு கருவறையில் அழுவது கண்டறியப்பட்டது.
பிணைப்பு

இரட்டையர்களுக்கு மத்தியில் இருக்கும் பிணைப்பு கருவறையிலேயே துவங்கிவிடுகிறது; மேலும், இரட்டையர்கள் கடைசி பத்து வாரங்களின் போது அம்மா பேசுவதை துடிப்போடு கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

விக்கல்
முதல் மூன்று மாதத்தின் போதே சிசுவிற்கு விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடுமாம். இதை கர்ப்பிணிகள் நன்கு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தால், சிறய அளவிலான நகர்தல் ஏற்படுவதை உணர முடியும்.

புன்னகை
26வது வாரத்தில் இருந்து குழந்தை இயல்பான உணர்வுகளோடு நடந்து கொள்ள ஆரம்பிக்கும்; இந்த காலக்கட்டத்தில் தான் கருவறையில் இருக்கும் சிசு முதன் முதலில் சிரிக்க ஆரம்பிக்கும்.

கொட்டாவி

குழந்தைகள் கொட்டாவி விட்டாலே, அழகாக இருக்கும். கருவில் இருக்கும் சிசுவும், அழகாக கொட்டாவி விடும்.

சிறுநீர்
முதல் மூன்று மாதங்கள் முடியும் போது சிசுவின் உடலில் சிறுநீர் உற்பத்தி ஆரம்பிக்கும்; கருவறையிலேயே சிசு சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்.

கண்கள் திறப்பது
28வது வாரத்தின் போது குழந்தை முதன் முதலில் கண்களை திறக்கும்; கர்ப்பிணி பெண்களின் வயிறு மிகுந்த வெளிச்சத்தில் வெளிப்படும் போது கருவறையில் இருக்கும் சிசு கண்களை திறக்குமாம். ஆனால், மிக சிறிய நேர அளவில் தான், சிசு கண்களை திறந்திருக்கும்.

ருசி
கர்ப்பிணி பெண் எந்த உணவை உண்டாலும், அந்த ருசியை அம்னியோடிக் அமிலத்தின் மூலமாக சிசுவும் ருசியை அறியும்; 15வது வாரத்தில் இருந்து சிசு இனிப்பை ரசித்து ருசிக்க ஆரம்பிக்கிறது, இதனால் நிறைய இனிப்பு திரவங்களை விழுங்குகிறது.

இங்கு நீங்கள் பார்க்கப்போகும் இந்த வீடியோவில் உள்ள பெண்தான் (பெயர் – CATHIE JUNG ) உலகிலேயே மிகச்சிறிய இடைகொண்ட பெண்ணாக கருதப்படுகிறார்.

வெறும் 15 சென்ரிமீட்டர்கள் மாத்திரமே இவரின் இடையின் சுற்றளவாக உள்ளது.
இவரின் இந்த மெல்லிய இடையின் அளவிற்கு காரணம்,
தனது இடையை பெல்ட் மற்றும் விசேட சாதனங்களால் மிக இறுக்கமாக கட்டி பழக்கப்படுத்தியுள்ளார். ஒரு நாளைக்கு 23 அரை மணித்தியாலப்படி கடந்த 25 வருடங்களாக இதை செய்துவந்துள்ளார்.

இவரின் உடல்தகுதி சிறந்த நிலையில் உள்ள போதும், இப்படியான பயிற்சிகள் உடல் சிக்கல்களையே உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



அமெரிக்காவிற்கு மெக்சிக்கோ மூலமாக பலர் நாடுகடத்தப்படுவது வழமை. இறுக்கமான காவல்துறை (பொலிஸ்) கட்டுப்பாடு இருந்தாலும் பலர் நூதனமான முறையில் அமெரிக்க மெக்சிக்கோ எல்லையை தாண்டிவிடுவார்கள். அப்படி நூதனமாக தாண்ட முட்பட்டு அகப்பட்டவரின் புகைப்படத்தைத்தான் கீழே பாக்கிறீர்கள்!

ஆம், வாகனத்தின் இருக்கையில் அமர்வது வழமை, ஒழிவதென்றால் பினால் ஒழிந்துகொள்வார்கள். ஆனால் இந்த மனிதர் வாகன இருக்கைபோன்றே தன்னை அலங்கரித்து நாடுகடக்க முட்பட்டுள்ளார்! துரதிஷ்ட வசமாக பொலிஸாரின் மோப்ப நாய்விழித்துக்கொண்டதன் விளைவாக அகப்பட்டுவிடார்.

இது தொடர்பாக எல்லை காவலர்கள், ” இது ஒரு அகப்பட்ட நூதன சம்பவம், இப்படி பலர் நூதனமான முறையில் எல்லையை தாண்டி இருக்கலாம்.” என தெரிவித்துள்ளார். அது உண்மையே…

இரண்டாவது சம்பவம் உண்மை புகைப்படம் அற்றது.

தெருவோர வன்முறைகளில் ஈடுபட்டதற்காக ஒரு பருமவயது (teenager) நபர் காவலர்களால் கைது செய்யப்பட்டார். நீதி மன்றத்தில் விசாரனை நடக்க இருக்கும் போது எதிர்பாராத விதமாக தப்பித்துக்கொண்டார். நீதிமன்றம் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

நீதிபதி வேலை நேரம் முடிந்து வீடு செல்லும் போது, தனது கார் (மகிழுந்து) Trunk ஐ திறந்தார். அதற்குள் தப்பியோடிய நபர் இருப்பதை கண்டு காவலர்களின் உதவியுடன் கைதுசெய்தார்.

தப்பியோடும் போது, காருக்குள் சென்று கதவைப்பூட்டிக்கொண்ட குற்றவாளி அது நீதிபதியின் வாகனம் என்பதை அறிந்திருக்கவில்லை!

பாலடைந்த வசிப்பிட அடுக்கு மாடியொன்றை அகற்றுவதற்கு அதன் உரிமையாளர் முடிவெடுத்துக்கொண்டார். 1970 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்த அடுக்கு மாடிக்கட்டிடத்தில் எவரும் தங்கியதில்லை. எனினும், ஒரு வீடு மட்டும் உரிமையாளார் பற்றிய தகவல்கள் இல்லாமல் திறக்க முடியாது இருந்தது. உரிமையாளர் பொலிஸாரை தொடர்பு கொண்டார். உரிமையாளர் கேட்டுக்கொண்டதன் பெயரில் பொலிஸார் வீட்டுக்கதைவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்.

அவர்கள் அங்கு கண்ட காட்சி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆம், அங்கு எலும்புக்கூடாகிப்போன ஒரு சடலம் தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னே இருந்த கதிரையில் அமர்ந்திருந்தது! அச்சடலத்தின் அருகே இருந்த மேசை மீது என்றோ போடப்பட்ட கோப்பியும் இருந்தது.

பின்னர் பெறப்பட்ட தகவல்களின் படி,
1924 ல் பிறந்த ஹெவிகா கொலிக் (Hedviga Golik) என்ற காணமல் போனதாக அறியப்பட்ட நபரின் சடலமே அது என இனங்கானப்பட்டது. 1966 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்தப்பெண்ணையாரும் கண்டிருக்கவில்லை. அவரது அயலவர்கள் அந்தப்பெண் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக நினைத்துக்கொண்டார்கள். காலப்போக்கில் அனைவரும் அந்த அடுக்குமாடியைவிட்டு வெளியேறி விட்டார்கள்.

கோப்புயுடன் தனது கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னர் அமர்ந்து, ஏதோ ஒரு காரணத்தினால் இறந்துபோன் அந்தப்பெண்ணை எவரும் தேடவில்லை. சுமார் 42 வருடங்களுக்குப்பின்னர், எதேச்சையாக பொலிஸாரால் அவரது உடல் கண்டறியப்பட்டது!

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.