இளம்பெண் 7 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு ரயிலில் இருந்து வீசிய....

14 வயது சிறுமியை ஏழு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நிர்பயா கொடுமை நிகழ்ந்த பின்பும் கூட சட்டம் ஒழுங்கில் கெடுபிடியும் இல்லை, ஆண்கள் மனதில் ஈரமும் இல்லை. பீகார் மாநிலம் லகிசாராய் மாவட்டம் லகோசக் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு தூக்கத்தில் இருந்து எழுந்த சிறுமி சிறுநீர் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். அப்போது பின்னால் இருந்து சிறுமியை கட்டிப்பிடித்த சிலர் அருகில் இருந்த மைதானத்திற்கு இழுத்துச்சென்றுள்ளனர்.ஆறு, ஏழு பேர் இருந்ததாகவும், அதில் இரண்டு பேர் தங்கள் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் என்றும் அந்த சிறுமி கூறியுள்ளார்.அப்போது சுயநினைவை இழந்த சிறுமி கண் விழித்து பார்த்த போது ரயிலில் இருப்பதை உணர்ந்துள்ளார்.

அவருக்கு அருகில் இருந்த இரண்டு பேர் ரயிலில் இருந்து சிறுமியை வெளியே தள்ளிவிட்டுள்ளனர்.குற்ற செயலில் ஈடுபட்ட ஒருவன், சிறுமி படிக்கும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிப்பவன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமியின் தாத்தா விடியற்காலை 3 மணிக்கு எழுந்து பார்த்த போது சிறுமி காணவில்லை என்று கூறியதை அடுத்து வீட்டில் உள்ளவர்கள்தேட தொடங்கியுள்ளனர். 12 மணி நேரத்திற்கு பின்னர் கியுல் ரயில் நிலையத்திற்கு அருகே சிறுமியை கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.முதலில் லகிசராய் சதார் மருத்துவமனையில் சிறுமியை சேர்த்துள்ளனர்.

ஆனால் மருத்துவர்கள் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சொன்னதால் அங்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. மீடியாவிற்கு விஷயம் தெரிந்ததை அடுத்து மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கினர் என்கிறார் சிறுமியின் சதோதரர்!சிறுமிக்கு ரத்தப்போக்கு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் இடுப்பில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சிறுமியின் வாக்குமூலத்தின் படி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.