இப்படி உள்ள ஆண்களை பெண்கள் திருமணம் செய்யவே மாட்டார்களாம்...

சில ஆண்களிடம் ஆரம்பத்தில் நட்பு உறவில் பழகும் பெண்கள், அவர்களது குணங்களை கண்டு நாளடைவில் விலகி போக ஆராம்பித்து விடுவார்கள்.

பெண்களை சிறிது நேரம் கூட பேச விடாமல், ஆண்களே அதிக நேரம் பேசுவது, அவர்களின் பேச்சை கேட்ட உங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் அதற்கு ஏற்றது போல நடந்துக் கொள்ளாத ஆண்களை பெண்கள் திருமணம் செய்ய யோசிப்பார்கள்.

ஆண்கள் அனைவரும் நல்லவர்கள், பெண்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று பேசுவது கூடாது. இவ்வாறு பேசும் ஆண்களை கண்டாலே பெண்களுக்கு பிடிக்காது.

பெண்களை எவ்வளவு சீண்டினாலும், கோபப்பட்டாலும், தவறு செய்தாலும் அது அனைத்தையும் தாங்கி கொண்டு பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களை பெண்கள் விரும்பவே மாட்டார்கள்.


நீங்கள் உங்களது துணையை கிண்டல், காமெடி என்ற பெயரில் அவரது மனதை கஷ்டப்படுத்துவது போன்ற செயல்களை செய்யும் ஆண்களின் அருகில் பெண்கள் நெருங்கவே மாட்டார்கள்.

பெண் என்பவள் சமையல், வீட்டு வேலைகளை மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்று எந்தவொரு தனிப்பட்ட இலட்சியமும், ஆசையும் இருக்கக் கூடாது என நினைக்கும் ஆண்களை, பெண்கள் விரும்புவதில்லை.

உங்களது துணைக்கு யாருமே இல்லை என்பது போல நினைத்துக் கொண்டு, அவரது அனைத்து வேலைகளிலும் முக்கை நுழைக்கும் ஆண்களை பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். தனது மனைவி இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று தனது ஆசைகளை அவர்கள் மீது திணிக்கும் ஆண்களை, பெண்கள் திருமணம் செய்ய மாட்டார்கள்.


Tags

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.