2015

இன்றைய ஆண்களுக்கு 25 வயதிலேயே வழுக்கை ஏற்படும் அளவில் முடி அதிக அளவில் கொட்டுகிறது. இப்படி முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் தொப்பி அல்லது ஹெல்மெட் அணிவது, ஆரோக்கியமற்ற டயட், மன அழுத்தம், மாசுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, மருந்துகள், மரபணுக்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இக்காரணங்களால் தலை முடி உதிர்வதைத் தடுக்க முடியாதா என்று கேட்டால், நிச்சயம் முடியும் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வுலகில் முடியாதது என்று எதுவும் இல்லை. அதிலும் மூலிகைகள் அதிகம் நிறைந்த இந்தியாவில் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல வழிகள் உள்ளன. 

புரோட்டீன் அதிகம் நிறைந்த இறைச்சிகள், மீன், சோயா அல்லது இதர புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொண்டு வர வேண்டும். இதனால் புரோட்டீனால் ஆன முடியின் ஆரோக்கியம் அதிகரித்து, முடி உதிர்வது குறையும்.

உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்தால், நறுமணமிக்க அத்தியாவசிய எண்ணெய்களைக் கொண்டு தினமும் 2 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள். இதனால் மயிர்கால்கள் ஆரோக்கியத்துடன் இருக்கும். அதற்கு லாவெண்டர் எண்ணெயை நல்லெண்ணெயுடனோ அல்லது பாதாம் எண்ணெயுடனோ சேர்த்து கலந்து பயன்படுத்தலாம்.

எண்ணெய் பசையுடைய தலையைக் கொண்ட ஆண்களுக்கு, கோடையில் அதிகப்படியான வியர்வை வெளியேற்றத்தால் பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படக்கூடும் மற்றும் தலைமுடி உதிரவும் செய்யும். எனவே அத்தகையவர்கள் கற்றாழை மற்றும் வேப்பிலை சேர்த்து தயாரிக்கப்பட்ட ஷாம்பு கொண்டு தலை முடியை அலச வேண்டும். இதனால் பொடுகு நீங்கி, முடி உதிர்வது தடுக்கப்படும்.


உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்தால், இஞ்சி, வெங்காயம் அல்லது பூண்டு ஆகியவற்றில் ஒன்றின் சாற்றினை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.


ஒரு கப் சுடுநீரில் க்ரீன் டீ பையை ஊற வைத்து, குளிர்ந்ததும் அந்த நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து பின் அலச வேண்டும். இப்படி ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்திருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.


வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம், ஸ்கால்ப்பில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, ஸ்கால்ப்பில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களும் நீங்கும்.


நெல்லிக்காய் பொடியில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதைக் காணலாம்.

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டு வறுத்து, பின் அந்த எண்ணெயை தினமும் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவ வேண்டும். இப்படி செய்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்கி, முடி உதிர்வதும் குறையும்.


தேங்காய் பாலில் தலைமுடியின் வளர்ச்சிக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே வாரம் ஒருமுறை தேங்காய் பாலை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து அலச, முடி உதிர்வது குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.


ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனை ஸ்கால்ப்பில் படும் படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். மஞ்சள் கருவைப் பயன்படுத்துவதால், தலையில் முட்டை நாற்றம் இருக்கும் என்பதால், இந்த முறையை வார இறுதியில் முயற்சிப்பது நல்லது.


வினிகரில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் பொடுகை ஒழிக்கும், பொட்டாசியம் மற்றும் இதர நொதிகள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே 1/4 பக்கெட் நீரில் 1/2 கப் வினிகரை ஊற்றி அந்த நீரில் தலையை 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் பொடுகு நீங்கி, ஸ்கால்ப்பின் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, தலைமுடியும் உதிராமல் ஆரோக்கியமாக இருக்கும்.

பழங்காலம் முதலாக தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களில் ஒன்று தான் செம்பருத்தி. செம்பருத்தி செடியின் இலை, பூ என்று அனைத்துமே தலையில் உள்ள பிரச்சனைகளைப் போக்கும் குணம் கொண்டது. இதன் அதிக மருத்துவ குணத்தால் ஆயுர்வேதத்தில் இது முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பலருக்கு செம்பருத்தியை தலைக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாது. அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செம்பருத்தியை தலைமுடிக்கு பயன்படுத்தினால் மயிர்கால்கள் வலிமையடையும், நரைமுடி நீங்கும், முடி பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.  சரி, இப்போது செம்பருத்தி இலையை எப்படி தலைமுடிக்கு பயன்படுத்துவது என்று பார்ப்போம். அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

வெந்தயத்துடன்... 

1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை செரும்பருத்தி இலையுடன் சேர்த்து அரைத்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

நெல்லியுடன்... 

ஒரு கையளவு செம்பருத்தி இலைகளை அரைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நெல்லிப் பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, அலசலாம். இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

மருதாணியுடன்... 

செம்பருத்தி இலைகளை, மருதாணி இலையுடன் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊற வைத்து அலச, தலைமுடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

செம்பருத்தி ஷாம்பு 

கடைகளில் விற்கப்படும் ஷாம்பு கூட தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். எனவே தலைக்கு குளிக்கும் போது கெமிக்கல் கலந்த ஷாம்பு பயன்படுத்தாமல், 15 செம்பருத்தி இலைகள் மற்றும் 5 செம்பருத்தி பூக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் இறக்கி குளிர வைத்து அரைத்து, அதனைக் கொண்டு தலைமுடியை தேய்த்து அலசினால், முடி ஆரோக்கியமாக இருக்கும்.

தயிருடன்... 

சில செம்பருத்தி இலைகளை எடுத்து அரைத்து, அதில் தயிர் சிறிது சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, தலைமுடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்தால் தலைமுடி வலிமையடைந்து, முடியின் வளர்ச்சியும் மேம்படும்.

ஒவ்வொருவருக்குமே தாம் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு இந்த ஆசை நிச்சயம் இருக்கும். இந்த ஆசையின் காரணமாக பல்வேறு க்ரீம்களைப் பயன்படுத்துவோம். ஆனால் அப்படி பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம் மூலம் சருமத்தின் நிறம் அதிகரிக்கிறதோ இல்லையோ, சருமத்தின் ஆரோக்கியம் கெட்டு, ஒருநாள் அந்த க்ரீம்மைப் பயன்படுத்த தவறினாலும், சருமம் ஆரோக்கியமின்றி ஒருவித வறட்சியுடன் பொலிவிழந்து காணப்படும். எனவே எப்போதுமே நம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு கெமிக்கல் கலந்த க்ரீம்களின் மூலம் தீர்வு காண நினைக்காமல், நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டேப் பெற முயலுங்கள். இதனால் சரும பிரச்சனை நீங்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும். இங்கு சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் இயற்கைப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்கள் சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்

வாழைப்பழம் 

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வாழைப்பழம் மிகவும் உதவியாக இருக்கும். அதுவும் வாழைப்பழம் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பு வழங்கி, முதுமையைத் தடுக்கும். அதற்கு வாழைப்பழத்தை மசித்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வேண்டுமானால் இறுதியில் ஐஸ் கட்டியால் முகத்தை மசாஜ் செய்யலாம். இதனால் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதைத் தடுக்கலாம்.

ஆரஞ்சு ஜூஸ் 
ஆரஞ்சு ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக நிறைந்துள்ளதால், அதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி, ஆரஞ்சு ஜூஸ் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவும். அதற்கு ஆரஞ்சு ஜூஸ் 4 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.


வெள்ளரிக்காய் 
1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றில் 2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவலாம் அல்லது வெள்ளரிக்காய் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து, முகத்தல் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவவும் செய்யலாம். இவற்றின் மூலமும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.

தயிர் 
தயிரை தினமும் முகத்தில் தடவி வருவதன் மூலமும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்கி சரும நிறத்தை மேம்படுத்தலாம். மேலும் தயிரில் லாக்டிக் ஆசிட் நிறைந்துள்ளதால், அவை சருமத்தின் பொலிவை அதிகரிப்பதோடு, மென்மையையும் மேம்படுத்தும்.

உருளைக்கிழங்கு 
உருளைக்கிழங்கு மிகவும் சிறப்பான ப்ளீச்சிங் ஏஜென்ட் எனலாம். எனவே உருளைக்கிழங்கை அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள், முகப்பருக்கள், இறந்த செல்கள் போன்றவை நீங்கி, முகத்தின் பொலிவு மற்றும் நிறம் மேம்படும்.

எப்போதும் இளமையுடன் இருப்பதற்கு பலருக்கும் ஆசையாக இருக்கும். இருந்தாலும் வயது அதிகரிப்பதை நிறுத்த முடியாது. ஆனால் ஒருவரின் இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க முடியும். தற்போது மோசமான சுற்றுச்சூழலால் பல இளம் தலைமுறையினரும் முதுமை தோற்றத்துடன் காணப்படுகின்றனர். இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் தான் காரணம். இளமையை பாதுகாக்க வார இறுதியில் தவறாமல் மேற்கொள்ள வேண்டியவைகள்!!! எனவே பலரும் கடைகளில் விற்கப்படும் ஆன்டி-ஏஜிங் க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும் ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் உள்ள கெமிக்கல்கள் சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தி, சரும அழகை மேன்மேலும் கெடுத்துவிடும். எனவே எப்போதும் இளமையைத் தோற்றத்துடன் காட்சியளிக்க கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தாமல், இயற்கை வழிகளைப் பின்பற்றினால், இளமை தக்க வைக்கப்படுவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். இளமையை தக்க வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!!! இங்கு ஒருவரின் இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கும் ஜூஸ்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த ஜூஸ்களில் உங்களுக்கு பிடித்ததை அன்றாடம் குடித்து வந்தாலே, இளமையுடன் காட்சியளிக்கலாம்.

கேரட் ஜூஸ் 
கேரட்டில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளது. மேலும் கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. எனவே இத்தகைய கேரட்டைக் கொண்டு ஜூஸ் போட்டு தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உங்கள் சருமத்தின் இளமை தக்க வைக்கப்படுவதோடு, உங்கள் உடல் எடையையும் குறைக்கலாம்.

பசலைக்கீரை ஜூஸ் 
காலையில் காபிக்கு பதிலாக பசலைக்கீரை ஜூஸ் குடித்து வந்தால், உங்கள் சருமத்தின் இளமை தக்க வைக்கப்படும். எப்படியெனில் பசலைக்கீரையானது ப்ரீ-ராடிக்கல்களின் தாக்குதல்களில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதோடு, சருமத்தின் பொலிவையும் அதிகரிக்கும்.

தக்காளி ஜூஸ் 
தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால், சருமத்தின் இளமை தக்க வைக்கப்படும். எனவே தக்காளி ஜூஸை அன்றாடம் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.

வெள்ளரிக்காய் ஜூஸ் 

வெள்ளரிக்காய் ஜூஸ் குடிப்பதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் வெள்ளரிக்காய் ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடுவதால், சருமத்தின் அழகு பாதுகாக்கப்படும்.

ப்ராக்கோலி ஜூஸ் 

ப்ராக்கோலியில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது. எனவே இந்த காய்கறியை ஜூஸ் போட்டு அன்றாடம் குடித்து வருவது நல்லது.

முட்டைக்கோஸ் ஜூஸ் 

முட்டைக்கோஸை பச்சையாக சாப்பிடுவதே கடினமான விஷமாக இருக்கும் போது, அதனை ஜூஸ் போட்டுக் குடிக்கத் தோன்றாது. இருந்தாலும், இதில் வைட்டமின் சி மற்றும் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டுக் குடித்து வந்தால், சருமத்தின் பொலிவு மேம்படுவதோடு, சரும சுருக்கங்களும் தடுக்கப்படும்.

காலையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சனையில் ஒன்று தங்களின் முடியை சரிசெய்வது. சிலருக்கு தூங்கி எழுந்ததனால், முடி அடங்காமல், அங்கும் இங்குமாக தூக்கி வளைந்துக் கொண்டிருக்கும். இன்னும் சிலருக்கோ தலையில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும். இந்த நிலையில் தலைக்கு குளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் அதற்கு நேரம் இருக்காது. நீங்கள் இப்பிரச்சனைகளை சந்தித்தால், இதோ சில அற்புதமான வழிகளை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை செய்தால், பிரச்சனைகளைப் போக்கலாம். குறிப்பாக இவை அவசரத்திற்கு உதவும் ஓர் அற்புத டிப்ஸ். தலைக்கு குளிக்க சோம்பேறித்தனப்பட்டு, இதையே வாரம் முழுக்க செய்யாதீர்கள்.

ஹாட் ஹேர் 
ஸ்டைல் பெண்களே உங்கள் கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாகவோ அல்லது நீங்கள் விரும்பிய ஹேர் ஸ்டைல் போட முடியாத அளவில் இருந்தாலோ, வித்தியாசமாக மெஸ்ஸி கொண்டை, ஃபிஷ் டெயில் போன்றவற்றைப் பின்பற்றலாம்.


பேபி பவுடர் 

உங்கள் தலைமுடி அதிக எண்ணெய் பசையுடன் இருந்தால், பேபி பவுடரை கையில் எடுத்து, முடியில் தேய்த்துவிடுங்கள். இதனால் பேபி பவுடரானது தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கிவிடும்.


ஆல்கஹால் 

ஆல்கஹால் கூட உங்கள் தலைமுடியை சிறப்பாக வெளிக்காட்ட உதவும். அதற்கு ஆல்கஹாலை நீரில் கலந்து. விரல்களில் நனைத்து, ஸ்கால்ப்பில் படாதவாறு வெறும் கூந்தலில் மட்டும் படுமாறு தடவுங்கள். ஸ்கால்ப்பில் பட்டால், ஸ்கால்ப் எரிய ஆரம்பிக்கும். எனவே கவனமாக இருங்கள்.


ஆப்பிள் சீடர் வினிகர் 
ஆப்பள் சீடர் வினிகர் பல விஷயங்களைச் செய்ய உதவுகிறது. அதில் ஒன்று உங்கள் முடியை சிறப்பாக வெளிக்காட்ட உதவுவது. அதற்கு இதனை விரல்களில் நனைத்து, கூந்தலில் தடவ வேண்டும். இதனால் முடி சிறப்பாக காணப்படுவதோடு, நல்ல நறுமணத்துடனும் இருக்கும்.

எலுமிச்சை சாறு 

எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அந்த கலவையை விரல்களில் நனைத்து முடியில் மட்டும் தடவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முடி நல்ல நறுமணத்துடன் சிறப்பாக இருக்கும்.

சீப்பை பயன்படுத்தாதீர் 

முக்கியமாக உங்கள் முடி காலையில் சிறப்பாக இல்லாவிட்டால், சீப்பு பயன்படுத்தாதீர்கள். இதனால் ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய் முடியில் பட்டு, முடிகளும் எண்ணெய் பசையுடன் திரித் திரியாக காட்சியளிக்கும்.


கண்டிப்பாக ஒவ்வொருவரும் பருக்களால் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்திருப்போம். இதற்காக எத்தனையோ க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தியிருப்போம். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தபாடில்லை. ஆனால் நம் பாரம்பரிய இயற்கை மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் பருக்கள் வராமல் இருக்கவும், வந்த பருக்கள் விரைவில் நீங்கவும் ஒருசில குறிப்புக்கள் உள்ளன. முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்!!! பொதுவாக ஆயுர்வேத மருத்துவத்தினால் பலன் சற்று தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும். எனவே பொறுமையுடன், ஆயுர்வேத முறையைக் கடைப்பிடித்தால், நிச்சயம் பருக்களைப் போக்கலாம். சரி, இப்போது பருக்கள் வராமல் இருக்க ஆயுர்வேதம் சொல்லும் முக்கிய குறிப்புகள் என்னவென்று பார்ப்போம். முகப்பரு வர ஆரம்பிச்சுடுச்சா? உடனே சமையலறைக்கு போங்க... 
முகத்தைக் கழுவவும் 
பலரும் குளிர்ந்த நீரில் தான் முகத்தைக் கழுவுவோம். ஆனால் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால், சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பு அதிகரித்து, அதனால் பருக்கள் வரும் என்று தெரியுமா? எனவே தினமும் 3-4 முறை வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

கசப்பான உணவுகள் அவசியம் 
ஆயுர்வேத மருத்துவமானது, உணவில் கசப்பான உணவுப் பொருட்களை அதிகம் சேர்க்கச் சொல்லும். ஏனெனில் கசப்பான உணவுப் பொருட்கள் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தில் எண்ணெய் சுரப்பையும் கட்டுப்படுத்தும். எனவே கசப்பான உணவுப் பொருட்களான பாகற்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்ப்பதோடு, தினமும் சிறிது வேப்பிலையை உட்கொள்வது, பருக்கள் வருவதைத் தடுத்துவிடுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

துளசி பேஸ்ட் 
நீங்கள் பருக்களால் கஷ்டப்பட்டால், துளசி இலையை அரைத்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது வைத்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வேண்டுமானால், துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை டோனர் போன்று பயன்படுத்தலாம்.

யோகா 
யோகா உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்துவதோடு, பல சரும பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவும். அதற்கு வாயில் காற்றினை நிரப்பி சிறிது நேரம் கழித்து மெதுவாக காற்றினை வெளிவிட வேண்டும். இப்படி தினமும் 10-12 நிமிடம் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

மஞ்சள் சிகிச்சை 

பருக்களைப் போக்க ஆயுர்வேதம் என்று வரும் போது, அதில் நிச்சயம் மஞ்சளும் இடம் பெறும். அதற்கு மஞ்சள் மற்றும் இஞ்சியை சரிசமமாக எடுத்துக் கொண்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் குணமாகும்.

தக்காளி ஜூஸ் 
தக்காளியை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவிக் கொண்டு தூங்க செல்ல வேண்டும். இப்படி அன்றாடம் பின்பற்றி வந்தால், முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.

சந்தன பேஸ்ட் 
சந்தனப் பொடியை வேப்பிலை தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உல வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமத்தில் உள்ள எந்த ஒரு பிரச்சனையும் நீங்கி, சருமம் பிரகாசமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

வெள்ளைத் தோலின் மீது யாருக்கு தான் ஆசை இல்லாமல் இருக்கும். அதன் காரணமாக பலரும் தங்களின் நிறத்தை அதிகரிப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பல ஆண்கள் மற்றும் பெண்களின் அக்குள் மட்டும் கருமையாக இருக்கும். இந்த கருமையைப் போக்க முடியாதா என்று பலர் நினைப்பார்கள். அதுமட்டுமின்றி, சிலர் அந்த கருமையைப் போக்குவதற்கு கடைகளில் விற்கப்படும் க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினால், அதனால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே கண்டதை உபயோகிக்காமல், உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே போக்க முயற்சி செய்யுங்கள். இங்கு தமிழ் போல்ட்ஸ்கை அக்குளில் உள்ள கருமையைப் போக்க உதவும் சமையலறைப் பொருட்கள் என்னவென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து முயற்சித்து நல்ல பலனைப் பெறுங்கள்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் மிதமான அமிலம் உள்ளதோடு, இது மிகச்சிறந்த ப்ளீச்சிங் தன்மை கொண்டதும் கூட. எனவே அந்த உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, அவற்றை அக்குளில் தேய்த்து 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், அக்குள் கருமையைப் போக்கலாம். முக்கியமாக சென்சிடிவ் சருமத்தினருக்கு இது நல்லது.

எலுமிச்சை சாற்றின் அழகு நன்மைகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் இது மிகச்சிறந்த ப்ளீச்சிங் பொருள். அத்தகைய எலுமிசை சாற்றினை அக்குளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கை, கால்களில் உள்ள முடியை எப்படி வேக்சிங் முறையின் மூலம் நீக்குகிறீர்களோ, அதேப் போல் அக்குளில் உள்ள முடியையும் வேக்சிங் செய்து நீக்கினால், முடி வேரோடு வெளிவருவதோடு, கருமையாக காணப்படுவதும் நீங்கும்.

பப்பாளியில் பாப்பைன் அதிகம் உள்ளது. இது சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் நீக்கும். எனவே தினமும் பப்பாளியை அரைத்து அதனை அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவி வந்தால், அக்குளில் உள்ள கருமை நீங்கும்.

வெள்ளரிக்காயும் சரும கருமையைப் போக்கும் சக்தியைக் கொண்டது. எனவே வெள்ளரிக்காயை அக்குளில் தினமும் இரண்டு முறை தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வாருங்கள்.

பேக்கிங் சோடா 
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அக்குளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ, அக்குள் கருமை நீங்கும்.

ஆரஞ்சு தோல் 
ஆரஞ்சு தோலை உலர்த்தி, பொடி பொடி செய்து, அதில் பால் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவி வந்தால், அக்குளில் இருக்கும் கருமை மறையும்.

இன்றைய தலைமுறையினர் அதிகம் கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்றாக முடி உதிர்வது மற்றும் முடியின் அடர்த்தி குறைந்து மெலிதாவது தான். இதனைத் தடுப்பதற்காக பலர் ஹேர் சிகிச்சைகளை மேற்கொள்வது, வைட்டமின் மாத்திரைகளை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இப்படி செய்வதற்கு பதிலாக முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொண்டு வந்தாலே போதும். குறிப்பாக முடியின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு, அச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தாலே, முடி உதிர்வதைத் தடுக்கலாம். இங்கு முடியின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் என்னவென்று தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்து, முடி உதிர்ந்து மெலிதாவதைத் தடுங்கள்.
புரோட்டீன் 
முடியின் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. புரோட்டீன் உடலில் குறைவாக இருந்தால் தான் முடி கொட்டி மெலிதாகும். இந்த புரோட்டீன் முட்டை, பீன்ஸ், நட்ஸ், மீன், சிக்கன் மற்றும் சீஸ் போன்றவற்றில் வளமாக நிறைந்துள்ளது. எனவே உங்களுக்கு முடி அதிகம் கொட்டினால், இச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வாருங்கள்.

ஜிங்க் 
முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை ஏற்படுவதற்கு உடலில் ஜிங்க் குறைபாடும் ஓர் காரணம். ஜிங்க் மயிர் கால்களின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்யும். மேலும் ஜிங்க் தலைச்சருமத்தில் எண்ணெய் பசையை சீராக வைத்து, வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும். இந்த ஜிங்க் சத்தானது இறைச்சி, பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் தானியங்கள் போன்றவற்றை ஏராளமாக நிறைந்துள்ளது.

காம்ப்ளக்ஸ் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர் கால்களின் வளர்ச்சிக்கு உதவும். இச்சத்து குறைவாக இருந்தால், முடி வலிமையின்றி இருக்கும். இந்த சத்து டூனா, சிக்கன், சால்மன் போன்றவற்றில் அதிகம் இருக்கும்



காப்பர் 
காப்பர் தான் புதிய ஹீமோகுளோபினை உருவாக்கி, தலையில் ஹீமோகுளோபின் மூலம் ஆக்ஸினை வழங்கி, முடியின் வளர்ச்சிக்கு உதவும். இந்த காப்பர் சத்தானது சோயா, எள், நட்ஸ், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் இறைச்சியில் அதிகம் உள்ளது.

வைட்டமின் சி 
வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டால், முடி வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு வைட்டமின் சி உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரிப் பழங்கள், தர்பூசணி மற்றும் தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

இரும்புச்சத்து 
இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், முடி ஆரோக்கியத்தை இழந்து உதிரும். எனவே உடலில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்க, கீரை, சிக்கன், இறைச்சி, முட்டை, மீன், பசலைக்கீரை மற்றும் சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.