ஆணோ, பெண்ணோ மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் திருமணம் செய்து, தாம்பத்ய வாழ்க்கை நடத்துவதன் மூலம் அவர்களுக்கு என்று ஒரு குழந்தையை பெற்றெடுப்பதன் மூலம் நிறைவான வாழ்வை எட்டுகின்றனர்.
தாய்மை இறைவனின் வரப் பிரசாதம். பெண்மைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. குழந்தை பிறந்த உடன் ஆயுள், ஆரோக்கியம் பற்றி கேட்பவர்கள், ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் படிப்பு பற்றியும் தொழில், அரசு வேலை பற்றியும் ஜோதிடரிடம் கேட்கத் தொடங்குவார்கள்.
பருவ வயதை எட்டிய உடன் திருமணம் பற்றியும், பின்னர் குழந்தை பாக்கியம் பற்றியும் தெரிந்து கொள்வதற்காக ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் செல்வார்கள்.
நூற்றில் 50 சதவிகிதம் பேருக்கு எளிதாக திருமணம் நடந்து விடுகிறது. திருமணத்திற்கு பின்பு பத்தாவது மாதத்திலேயே குழந்தை பாக்கியம் கிடைத்து விடுகிறது. ஒரு சிலருக்கு திருமணம் தாமதமாக நடைபெறுவதோடு திருமணத்திற்குப் பின்னர் ஒரு வருடமோ, இரண்டு வருடமோ கழித்துதான் குழந்தை யோகம் அமைகிறது.
இன்னும் சிலருக்கு 8, 10 வருடங்கள் கழித்துதான் குழந்தைபேறு கிடைக்கிறது. சிலருக்கு குழந்தை பாக்யம் இல்லாத நிலையும் ஏற்பட்டு விடுகிறது. ஒரு சிலருக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.
அதன்பிறகு ஆண் வாரிசுக்காக தவியாய்த் தவித்தாலும் அது கிடைப்பதில்லை. அதேபோல் முதலில் ஆண் குழந்தை பிறக்கும் தம்பதியர்களுக்கு பிறகு பெண் குழந்தை பாக்கியம் ஏற்படுவதில்லை. ஒரு சில பெண்களுக்கு கர்ப்பம் தரித்தாலும் அது தங்காமல் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது.
இதற்கு எல்லாம் என்ன காரணம்? மனிதர்களுக்கு குழந்தை பாக்கியம் அமைவது பற்றி ஜாதக கட்டம் என்ன சொல்கிறது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஜாதகத்தில் கட்டம் சொல்வது என்ன? ஜாதக கட்டம் ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆதிபத்யம் உள்ளது. அந்த வகையில் லக்னத்திற்கு ஐந்தாம் இடம் குழந்தை பாக்கியம் தரும் இடம். ஐந்தாம் அதிபதி புத்திர ஸ்தானாதிபதியாவர்.
இந்த இரண்டும் பலமாக இருப்பது அவசியம். அந்த வீட்டின் அதிபதியும் மிக முக்கியம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தையும், ஒன்பதாம் இடத்தோடு, நான்காம் வீட்டையும் பார்க்க வேண்டும். இந்த 4, 5, 9 ஆகிய வீடுகள் (ராசிகள்) பலம் பெற்றும் அந்த வீட்டிற்குடைய கிரகங்கள் நீச்சம் அடையாமலும் 6, 8, 12ல் மறையாமலும் இருப்பது அவசியமாகும்.
நீச்ச கிரகத்துடன் சேராமல் இருப்பது மிக முக்கியமாகும். குரு பகவான் ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் குரு, செவ்வாய், சுக்கிரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். குருவிற்கு புத்திர பாக்யம் தருவதில் மிக முக்கிய பங்கு உண்டு.
ஏனென்றால் குரு புத்திர காரகன் ஆவார். அதாவது புத்திர யோகத்தை தரக்கூடிய அதிகாரம் பெற்றவர். சுக்கிரன் காரண கர்த்தா சுக்கிரன் திகட்டாத தாம்பத்யத்தையும் ஈர்ப்பு சக்தியையும் தரக்கூடியவர் ஆண்களின் சுக்கிலத்திற்கும் பெண்களின் கரு உற்பத்திற்கும் இவரே காரண கர்த்தா. ஒரு தம்பதியின் ஜாதகங்களில் இந்த மூன்று கிரகங்கள் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால் விரும்பிய குழந்தை பாக்கிய யோகம் தானாக கூடிவரும்.
செவ்வாய் பகவான் செவ்வாய் அருளால்தான் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியும். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர் இவர். பெண்கள் பூப்பெய்துவதற்கும் இவரே முக்கிய காரணம்.
ஒருவரின் ஜாதகத்தில் மேஷம், விருட்சிகம், சிம்மம், மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் கிரகம் இருந்து குரு சேர்ந்தோ, பார்த்தோ இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டு குழந்தை பாக்கியம் கிடைக்கும் காலம் எல்லா கிரக அம்சங்கள், யோகம், பிராப்தம் இருந்தாலும் அதை அனுபவிக்கக்கூடிய நேரம், காலம் வரவேண்டும். குழந்தை யோகமும் அப்படித்தான்.
கணவன், மனைவி இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ லக்னாதிபதி, நான்காம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் தசா, புக்தி, அந்தரங்களில் குழந்தை பாக்யம் கூடி வரும். ராகு-கேது திசைகளில் யோகாதிபதிகளின் புக்தியில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். என்ன குழந்தை பிறக்கும் ஐந்தாம் இடத்தை ரிஷபம், கடகம், துலாம் ஆகி சுக்கிரன், சந்திரன் பார்த்தால் பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். எத்தனை குழந்தைகள் 5ம் அதிபதி நவாம்சத்தில் எங்கு இருக்கிறாரோ அதிலிருந்து லக்னம் வரை எண்ணி எத்தனை ராசிகளோ அத்தனை ஆண். பெண் குழந்தைகள் உண்டு.
குழந்தை பாக்கியத்திற்கு தடை ஐந்தாம் இடத்தில் ராகு-கேது இருந்தால் புத்திரதோஷம்; நீச்சக் கிரகம் இருந்தால் புத்திர தடை ஏற்படும் அமைப்பாக கூறப்படுகிறது. ஆண், பெண் இருவரின் ஜாதகங்களிலும் ஏதாவது குறை இருந்தால்தான் குழந்தை பாக்யம் தடைபடும். இருவரில் ஒருவருக்கு பலம் இருந்தால் தடைகள் நீங்க வாய்ப்புண்டு.
தாமதமான புத்திரபாக்கியம் ஐந்தாம் அதிபதி நீச்சக் கிரகத்துடன் சேர்ந்தால் புத்திரதோஷம் ஏற்படும் அமைப்பாக உள்ளது. ஐந்தாம் அதிபதியும் குருவும் பலவீனமடைந்தால் புத்திர தடை ஏற்படும் என்று கூறும் ஜோதிடர்கள், ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் தாமதமாக குழந்தை பிறக்கும் என்கின்றனர். குரு பகவான், புதன் வீடான மிதுனம், கன்னியில் இருந்தால் தாமத புத்திர பாக்கியம் ஏற்படும் அமைப்பாக கூறப்படுகிறது.
ஆண் ஜாதகத்தில் விருச்சிக ராசியில் சூரியன், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் புத்திர தடை ஏற்படும் என்கின்றன ஜாதக நூல்கள். குறை உள்ள குழந்தைகள் ஐந்தாம் அதிபதியும்-ராகுவும் சேர்ந்து 6, 8, 12ல் இருந்தால் தத்து புத்திரயோகம்.
ஆண்கள் ஜாதகத்தில் அலித்தன்மையுடைய கிரகங்களான புதனும், சனியும் சேர்ந்து லக்னம், மூன்று, ஏழு ஆகிய இடங்களில் இருந்தாலும், பார்த்தாலும் விந்தணு குறைபாடுகள், வீரியக் குறைவு ஏற்படும்.
இதனால் குழந்தை பாக்ய தடை ஏற்படலாம். அல்லது அங்கம் குறை உள்ள குழந்தை பிறக்கும். ஆண் குழந்தை யாருக்கு? 5ம் பாவம் மேஷம்,ரிஷபம்,கடகமாக இருத்தல், 5ம் அதிபதி,5ம் பாவம்,சுப கிரக தொடர்பு-சேர்க்கை-பார்வை. ஐந்தாம் பாவத்தில் உள்ள கிரகம் ஆண் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பது. குரு பகவான் சுபக் கிரக சேர்க்கை-தொடர்பு. லக்னம் அல்லது சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 5மிடம் சுப ராசியாகி,அதில் சுபகிரகம் இருத்தல்.
5ம் பாவம் ஆண் ராசிகளாக இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும். 5ம் அதிபதி ஆண் கிரகமாகவும் அது ஆண் ராசிகளில் இருந்தும்,ஆண் ராசி நவாம்சடைந்திருந்தால் முதலில் ஆண் குழந்தை பிறக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள். பெண் குழந்தை யோகம் யாருக்கு? 5ம் பாவம் பெண் ராசிகளாக அமைவது, 5ம் பாவத்தில் உள்ள கிரகம் பெண் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பது, 5ம் பாவத்தில் சுக்கிரன்-சந்திரன் இருத்தல், 5ம் பாவாதிபதி 2 அல்லது 8ல் இருத்தால் பெண் குழந்தை பாக்கியம் என்கின்றன ஜோதிட நூல்கள்.
5ம் அதிபதி பெண் கிரகமாகவும் அது பெண் இராசிகளில் இருந்தும்-பெண் ராசி நவாம்சத்தையும் அடைந்திருந்தால் முதலில் பெண் குழந்தை என்கின்றன ஜோதிட நூல்கள். 5ம் வீட்டில் சந்திரன்-சுக்கிரன் இருவரும் சேர்ந்து இருந்தால் முதலில் பெண் குழந்தை என்கின்றனர். கர்ப்ப சிதைவு ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்து செவ்வாய் பார்த்தால் கருச்சிதைவு ஏற்படும் அமைப்பாக கூறப்படுகிறது. புத்திர பாக்கியம் தடைகள், கர்ப்பச்சிதைவு ஏற்பட்டால் உரிய பரிகார தலங்களுக்கு செல்வதன் மூலம் சத்புத்திர யோகம் கிடைக்கும்.
கர்ப்ப பிராப்தம் தரும் பரிகார தலங்கள் கரு தந்து காத்திடும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில், கும்பகோணம்-தஞ்சை சாலையில் பாபநாசம் அருகே உள்ளது. குழந்தை பாக்யதடை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள் இத்தலத்து அம்பாளை பிரார்த்தித்து, இங்கு தரப்படும் பசுநெய், விளக்கெண்ணெய் பிரசாதத்தை முறைப்படி அருந்திவர தோஷ நிவர்த்தி ஏற்பட்டு புத்திரயோகம் கிட்டும்.
கருவளர்ச்சேரி அம்மன் கரு வளர்க்கும் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கும்பகோணம்-திருவாரூர் சாலையில் மருதாநல்லூர் கிராமத்தை அடுத்து உள்ளது.
இத்தலத்து அம்மனை பிரார்த்தித்துக் கொள்ள புத்திர பாக்யம் உண்டாகும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் மிகவும் சக்தி வாய்ந்தது. சந்தான ராமன் ஆலயம் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் நீடாமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அருகில் புத்திர பிராப்தி தரும் சந்தானராமன் ஆலயம் உள்ளது. இங்கு ராமபிரான் சந்தான யோகம் தருகிறார்.
இங்கு ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திர நாளில் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும்போது ராமனை வழிபடுவது மிகச் சிறப்பாகும் இதனால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
குழந்தை பேறு கிடைக்க இன்றைக்கு மருத்துவத் துறை எவ்வளவோ முன்னேறி விட்டாலும், இன்றும் ஏராளமானோர் குழந்தையின்மை குறைபாட்டுடன் இருக்கின்றனர். உடலில் சில குறைபாடு உள்ளவர்கள் அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.
அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து அருந்தி வந்தால் கருப்பைக் கோளாறுகள் குறையும். முருங்கைப் பூ பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும் என்கின்றனர் வைத்தியர்கள்.