மகாபாரதத்தில் அனைவரது சர்ச்சையைக் கிளப்பிவிட்ட விடயம் இது. அண்ணன் தம்பிமார் ஐவர்க்கு ஒரு மனைவியா? அப்படியானால், எவ்வாறு சண்டையில்லாது வாழ்க்கையைக் கூறுபோட்டார்கள்? எல்லோருமே எப்படி ஏகமனதாக ஏற்றுக் கொடண்டார்கள்?
தமிழர் பண்பாடு ஒருவனுக்கொருத்தி என்பதுதான். ஆனால் திரெளபதை ஐவருக்கொருத்தியான மர்மம் இன்றும் பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.
உண்மையில் நடந்ததுதான் என்ன? பாஞ்சால தேசத்தின் மன்னன் துருபதன். தனது மகள் திரெளபதிக்கு திருமணம் நடத்தி வைப்பதற்காக சுயம் வரத்தில் ஒரு போட்டியையும் வைத்தார்.
பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சால தேசத்தில் நடைபெற இருந்த சுயம்வரத்திற்குச் சென்றனர். அப்போது தான் வியாசக முனிவர் ஒரு வரலாற்று உண்மையை விபரித்தார். முனிவர் ஒருவருக்கு அழகிய பெண் இருந்தாள், அவளுக்கோ திருமணம் நடைபெறக் காலதாமதம் ஆகிக் கொண்டே இருந்தது. அப்பெண்ணோ “தனக்கு திருமணம் விரைவில் நடைபெறவேண்டும்” என்று பரமசிவனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.
பரமசிவனும் அவள் முன்பு தோன்றினார். “பெண்ணே!, நீ விரும்பிய வரத்தைக் கோள்” என்றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பயபக்தியுடன் எம் பெருமானே!, நற்குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.
பரமசிவன் பதிலேதும் கூறாமல் நின்றார். அப் பெண்மணியோ, தான் வேண்டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூறலானாள். இவ்வாறு அவள் ஐந்து தடவைகள் “நற்குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று வேண்டினாள்.
ஐந்தாம் முறையாக அப்பெண் கூறிய பின்பு பரமசிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே!, நீ விரும்பிய வண்ணமே நற்குணங்கள் நிறைந்த ஐந்து கணவர்களைப் பெறுவாயாக” என்று வரமருளினார்.
“நான் ஒருவரைத்தான் மணக்க விரும்புகிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்டுமென அருளிச் செய்தீர்களே” என்று அப்பெண்மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.
“பெண்ணே…நீ ஐந்து முறை வரம் கேட்டாய் நானும் அருளிவிட்டேன், அடுத்த பிறவியில் நீ இந்த வரத்தின் படி கணவர்களைப் பெறுவாய்” என்று கூறி, பரமசிவன் மறைந்தார். பரமசிவனால் வரம்பெற்ற அப்பெண்தான் துருபதன் புத்திரியான திரெளபதையாவாள் என்று கூறிமுடித்தார் வியாசக முனிவர்.
திரெளபதியை சுயம்வரத்தில் மணக்க துருபதன் ஒரு போட்டி வைத்திருந்தான். சுழலும் சக்கரத்தின் நடுவில் உயரத்தில் ஒரு மீன் இருக்கும். கீழே உள்ள நிழலை நோக்கியபடியே மேலே சுற்றும் மீனைக் குறிபார்த்து அம்பினால் எய்து வீழ்த்த வேண்டும் அதுதான் நிபந்தனை.
இப்போட்டியைக் கண்டு களிக்கவும் அதில் பங்குபற்றி திரெளபதியை மனைவியாக அடைய ஆவல் கொண்ட மன்னர்களும் கூடியிருந்தனர். அக் கூட்டத்தில் துரியோதனன், கர்ணன் இவர்களுடன் அந்தணர் வேடத்தில் இருந்த பாண்டவர்களும் இருந்தார்கள்.
போட்டி விறுவிறுப்பாக ஆரம்பமானது. பல நாட்டு மன்னர்கள் வில்லில் நானேற்ற முடியாதவர்களாகத் தோற்றுப் போயினர். துரியோதனன் போன்றோரும் வில்லின் வேகத்தால் கீழே விழுந்தனர். கர்ணன் தன்னுடைய திறமையால் நானேற்றி மேலே சுழல்கின்ற மீனை வீழ்த்தி விடலாம் என்று உற்சாகத்துடன் எழுந்தான்.
சபையிலே ஒரே உற்சாகம் “நிச்சயம் கர்ணன் வெற்றிபெற்று திரெளபதியை மணந்துகொள்வான்” என்று பேசிக் கொண்டதும் திரெளபதியின் செவிப்பறையிலும் முட்டிமோதியது. கர்ணன் வில்லைத் தொட்டு வளைக்கும் நேரத்தில் திரெளபதி தன் தோழியிடம் உரக்கக் கூறினாள்.
“ஒரு தேரோட்டியின் மகன் இந்தப் போட்டியில் வென்றால் நான் அவனை மணந்து கொள்ள மாட்டேன்” என்றாள். வில்லை வளைக்க முயன்ற கர்ணனின் காதுகளில் அவை இடி ஓசையாக ஒலித்தது.
அக்கினி மின்னல் அவன் உணர்வுகளை ஊடுருவிற்று. அவமானமும், வெறுப்பும் கர்ணனைப் புடைசூழ, வில்லை கீழே வைத்துவிட்டு தனது இருக்கையை நோக்கி நகர்ந்தான்.
அந்தணர் வேடத்தில் இருந்த அர்ச்சுனன் சுயம்வரத்தில் வென்று திரெளபதியை மணக்கும் தகுதி பெற்றான். துருபத மன்னனின் ஆசியுடன் பெரியோர்களின் வாழ்த்துக்களுடனும் அர்ச்சுனன் திரெளபதியையும் அழைத்துக் கொண்டு தருமர், பீமன், நகுல, சகாதேவனுடனும் இல்லம் வந்தடைந்தனர்.
வாயிலில் நின்ற வண்ணம் “தாயே!, நாங்கள் மாங்கனி ஒன்றை கொண்டு வந்திருக்கின்றோம்” என்று பாண்டவர்கள் கூற குந்திதேவியும் இல்லத்துள்ளே இருந்தவாறே “அவ்வாறாயின் ஐவரும் அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று மொழிந்தாள்.
“அர்ச்சுனா போட்டியில் வெற்றி பெற்ற நீயே திரெளபதியை மணக்க வேண்டும் தாய் கூறியதை நீ தவறாக எடைபோட வேண்டாம்” என்றுரைத்தார்கள் சுகோதரர்கள். “வியாசக முனிவர் நமக்கு உரைத்தப்படி தாயின் வாக்கு பொய்ப்பதற்கில்லை எனவே ஐவருமே மணந்து கொள்வோம்” என்றான் அர்ச்சுனன்.
பின்பு திரெளபதியின் முடிவை அறிய விழைந்த போது, தாய் குந்திமாதேவியின் வாக்கை தெய்வ வாக்காகச் சிரமேற்று ஐவரையும் மணக்க இசைந்தாள் திரெளபதி. பாண்டவர்களின் மனப் போராட்டத்தைப் போக்க வியாசகர் அங்கு வந்தார். பாண்டவர்கள் தேவகுமாரர்கள் என்றும் திரெளபதி லட்சுமியின் அம்சம் பெற்றவள் என்றும் கூறினார். மேலும் பரமசிவனிடம் பெற்ற வரமே இது என விளக்கமளித்தார்.
பாண்டவர்கள் ஐவரும் திரெளபதியை மணந்து கொண்டதும் தங்களுக்குள் ஒரு விதிமுறையை வகுத்துக் கொண்டார்கள். ஒரு வருடம் ஒருவரோடு திரெளபதி மனைவியாக வாழவேண்டும். அவ்வாறு அவர்கள் வாழும் ஓராண்டு காலமும் மற்ற நான்கு பாண்டவர்களும் அவர்களைப் பார்க்கக் கூடாது. இவ் விதியை மீறிப்பார்த்தால் அவர்களைப் பார்த்தவர் ஓராண்டு கானகத்தில் வசிக்க வேண்டும்.
5 கணவன்மார்களுடன் வாழ்ந்த ஒருத்தி எப்படிப் பத்தினியருள் ஒருவராக ஆனாள்?
5 கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை. என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.
5 கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம் என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் “அக்னிப் பிரவேசம்” செய்து
தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டுதான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.
இன்றைக்கும் கணவனைப் பிரிந்த மனைவியரும் சரி, இல்வாழ்க்கை நன்கு அமைய வேண்டுபவரும் சரி. திரெளபதி அம்மன் கோவிலில் “தீ மிதி” என்னும் பூக்குழியில் இறங்கித் தங்களைப் புனிதப் படுத்திக் கொள்வதைப் பார்க்க முடியும்.
ஒருமுறை பஞ்ச பாண்டவரின் வனவாசத்தின் போது கிருஷ்ணர் அவர்களைச் சந்திக்க வந்தார். அன்று திரெளபதி பீமனுடன் சேர்ந்து வாழத் துவங்கும் நாளாக அமைந்தது. பீமனுக்கு ஏற்கெனவே சந்தேகம். இந்தப் பெண்மணி எப்படி எல்லாரையும் கணவனாக ஏற்றுக் கொண்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள். என்று. அதுவும் இப்போது கிருஷ்ணர் வேறு வந்திருக்கிறார்.
திரெளபதிக்கு அண்ணன் முறை. அவர் முன்னால். பீமன் முகம் சுருங்கிக் கிடந்தது. கிருஷ்ணர் ஒருவாறு ஊகித்துக் கொண்டார். திரெளபதியைக் கண்களால் பார்த்துச் சிரித்தார். திரெளபதியும் கிருஷ்ணரைப் பார்த்துச் சிரித்தாள்.
பீமனுக்குக் கோபம் வந்தது. என்றாலும் தனிமைக்காகப் பொறுமையுடன் இருந்து, தனிமையில் கிருஷ்ணரைச் சந்தித்து,. ‘கிருஷ்ணா, உனக்கே இது நியாயமா? இவ்வளவு நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள், எனக்குத் தாய் ஸ்தானத்தில் இருந்தவள் இன்று முதல் ஒரு வருஷத்திற்கு மனைவி, என்றால் என்னால் எப்படி ஏற்க முடியும்? நீயானால் சிரிக்கிறாய்! திரெளபதியும் சிரிக்கிறாளே!’ என்று கேட்டான்.
கிருஷ்ணர் சொன்னார்: ‘பீமா, நடப்பவை எல்லாம் உன்னைக் கேட்டு நடக்கவில்லை. ஏற்கெனவே இது இவ்வாறு நடக்கும் என்று சொல்லி இருப்பது தான் நடக்கிறது. இதில் நீ வருந்த ஒரு காரணமும் இல்லை. இருந்தாலும் உன் ஆறுதலுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், கேள்!
இன்றிரவு திரெளபதி நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வாள் அல்லவா?” என்று கேட்டார். ‘ஆம், பார்த்திருக்கிறேன். ஒரு வருஷம் முடிந்ததும் ஒவ்வொரு நள்ளிரவிலும் வெளியே சென்று விட்டுப் பின் உதயத்தில் திரும்பி வருவாள்.’ என பீமன் சொல்ல, ‘அப்போது திரெளபதி எப்படி இருப்பாள்?’ என்று கிருஷ்ணர் கேட்க, பீமனோ, ‘புடம் போடப் பட்ட புதுப் பொன்னைப் போல் ஜொலிப்பாள். அவள் முகத்தின் தேஜஸ் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.’ என்று சொல்கிறான்.
‘பீமா, இன்றிரவு அம்மாதிரித் திரெளபதி வெளியே போகும்போது நீயும் உடன் போய்ப் பார்.’ என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
அன்றிரவில் நள்ளிரவில் திரெளபதி வெளியே போக பீமனும், கிருஷ்ணனும் அவளுக்குத் தெரியாமல் தொடர்ந்து போகிறார்கள். அவர்கள் இருவரும் மறைந்து இருந்து பார்க்கும் வேளையில் தீ மூட்டிய திரெளபதி, தானும் அந்தத் தீயில் விழுகிறாள். மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்ற ஓட முயற்சிக்கத் தடுக்கிறார், பரந்தாமன்.
‘அங்கே பார்!’ என்கிறார். என்ன ஆச்சரியம்! தீக்குள் திரெளபதியா தெரிந்தாள்? சாட்சாத் அந்த அகிலாண்டேஸ்வரி, சர்வ உலகத்தையும் காத்து அருளும் மஹா சக்தி, அன்னை தன் சுய உருவில் காட்சி அளிக்கிறாள். அவளைத் தீயும் சுடுமோ? அவளே தீ, அவளே, நீர், அவளே வாயு, அவளே ஆகாயம், அவளே நிலம். சகலமும் அவளே அல்லவா? திகைத்துப் போன பீமனை அழைத்து வந்து புரியவைக்கிறார் அந்த வாசுதேவன்.
‘பீமா, நீங்கள் ஐவரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மஹாசக்தி திரெளபதி ஆவாள். அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி அவள் உங்களுக்குள் அடக்கம் இல்லை. எப்படி இந்தப் பிரபஞ்சமானது பஞ்சபூதத்தையும் வெளிக்காட்டி ஆளுமை செய்கிறதோ,
அதை ஆளுமை செய்யும் சக்தி இவளே! நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால் உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இந்தத் திரெளபதி ஆவாள். இந்த ஜீவாத்மா எப்படிப் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர்கள்.
உனக்கு இந்த உண்மை புரியவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன். இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும். இவளை விடக் கன்னியோ, அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை. அனைத்தும் இவளே! இந்த உண்மைதான் உங்கள் ஐவரையும் திரெளபதி மணம் புரிந்ததாகக் காட்டப் படும் காட்சி. இதன் உள்ளே உள்ள இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவார்கள். நீ கவலை இல்லாமல் உன் கடமையைச் செய்.’ என்கிறார்