May 2016

உடலுறவும் என்பதும் ஓர் கலை என்று தான் நமது முன்னோர்கள் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். இதிலும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என சிலவன இருக்கின்றன.

அதை பின்பற்றினால் உங்கள் இல்லற பந்தம் சிறக்கும். உடலுறவில் ஈடுப்படும் முன்னர் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது, மது அருந்தக் கூடாது, கசப்பான நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ள கூடாது என்பதை போல. உடலுறவு கொள்ளும் முன்பு ஆண்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்!!!

உடலுறவில் ஈடுபட்ட பின்னரும் கூட சில செயல்களில் ஈடுபட கூடாது. முக்கியமாக உடனே தூங்கக் கூடாது. இது போன்று எந்தெந்த செயல்களில் ஈடுபடக் கூடாது, அவற்றால் உறவில் என்ன எதிர்விளைவுகள் நடக்கும் என்பது பற்றி இனிக் காணலாம்….

குளிப்பது
உடலுறவில் ஈடுபடும் முன்னர் குளிப்பது நல்லது. ஆனால், உடலுறவில் ஈடுபட்ட உடனே குளிக்க செல்வது அல்லது பிறப்புறுப்பை கழுவ செல்வது தவறு. அதிலும் கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள் இதை செய்ய வேண்டாம். உடலுறவில் ஈடுபட்டு சில நேரம் கழித்து மேற்கொண்டால் போதுமானது. உடலுறவுக்கு பிறகு ஏற்படும் அந்த மனநிலையில் இருந்து உடனே மாற வேண்டாம்.

நண்பருடன் பேசுவது
உடலுறவில் ஈடுபட்ட பிறகு, ஏதோ ஒரு வேலை முடித்து அடுத்த வேலைக்கு செல்வது போல நண்பருக்கு / தோழிக்கு கால் செய்து பேச வேண்டாம். இந்த செயல்கள் அனைத்தும் உங்களை முழு இன்பத்தை அடைய விடாமல் தடுப்பவை ஆகும்.

உறங்குவது
உடலுறவின் போது பெரும்பாலான தம்பதிகள் செய்யும் பொதுவான தவறு, இருவரில் யாரேனும் ஒருவர் உடனே உறங்கிவிடுவது. பெரும்பாலும் இந்த தவறை செய்வது ஆண்கள் தான். உடலுறவில் ஈடுபட்டவுடன் உங்கள் துணையுடன் பேசுவது, கொஞ்சுவது உறவில் இறுக்கம் பெருக உதவும். எனவே, இதை தவிர்க்க வேண்டாம்.


அலுவலக வேலை
படிப்பது அல்லது அலுவலக வேலையை செய்ய வேண்டாம். பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு தான் அதிகம் ஆணின் துணையை தேடுவார்கள். இதன் பிறகு கொஞ்சி மகிழ்தல் தான் அவர்களுக்கு இன்பத்தை உணர உதவும். இந்த நேரத்தில் நீங்கள் வேறு வேலைகளில் ஈடுபடுவது அவர்களை மனதளவில் பாதிக்கும்.

தனியாக தூங்குவது
உடலுறவில் ஈடுபட்டவுடன் தனியாக தூங்குவது தவறு. இது அடுத்த முறை உறவில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தை குறைத்து விடும்.

குழந்தைகளை அழைத்து உறங்குவது
சிலர் உடலுறவில் ஈடுபட்ட பிறகு குழந்தைகளை அழைத்து படுக்க வைத்துக் கொள்வார்கள். இவை அனைத்தும் நாம் மேற்கூறியவாறு முழு இன்பத்தை அடைய தடையாக இருப்பவை தான்.

சாப்பிடுவது
உடலுறவில் ஈடுபட்ட பிறகு உடனே சாப்பிட செல்ல வேண்டாம். இருவரும் சேர்ந்து சிறுது நேரம் கழித்து ஒன்றாக சமைத்து சாப்பிடுவது நல்ல யோசனை தான், தம்பதி மத்தியில் இது இறுக்கத்தை ஏற்படுத்த உதவும்.

ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று, கனவே கண்டுவிடுவார்கள். சில ஆண்களுக்கு ஒல்லியானபெண்ணைப் பிடிக்கும்

சில ஆண்களுக்கு ஓரளவான பெண்ணைப் பிடிக்கும், மேலும் சில ஆண்களுக்கு குண்டு பெண்களைப் பிடிக்கும்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், உடலுறவில் அதிக நாட்டம் இல்லாத ஆண்களுக்குத் தான் குண்டான பெண்களைப் பிடிக்கும் என்கிறார்கள்.

காரணம் குண்டான பெண்களுடன் உடலுறவு மேற்கொள்வது மிகவும் சுலபம். சில ஆண்கள் ஓரளவு பருமன்
உள்ள பெண்களை விருப்புகிறார்கள். இவர்கள் நடுத்தர ஆண்கள் ஆவர்.

மேலும் சில ஆண்கள் மிகவும் ஒல்லியான பெண்களையே விருப்புவது வழக்கம். இவர்கள் பெரும்பாலும் கில்லாடிகள்.



தாம் உடலுறவு கொள்ளும்போது, பெண்ணின் உறுப்பு மிகவும் சிறியதாக இருக்கவேண்டும், என்றும் மற்றும் உடலுறவில் இன்பம்இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஆண்களும் இவர்களே.

எனவே பெண்கள் ஆனாலும் சரி ஆண்கள் ஆனாலும் சரி, தமதுவாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும்போது, அழகைப் பார்த்து, வெள்ளை நிறத்தைப் பார்த்து தேர்ந்தெடுப்பதை விடுத்து, தமக்குபிடித்த உடல்வாகோடு உள்ள ஆண்களை தேர்வு செய்வது நல்லது.

பெண்கள் என்ன தான் காதல் வேறு, காமம் வேறு என்று கதைஅளந்தாலும், ஒரு பெண்ணுக்கு கட்டில் சுகம் சரியாகக் கிடைக்கவில்லை என்றால், அவள் எப்பொழுதும் தன் கணவனோடு எரிந்துவிழுந்து தான் வாழ்க்கையை நடத்துவாள்.

அதுவே 90% சதவீதமான பெண்களில் காணப்படுகிறது. இதில் 5% சதவீதமான பெண்கள்,வேறு துணையை நாடுகிறார்கள். மேலும் சில பெண்கள், இதற்காக கள்ளக் காதலை நாடுகிறார்கள்

ஆண்களுக்கு பெண்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். இதற்காக படிக்க விருப்பமில்லாத ஆண்களும், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிய புத்தகங்களை தேடிப் படிப்பார்கள். அதில் ஒன்று பெண்களின் மாதவிடாய் சுழற்சி குறித்து. மேலும் ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் மனதில் ஓர் கேள்வி எப்போதும் இருக்கும்.

அது என்னவெனில் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா கூடாதா என்பது. இதைப் பற்றி மற்றவர்களிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை அளிப்பார்கள். உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா கூடாதா?

இதற்கான விடையை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இங்கு மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் கால வலி குணமாகும்
மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, உச்சக்கட்ட இன்பத்தை அடைவதால் வெளியிடப்படும் எண்டோர்பின்கள், வயிற்று வலி மற்றும் இந்த காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

மாதவிடாய் சுழற்சியில் வெளிவரும் இரத்தம் 100% தீங்கற்றது
நிறைய பேர் மாதவிடாய் சுழற்சியில் வெளிவரும் இரத்தம் அசுத்தமானது மற்றும் நோய்க்கிருமிகளைக் கொண்டது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது தவறு. மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தில் உடலில் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆரோக்கியமான இரத்தம் மற்றும் திசுக்கள் தான் உள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், மாதவிடாய் சுழற்சியின் போது அது வெளியே தள்ளப்படுகிறது.

மூன்றில் ஒரு பங்கினர் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்கின்றனர்
ஆய்வு ஒன்றில் 30 சதவீதத்தினர் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்றும், இக்காலத்தில் மற்ற காலங்களை விட அதிகளவு பாலுணர்ச்சி இருப்பதாகவும் கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.

உயவுப் பொருள் தேவைப்படாது
முக்கியமாக மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், உயவுப் பொருளே தேவைப்படாது. அது ஏன் என்று நீங்களே அறிவீர்கள்.

பாலியல் நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது
இருப்பினும், மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த காலத்தில் இரத்தத்தை வெளியே தள்ள கருப்பை வாய் சற்று அதிகமாக திறப்பதால், பாலியல் நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இக்காலத்தில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள்.

ஆம், கருத்தரிக்க வாய்ப்புள்ளது
மாதவிடாய் சுழற்சியின் 3-4 ஆம் நாட்களில் தான் உடலுறவில் ஈடுபட்டாலும், கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஒருமுறை விந்தணு பெண்களின் உடலினுள் சென்றால் அது 7 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். இதனால் 28 நாட்கள் அதாவது குறைந்த கால மாதவிடாய் சுழற்சியைக் கொண்டவர்களாக இருந்தால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கட்டாயமில்லை
மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இக்காலத்தில் உடலுறவு கொள்வது நல்லது என்று கூறுவதால் கட்டாயம் உறவு கொள்ள வேண்டுமென்ற அவசியம் ஏதும் இல்லை.

நிறைய பேருக்கு செக்ஸ் அபாரமான அனுபவமாக அமைகிறது. ஆனால் பலருக்கு அது பாட்டி இடுப்பில் வைத்திருக்கும் சுருக்குப்பை போல சுருக்கமாக முடிந்துவிடுகிறது. எப்படி அது சிறப்பாக இருக்கிறது, சுருக்கமாக முடிகிறது என்பது நமது கையில் தான் இருக்கிறது.

மொத்தமாக யோசித்துப் பார்த்தால் ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடும் விடயம்தான் செக்ஸ். ஆனால் அது சிறப்பாக அமைவதற்குத்தான் நாம் நிறைய நேரம் செலவிட வேண்டும். இதுக்காக பிளானிங் கமிஷனுக்குப் போய் திட்டமெல்லாம் தீட்ட வேண்டியதில்லை. முன்னேற்பாடுகளை பலமாக செய்தாலே போதும் பக்காவாக உறவு அமையும். பேஸ்மென்ட் நன்றாக இருந்தால் தானே பில்டிங் பலமாக இருக்கும். அது போலத்தான் செக்ஸ் உறவும். முன் விளையாட்டுக்களை யார் ஒருவர் சிறப்பாக செய்கிறாரோ அவருக்கே அத்தனை இன்பமும் ஒரு சேரக் கிடைக்கும்.

முதலில் செக்ஸ் குறித்த உங்களது அறிவுத்திறனை கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அடுத்தது நிதானம் மற்றும் பொறுமை. அவசரப்பட்டால் இங்கு அலங்கோலமாகிவிடும். அந்தரங்க உறுப்புகளுக்கு மட்டும்தான் செக்ஸின்போது வேலை என்று நினைத்து விடாமல் கைகள், வாய், நாக்கு உள்பட உடலின் சகல உறுப்புகளையும் முழுமையாக பயன்படுத்துங்கள்.

அன்பு, அரவணைப்பு, மெய் சிலிர்ப்பு, கதகதப்பு, முத்தம், தழுவல், வருடல், துளாவுதல் என பல விடயங்களையும் நீங்கள் செய்தாக வேண்டும். எதையுமே தவறவிடாமல் எல்லாவற்றையும் பிரயோகியுங்கள். உடல் முழுவதும் உணர்ச்சி அணுக்கள் வெடித்து வெளிக் கிளம்ப வேண்டும். அப்போதுதான் உண் மையான உச்சத்தை நீங்கள் உணர முடியும், செக்ஸ் உறவையும் முழுமையாக அனுபவிக்க முடியும்.

முன் விளையாட்டுகளால் மட்டுமே இதை ஒரு சேர கொண்டு வர முடியும். துணையின் உணர்வுகளை வெறும் உறுப்பால் மட்டுமே தட்டி எழுப்பமுடியாது. மாறாக அருமையான முன் விளையாட்டுக்களால் மட்டுமே அவரை உணர்ச்சிக் கொந்தளிப்புக்குக் கொண்டு செல்ல முடியும்.

முன் விளையாட்டின்போது துணையின் செக்ஸ் உணர்வுகள் கொந்தளிக்கும் பகுதிகளை சரியாக தெரிந்து வைத்துக் கொண்டு அங்கு குறிவையுங்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு அதையே நீண்ட நேரம் செய்யுங்கள். தழுவுவது பிடிக்கும் என்றால் அதைச் செய்யுங்கள், வருடுவது பிடித்திருந்தால் அதைச் செய்யுங்கள். நாவால் வருடுவது தான் இஷ்டம் என்றால் அதையும் செய்யுங்கள். விரல் விளையாட்டு பிடிக்கும் என்றால் செய்துதான் ஆக வேண்டும்.

முன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரீதமான இன்பம் கிடைக்கிறதாம். உறுப்புகளின் சேர்க்கையை விட முன் விளையாட்டுக்களைத் தான் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம். எவ்வளவுக் கெவ்வளவு முன் விளையாட்டு நீளுகிறதோ, அந்த அளவுக்கு பெண்களுக்கு இன்பம் கூடுகிறதாம்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உணர்ச்சிக் குவியலாக இருப்பவர்கள் பெண்கள். அதேபோலத்தான் ஆண்களும். எனவே இருவருக்கும் எந்தெந்த இடம் எக்குத்தப்பானது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அணுகும்போது எப்படிப்பட்ட மலையாக இருந்தாலும் சட்டென சரிந்து போய் உங்களது மடியில் வந்து விழுந்து விடும்.

வெறும் கண் இமையில் கூட செக்ஸ் உணர்வைத் தூண்ட முடியும். அழகாக, ஆதரவாக, அழுத்தமாக ஒரு முத்தம் வைக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலுமே கிடையாது. உதடுகளின் உராய்வுகள் கிளப் புவதைப் போன்ற வெப்பத்தை வேறு எதனாலும் செய்ய முடியாது. கரங்களின் காந்தப் பிடிக்குள் உங்களது துணையை கட்டுண்டு போகவைக்கலாம். மோகத்தின் கதகதப்பு உங்களுக்குள் காமத்தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும்.

ஒரு நிமிட உறவாக இருந்தாலும் ஒரு மணி நேர முன் விளையாட்டாவது குறைந்தது இருக்க வேண்டும். அப்போது தான் நீடித்த இன்பமும், படுக்கை அறை விளையாட்டில் ஒரு பரவசத்தையும் சந்திக்க முடியும் என்று கூறுகிறார்கள். எனவே நிறைய விளையாடுங்கள், முழுமையான சந்தோஷத்தை எட்டிப் பிடியுங்கள்!

உடலுறவு முடிந்த பிறகும் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்ப‍து என்ன‍?
தம்பதியர் படுக்கை அறையில் உறவு தொடங்கு முன் மணிக்கணக்கில் முன் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். சலிக்க சலிக்க முத்தமழையால் துணையை நனைய வைக்கின்றனர் ஆனால் உறவு முடிந்த பின்னர் எதையும் கண்டுகொள்ளாமல் அம்போவென்று விட்டுவிடுகின்றனர்.

உறவு முடிந்த பின்னரும் அன்பாய் அரவணைத்து முத்த மிட வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனராம். உறவுக்கு பிந்தைய நிலை பற்றி ஆய்வு செய்துள்ள ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’ சுவாரஸ்யமான சில கிளுகிளு சமாச்சாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முன் விளையாட்டில் ஆர்வம்
உறவுக்கு முன் துணையை தூண்டுவதற்காக சின்ன சின்ன விளையாட்டில் ஈடுபடுவது ஆண்களின் வழக்கம். அப்போது வெட்கப்பட்டு ஒதுங்குவது பெண்களின் வழக்கமாம்.

அன்பான அரவணைப்பு அவசியம்
170 பேரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதில் ஆண்களை விட பெண்கள் சில விடயங்களுக்கு முக்கியம் கொடுப்பதாக கூறியுள்ளனர். செக்ஸியான பேச்சு, முத்தம், கட்டி அணைத்தல், போன்றவைகளை விரும்புவதாக கூறும் பெண்கள் உறவுக்கு பின் அன்பான அரவணைப்பை விரும்புவதாக கூறியுள்ளனர்.

முன்னும் பின்னும் முத்தம்
உறவுக்கு முந்தைய முன் விளையாட்டின் போது முத்தமிடுவது ஆண்களுக்கு பிடிக்கும் என்றால் உறவுக்கு பின் முத்த மிடுவதை பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனராம்.

மெதுவாய் வருடிக்கொடுக்க ஆசை
உறவு முடிந்து, ஆண்கள் சோர்ந்து படுத்து விட்ட நேரத்தில் ஆண்களை கட்டிக் கொண்டு தூங்கவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். மெல்லியதாய் காதோரம் பேசவும், வாஞ்சையாய் தடவிக் கொடுத்து முத்தமிடவும் பெண்கள் விரும்புகின்றனராம்.

ஐ லவ் யூ அவசியம்
பெரும்பாலான தம்பதிகள் உறவிற்குப் பின்னர் ஐ லவ் யூ என்று சொல்வதை விரும்புகின்றனர். அதுவும் இறுக்கமான அணைப்பில் காதோரம் கிசுகிசுப்பாய் சொல்ல வேண்டுமாம். அதன் பின் மேலும் கிக் ஏறி ஒரு ரவுண்ட் போக வாய்ப்புள்ளது.

காமத்தில் பெண்களைத் திருப்திப்படுத்த சரியான கோணத்தில் அணுகவேண்டும்! அது எப்ப‍டி?
அது கஷ்டமான விடயம் பெண்களைத் திருப்திப்படுத்துவது. இதுதான் தாம்பத்யத்தில் ஈடுபட்டிருக்கும் பலரின் பதிலாக உள்ளது.. ஆனால் உண்மை….இப்படிச் சொல்பவர்களுக்கு இன்னும் கொஞ்சம் விவரம் தேவை என்பதே…

சுய இன்பம் காண்பது ஆரோக்கியமற்ற செயல் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஆய்வுகள் சுய இன்பம் காண்பதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக ஒரு நற்செய்தியை வெளியிட்டது.

மேலும் சுய இன்பம் ஆண்கள் மட்டும் அனுபவிப்பதில்லை, பெண்களும் தான். சுய இன்பம் அனுபவிக்கின்றனர். ஆனால் இத்தகைய சுய இன்பத்தை ஒருவர் இரவில் அனுபவிப்பதை விட, அதிகாலையில் அனுபவிப்பதால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைப்பதோடு, அன்றைய நாள் சிறப்பானதாக இருக்குமாம். இங்கு ஏன் ஏன் காலையில் சுய இன்பம் காண்பது நல்லது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும் ஜெர்மன் ஆய்வு ஒன்றில், பாலியல் விழிப்புணர்ச்சி மற்றும் உச்சக்கட்ட இன்பத்தை பெறுவதால் ஒருவரது மனநிலை நல்ல நிலையில் இருப்பதோடு, அதனால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

மன அழுத்தம் மற்றும் டென்சன் சுய இன்பத்தை ஒருவர் அனுபவிக்கும் போது உடலில் இருந்து மன அழுத்தம் மற்றும் கலவையைக் குறைக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் வெளியிடப்படும். எப்போது ஒருவர் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்களோ, அப்போது உடலில் இருந்து கார்டிசோல் என்னும் ஹார்மோன் வெளியிப்படும். ஆனால் சுண இன்ப காணும் போது, கார்டிசோலின் அளவு குறைந்து, மனம் அமைதியுடனும், ரிலாக்ஸாக இருப்பதையும் உணர முடியும்.

உற்பத்தி திறன் அதிகரிக்கும் சுய இன்பம் மன அழுத்தம் மற்றும் டென்சனில் இருந்து விடுபட உதவுவதோடு, அதிகாலையில் இதனை மேற்கொள்ளும் போது ஒருவரின் ஒருமுகப்படுத்தும் திறன் அதிகரிப்பதோடு, அன்றைய நாளில் அவரது உற்பத்தி திறனும் அதிகரிக்கும்.

ஸ்மாட்டாக செயல்பட செய்யும் சுடோகு விளையாட்டை விளையாடுவதால் மட்டும் ஒருவரது மூளை ஸ்மார்ட்டாக சிந்திக்கும் என்பதில்லை, சுய இன்பம் காண்பதனாலும் மூளையின் செயல்பாடு மற்றும் நினைவுத் திறன் மேம்படும்.

மூளை மற்றும் மனம் இணையும் காலையில் சுய இன்பம் காண்பதால், மூளை மற்றும் மனம் ஒன்றிணைக்கப்பட்டு, அன்றைய நாள் வெற்றிகரமாக அமைய உதவும். ஆகவே ஒருநாள் சிறப்பாக அமைய நினைத்தால் அதிகாலையில் சுயஇன்பம் காணுங்கள்.

சருமத்திற்கு நல்லது சுயஇன்பம் அல்லது உச்சக்கட்ட இன்பத்தை ஒருவர் அடையும் போது, உடலில் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் உற்பத்தி செய்யப்பட்டு, கார்டிசோலின் அளவு குறைந்து, அதனால் சரும செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கப்பட்டு, சரும பிரச்சனைகள் வருவதும் தடுக்கப்படும்.

இரத்த ஓட்டம் அதிகரிக்கும் ஒருவர் சுய இன்பத்தைக் காணும் போது, அவரது உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதனால் உடலில் உள்ள திசுக்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

பொதுவாக தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களால் அவர்களிடையே மன அழுத்தம் குறைவதாக சுவிட்சர்லாந்தில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கையோடு, கைசேர்த்து கட்டிப்பிடிப்பதால், ஆண்பெண் இருபாலரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள சைக்கோஸொமேடிக் மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. நெருக்கமான உறவு கொள்தல், குறிப்பாக திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாலியல் உறவால் ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு வார காலம் அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவை வெளியிட்டனர். தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் பாலுறவு கொள்வது வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது. உடலில் பல்வேறு மன அழுத்தம் தொடர்பான மாற்றங்களுக்கு கார்டிசோல் ஹார்மோனே காரணம் என்று கண்டறியப்பட்டது.

தம்பதிகள் பாலுறவு கொண்டாலும், கர்ப்பம் தரிக்காத நாட்கள் தான் பாதுகாப்பான நாட்களாகும்.ஆனால் பாதுகாப்பான நாட்கள் என்பவை முழுமையான பாதுகாப்பான நாட்கள் அல்ல. பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு சுழற்சி என்றால் , அந்த பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்படும் மூன்று நாட்களும் பாதுகாப்பான நாட்கள் என்று கூறப்படுகிறது. மேலும், மாதவிலக்கு ஆகும் நாளுக்கு முந்தைய 7 நாட்களும், மாதவிலக்கு ஆன பிறகு வரும் 7 நாட்களும் பாதுகாப்பான நாட்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், மாதவிலக்கு சுழற்கி சரியாக இல்லாதவர்களுக்கோ, மாதவிலக்கு சரியாக ஏற்படாதவர்களுக்கோ இந்த பாதுகாப்பான நாட்கள் ஒத்து வராது.

உடல் நலக்குறைவால் பாலுறவு நாட்டம் குறைவு : பெண்களுக்கு பொதுவாக 50 வயது எட்டும்போது, மாதவிலக்கு நிற்கத் தொடங்கும் அதுபோன்ற இயற்கையாக மாதவிலக்கு நின்ற பெண்களோ அல்லது கட்டி போன்ற பல காரணங்களால் கர்ப்பப்பையை நீக்கிய பெண்களோ உடல் நலக்குறைவால் பாதிப்புக்குள்ளாகும் நிலையில், அவர்களின் பாலுறவுப் புணர்ச்சி நாட்டம் குறைவாக அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மூட்டு எலும்பு தேய்மான பிரச்சனை, ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்பின் அவர்களுக்கு பாலுறவில் விருப்பம் இல்லாத நிலை ஏற்படும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இதற்காக 30 வயது முதல் 70 வயதுடைய சுமார் ஆயிரத்து 189 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இவர்களில் இயற்கையாக மாதவிலக்கு நின்நவர்களில் 7 விழுக்காட்டினரும், ஆபரேஷன் செய்து கொண்டவர்களில் 12 விழுக்காட்டினரும் செக்ஸ் உறவில் நாட்டமின்றி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம்:
ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

முக தோற்றம்:
ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ  தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்:
பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

பேச்சு திறன்:
முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

வில்லென வளைந்த புருவம் என்று புருவ அழகையும் பாடாம,ஆதி காலத்துல இருந்து இப்ப வரைக்கும் எந்த கவிஞரும் இருந்ததில்லை. அடர்த்தியான, வில் போல வளைந்த புருவங்கள் கண்களை இன்னும் அழகாத்தானே காட்டும்.
கண்கள் அழகா இருந்து புருவம் சரியாவே இல்லையென்றால், அது கண்களின் அழகையும் குறைக்கும். அதுமட்டுமில்லாமல், கண்களுக்கு தூசி வராம பாத்துக்கிற பாதுகாவலனா புருவமும் இருக்கிறது.

அந்த புருவங்கள் அழகாய் அடர்த்தியாய் சீராய் வளர என்ன செய்ய வேண்டும். இதைப் படியுங்கள். தெரிந்து கொள்வீர்கள்.

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் கூந்தல் வளர அருமையான எண்ணெய். அவ்வளவு எளிதில் வளராத புருவத்திலும் மேஜிக் செய்யும் மந்திரம் விளக்கெண்ணெய்க்குதான் தெரியும். தினமும் இரவு தூங்கும் முன் விளக்கெண்ணெயை வில்போன்று புருவத்தில் தேயுங்கள். தொடர்ச்சியாய் இரண்டு மாதங்கள் செய்தால் உங்கள் புருவ அழகினை ரசிப்பதற்கு உத்திரவாதம் அளிக்கலாம்.

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் மெலிதான சருமத்தில் வேகமாக முடி வலர்ச்சியை தூண்டும் ஆற்றல் கொண்டுள்ளது. அதனை இளஞ்சூட்டில் புருவத்தில் மசாஜ் செய்யுங்கள்.

இன்னொரு முறை, நீர் கலக்காத தேங்காய் பால் எடுத்து அதனை வாணிலியில் காய்ச்சுங்கள். அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும். பின் பால் சுண்டி, எண்ணெய் பதத்திற்கு வரும். அதனை எடுத்து புருவத்தில் பூசி வர வேகமாய் புருவத்தில் முடி வளரும்.

பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் விட்டமின் ஈ அதிகம் உல்ளது. அது சருமத்திற்கு அடியில் இருக்கும் வேர்கால்களை நன்ராக தூண்டும். பாதாம் எண்ணெயை காலையில் மற்றும் மாலையில் புருவத்தில் பூசி வர, நாளடைவில் அழகான புருவம் கிடைக்கும்.

வெங்காயச் சாறு
வெங்காயச் சாறு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இந்த வெங்காய சாற்றினை ஒரு பஞ்சினால் நனைத்து புருவத்தில் தடவுங்கள். தினமும் இரவு இவ்வாறு செய்தால், புருவத்தில் ஏற்படும் சொட்டைகள் கூட மறைந்து சீராக முடி வளரும். அடர்த்தியாகவும் கானப்படும்.

பால்
பாலில் இயற்கையாகவே மாய்ஸ்ரைஸர் உள்ளது. அதிலுள்ள புரோட்டின் சத்துக்கள் புருவத்தில் வேர்க்கால்களை தூண்டுகின்றன. தினமும் பாலினை புருவத்தின் மேல் தடவி இதமாக மசாஜ் செய்யுங்கள். விரைவில் புருவத்தில் முடி வளர்வைதை கண்கூடாக பார்ப்பீர்கள். சோற்று கற்றாழை : சிலருக்கு தலையில் இருக்கும் பொடுகு உதிர்ந்து புருவத்திற்கு வரும். இதனால் அங்கேயும் தொற்று ஏற்பட்டு, புருவத்தில் முடி உதிர்ந்து, புருவமே இல்லாமல் வெறுமனே காணப்படும். இதற்கு நல்ல தீர்வு சோற்ற்க் கற்றாழை ஆகும். சோற்றுக் கற்றாழையின் சதை பகுதியை எடுத்து, புருவத்தில் பூசுங்கள். அங்கு ஏற்பட்டுள்ள தொற்று நீங்கி, முடி வளர ஆரம்பிக்கும்.

ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயை புருவத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். தினமும் இப்படி செய்தால் விரைவில் இதற்கு தீர்வு காணலாம்.

வெந்தயம்
வெந்தயத்தில் நிகோடினிக் அமிலம், லெசிதின் போன்ற விட்டமின்களும், புரொட்டினும் உள்ளன. அவை சருமத்திற்கு போஷாக்கு அளிக்கும். வெந்தயத்தை இரவில் ஊற வைத்து, மறு நாள் அரைத்து பேஸ்ட் ஆக்குங்கள். அதனை இரவில் புருவத்தில் பூசி வர வேண்டும். ஒரு மாதத்தில் புருவம் அடர்ந்து இருக்கும்.

எலுமிச்சை தோல் 
எலுமிச்சை சாற்றினை உபயோகப்படுத்தியதும், அதன் தோலினை வீசி எறியாதீர்கள். அது புருவ வளர்ச்சியை அதிகரிக்கச் செயும் சத்துக்களைக் கொண்டுள்ளது. எலுமிச்சைத் தோலினை தினமும் உங்கள் புருவத்தில் தடவி வாருங்கள். அருமையான ரிசல்ட் தரும்.

முட்டையின் மஞ்சள் கரு
பெரும்பாலும் முட்டையின் வெள்ளைக் கருவே அழகுக் குறிப்பிற்கு உபயோகப்படுத்தி இருப்பீர்கள். மஞ்சள் கருவும் நிறைய பயன்களைத் தரும். முட்டையின் மஞ்சள் கருவினை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனை தினமும் இரவில் புருவத்தின் மீது பூசுங்கள். நாளடைவில் புருவம் அடர்த்தியாக வளரும்.

திருமணத்திற்கு பின் தம்பதிகளின் அழகு சற்று அதிகரித்துக் காணப்படும். அது ஏன் தெரியுமா? அதற்கு காரணம் உடலுறவு தான். ஆம், உடலுறவில் ஈடுபடும் போது அலாதியான இன்பத்தை அடைவதோடு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் சரும அழகும் அதிகரிக்கும்.

மேலும் ஆய்வுகளிலும் அடிக்கடி உடலுறவு கொண்டால், ஒருவரின் அழகு கட்டாயம் அதிகரிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடலுறவில் ஈடுபடும் போது உடலினுள் ஏற்படும் குறிப்பிட்ட ஹார்மோன் மாற்றங்கள் ஓர் காரணம்.

இப்போது அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதால் கிடைக்கும் அழகு நன்மைகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து, இனிமேல் அழகு நிலையங்களுக்கு சென்று அழகை அதிகரிக்காமல், உங்கள் துணையுடன் படுக்கையில் புகுந்து விளையாடுங்கள்.

சரும வறட்சி குறையும்
அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, அதனால் சரும வறட்சி ஏற்படுவது குறையும். மேலும் சருமம் மென்மையும் அதிகரிக்கும்.

முகப்பரு குறையும்
உடலுறவில் ஈடுபடுவதால், ஹார்மோன் சுரப்புகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் குறைந்து, அதன் உற்பத்தி சீராக்கப்பட்டு, முகப்பரு வருவது குறையும்


இளமை தோற்றம்
அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டால், கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும செல்களின் இளமைத்தன்மை தக்க வைக்கப்படும். எப்படியெனில் உடலுறவில் ஈடுபடும் போது, இளமைக்கு காரணமான DHEA என்னும் ஹார்மோனின் உற்பத்தி தூண்டப்படும்.

பொலிவான முகம்
உடலுறவில் ஈடுபடும் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதோடு, வியர்வை அதிகம் வெளியேறுவதால் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை வெளியேறி, பொலிவு அதிகரித்து காணப்படும்.

ஆரோக்கியமான நகங்கள்

உடலுறவில் ஈடுபடும் நேரத்தில், நகங்களுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியதை மேம்படுத்தும் குறிப்பிட்ட ஹார்மோன்கள் வெளியிடப்படும். இதனால் அழகான மற்றும் ஆரோக்கியமான நகங்களைப் பெறலாம்.

எடை குறைவு
ஒரு மணிநேரம் உடலுறவில் ஈடுபட்டால் 300 கலோரிகளை எரிக்க முடியும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உங்களின் எடையைக் குறைத்து, சிக்கென்று காட்சியளிக்க, ஜிம் சென்று நேரத்தை வீணடிக்காமல், துணையுடன் படுக்கையில் நேரத்தை செலவிடுங்கள்.


ஆரோக்கியமான தலைமுடி
அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டால், தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, உடலின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். இதன் காரணமாக தலைமுடியும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க அடிக்கடி உடலுறவில் ஈடுபடுங்கள்.


தலைமுடி ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அத்தகைய தலைமுடியில் ஏராளமான பிரச்சனைகளை இன்றைய தலைமுறையினர் சந்திக்கின்றனர். அதில் ஒன்று தலைமுடி அதிகம் உதிர்ந்து, முடியின் அடர்த்தி குறைவாக காணப்படுவது. இதற்கு காரணம் ஹார்மோன்கள், மோசமான பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவுகள் போன்றவையுடன், சரியான பராமரிப்பு கொடுக்காமல் இருப்பதும் முக்கியமானவைகளாகும். தலைமுடி மெலிந்து இருந்தால், அது ஒருவரின் அழகை மோசமாக வெளிக்காட்டும்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் 2 அத்தியாவசிய அமிலங்களான லாரிக் மற்றும் கேப்ரிக் அமிலங்கள் உள்ளது. இவை பாதிக்கப்பட் தலைமுடியை சரிசெய்யவும், பலவீனமான தலைமுடியை வலிமையாக்கவும், முடியின் அடர்த்தியை மேம்படுத்தவும் உதவும். அதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி வாரம் 2 முறை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.


கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் அனைத்து வகையான தலைமுடி பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வளிக்கும். தலைமுடி மெலிவதற்கு போதிய ஈரப்பசை இல்லாமையும், ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதும் தான் காரணம். ஆனால் கற்றாழை ஜெல்லை வாரத்திற்கு 3 முறை தலையில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து அலசினால், தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளது. எனவே அந்த நெல்லிக்காய் பொடியை நீர் கலந்து வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு தடவி வந்தால், தலைமுடியின் அடர்த்தி அதிகிரிக்கும்.

உருளைக்கிழங்கு
ஜூஸ் உருளைக்கிழங்கை சாறு எடுத்து, அதனை வாரத்திற்கு 2-3 முறை தலையில் தடவி ஊற வைத்து அலசி வர, தலைமுடியின் அடர்த்தி அதிகரிப்பதோடு, முடி சம்பந்தமான பிரச்சனைகளும் அகலும்.

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயும் ஓர் அற்புதமான தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் பொருள். இதற்கு இதில் உள்ள ஃபேட்டி அமிலங்கள் தான் காரணம். இந்த அமிலங்கள் பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்வதோடு, நல்ல பாதுகாப்பையும் வழங்கி, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து, அடர்த்தியையும் கூட்டும்.

முட்டை
பழங்காலம் முதலாக தலைமுடி பிரச்சனைகளைப் போக்க முட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இதில் முடியின் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் அதிகம் உள்ளது. ஆகவே உங்களுக்கு அடர்த்தியான தலைமுடி வேண்டுமானால், நல்லெண்ணெயுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து, வாரம் ஒருமுறை தலையில் தடவி ஊற வைத்து அலசுங்கள்.

கறிவேப்பிலை
கறிவேப்பிலையை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், தலையில் இருக்கும் பொடுகு நீங்குவதோடு, முடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.


அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.
 
முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.
உலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம்
கிச்சிலி கிழங்கு பொடி - 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி - 100 கிராம்
கோரை கிழங்கு பொடி - 100 கிராம்
உலர்ந்த சந்தனத் தூள் - 150 கிராம்
இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.
இந்த மருத்துவ முறையை வராமித்ரர் அங்கரசளைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.
குளியல் பொடி
இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.
அருகில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
சோம்பு - 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்
வெட்டி வேர் - 200 கிராம்
அகில் கட்டை - 200 கிராம்
சந்தனத் தூள் - 300 கிராம்
கார்போக அரிசி - 200 கிராம்
தும்மராஷ்டம் - 200 கிராம்
விலாமிச்சை - 200 கிராம்
கோரைக்கிழங்கு - 200 கிராம்
கோஷ்டம் - 200 கிராம்
    
ஏலரிசி - 200 கிராம்
பாசிப்பயறு - 500 கிராம்
இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.
இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.
இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.
பெண்களின் வயிற்று சதை குறைய
நம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.
இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ உண்ணவேண்டிய அழகான உணவுகள்..!

* வைட்டமின் ஈ சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், விதைவகைகளான வேர்க்கடலை மொச்சைப் பயறு வகைகளை அழகிய உணவு வகைகளாக உங்கள் அன்றாட உணவில் அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மேனி முதுமைச் சுருக்கமின்றி இளமையுடன் திகழும்!

* உங்கள் உடம்பின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் ஹை டென்ஸிட்டி லைபோபுரோட்டீன் (ஹெச்.டி.எல்) சத்து நிறைந்த ஆலிவ் எண்ணெய் உங்கள் மேனியை உலர விடாமல் ஈரப்பசையுடன் மின்னிப்பிரகாசிக்கச் செய்யும்!

* ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து, வைட்டமின் பி 12, புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த மீன் மற்றும் மீன் எண்ணெய் அழகிய உணவு வகைகளில் முதன்மை உணவாகத் திகழ்கிறது! ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து உங்கள் தலையின் மேற்பகுதியை என்றென்றும் ஈரப்பசையுடன் வளமாகத்திகழச்செய்து தலைமுடி செழிப்பாக வளர உதவுகிறது.

* நாள் முழுக்க வேலை செய்தால் கண்கள் சோர்ந்து போகும்.அப்போது வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட்டினை உட்கொள்ளுங்கள். சோர்வு நீங்கி கண்கள் புத்தொளி பெறும். சுறுசுறுப்படைவீர்கள்!

* கந்தகம் மற்றும் சிலிகான் சத்து நிறைந்த பிராக்கோலி இலைகள் நக வளர்ச்சிக்கு மட்டுமன்றி மன அமைதிக்கும் உகந்தது. பிராக்கோலி மர இலைகள் கிடைக்காவிடில் அதற்கு இணையான காலிபிளவர் மற்றும் பீட்ரூட் இலைகள் நக வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன.

* வைட்டமின் டி சத்து நிறைந்த பால், கால்சியம் சத்து நிறைந்த பச்சை கீரை வகைகள், பாஸ்பரஸ் சத்து நிறைந்த பூசணி விதை போன்றவைகளும் அழகிய உணவுப் பட்டியலில் இடம் பெறுகிறது. அவை எலும்பு வளர்ச்சிக்குத் துணைபுரிந்து, ஆஸ்ட்டியோபீனியா என்ற எலும்புத்தளர்ச்சி மற்றும் வலுவின்மை என்கிற நோயிலிருந்து காப்பாற்றுகிறது. இந்த உணவு வகைகளை நம் அன்றாட உணவில் அளவோடு உட்கொண்டால் அழகாக வாழலாம்!

ஒவ்வொருவரும் மற்றவர்கள் முன்பு அழகாக காட்சியளிக்க வேண்டுமென்று நினைப்போம். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வோம். குறிப்பாக சற்று கருப்பாக இருப்பவர்கள், வெள்ளையாவதற்கு பல முயற்சிகளை எடுப்பார்கள். மேலும் வேறு வழிகள் ஏதேனும் உள்ளதா என்றும் தேடுவார்கள்.
நீங்களும் அப்படி வெள்ளையாக வழிகளைத் தேடுபவரா? அப்படியெனில் எளிதில் கிடைக்கும் கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள். கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகளும் விரைவில் நீங்கும்.
சரி, இப்போது வெள்ளையாவதற்கு கற்றாழையைக் கொண்டு எப்படியெல்லாம் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.

ஃபேஸ் பேக் #1 
சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமைகள் அகலும்.


 ஃபேஸ் பேக் #2 
ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவும் முன், சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முதுமைப் புள்ளிகள் போன்றவை மறைந்து, முகமும் பொலிவோடு காணப்படும்.


ஃபேஸ் பேக் #3 
இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு பொருந்தமானவை. அதற்கு கற்றாழை இலையை எடுத்து, அதன் கூர்மையான முனைகளை கத்தியால் நீக்கிவிட்டு, நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.


ஃபேஸ் பேக் #4 
உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால் கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, முகத்தின் பொலிவை அதிகரிக்கும்.


ஃபேஸ் பேக் #5 
இந்த ஃபேஸ் பேக் வறட்சியான சருமத்திற்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல்லுடன், காட்டேஜ் சீஸ், பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.


ஃபேஸ் பேக் #6 
இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை அதிகரிப்பதோடு, முகத்தை புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் வெளிக்காட்டும். அதற்கு கற்றாழை ஜெல்லுடன் மாம்பழ கூழ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.


ஃபேஸ் பேக் #7
 வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.


Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.