கள்ளக்காதல் விவகாரத்தில் கோவையை சேர்ந்த ஒரு பெண் ஆசிரியை, சென்னை அண்ணாநகரில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்தவர் நிவேதா(47). இவர் அங்கு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தன்னுடைய மகளுடன் வசித்து வந்தார். தற்போது அவரின் மகள் சென்னை மகேந்திரா சிட்டியில் பணிபுரிந்து வருகிறார்.
அந்நிலையில், கோவையில் தீயணைப்பு துறையில் பணிபுரியும் இளையராஜா(29) என்பவருக்கும் நிவேதாவிற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இளையராஜா ஏற்கனவே திருமணமானவர். இந்நிலையில், நிவேதாவிற்கு பேஸ்புக் மூலம், சென்னை கொளத்தூரை சேர்ந்த கணபதி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் கணபதியும் திருமணமானவர். ஒரு கட்டத்தில் கணபதியுடன் ஏற்பட்ட நட்பால், நிவேதா, இளையராஜவை மறக்கும் அளவுக்குசென்றுள்ளார். இது இளையராஜாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவருடனான் நட்பை கை விடுமாறு நிவேதாவை எச்சரித்தார். ஆனால், நிவேதா, கணபதியுடன் தொடர்ந்து பேஸ்புக்கில் உரையாடி வந்தார். எனவே, இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என முடிவெடுத்த இளையராஜா, நேற்று முன்தினம் நிவேதாவைக்கூட்டிக் கொண்டு காரில் சென்னை வந்தார்.
அண்ணாநகரில் இருந்து கணபதியை அழைத்தார். அவர் அங்கு வந்த பின் மூவரும் அங்கு சில நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அதன்பின், நிவேதாவுடனான நட்பை முறித்துக்கொள்வதாக கணபதி கூறினார். இருந்தாலும், நிவேதாவுடன் சில நிமிடங்கள் தனியாக பேசி விட்டு வருகிறேன் எனக் கூறி, நிவேதாவை அழைத்து சென்றார். அதன்பின் நிவேதாவை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
அதைக் கண்ட இளையராஜவிற்கு கோபம் தலைக்கேறியது. எனவே, தனது காரை எடுத்து அவர்களின் பின்னால் சென்று வேகமாக மோட்டார் சைக்கிளில் இடித்துள்ளார். இதில் கணபதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் நிவேதா பலத்த காயமைடந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். லேசான காயத்துடன் தப்பினார் கணபதி.
அங்கிருந்து இளையராஜா தப்பி சென்றுவிட்டார். அதன்பின் போலீசார் அவரை தேடிக் கண்டுபிடித்து, இன்று அதிகாலை கைது செய்தனர். இது தொடர்பாக நிவேதா, இளையராஜா, கணபதி ஆகியோரின் குடும்பத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இளையராஜா மற்றும் கணபதியிடம் போலீசார் விசாரணைநடத்தி வருகிறார்கள்.
Post a Comment