ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் தலான் நகரின் கோகன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண். இவர் தனது கணவருடன் ஜெய்ப்பூர் சென்று விட்டு சொந்த ஊருக்கு ரெயிலில் திரும்பிக் கொண்டு இருந்தார். அவுரையா என்ற இடத்தில் ரெயில் நள்ளிரவில் நின்றது. அங்கிருந்து பஸ் மூலம் கணவன்- மனைவி சொந்த ஊர் செல்ல வேண்டும்.
பஸ்சுக்கு காத்திருந்த போது லோடு வேனில் வந்த டிரைவர் அவர்களை சொந்த ஊரில் இறக்கி விடுவதாக ‘லிப்ட்’ கொடுத்தார். இதை நம்பி தம்பதி அந்த வேனில் ஏறிக் கொண்டனர்.
வழியில் நெடுஞ்சாலையில் சாராயக்கடை அருகே வந்தபோது மேலும் சிலர் அந்த வேனில் ஏறிக் கொண்டனர்.சில அடி தூரம் சென்றதும் வேனை டிரைவர் திடீர் என்றுஒதுக்குப்புறமாக நிறுத்தினார்.
அங்கு பெண்ணை டிரைவரும் வேனில் வந்த 7 பேரும் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதற்கு பெண்ணின் கணவர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் போராடினார்.உடனே அந்த 8 பேர் கும்பல் கணவரை கயிற்றால் கட்டிப்போட்டு விட்டு மனைவியை கற்பழித்தனர்.
அதன்பிறகு கணவன்- மனைவியிடம் இருந்த நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர். இருவரையும் வழியில் நடுரோட்டில் இறக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
பின்னர் இருவரும் தட்டுத் தடுமாறிச் சென்று அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் நடந்த விவரங்களை கூறி புகார் செய்தனர்.
பின்னர் இருவரும் தட்டுத் தடுமாறிச் சென்று அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் நடந்த விவரங்களை கூறி புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்பழிப்பு குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.