September 2017

அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சிக்கன், நம் உயிரையே கொல்லும் ஸ்லோ பாய்சன் உணவாக மாறி வருகிறது.

ஏனெனில் சிக்கனில் அதன் கருவுறுதல் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்கு ஆன்டி-பயாடிக்ஸை அதிகளவில் உட்செலுத்துகின்றனர்.

ட்ரக்ஸ் மூலமாக கோழியின் ஹார்மோன்களின் ஏற்படுத்தப்படும் மாற்றங்களினால், இன்றைய கோழிகளில் கொலஸ்ட்ரால் அளவு 250% அதிகமாக காணப்படுகிறது.

மனித உடல் ஆரோக்கியதிற்கு தீங்கு விளைவிக்கும் ஆர்சனிக் ரசாயனம், இன்றளவு உற்பத்தி செய்யப்படும் கோழிகளில் அதிகம் சேர்க்கின்றனர்.

இது கோழியின் ஆரோக்கியத்தை சீரழிப்பதோடு, அதை விரும்பி சாப்பிடுபவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது.

சிக்கனில் நெஞ்சு பகுதியை நாம் அனைவருமே விரும்பி சாப்பிடுவோம். ஆனால் அந்த நெஞ்சு பாகத்தில் தான் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் 97% பாக்டீரியாவின் தாக்கம் நிறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

மேஷம்
ஆளும் குணமும் ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகள் உங்கள் மீது பாசமாக இருப்பார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவார். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும்.

என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது, இடித்துக் கட்டுவது போன்ற பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம். வாகனச் செலவுகள் அதிகரிக்கும். சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. அரசாங்க அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவெடுங்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 4.4.2018 வரை புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்தாலும் பாசம் குறையாது. மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள்.

5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். ஷேர் லாபம் தரும். என்றாலும் முன்பின் தெரியாதவர்களை நம்பி உங்களின் ஆதார் எண்ணைத் தர வேண்டாம்.

11.12.2018 முதல் 13.2.2019 வரை குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் ராகுபகவான் பயணிப்பதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கு சாதகமாகும். பிதுர்வழிச் சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி எந்த முதலீடும் செய்ய வேண்டாம். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது. உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் பரிச்சயம் செய்து வைப்பவர்களையே வேலையில் சேர்த்துக்கொள்வது நல்லது. பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். கடையை மாற்ற வேண்டாம். இருக்கும் இடத்திலேயே தொடர்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமையால் மன இறுக்கம் உண்டாகும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள்மீது திரும்பும். அவர்களிடம் உஷாராக இருங்கள். நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்துக் கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களுடைய ராசிக்குப் பதினோராவது வீட்டில் அமர்ந்துகொண்டு ஓரளவு நல்லது செய்துவந்த கேது பகவான் இப்போது 10-ம் வீட்டில் வந்தமர்வதால் நட்பு வட்டம் விரிவடையும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைக்கும். வேற்று மொழிக்காரர்களால் ஆதாயமடைவீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முடிப்பதா என்ற ஒரு படபடப்பு இருக்கும்.

உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். வருங்காலம் குறித்த கவலைகள் வந்துசெல்லும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள்.

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அரசால் ஆதாயம் கிடைக்கும். பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். வெளிநாடு, வெளிமாநிலத்தில் மகனுக்கு வேலை கிடைக்கும்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் பிள்ளைகளால் அலைச்சல்கள் இருக்கும். அவர்களை அன்பால் அரவணைத்துப் போவது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்சினையைச் சுமுகமாகப் பேசி முடிப்பீர்கள்.

இந்த ராகு - கேதுப் பெயர்ச்சி உங்களை ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையைத் தந்தாலும், இறுதியில் எல்லாம் நன்மைக்கே என்பதை புரியவைக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத் தீபமேற்றி வணங்குங்கள். மாமரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

ரிஷபம் 
எப்போதும் லட்சியத்தை நோக்கிப் பயணிப்பவர்களே! 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும் கேதுவும் இணைந்து என்ன பலன்களைத் தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்து கொண்டு உங்களை நாலாபுறமும் பந்தாடியதுடன், அம்மாவுடன் வீண் வாக்குவாதங்களையும் உடல்நலக் குறைவையும் கொடுத்து வந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு 3-ம் வீட்டுக்கு வந்தமருவதால் எதிலும் வெற்றியுண்டாகும். தடைபட்ட சுபகாரியங்களை இனி சிறப்பாக நடத்துவீர்கள். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாயின் ஆரோக்கியம் சீராகும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துப் பெரிய முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்வி, வேலைக்காக வெளிநாடு அனுப்பிவைப்பீர்கள். வீட்டில் பழுதான மின்னணு, மின்சாரச் சாதனங்களை மாற்றுவீர்கள். நீங்கள் வெகுநாட்களாக மனதுக்குள்ளேயே கட்டிவைத்திருந்த கனவு வீடு நிஜமாகும் வாய்ப்பு அமையும். அதற்கான வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். பிரபலங்களின் நட்பு வட்டம் இனி விரியும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 4.4.2018 வரை உங்களின் தன பூர்வ புண்ணியாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் உங்களின் யோகாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். புதிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நவீனரக வாகனம் வாங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும்.

11.12.2018 முதல் 13.2.2019 முடிய உங்களின் அஷ்டம லாபாதிபதியான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் ராகு பகவான் பயணிப்பதால் மூத்த சகோதர வகையில் கருத்து மோதல்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையாட்கள் தங்களது தவறை உணருவார்கள். கல்வித் தகுதியில் சிறந்த அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரையில் உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்தில் அமர்ந்து எந்த வேலையையும் முழுமையாகச் செய்யவிடாமல் தடுத்த கேது, இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்கிறார். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பநிலை மாறும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களின் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள். கேது ஒன்பதாம் வீட்டுக்கு வருவதால் தந்தையாருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தந்தைவழிச் சொத்துகளால் அலைச்சல்களும் செலவுகளும் ஏற்படும். பத்திரங்களைக் கவனமாகக் கையாளுங்கள். வேலையின்றித் தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அலைச்சல் குறையும். சகோதரர் சாதகமாக இருப்பார். சொத்து சேரும். கமிஷன் வகைகளால் ஆதாயமடைவீர்கள். மனைவி பக்கபலமாக இருப்பார். அவருக்கு வேலை கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள்.

விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். என்றாலும் மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புதுப் பதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். சில நேரங்களில் சளித் தொந்தரவு, கழுத்து வலி வந்து நீங்கும்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சிக்கனமாக இருப்பது நல்லது. அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

ராகு, கேது பெயர்ச்சி கஷ்டநஷ்டங்களிலிருந்து உங்களைக் கரையேற்றுவதுடன் வசதியையும் நிம்மதியையும் அதிகரிக்க வைக்கும்.

பரிகாரம்: பிரதோஷ நாட்களில் இளநீர் தந்து சிவபெருமனையும், நந்தீஸ்வரரையும் வணங்குங்கள். மாதுளை மரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். எதிலும் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்
மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்களே! 27.07.2017 முதல் 13.02.2019 வரை ராகுவும் கேதுவும் அடுத்து வரும் ஒன்றரை வருடங்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்துகொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும் மன தைரியத்தையும் பெரிய மனிதர்களின் நட்பையும் கொடுத்துவந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம் ஒருபக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அதற்குத் தகுந்தாற்போல் கொஞ்சம் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். தடைப்பட்டுப் பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் இப்போது கைகூடும்.


குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை பாதிக்கப்படாது. உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு விலகும். பாசம் அதிகரிக்கும். சகோதரியின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். உங்களிடம் கடன் வாங்கிக் கொடுக்காமல் இருந்தவர்கள், பணத்தைத் திருப்பித் தருவார்கள். பால்ய நண்பர்களின் உதவி கிடைக்கும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகு பகவான் செல்வதால் அழகு, இளமை கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சொந்தபந்தங்களால் ஆதாயம் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள்.

5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் சனி பகவானின் பூசம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் திருமணம், கிரகப்பிரவேசம் என வீடு களை கட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடனாகக் கொடுத்திருந்த பணம் கைக்கு வரும். வேற்றுமொழியினர், மதத்தினர் உதவுவார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைவழியில் சொத்து சேரும்.

குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகு பகவான் பயணிப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவியாலும் மனைவிவழி உறவினராலும் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். புதுச் சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்த முயல்வீர்கள். ஆனால், புதிதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து அறிமுகமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து தந்தைக்கு உடல்நலக் குறைவையும் பணப் பற்றாக்குறையையும் தந்த கேது, இப்போது உங்களின் ராசிக்கு எட்டில் வந்தமர்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மன நிம்மதி உண்டு. வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மனைவியிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. முன்கோபம் அதிகமாகும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் எட்டில் நிற்கும் கேது ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவார். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிக வேலைச்சுமையால், நேரந்தவறி வீட்டுக்குச் செல்ல நேரிடுவதால், குடும்பத்தில் சிறிய கருத்து மோதல்கள் வரும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும்.

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் பணப்புழக்கம் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு கட்டக் கடன் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். இளைய சகோதரர்கள் மதிப்பார்கள். வேலை கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி பொதுநலப் போக்கிலிருந்த உங்களைத் தன்னலத்துக்கு மாற்றுவதுடன் சேமிக்க வைக்கவும் செய்வார்.

பரிகாரம்: ஏகாதசி நாட்களில் துளசி மாலை அணிவித்து பெருமாளை வணங்குங்கள். எலுமிச்சை மரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கடகம்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்பவர்களே! உங்களுக்கு இராகுவும், கேதுவும் 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டத்தில் என்ன தரப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் உட்கார்ந்து கொண்டு காரியத்தடைகளையும், மன உளைச்சலையும் கொடுத்து வந்த ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் தட்டுதடுமாறிக் கொண்டிருந்த உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். சிலர் உங்களை அவமதித்து பேசினாலும் அதற்குத் தக்கபதிலடி தருவீர்கள்.

குடும்பத்தில் சின்ன சின்ன ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அவர்களின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இருந்தாலும் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். பணவரவு அதிகரிக்கும். என்றாலும் செலவினங்கள் அதற்குத் தகுந்தாற் போல் இருக்கும். ராகு ராசிக்குள்ளேயே நுழைவதால் ஆராய்கத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வெளி உணவுகளை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். இரவுநேரத்தில் வாகனத்தை கவனமாக இயக்கப்பாருங்கள். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான் செல்வதால் கோவில் திருவிழாவில் முதல் மரியாதைக் கிடைக்கும். சுற்றுலா சென்று வருவீர்கள். இளைய சகோதரங்கள் உதவுவார்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். சொந்த&பந்தங்கள் தேடி வருவார்கள்.

5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் மனைவி வழி உறவினர்களை அனுசரித்துப் போவது நல்லது. கொழுப்புச் சத்துள்ள உணவுகள் மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கப்பாருங்கள். இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வரும்.

குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4&ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகுபகவான் பயணிப்பதால் புது வாகனம் வாங்குவீர்கள். மகனுக்கு அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிதுர்வழி சொத்துகளை பெறுவதில் இருந்த சிக்கல்கள் விலகும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தந்தையாரின் உடல் நலம் சீராகும்.

வியாபாரத்தில் போட்டிகள் இருந்துக் கொண்டேயிருக்கும். முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அனுபவமில்லாத தொழிலில் முதலீடு போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும். மூத்த அதிகாரிகளுடன் சின்ன சின்ன மோதல்கள் வரும். நியாயத்தை எடுத்துச் சொல்லப் போய் உங்கள் பெயர் கெட வாய்ப்பிருக்கிறது. சக ஊழியர்களில் இடமாற்றங்களை சந்திக்க வேண்டி வரும். சிலர் அடிப்படை உரிமை வேண்டி நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளையும், மன உளைச்சல்களையும் கொடுத்து வந்த கேது இப்பொழுது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். உங்களின் தோற்றப்பொலிவை கூட்டுவதுடன், அறிவாற்றலையும் அதிகப்படுத்துவார். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலனுக்காக சிலவற்றை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். 7&ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன்&மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் சந்தேகப்படுவதை தவிர்க்கவும். சொத்துப் பிரச்சனை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2&ம் பாதம் மகர ராசியில் கேதுபகவான் செல்வதால் மழலை பாக்யம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். புது பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு பெருகும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கு சாதகமாகும்.

30.11.2017 முதல் 06.08.2018 வரை சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். சொந்த&பந்தங்களால் ஆதாயமடைவீர்கள்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4&ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் அமைதி நிலவும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வேற்றுமொழிக்காரர்களால் பயனடைவீர்கள். ஷேர் லாபம் தரும். அவசர முடிவுகள் வேண்டாமே. மற்றவர்களுக்காக சாட்சி கையொப்பமிட வேண்டாம்.

இந்த இராகு கேது மாற்றம் உங்களை சில நேரங்களில் சிரமப்படுத்தினாலும், விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்: பௌர்ணமி திதி நாட்களில் புற்றுடன் அருள்பாலிக்கும் அம்மன் கோவிலில் மஞ்சள் தூள் தந்து வணங்குங்கள். வாழைமரக் கன்று நட்டு பராமரியுங்கள். ஆரோக்யம், அழகு கூடும்.

சிம்மம்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாதவர்களே! 27.7.2017 முதல் 13.2.2019 வரை உங்களுக்கு ராகு-கேது பெயர்ச்சி என்ன செய்யும் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே பிரச்சினைகளில் சிக்கவைத்ததுடன், தலை வலி, முதுகுவலி, கால் வலி எனப் புலம்பித் தவிக்கவைத்த ராகு பகவான், இப்போது ராசிக்குப் பனிரெண்டாம் வீட்டுக்கு வந்தமர்வதால் நோய் நீங்கும். இனி எப்போதுமே முகத்தில் சந்தோஷம் பொங்கும். விலகிச் சென்றவர்கள் வலியவந்து பேசுவார்கள். இழுபறியான பணிகள் முழுமையடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், காதுகுத்து என நல்லதெல்லாம் நடந்துகொண்டேயிருக்கும். பார்த்து வெகுகாலமான தூரத்து உறவினர்கள்கூட, இனி படையெடுத்து உங்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த சிக்கல்கள் விலகும். தந்தையுடனிருந்த மனக்கசப்பு நீங்கும். தாயின் உடல்நிலை சீராகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 4.4.2018 வரை புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். புது வேலை அமையும். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.

5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் மனைவியிடம் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. மனைவிவழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகு பகவான் பயணிப்பதால் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தை அதிகம் செலவு செய்து சீர்திருத்துவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். வீடு கட்ட வங்கியிலிருந்து கடன் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளைச் செய்வீர்கள். பங்குதாரர்கள் உங்களுடைய கருத்துகளை முதலில் மறுத்தாலும், பிறகு ஏற்றுக்கொள்வார்கள். உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியைக் கவர்வீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்துகொண்டு உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே சண்டையையும் உடல்நலக்குறைவையும் அடுக்கடுக்காகத் தந்தாரே! காரியத்தடை, மன உளைச்சல், டென்ஷன் எனத் தொல்லை தந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். ஷேர் மூலம் பணம் வரும். சொத்து வாங்குவீர்கள். பழைய கடனையும் பைசல் செய்யும் அளவுக்கு வருமானம் கூடும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வார்கள்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 29.11.2017 வரை அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். புது வேலைக்கு முயல்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள், வி.ஐ.பி.களால் ஆதாயமடைவீர்கள். ரத்த சொந்தங்கள் தேடி வருவார்கள். பிதுர்வழிச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

30.11.2017 முதல் 06.08.2018 வரை சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணங்களும் உண்டு. உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், செலவுகள் கட்டுக்கடங்காமல் போவதால் சேமிப்புகள் கரையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆனால், ஆரோக்கியம், இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்படக்கூடும்.

இந்த ராகு-கேது மாற்றம் திடீர் யோகத்தையும் எதிர்பாராத வெற்றிகளையும் தருவதுடன், சமூகத்தில் முதல் மரியாதையையும் பெற்றுத் தரும்.

பரிகாரம்: அமாவாசை திதி நாட்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை நெய் தீபமேற்றி வணங்குங்கள். பலாமரக் கன்று நட்டுப் பராமரியுங்கள். நினைத்தது நிறைவேறும்.

கன்னி
காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்களே! 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டத்தில் ராகு-கேது மாறுவதால் என்ன செய்ய போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்குப் பன்னிரெண்டில் அமர்ந்துகொண்டு அடுக்கடுக்காகப் பல பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவதால் தன்னம்பிக்கையையும் பணவரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். கலகம், கலாட்டாவாக இருந்த குடும்பத்தில் இனி அமைதி திரும்பும்.

உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தைப்பேறு கிட்டும். அதிக வட்டிக் கடனை அடைத்து முடிப்பீர்கள். பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள்; உயர்கல்வியில் வெற்றிபெறுவார்கள். மகனின் அடிமனதில் இருக்கும் தனித் திறமைகளைக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். 11-ல் ராகு இருப்பதால் அரைகுறையாக நின்றுபோன பல வேலைகள் உடனே முடியும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 4.4.2018 வரை புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் பிரச்சினைகள் எப்படி இருந்தாலும் அதைச் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த முயல்வீர்கள்.

5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். மகன் கூடாப்பழக்கங்களிலிருந்து மீள்வார். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணத்தை நடத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளைக் குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பழைய கடன் பிரச்சினை ஒன்று தீரும்.

11.12.2018 முதல் 13.2.2019 முடிய குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் ராகு பகவான் பயணிப்பதால் கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். ஆனாலும் பணவரவுக்குக் குறைவிருக்காது. புதிதாக ஆடை, ஆபரணங்கள் சேரும்.

வியாபாரம் செழிக்கும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். வெளிமாநிலம், வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியால் சிலர் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய தொலைநோக்குச் சிந்தனைக்குப் பாராட்டுகள் கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆனால், அவர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சேமித்து வைத்த காசில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவீர்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால், உள்மனதில் ஒருவிதத் தயக்கமும் தடுமாற்றமும் சந்தேகமும் வந்து நீங்கும்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் சொத்து வாங்குவது, விற்பதில் கவனம் தேவை. குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் பணம், நகைகளையெல்லாம் வங்கி லாக்கரில் வைத்துவிட்டுச் செல்வது நல்லது. சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

30.11.2017 முதல் 06.08.2018 வரை சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். புதுப் பதவிகள், பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் பழைய வீட்டை இடித்துக் கட்டுவதற்குச் சில புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அரசு காரியங்கள் சற்று தாமதமாகி முடியும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி பழைய பிரச்சினைகளிலிருந்து விடுபட வைப்பதுடன் புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவதாக அமையும்.

பரிகாரம்: சதுர்த்தி திதி நாட்களில் ஸ்ரீவிநாயகப் பெருமானை அருகம்புல் தந்து வணங்குங்கள். பவழ மல்லி நட்டுப் பராமரியுங்கள். செல்வம் சேரும்.

என் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…

1. மதியுங்கள்
வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

2. கனவுகளை பின்பற்றட்டும், உங்களை அல்ல
இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்
மனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்
`ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிபடுத்தும் உணர்வுபூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

5. ஆலோசனை கேளுங்கள்
நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலை பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்கு பிடிக்கும். அப்படிபட்ட கணவர் தான் அவர்களை பொறுத்தவரை `முழுமையானவர்’.

7. பேசுங்கள்
பேசுவது பெண்களுக்கு பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களை பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றை பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் `பங்கு கொள்ளுங்கள்’
வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிபோய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்
அழகு, பெண்கள் மட்டும் சம்பநதபட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்கு போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்பது நியாயம்தானே?

10. அவ்வப்போது `வழக்கம்போல்’ இருங்கள்
எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வபோது, `நீ தான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று `பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை.

மனைவி அமைவதெல்லாம் மட்டுமல்ல, காதலி அமைவதும் அவரவர் செய்த வரம் தான். பெண்களின் மனதை மட்டுமல்ல, அவர்கள் எப்போது, எதை, எப்படி எடுத்துக் கொள்வார்கள் என அறிவதும் கஷ்டம் தான். ஒரு நேரத்தில் ஜோவியலாக எடுத்துக் கொண்ட அதே விஷயத்தை, மறு சமயத்தில் கோபமாக எடுத்துக் கொள்வார்கள்.

இதற்கு அந்தந்த சூழல் தான் காரணம் என்றாலும், அவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள் மிகுந்த வீரியத்தை உண்டாக்கும். எல்லாருக்கும் ஒரே மாதிரி துணை அமையாது.

அப்படி அமைந்தாலும் அது வாழ்க்கையை சுவாரஸ்யமாக நகர்த்தாது. காதலிகளில் பத்து வகை இருக்கிறார்களாம்... அதில் உங்க காதலி எந்த வகை என நீங்களே படிச்சுப்பாருங்க!

#டிராமா குயின்!
இப்படி ஒரு பெண்ணை நாம் காணாதிருக்கவே முடியாது. எந்த ஒரு சின்ன விஷயத்தையும் கூட ஊத்தி பெரிதாக்கி, அமர்க்களப்படுத்தி விடுவார்கள். கிட்டத்தட்ட பிக் பாஸ் ஜூலி போல.

#போர்வாள்
எந்த விஷயமாக இருந்தாலும் பொறுமை இருக்காது, எதற்கு எடுத்தாலும் கத்திக் கூச்சலிட்டு தான் பேசுவார்கள். தெரியாமல் ஒரு தவறு நடந்தால் கூட போரிடத் துவங்கிவிடுவார்கள்.

#தொணதொணவென்று!
நாம் ஒரு வார்த்தை பேசினால், அதை வைத்து பூக்கட்டி, சரமாக்கி, மாலைத்தொடுத்துவிடும் வகை இவர்கள். இவர்களின் பேச்சை நிறுத்துவது மிகவும் கடினம்.

#செல்ஃபீப்புள்ள
எங்கே சென்றாலும், அங்கே ஊரே ரெண்டுப்பட்டு கிடந்தாலும், மொபைலை எடுத்து செல்ஃபீ எடுக்க துவங்கும் வகை இவர்கள். அதும், நீங்கள் அழகாக இருந்தால் மட்டும் போதாது, அவர்கள் அழகாக தெரியும் வரை செல்ஃபீ வெடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

#டமால், டுமீல்!
சண்டை போட எப்படா வாய்ப்பு கிடைக்கும் என வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் காதலிகள். இவர்களிடம் இருந்து தப்பிப்பதே பெரிய போராட்டமாக இருக்கும். கனவில் கூட வந்து பயமுறுத்துவார்கள்.

#உயிரே, உயிரே!
நீங்கள் எவ்வளவு கஷ்டமான சூழலில் இருந்தாலும், அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், அவர்களுக்கு ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும், உங்களது முக்கியமான வேலையை விட்டுவிட்டு அவர்களுடன் செல்ல வேண்டும். அட்டைப்பூச்சி போல உயிரை குடிப்பவர்கள்.

#புத்தகப்புழு
காதலிக்க போறமா, இல்ல டியூஷன் கிளாசுக்கு போறமா என்ற ஒரு வித்தியாச ஃபீலிங் இருக்கும். எப்போது பார்த்தாலும் எதாவது பாடம் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அல்லது புத்தகம் படித்துக் கொண்டே இருப்பார்கள். டின்னர், டேட்டிங், சினிமா, பார்க் எங்கு சென்றாலும் இவருடன் ஒரு புத்தகம் இருக்கும்.

#செய்தி புறா!
நேரில் பார்க்கும் போது, வெளிய போகும் ஒரு வார்த்தை பேச மாட்டார்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லாம் இப்படி ஒரு லவ்வர் கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், நமக்கு தான் தெரியும், வீட்டுக்கு சென்றவுடன், குறுஞ்செய்தியில் அவள் எப்படி வறுத்தெடுப்பாள் என.

#டாம்பாய்
உங்கள் சட்டை பையில் இருந்து, மணிபர்ஸ் வரை, உங்கள் ஃபேஸ்புக் ஸ்டேடஸ் முதல் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வரை அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும் டாம் பாய். இவர்களிடம் இருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. அவர்கள் உங்களை வாட்ச் செய்துக் கொண்டே இருப்பார்கள்.

#பார்ட்டி கேர்ள்!
அவங்க மப்பு ஆகுறத பார்த்தாலே உங்களுக்கு பப்பு ஏறாது. "குடி"யும் குடித்தனமாக வாழும் மாடர்ன் காதலி. காதலின் ஆரம்பத்தில் நன்கு போதை ஏறும், போக போக அந்த சரக்கு போல கசக்க ஆரம்பித்துவிடும்.

அனைத்து பெண்களுக்குமே தங்களது கணவனின் அன்பை முழுமையாக பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த அன்பை முழுமையாக பெறுவது எப்படி என்று தான் பெண்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கும். இந்த பகுதியில் கணவனின் அன்பை முழுமையாக பெறுவது எப்படி என்பது பற்றி காணலாம்.

கணவன், மனைவி இருவரும் பிஸியான வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் ஐ லவ் யூ சொல்லிக்கொள்வதில்லை. தினமும் உங்களது கணவரிடம் ஐ லவ் யு சொல்லுங்கள்…! அவருக்கு இது தன்னம்பிக்கையையும், உங்கள் மீதான காதலையும் அதிகரிக்கும்.

தினமும் உங்களது கணவர் அலுவலகத்திற்கு செல்லும் போது, ஒரு ஆசை முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். இது அவரது நாள் உற்சாகமாக அமையவும், அலுவலகத்தில் கூட உங்களை பற்றியே நினைத்துக்கொண்டிருக்கவும் உதவியாக இருக்கும்.

உங்களது கணவர் எடுக்கும் முடிவுகளின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர் ஏதாவது கூறினால் சரியாக தான் இருக்கும் என்று நம்புங்கள். ஒருவேளை அது தவறாக இருந்தால், அன்புடன் மென்மையாக எடுத்துக்கூறுங்கள்.

கணவரிடம் எங்க அம்மா வீட்டில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா என்று பெருமையாக பேசாதீர்கள். பெறுமை பேசியே ஆக வேண்டும் என்றால், உங்கள் அம்மாவின் வீட்டில், என் கணவர் என்னை எப்படி பார்த்துக்கொள்கிறார் என்று தெரியுமா…? என்று பெருமை பேசுங்கள். இதுவரை நன்றாக பார்த்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட, இதை கேட்டதும் உங்களை ராணி மாதிரி வைத்து பார்த்துக்கொள்வார்.

உங்கள் கணவரிடம் குழந்தை தனமாக பேசுங்கள்.. விளையாடுங்கள்.. நீங்கள் இவ்வாறு செய்தால் அவர் அத்தனை பிரச்சனைகளையும் மறந்து, குஷியாகிவிடுவார். அவரது மன இறுக்கம் குறையும்.

உங்களது மாமியார், நாத்தனார் போன்றவர்களை பற்றி உங்களது கணவரிடம் குறை கூறுவதை முடிந்த வரை தவிர்க்கவும். அப்படியே அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்றாலும், மென்மையாக கூறி புரிய வையுங்கள். சட்டென குறை கூறிவிட்டால், உங்களது கணவருக்கு உங்கள் மீது உள்ள மதிப்பு குறையும். மென்மையாக கூறினால், மாமியார், நாத்தனார் உங்களுடன் சண்டை போட்டால் கூட உங்கள் கணவர் உங்கள் பக்கம் இருந்து பேசுவார்.

சண்டை இல்லாத குடும்பமே இல்லை.. எனவே உங்களுடன் கணவர் சண்டையிட்டுவிட்டால், அதையே மனதில் வைத்துக்கொண்டு இருக்க வேண்டாம். சிறிது நேரத்தில் அதை மறந்துவிட்டு வழக்கம் போல இருங்கள். கட்டிப்பிடி வைத்தியம்! கட்டிப்பிடி வைத்தியத்திற்கு அதிக பலன் உண்டு. எனவே உங்களது கணவரை அடிக்கடி ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள். இது உங்களது உறவுக்குள் நெருக்கத்தை உண்டாக்கும்.

ஆண்டுக்கு ஒரு முறை குருப் பெயர்ச்சி இடம் பெறும். அதன் படி நேற்றைய தினம் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு குரு பகவான் இடம் பெர்ந்துள்ளார்.

அதன் படி 12 ராசிகளுக்குமான ராசி பலன்கள் குறித்து விரிவாக கணித்து வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசிக்கும் உண்டாக பலாபலன்கள் குறித்து அறிந்து கொள்ளாம்.

மேஷம்

தைரியம், வீரம், வீடு, மனை, நிலம் மற்றும் உடன்பிறப்புகளுக்கு பலன்தரும் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசியினருக்கு பாக்ய, விரய பாவாதிபதியான குரு இதுவரை ருண ரோக சத்ரு பாவமான 6 ஆம் இடத்தில் சஞ்சரித்து ஆரோக்கியக் குறைவு, பகைவர்களால் தொல்லை, தேவையற்ற கடன்களால் பிரச்சனைகள் என அல்லல் தந்தவர், களத்திர பாவமாகிய 7 ஆம் இடத்திற்கு மாறுகிறார்.

குருவால் சிறப்பு பலன்கள் ஏற்படும். பார்வை பலத்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். மனைவியின் உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கைத் துணைவர் மகிழ்ச்சியடையும் படியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய தொழில் தொடர்புகள் நல்ல வருமானத்தைத் தரும். சொகுசு மிகுந்த வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அரசாங்க வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும்.

புதிதாக வீடு, மனை, நிலம் ஆகியவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். மாணவ மாணவிகளின் கல்வி நிலை மேன்மையடையும். தொழில் வியாபாரம் சம்பந்தமான வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். தொழிலில் தன வரவு அதிகரிக்கும்.

கூட்டுத் தொழில் சிறப்படையும். தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். உங்கள் தொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். உறவினர்களிடையே நல்லுறவு நிலவும். கணவன் மனைவி அன்னியோன்னியம் சிறப்படையும். சமுதாயத்தில் புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயரும். குழந்தைகளினால் சந்தோஷம் அதிகரிக்கும்.

குரு மேஷ ராசிக்கு பதினொன்றாம் இடத்தைப் பார்ப்பதால் மனைவி மக்களுடன் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் மூத்த சகோதரர்களின் பொருளாதார நிலை சிறப்படையும்.

உங்களின் தொழில் முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். குரு ஏழாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் பொதுவாக சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு உண்டாகும். குரு மூன்றாம் இடத்தை பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். இளைய சகோதரருக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் உண்டாகும்.

ரிஷபம்

களத்திரத்திற்கு காரகரான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட மென்மையான குணமும், பிறர் மனதை கவர்ந்து நீங்கள் நினைத்த காரியங்களை நினைத்தபடி முடித்துக் கொள்பவர்கள் ரிஷபம் ராசியினர்.

இந்த இராசிக்கு அஷ்டம மற்றும் இலாப பாவாதிபதியான குரு இது நாள் வரை தங்களின் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் இருந்து ருண, ரோக, சத்ரு பாவத்தில் சஞ்சரிக்கப் போகிறார்.

இந்த காலத்தில் ரிஷப இராசிக்கு குரு ஆரோக்கியக் குறைவினை ஏற்படுத்தலாம். எதிரிகளின் தொல்லைகளால் கஷ்டப்படும் சூழ்நிலை உண்டாகும். தேவையற்ற கடன்கள் வாங்கி, அதன் காரணமாக கடன் கொடுத்தவர்களினால் தொல்லைகள் ஏற்படலாம்.


சமூகத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் இழக்க நேரிடலாம். எதிரிகளின் பலம் கூடும். அதனால் உங்கள் மனம் பாதிப்படையும் குழந்தைகளால் வருமானம் அதிகரிக்கும் மனைவியால் விரயங்கள் ஏற்படும்.

குரு தனது 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 ஆம் பாவமான கர்மஸ்தானத்தைப் பார்வையிடுவதால் புதிய தொழில் துவங்கும் வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் தொழிலில் விரிவாக்கங்கள் செய்யும் சூழ்நிலை உண்டாகலாம். மனைவியின் செயல்படுகள் சிறந்து, செயல்கள் எல்லாவற்றிலும் கை கொடுப்பார்.

தந்தை வகையில் தனவரவு உண்டாகும். குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு விரய பாவத்தை பார்வை இடுவதால் வீட்டில் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களுக்காக செலவுகள் செய்வீர்கள் வெளிநாட்டு வாய்ப்புகள் ஏற்படும்.

மூத்த சகோதரர்களால் பண வரவு உண்டாகும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் இராசிக்கு தன பாவத்தைப் பார்வையிடுவதால் ஏதாவது ஒரு வழியில் பணவரவுகள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

கல்விக்கும் புத்திசாலித்தனத்திற்க்கும் வியாபாரா சிந்தனைகளுக்கும் காரகரான புதனை அதிபதியாகக் கொண்டவர்கள் மிதுனம் இராசியினர்.

தங்கள் இராசிக்கு களத்திர மற்றும் ஜீவன பாவத்துக்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் இருந்து புத்திர, பூர்வ புண்ணிய பாவமான துலாம் ராசிக்கு மாறுகிறார்.

தேவகுரு இதுநாள் வரை சுக பாவம் அமர்ந்து நிம்மதி, சுகத்தைக் கொடுத்தாலும் சில கஷ்டங்கள் இருந்த வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார். தெய்வீக அருளும், திருமகள் கடைக்கண் பார்வையும் ஏற்பட்டு நல்ல காலம் பிறக்கும். இன்னல்களை நீக்கி இன்பம் தருவார்.

நீங்கள் எதிர்பார்த்த செல்வம் சேரும். முகத்தில் அழகும் பொலிவும் கூடும், புத்திதெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஆண் குழந்தை கிடைக்கலாம். வீட்டில் மங்கள காரியங்கள் சிறப்புற நடக்கும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்கும் அதன் மூலம் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதைகளும் அதிகரிக்கும்.

தந்தையின் மூலமாகப் பொருளாதார நிலையும் உயரும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். கடவுள் அருள் உண்டாகும். குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு லாப பாவத்தைப் பார்வை செய்வதால் தொழிலில் தங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான இலாபங்கள் கிடைக்கும்.

அரசு மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மூத்த சகோதரரின் பொருளாதாரம் சிறப்படையும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ஜென்ம ராசியை பார்வையிடுவதின் மூலம் சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்

நல்ல மன நிலைக்கும் தாய்க்கும் உரிய சந்திரனை அதிபதியாகக் கொண்ட நற்குணங்களும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் கடகம் ராசியினர்.

இந்த ருண, ரோக, சத்ரு பாவதிபதி மற்றும் பாக்கியாதிபதியான குரு தைரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானமான துலாத்திற்கு மாறுகிறார். குரு ராசிக்கு நான்கில் வந்த போது தான் தர்ம புத்திரர் உறவுகளை வைத்து சூதாடி சொத்துக்களை இழந்து வனவாசம் சென்றார்.

அதுபோல் இன்றைய நிலையில் வீண் சூதாட்டம், போட்டி பந்தயங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு இழப்புக்களை சந்திக்க நேரலாம். எனவே நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம் இது.

பண இழப்பு உண்டாகலாம், குடும்பத்தில் நிம்மதி குறையும் சந்தோஷம் குறையும், குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு அவமானங்கள் ஏற்பட்டு, மதிப்பு, மரியாதைகள் குறையும்.

தொழில் உத்தியோகத்தில் சிக்கல்களும், வருமானக் குறைவும் ஏற்படும். குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். இதன் பலனாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வழக்கு, வியாஜ்யங்கள் வெற்றி அடையும்.

மன கஷ்டங்கள் மன அழுத்தங்கள் மறையும். பயம் விலகி மன பலம் உண்டாகும். இது வரை இருந்து வந்த. தடைகள் விலகி மண மேடையில் உலாவரும் பாக்கியம் ஏற்படும்.

குரு தனது 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார் இதன் காரணமாக முடங்கிய தொழில்கள் மேன்மை நிலையை அடையும். தொழில் உத்தியோகம், வியாபாரம் ஆகியவை புத்துயிர் பெறும்.

பதவி உயர்வு கிடைக்கும் வேலை தேடி அலைபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12 ஆம் இடமான விரயபாவத்தைப் பார்வையிடுவதால். சுகமான நித்திரைக்கு எவ்விதக் குறையும் இருக்காது. வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

அப்பாவுக்கும் ஆத்மாவுக்கும் தொழில் உத்தியோகத்திற்கும் காரகரான சூரியனை அதிபதியாகக் கொண்ட தனக்கென ஒரு தனி வழி அமைத்துக் கொள்பவர்களும் ,தன்னம்பிக்கை மிக்கவர்கள் சிம்மம் ராசியினர்.

இந்த இராசிக்கு புத்திர பாவாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதியுமான குரு தன பாவத்திலிருந்து தைரிய பாவமான துலாம் ராசிக்கு மாறுகிறார் இது நாள் வரை தனபாவத்தில் இருந்து வந்த குரு பகவான் பொதுவாக நற்பலன்களை அள்ளி வழங்கினார்.

இனி எதையும் முன்பு இருந்த ஒரு துணிவோடு செய்ய முடியாத நிலை உருவாகும். பிறருக்கு நல்லதே செய்தாலும் தீமையாகவே முடியும். எனவே, எதையும் ஆராய்ந்து அறிந்து செய்வதே நல்லது உடன் பிறப்புகளால் குடும்ப ஒற்றுமை குறையும்.

நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள். எச்சரிக்கையாகவே இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு கரையும். அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வில் தடை, தாமதங்கள் உண்டாகும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவது சிக்கலைத் தரும்.

எனவே, எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறையும் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும்.

குரு தனது 5 பார்வையாக சிம்மம் ராசிக்கு களத்திர பாவத்தை பார்வையிடுவதால், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். பிரிந்து போன உறவுகள் ஒன்று கூடுவர்.

புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். தாய் மாமனின் பொருளாதார நிலை உயரும். அரசாங்க அதிகாரிகளுக்குப் புதிய இடமாற்றங்கள் ஏற்படலாம். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் குடும்பத்துடன் புனித யாத்திரைகள் செல்லும் நிலை உண்டாகும்.அப்பாவின் ஆரோக்கியம் சிறப்படையும். கடவுள் அருள் அதிகரிக்கும். குரு 9

ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு இலாப பாவத்தைப் பார்ப்பதால் இலாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

தொழிலில் அதிக ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் மங்களகாரியங்கள் நிறைவேறும். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு அந்த பாக்கியம் ஏற்படும்.

கன்னி

புத்தி காரகரான புதனை அதிபதியாகக் கொண்ட நற்குணமும் இரக்க குணமும் கொண்டவர்கள் கன்னிராசியினர்.

இந்த இராசிக்கு சுகம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியுமான குரு ஜென்ம ராசியிலிருந்து தன, குடும்ப ஸ்தானமான துலாம் இராசிக்கு மாறுகிறார். தன பாவத்தில் அமர்வதால் செல்வம் சேரும் சிறப்பான காலம் ஆரம்பமாகிவிட்டது.

வாக்கு பலிதமாகும். வாக்கின் மூலம் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் விரயங்கள் ஏற்படும்.

தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து ஐஸ்வரியமும் உண்டாகும். தொழில் உத்தியோகம் மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் சீரான முன்னேற்றம் இருக்கும்.

இதுநாள் வரை இருந்து வந்த எதிர்ப்புக்கள் அகலும். எதிரிகள் மறைவர். குடும்ப உறவுகள் மேம்படும். வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் வாங்கி மகிழ்வீர்கள். எல்லா சுகமும் தேடிவரும். இறை வழிபாடு நன்மையும், ஏற்றமும் தரும்.

குரு 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு ருண பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக நோய் நொடிகள் குறைந்து

ஆரோக்கியம் மேன்மையடையும் அம்மாவின் உடன் பிறப்புக்களுக்கு அசையா சொத்துக்களான வீடு, மனை ஆகியவை ஏற்படும்.

தகப்பனாருக்கு தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். பொறாமை கொண்ட நண்பர்கள் விலகுவர். சட்டச் சிக்கல்கள் தீர்ந்து, வழக்கு அலைச்சல்களும் குறையும்.

கடன் தொல்லைகள் தீர்ந்து, சேமிப்புகள் உயரும். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆயுள் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக தேக ஆரோக்கியம் மேன்மை அடைந்து ஆயுளும் கூடும்.

நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்கள் நிரந்தரமாக சரியாகும். மணவிழாக்கள் மனம் போல் சிறப்பாக நடக்கும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும்.

பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூர் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு ஜீவன பாவத்தைப் பார்க்கிறார்.

அதன் காரணமாக வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வுகள் தாமதமின்றிக் கிடைக்கும்.

சிறப்பாக பணி புரிபவர்களுக்கு, பணிகளைப் பாராட்டி பதக்கங்களும்,பரிசுகளும் கிடைக்கும். பல வழியிலும் உங்கள் தந்தைக்கு பணவரவுகள் அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

துலாம்

அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட வெளிப்படையான பேச்சும், உண்மை பேச்சும், வாசனை பிரியரும், மகிழ்வான குணமுள்ளவர்கள் துலாம் ராசியினர்.

துலாம் ராசிக்கு தைரிய வீரிய, ருண ரோக பாவங்களுக்கு அதிபதியான குரு தங்கள் ஜன்ம இராசியில் சஞ்சரிக்கவிருக்கிறார். துவக்கத்தில் பதவி உத்தியோகத்தில் பிரச்சினைகள் எழலாம்.

காடு, மேடு என அலைந்து திரிய நேரிடும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். வேண்டிய அளவுக்கு பொருள் வரவு வந்தாலும் செலவுகளும் அதிகமாகும். சிறுசிறு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம்.

பெண்களால் அவப் பெயர் ஏற்படலாம். செலவுகளினால் கைப் பணம் கரையும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை நிகழலாம்.

தேவையற்ற, ஆதாயமற்ற பயணங்கள் ஏற்படும். புகழ் மங்கும், படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புக்கள் தாமதமாகவே கிடைக்கும். உறவுகளைப் பிரிய வேண்டிய நிலை ஏற்படும்.

எதிலும் ஒரு பிடிப்பும், ஆர்வமும் இருக்காது. அடிக்கடி மன குழப்பங்கள் ஏற்பட்டு, குழப்பமான சூழ்நிலையே நிலவும். வீண் கற்பனைகளை உண்டாகும் தூக்கமின்மையின் காரணமாக உடல் சோர்வும், கோபமும் அடிக்கடி ஏற்படும்.

சிலருக்கு வேலையில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். ஆன்மீகப் பெரியோர்களை சந்தித்து, அவர்களின் அருளாசி பெறுவீர்கள். மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும்.

குரு தனது 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய, புத்திர பாவத்தை பார்வை செய்வதால் மணமான தம்பதியர்க்கு மழலைச் செல்வம் ஏற்பட்டு மனம் மகிழ வைக்கும்.

தாய் வழியில், ஏதேனும் ஒரு வகையில் பணவரவு ஏற்படும். நோய் நொடியின் பாதிப்புகள் குறையும். சுகமான, சொகுசான வாழ்க்கை அமையும். குரு தனது 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு களத்திர பாவத்தைப் பார்வை செய்வதால், தொழில் கூட்டாளிகளிடையே நல்லுறவு சிறப்படையும். கணவன், மனைவி இடையே அன்னியோன்னிய உறவு ஏற்படும்.

குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் கோவில் திருப்பணிகள், தர்ம காரியங்களில் ஈடுபட்டு, புகழ் அடைவீர்கள். மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை உயரும். பூர்வீகத் தொழில்கள் மேம்பாடு அடையும். இலாபமும் அதிகரிக்கும்.

விருச்சிகம்

தைரியம் வீரம் ஆகியவற்றுக்கு காரகரான செவ்வாயை அதிபதியாகக் கொண்டவர்கள் விருச்சிகம் இராசியினர்.

விருச்சிகம் இராசிக்கு தன, புத்திர பாவாதிபதியான குரு விரய பாவத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார். அதன் காரணமாக விரயங்கள் ஏற்படும். பிறர் வாங்கிய கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடக் கூடாது.

சுலபமான காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே முடிக்க முடியும். எவ்வளவு பண வரவு வந்தாலும் வரவுக்கு மிஞ்சியதாகவே செலவுகள் இருக்கும். சிலருக்கு, வீட்டில் மராமத்து பணிகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

தொலை தூரப் பயணங்கள் காரணமாக செலவுகள் தவிர்க்க முடியாததாகும்.தேவையற்ற கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். .சிலருக்குப் பெண்களால் அவமானங்கள் ஏற்படலாம். மனதில் தயக்கமும், அச்ச உணர்வும் இருக்கும்.

உழைப்பினால் எந்தவிதப் பயனும் இருக்காது. மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். தொழிலில் நஷ்டங்கள் ஏற்படும். தொழிலில் தேவையற்ற பகை உண்டாகும். மன உளைச்சல் ஏற்பட்டு, மன அமைதியும் குறையும்.

சிலர் பதவி இழக்க நேரும். தொழில் உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.

குரு 5 ஆம் பார்வையாக உங்கள் சுக பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக நிலம் வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் வீடுகட்டுவீர்கள் புதிய கல்வி கற்கும் வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயார், வீடு, சுகம் போன்ற 4 ஆம் வீட்டுத் தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் இருந்தாலும், பணவிரயங்கள் ஏற்படும்.

குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6 ஆம் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக எதிரிகளின் எதிர்ப்புகள் விலகும். சத்ரு ஜெயம் ஏற்படும். வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும்.

நோய் பாதிப்புகளின் தாக்கமும், வேகமும் குறையும். சிலருக்கு, அடிக்கடி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குழந்தைகள் மூலமாக தனவருமானங்கள் வரும். மனைவி மூலமான விரயச்செலவுகள் தவிர்க்க முடியாததாகும். தந்தையின் தொழில்கள் மேம்படும்.

குரு 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக வம்பு வழக்குகள் குறையும், மனைவி மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். தந்தையால் செலவுகள் அதிகரிக்கும்.

ஆன்மீகப் பயணங்களால் பணவிரயங்கள் அதிகரிக்கும். வழக்குகள் வெற்றி அடையும். கைவிட்டுப் போன பொருட்கள் வந்து சேரும். விபத்துக்களில் இருந்து பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி தப்பித்து விடுவீர்கள். பெண்களுக்குத் தடைப்பட்ட திருமண வைபவங்கள் நடைபெறும். கடன் உதவிகள் கிடைக்கும்.

தனுசு

தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட சத்யவான், குணவான், தனவான் என போற்றப்படும் நாணயமும், நியாயமும் மிக்கவர்கள் தனுசு ராசியினர்.

இந்த இராசிக்கு ஜென்ம இராசிக்கும் , சுக பாவத்திற்கு அதிபதியான தேவகுரு இலாப பாவத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார் அதிகாரப் பதவி, அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தருவார்.

நவீன வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும் பணம் பல வழிகளிலும் சேரும். கையில் பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். இது வரை தடைப்பட்டிருந்த திருமண காரியங்கள் கைகூடும்.

திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியமும் ஏற்படும். தம்பதிகளின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உறவினர்களும் நண்பர்களும் ஒற்றுமையுடன் பழகுவார்கள் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும் அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள்கள் சேரும். வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும்.

செல்வ நிலையை உயரும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் எளிதாக வெற்றி பெறும்.

குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு தைரிய பாவத்தைப் பார்வை செய்வதால் கடன்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

சிலர் சொந்த வீடு கட்டுவீர்கள். உயர் கல்வியில் மாணவர்களின் அறிவு விருத்தியாகும். . சகோதர வகையில் முன்னேற்றங்களும் ஏற்படும். மனைவியைப் புதிய உயர் பதவிகள் தேடிவரும். தந்தைக்குப் புதிய ஒப்பந்தங்களும்,

குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார்.அதன் காரணமாக குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றுவரும் வாய்ப்பு ஏற்படும்.

பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். சந்ததி விருத்தி ஏற்படும்.பொன் ஆபரண, அணிகலன்கள் சேரும். குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் சிறப்பாக நடந்தேறும். தாய்வழியில் பண வருமானம் அதிகரிக்கும் வீட்டில் சந்தோஷம் நிலவும்.

குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக தம்பதிகளிடையே சந்தோஷம் நிலவும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

கூட்டுத் தொழில்,வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் வியாபார சம்பந்தமான வெளிநாட்டு பிராயாணங்கள் ஏற்படும்.

மகரம்

ஆயுளுக்கும் ஜீவனத்திற்கும் காரகரான சனியை அதிபதியாகக் கொண்ட அனைவருக்கும் உதவுபவர்களுமான மகரராசியினர்.

தங்கள் இராசிக்கு தைரிய, விரய பாவாதிபதியான குரு ஜீவன பாவத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார். அதன் காரணமாக அனைத்துக் காரியங்களுக்கும் பிறர் தயவையே நாடவேண்டியிருக்கும்.

சிலருக்கு இதுவரை பார்த்துக் கொண்டிருந்த வேலையை விடவேண்டிய சூழல் எழலாம். சிலருக்கு இது வரை வகித்துவந்த பதவி பறி போகலாம். பதவி உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்கவலைகளால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

மாசினும் எவரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள்விருப்பங்கள் எதுவும் நிறைவேறாது. ஊரைவிட்டுப் போகவேண்டிய சூழ்நிலை எழலாம். மனச் சோர்வால், உடல்சோர்வும் சேர்ந்து கொள்ளும்.

எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமையாது. அரசு மூலம் எவ்வித ஆதாயங்களையும் எதிர்பார்க்க முடியாது. வியாபாரம்,தொழில் புரிபவர்களுக்கு, போட்டிகள் அதிகமாகி உழைப்புக்கேற்ற வருமானம் இருக்காது. வாழ்க்கையில் வெறுப்பு உண்டாகும். வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும்.

குரு 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு தனபாவத்தைப் பார்வையிடுவது நல்ல நிலை ஆதலால் இல்லத்தில் சுபகாரியங்கள் சிறப்புற நடைபெறும்.

பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார் அதன் காரணமாக புதிய நவீன வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். புதிய மனை, வீடு, நிலம் ஆகியவற்றை வாங்கும் யோகம் ஏற்படும்.

தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். மாணவர்கள் கல்வியில் மேன்மை நிலை அடைவார்கள். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை பார்வை செய்கிறார்.

அதன் காரணமாக நீண்ட நாட்களாக இருந்துவந்த நோய்கள் குணமாகும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் நட்பு பாராட்டுவார்கள்.

கும்பம்

ஆயுள் மற்றும் தொழிலுக்கு காரகரான சனியை அதிபதியாகக் கொண்ட மனித இனத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மையும், நியாயம் வழக்குவதில் சமர்த்தரும், ஆன்மிகத்தில் நாட்டமுடையவர்கள் கும்பராசியினர்.

தங்கள் இராசிக்கு தனம் மற்றும் இலாப பாவத்திற்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் அமர்ந்து உங்கள் இராசியை 5ம் பார்வையாக பார்க்கிறார்.

திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள்சமயோசித புத்தியால் சரியாகிவிடும்.

நல்ல யோகமான காலமாதலால்அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுவவீர்கள், சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். இது வரை இருந்து வந்த சிறு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் மறையும்.

கணவன் மனைவிக்கு இடையே நல்லுறவு ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இராஜ தந்திரத்தால் எதிர் பார்த்திருந்த உயர் பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும் அரசாங்கத்தின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதம் இன்றிக் கிடைக்கும்.

ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எல்லாவகையிலும் அப்பாவின் ஆதரவு கிடைக்கும். அந்தஸ்து உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.சமூகத்தில் முதலிடம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். வசூலாகாத கடன்கள் அனைத்தும் வசூலாகிவிடும்.

மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவர். புதிய தொழில்களில் முதலீடுகள் செய்து தொழில் முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். அரசு வெகுமதி மற்றும் புகழ் தேடி வரும்.

குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ஜென்ம இராசியைப் பார்ப்பதால் பெயரும் புகழும் அதிகரிக்கும். தெளிவான சிந்தையால் முடங்கியிருந்த செயல்பாடுகள் அனைத்திலும் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள்.

உடல் பாதிப்புகள் விலகி ஆரோக்கியம் மேம்படும். தொழில் உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார்.

எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். வேலையின்றி அலைந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவசதி அதிகரிக்கும். கடன் சுமைகள் குறையும். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.

எதிர்பார்த்திருந்த செய்திகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு புத்திர பாவத்தைப் பார்க்கிறார்.

இதன் காரணமாக குடும்பத்துடன் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.குழந்தைகளின் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் சிறக்கும்.

சந்ததி விருத்தி ஏற்படும். புத்தி கூர்மை, மனத்தெளிவு உண்டாகும், மனைவி மூலமாகவும் இலாபம் உண்டாகும். வீட்டில் சுப மங்கள காரியங்கள் நிறைவேறும்.

மீனம்

தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட கீர்த்திமான்,கெட்டிக்காரர், இரக்கமுள்வர்கள், மீனம் ராசி அன்பர்கள்.

இந்த ஜென்ம இராசிக்கும் ஜீவன பாவத்திற்கும் அதிபதியான குரு உங்கள் ராசிக்கு 8 ஆம் பாவத்திற்கு இடம் பெயர்கிறார். 7 ஆம் பாவத்தில் இருந்தவரை மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும்.

பிள்ளைகளால் பெற்றவர்கள் பெருமை அடைந்திருப்பார்கள். தொழில்துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். மனைவி மக்களுடன் வாழ்க்கைசந்தோஷமாகக் கழிந்திருக்கும்.

குருவின் தற்போதைய இட மாற்றத்தால் பதவி, உத்தியோகம், கௌரவம் ஆகியவற்றில் இறக்கம், மாற்றம் அல்லது இழப்பு இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அவப்பெயர் ஏற்படும். பயணங்களின் போது விபத்துக்களைச் சந்திக்க நேரும். கோர்ட், வழக்கு போன்ற தண்டச் செலவுகளால் கைப்பணம் கரையும். மனக் கஷ்டங்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.. காரியங்கள் எதுவும் நினைத்தபடி கை கூடாது. உடல் உழைப்பு அதிகமாகும் அதற்கேற்ற வருமானம் கிடைக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

பொருளாதாரச் சிக்கல்கள் உண்டாகும். சிலர் பழைய வீட்டை மாற்றி அமைத்து புதுப்பித்துக் கொள்ளக் கூடும்.

குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தைப் பார்ப்பதால்,செலவுகள் அனைத்தும் சுப செலவுகளாக மாறும்.

வீட்டில் நடக்கும் சுபகாரியங்களால் செலவுகள் கூடினாலும், சந்தோஷம் நிலவும். வீடு கட்டுதல் போன்ற செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும்.

குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு தனபாவத்தை பார்வையிடுகிறார். அதன் காரணமாக குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகள் அதிகம் ஏற்பட்டு சந்தோஷமான தருணங்களாக அமையும்.

தன வரவு அதிகரிக்கும். பிறரின் பணம் கையிருப்பு இருந்து கொண்டே இருக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உடனடியாக்க் கிடைக்க வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி உறவு பலப்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தை பார்வை செய்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும் குழந்தைகளின் கல்வி சம்பந்தமான செலவுகள் அதிகரிக்கும்.

வீடு மராமத்துச் செலவுகள், வாகனம் சரிசெய்யும் செலவுகள் உண்டாகும் வீடு கட்டும் ஆசை நிறைவேறும்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.