Latest Post

“ஞான நல்லறம்வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.. .
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்.. .
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் 
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்து 
இங்கே திலக வாணுதலார் 
தங்கள் பாரத தேசம் ஓங்க 
உழைத்திடல் வேண்டுமாம்”.

என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப இன்று தமிழ் பெண்கள் அனைத்து துறையிலும் தன் கால் தடங்களை பதித்துக் கொண்டிருப்பதை எண்ணினால் இதுதான் பாரதி கண்ட புதுமை பெண்களா என்ற மகிழ்ச்சியும் வியப்பும் ஆட்கொள்கிறது அடிமனதில். நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்பதே அனைவரது கருத்தாக இருந்தது. ஆனால் இன்றையக்காலத்தில் அந்த எண்ணம் மாறி விண்வெளி துறையில் கால் பதிக்கும் அளவு பெண்கள் வளர்ந்துள்ளனர் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய தருணம்.

ரிசப்ஷனிஸ்ட் டூ பெப்சிகோ சி.இ.ஓ. இந்திரா நூயி:

‘இந்திரா நூயி‘…உலக வர்த்தக மற்றும் பொருளாதாரத்தில் வலிமைமிக்க குரலாக ஒலித்துக்கொண்டிருப்பவர். உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானமான நிறுவனமான ‘பெப்சிகோ’வின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் பணியாற்றி வரும் இந்திரா நூயியின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணம். 1955-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி சென்னையில் பிறந்த இவரது முழுப்பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பி.எஸ்ஸி படிப்பும், கொல்கத்தா ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படிப்பும் முடித்த கையோடு சிறிது காலம் ஏ.பி.பி என்னும் வர்த்தக நிறுவனத்திலும், பின் ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ்’ நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராகவும் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து சென்னை பியர்ட்செல் ஆடை நிறுவனத்தில் பணி செய்தார். தன்னுடைய பணி வெற்றிகரமாக இருந்தாலும் கார்ப்பரேட் உலகில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள எம்.பி.ஏ படித்தது போதாது என்று தனக்கு நெருங்கிய பலரிடமும் தெரிவித்தார். அதனால் தனது வேலையை விட்டுவிட்டு, அமெரிக்காவின் ‘யேல்’ பல்கலைக்கழகத்தில் பப்ளிக் மற்றும் பிரைவேட் மேனேஜ்மென்ட் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்திலேயே படிப்பு செலவுக்காக ஒரு நிறுவனத்தில் பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்டாக பணியாற்றினார். முதுகலைப் பட்டம் பெற்றதும் மோட்டோரோலா, ஏசியா பிரவுன் பொவரி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு இறுதியாக 1994-ம் ஆண்டு பெப்சி குளிர்பான நிறுவனத்தில் Strategic Planning & Development பிரிவின் துணைத் தலைவராக சேர்ந்தார்.
பெப்சி நிறுவனத்தில் சேர்ந்த பிறகு இவரது வாழ்க்கையும், அந்நிறுவன வளர்ச்சியும் உலகம் முழுக்கவும் புகழ்பெற்றன. பெப்சி நிறுவனத்தில் சேர்ந்ததும், ‘தற்போதைய நம் வளர்ச்சியும், முன்னேற்றமும் போதாது. இன்னும் நம் தயாரிப்புகளை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கூட்டு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும்’ என அடிக்கடி சக ஊழியர்களிடம் சொல்வார். சொல்வதோடு மட்டுமில்லாமல் ஊழியர்களுடன் சேர்ந்து தயாரிப்பு, சேகரிப்பு, விற்பனை, கள ஆய்வு போன்ற பல பணிகளை தானே நேரடியாக களம் இறங்கினார். வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

சாந்தி துரைசாமி:

சக்தி மசாலாவின் நிர்வாகி. இவரின் அயராத உழைப்பும் ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்பும் தந்த கருணை மிகு பெண்மணி. சாதாரண ஏழ்மை குடும்பத்தில் பிறந்த இவர் தன் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக தன் படிப்பை ஆறாம் வகுப்புடன் நிறுத்திக்கொண்டு தன் தம்பி படிப்பிற்காகவும் தன் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டும் தன்னால் இயன்ற அளவிற்கு குடும்பத்திற்கு உதவி புரிந்துள்ளார். தன்னால் முயன்ற அளவு சில வேலைகளை வீட்டிலிருந்தே செய்தும் வீட்டிற்கு வருவாய் ஈட்டியுள்ளார். இவரது உதவும் மனப்பான்மை இன்று பல ஊனமுற்றவர்களுக்கும் தன்னாலும் உழைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. இவர் உற்சாகத்தையும், இன்முகத்தையும் ஒருங்கே பெற்ற பண்பாளர்,  கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றிகளை தன் வசப்படுத்தி வருபவர். பல்வேறு சமூக நல அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்படுபவர் என்ற பாராட்டுக்குரியவர். இவரது சக்தி மசாலா நிறுவனம் ஈரோட்டில் உள்ள மாமாரத்துபாளையம் என்ற இடத்திலுள்ளது. இவர் பல விருதுகளையும் பெற்ற போற்றத்தக்க ஒரு பெண்மணியே.
40 ஆண்டு களுக்கு முன்பு சிறு முதலீட்டில் வணிகத்தை தொடங்கிய அவர், தனது கணவர் துரைசாமியின் பங்களிப்புடன் ‘சக்தி மசாலா’ நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். சக்திதேவி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி மருத்துவமனை, மறுவாழ்வு மையம், சிறப்புப் பள்ளி ஆகியவற்றோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரம் நடும் பணி, அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது என்பது உட்பட பல சேவைகளை ஆற்றிவருகிறார். நாடும் நம் சந்ததியினரும் நலமுடன் வாழ பசுமை உலகம் படைப்பதில் தீவிரமாக கடந்த எட்டு ஆண்டுகளாக மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேமிப்புத் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முதல் இரண்டு ஆண்டுகள் வரை மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர் கேட்கின்ற போதெல்லாம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். இதுவரை 1,00,000 மரக்கன்றுகளுக்கு மேல் வழங்கியுள்ளோம். மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு, வேலியிட்டு நீர்பாய்ச்சி பராமரித்தும் வருகிறார்கள்.

மல்லிகா ஸ்ரீனிவாசன்:

மல்லிகா சீனிவாசன் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபராவார். தொழில் நுட்ப அறிஞருக்கான அங்கீகாரம் பெற்ற ஒரு சிந்தனையாளர் ஆவார்.  இந்திய விவசாயத்துறை வணிகத்திற்கும் கல்வித்துறைக்கும் சிறந்த பங்களிப்பு மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர். தற்போது இவர் 1960 ஆம் ஆண்டில் சென்னையில் துவங்கப்பட்ட TAFE – டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார். உலகிலேயே மூன்றாவது பெரிய டிராக்டர் தயாரிப்பாளரும், இந்தியாவில் இரண்டாவது பெரிய நிறுவனமான TAFE 150,000 க்கும் மேற்பட்ட டிராக்டர்களை வருடாந்திர விற்பனையாக இந்தியா உட்பட ஐரோப்பா, அமெரிக்கா போன்ற 82 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.
25 வருட இடைவெளியில், டிராக்டர் வணிகத்தின் சுழற்சியின் திறனைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய டிராக்டர்களின் தரம் வாய்ந்த தயாரிப்பாளராக TAFE ஐ, ஒரு வலுவான மற்றும் தரமான அமைப்பாக நிறுவியுள்ளது. தயாரிப்பு மற்றும் செயல்முறை மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், இந்நிறுவனத்தின் விரிவாக்கத்தை தொடர்ந்து உறுதிசெய்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒன்றாகவும், இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர்களில்  ஒருவராகவும் அறியப்பட்ட மல்லிகா ஸ்ரீனிவாசன் “டிராக்டர் ராணி” என்று அழைக்கப்படுகிறார்.

“ஒரு வியாபாரத்தை நடத்த நீங்கள் பணத்தை நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு நிறுவனத்தை உருவாக்க, ஒரு சிறந்த குழுவை உருவாக்க நீங்கள் ஒரு கனவைக் கொண்டிருக்க வேண்டும். அந்த கனவு கல்வி மற்றும் ஆரோக்கியமான சமூக சூழலை உடையதாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தனது நிறுவனத்தில் கூட பெண் தொழிலாளர்களை அதிகம் ஊக்குவிக்கிறார். தொழில் மற்றும் வணிகத் துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக டாஃபே குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

கற்றாழையில் இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள கற்றாழை உதவுகிறது.

கற்றாழையை ஜூஸ் செய்தும் சாப்பிடலாம். தோல் நீக்கிய சோற்றை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும்.

தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.

இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப் பயன்படுகிறது. இலை மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும்.

வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகளை வெளியேற்றுகிறது. எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும். நிறம் கருமையடையும். ஜெல்லைப் பதப்படுத்தி குளிர்பானமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி கண்கள் சிவந்து விடும். அப்போது கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக் கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும்.

இப்போது கண் எரிச்சல் குறைவதோடு சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.

நீர்க்கடுப்பு, வயிற்றின் எரிச்சல் உள்ள சமயங்களில் கற்றாழைச் சோற்றுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் அவை குணமாகும். சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல எரிச்சலாக இருக்கும்.

இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்கு போன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.

கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.

உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

ஒரு பெண் கருவறையில் பிறக்கும் தருணத்திலிருந்து கல்லறையில் உறங்கும் வரை எத்தனை இன்னல்களை கடக்க வேண்டியுள்ளது. பண்டைய காலந்தொட்டே நம் பெண்கள் ஆண்களின் அடிமையாக வாழ்ந்துள்ளனர் என்பது வேதனைக்குரிய ஒன்றே. மகளிர் தினம் என்று ஒன்று கொண்டாடுகிறோம் ஆனால் உண்மையில் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா? ஆளில்லா தெருவில் நகைகளுடன் பெண் இரவில் நடந்து வந்தால் அது பெண் சுதந்திரமா? அன்று ஆவிகளுக்கு பயந்த பெண்கள் போய் இன்று ஆண்களுக்கு பயப்படும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர் இந்த பெண் சுதந்திரம்  தேவையா? அன்றைய காலந்தொட்டு இன்றைய காலம் வரை பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் சொல்லி தீருமா? பெண்களின் சுதந்திர வரலாறு பற்றி நாம் பல்வேறு விதமான கருத்துக்களை பல்வேறு அடிப்படையிலும் நாம் காண முடிகின்றது.  மனிதர்களாய் படைக்கப்பட்ட வேதங்களின் ஆரம்பக்காலத்தில் பெண்ணை மிக உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்பட்ட தருணத்தில் தான் பெண்களுக்கு எதிரான பல முற்போக்கு செயல்களும் நடந்துள்ளது என்பது எத்தனை வேதனை அளிக்கும் செயலாக உள்ளது. எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்றளவும் பெண்ணை இரண்டாந்தர பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் நிலையும் மாறவில்லை.
மேலாடை அணியத் தடை

ஆதிகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடுவதற்காக காடுமேடு கடந்து பல தூரங்களுக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும் இருந்தன. அவர்கள் பலமான விலங்குகளிலிருந்து  தம்மை தற்காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது. இந்த சூழலில் தான் பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டிய காரணி உருவாகத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம் பெண்கள் குழந்தை பெற்ற சமயங்களில் அவர்களின் பால் வாடையை வைத்தும் குருதியின் வாடையை வைத்தும் விலங்குகள் மோப்பம் பிடித்து வந்து விடும் என்பதை அறிந்து கொண்ட இவர்கள் பெண்களையும், குழந்தை பெற்ற பெண் களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்து வரக் கூடிய விலங்குகளால் அவர்களுக்கு எந்தவித ஆபத்துக்களும் ஏற்படாவண்ணம் காவலும் வைத்து விட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள். ஆனால் இன்றும் மாதவிலக்கான பெண்களை தேடி வரும் தொலைவில் விலங்குகள் இல்லை என்றாலும் இந்த நிலையில் ஏன் எதற்கு என்ற எண்ணங்கள் எதுவுமின்றி இன்றும் இதே அர்த்தமற்ற செயற்பாடுகள் தொடர வேண்டிய அவசியம் இல்லையே.

சங்ககாலத்து இலக்கியங்கள் பெண்களைப் பலவீனமானவர்கள்வாகவே காட்டுகின்றன. பெண் பெரும்பாலும் அவரது உறுப்பு அழகும், அவள் அணியும் ஆடை, அணிகலனைமும் கொண்டே அழைக்கப்பட்டாள். பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமையும், தொழில் உரிமையும், தனது வாழ்க்கைத் துணையை தேடிக்கொள்ளும் உரிமையும் இருந்தன என்பதனை அறிய முடியாத காலகட்டம் தான் அது. பெண்கள் தங்கள் கணவரைத் தாமே தேர்வு செய்யக்கூடிய நிலை பெற்றோரின் முயற்சியால் கணவரைத் தேர்ந்தெடுக்கும் நிலை இருந்துள்ளது. உடன்கட்டை ஏறுதல் என்ற வழக்கம் வசதிபடைத்த குடியினரின் மத்தியில் நிலவி உள்ளது.

இது போன்ற சங்க காலத்தில் தான் பெண்களை போற்றத்தக்கும் வகையில் திருக்குறள் உருவானது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு தருணம். திருவள்ளுவர் காலத்தில் பெண்கள் அரசியலிலோ பொது வாழ்விலோ பங்கு கொண்டதாக தெரியவில்லை. தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் வந்த காலத்திலும் பெண்களின் நிலை வருந்தத்தக்க நிலையிலேயே இருந்துள்ளது. இராமாயணத்தில் தசரதனுடைய அந்தப்புரத்தில் அறுபதினாயிரம் பெண்கள் இருந்தனர். இதில் அரசியல் ஒப்புதல் பெற்றவர் மூவர். இராவணனோ மனைவியர் எண்ணிக்கையில் தசரதனையும் மிஞ்சியவன். அசோகவனத்தை சுட்டெரிக்கும் ஆற்றல் பெற்றவளாக சீதை இருப்பினும் இராமன் மனைவி என்ற நிலையில் அடங்கி இருப்பதே சீதைக்கு அழகு என்று காட்டுகிறது இராமாயணம். பாரதம் பெண்ணடிமைத்தனத்தை அதிகமாகவே காட்டுகிறது. கணவன் நினைத்தால் மனைவியை சூதாட்டத்தில் பணயம் வைக்கலாம் என்ற கருத்தும் நிலவியது. சீவகசிந்தாமணி எட்டுபெண்களை மணந்த சீவக மன்னனின் வெற்றிச் சிறப்பைக் காட்டுகிறது. பெரிய புராணத்தில் மங்கையர்க்கரசியார், காரைக்கால் அம்மையார் ஆகியோர் அருள் திறமும் கல்வியாற்றலும் கொண்டவராக காட்டப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக பல அநீதிகள் நிகழ்ந்த வண்ணமே இருந்துள்ளது பண்டைய காலத்தில். கேரளாவில் தாழ்த்தப்பட்ட பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க கூடாது அப்படி மறைக்க வேண்டுமெனில் வரி கட்ட வேண்டும் என்ற சட்டம் மன்னர் காலத்தில் நிலவி வந்தது. அங்கு வாழ்ந்த 30வயதுடைய நாங்கிலி என்ற பெண் வரி கட்ட மறுத்து தன் மார்பகத்தை மறைத்து மேலாடை அணிந்தாள். இதனால் வரி விதித்த அரசு நேரில் வந்து கேட்டும் அந்த பெண் தன் இரு மார்பையும் வெட்டி விட்டு இது இருந்தால் தானே வரி இப்போது என்ன செய்வீர்கள் என்று கேட்டு வீர மரணம் அடைந்தாள். இது போன்ற எண்ணற்ற அநீதிகள் பெண்களுக்கு நடந்துள்ளது நம் நாட்டில்.
பெண் விடுதலைக்கான போராட்டம்

ஆண் ஆதிக்கச் சமூகத்தின் போக்கினை எதிர்த்து எழுந்த முதன்மையான பெண் சிலப்பதிகாரத்து ‘கண்ணகி’ யுடையது தான். அதற்கு பின் டாக்டர் அம்பேத்கார், பெரியார் போன்றவர்களும் பெண் விடுதலைக்கு அரும்பாடுப்பட்டார்கள். ஈரோட்டுச் சிங்கம் பெரியார் பெண் விடுதலைக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே அதற்காக அவர் குரல் கொடுத்தார். சீர்திருத்தங்களை தனது வீட்டில் இருந்தே தொடங்கியவர். திருமணமாகி ஒரே மாதத்தில் விதவையான அவரது தங்கையின் 10 வயது மகளுக்கு (கணவன் வயது 13!) மறுமணம் செய்து வைத்தார். அந்நாட்களில் விதவைகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. தலையை (குறிப்பாக பிரமணர்கள்) மழித்து கொள்ள வேண்டும்; வெள்ளைச் சேலைத்தான் அணியவேண்டும்; நகை அணியக் கூடாது. ஒரு விதவை படும் துன்பத்தை கண்ணால் பார்த்ததால் விதவை மறுமணத்திற்காக வலிமையாகக் குரல் கொடுத்தார். இன்று அவர் போன்றவரின் போராட்டத்தால் மறுமணம் என்ற ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மேலும் பல மூடநம்பிக்கைகளும்  கூட ஒழிக்கப்பட்டுள்ளது என்று கூறியே ஆகவேண்டிய ஒன்று.
சங்க காலச் சித்திரம் 

நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பெண்கள் விடுதலை போராட்டத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் முன்னணியில் இருந்து வந்தனர். அந்த புதிய சமுதாய பிறப்பு வரை இந்த போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து கொண்டு செல்வார்கள். இது தான் வரலாறு நிரூபிக்கிறது. பெண்கள் விடுதலைக்கான போராட்டம் என்பது ஒருவர் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான போராட்டம். வாழ்க்கை, வாழ்வாதாரம், தாய்மையை நிறைவேற்றும் உரிமையுடன் 21-வது நூற்றாண்டில் ஒருவருக்குத் தேவையான முழு அரசியல், பொருளாதார உரிமைகள் கொண்ட சமுதாயத்தை நிறுவும், பழையனவற்றை அழித்துப் புதுப்பிக்கும் போராட்டத்துடன் நெருக்கமாக இது பிணைந்துள்ளது.

இப்போதுள்ள நம் பெண்கள் பாரதி கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் வளர்ந்து வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. பல போராட்டங்களை தாண்டி நம் பெண்கள் இன்று கல்வி கற்கவும் மேலை நாடுகளுக்கு தனியாகவே செல்லவும் பல சாதனைகளும் புரிய முடிகிறது எனில் இதற்கு முன் போராடி பெண் சுதந்திரம் பெற்று தந்த வீரமங்கையருக்கும் மகான்களுக்கும் நாம் எவ்வளவு கடமைப்பட்டுள்ளோம் என்று இந்த தருணம் நமக்கு நினைவூட்டுகிறது. பாரதியும் பாரதிதாசனும் பெண் கல்வி பற்றி பாடிய பாடல்

     “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன். . .
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமையற்றிடுங் காணீர்?
– பாரதி

பெண்கட்கு கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே!
பெண்கட்கு கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே!
பெண்கட்கு கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே!       – பாரதிதாசன்

எகிப்தியர்கள் வருங்காலத்தில் நடக்க போகும் நிகழ்வுகளை மிக துல்லியமாக ஆராய்வதில் திறமை வாய்ந்தவர்கள்.. இவர்கள் கணிக்கும் ஜோதிடமானது மிகவும் துல்லியமானது என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்றைய ஜோதிட முறையில் முதன்மையாக திகழ்வதும் இவர்களது ஜோதிட கணிப்பு முறை தான்.

இந்த ஜோதிட முறையானது உங்களை பற்றி மிக துல்லியமாக கூறக்கூடியது ஆகும். உங்களது பர்சனாலிட்டியை, உங்களது திறமையை மற்றும் நீங்கள் யார் என்ற உண்மையை தெளிவாக சொல்லக் கூடியதாகும். இந்த பகுதியில் எகிப்திய ஜோதிட முறையானது உங்களை பற்றி என்ன சொல்கிறது என்பது பற்றி தெளிவாக காணலாம்.

8 – 21 ஜனவரி மற்றும் 1 – 11 பிப்ரவரி
இந்த தேதிக்குள் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள், தைரியம், தன்னம்பிக்கை வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு அதில் உள்ள நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்பவராகவும் இருப்பார்கள். கடுமையான சூழ்நிலைகளில் இவர்களது பொருமையை எளிதாக தவறவிட்டுவிடுவார்கள்.
இவர்களுடைய நல்ல குணங்கள் : வெற்றியாளர்கள், உதவி செய்பவர்கள், சக்தி வாய்ந்தவர்கள்.
எதிர்மறை குணங்கள்: தனிமைவாதிகள், இரகசியமானவர்கள்
சிறந்த வேலை : நிதி சார்ந்த தொழில்கள்
   

9 – 27 மே மற்றும் 29 ஜூன் – 13 ஜூலை
இந்த தேதிகளுக்குள் பிறந்தவர்களுடைய ஆன்மா மிகவும் தூய்மையானது. இவர்கள் உணர்ச்சிகரமானவர்கள் மற்றும் க்ரியோட்டிவ்வாக யோசிக்கும் திறமை கொண்டவர்கள். இவர்கள் தனியாக இருக்கும் போது சிறப்பாக வேலை செய்ய கூடியவர்கள். இவர்கள் தங்களது வாழ்வில் என்ன தான் நடந்தாலும் அதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு இந்த ஒரு விஷயங்களும் கடினமாக இருக்காது.
குணங்கள் : உண்மையானவர்கள் மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்கள்
எதிர்மறை குணங்கள் : கட்டுப்பாடு, ஆக்கிரோஷமான மற்றும் அதிக போட்டித்தன்மை கொண்டவர்கள்
சிறந்த வேலை: ஆலோசகர்

   

14- 28 ஜூலை, 23 – 27 செப்டம்பர் மற்றும் 3 – 17 அக்டோபர்
இவர்கள் சற்று கூச்ச சுபாவம் கொண்டவர்கள். மேலும் இவர்கள் கூட்டம் இல்லாத தனிமையான சூழலையே அதிகம் விரும்புவார்கள். இவர்கள் தனிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
குணங்கள் : அழகான மற்றும் வாழ்க்கையை பற்றி சிந்திக்கும் திறன் கொண்டவர்கள்
நெகட்டிவ் குணம்: பொசசீவ் ஆனவார்கள்
சிறந்த வேலை: எழுத்தாளர்
   

12 – 29 பிப்ரவரி மற்றும் 20 – 31 ஆகஸ்ட்
இவர்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாகவும், பிறர் மீது அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். முக்கியமாக இவர்களுக்கு தங்களது குடும்பம் மற்றும் நண்பர்கள் மீது அதிக அக்கறை மற்றும் பாசம் போன்றவை இருக்கும். மேலும் இவர்கள் தங்களுக்கு முன்பின் தெரியாத நபர்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் சிறிது வெட்கப்பட்டு போவார்கள். சென்சிடிவ் ஆனவர்களாகவும் இருப்பார்கள்.
குணங்கள் : அன்பு, பாசம் மற்றும் நியாயமாக நடப்பவர்கள்.
நெகட்டிவ் குணம்: ஆர்வ கோளாறு, வேகம்
சிறந்த வேலை: நீதிபதி அல்லது வழக்குறைஞர்.
   

20 ஏப்ரல் – 8 மே மற்றும் 12 – 19 ஆகஸ்ட்
இவர்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியமான உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் பாசம் அதிகமாக வைப்பவர்கள், துணிச்சலானவர்கள். தங்களது குடும்பம் என்றால் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் தனது இலட்சியங்களை எந்த ஒரு சூழ்நிலைகளிலும் அடைந்தே ஆக வேண்டும் என்று இருப்பார்கள். பிறரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார்கள்.
குணங்கள் : உறுதியான மனப்பான்மை கொண்டவர்கள், வலிமையானவர்கள்
நெகட்டிவ் குணம்: சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்ள மாட்டார்கள்
சிறந்த வேலை: அரசியல் சார்ந்த வேலைகள்.
   

11 – 31மார்ச், 18 – 29 அக்டோபர் மற்றும் 19 – 31 டிசம்பர்
இவர்கள் பெண்களின் பாதுகாவலனாக இருப்பார்கள். எதையும் நேருக்கு நேர் பேசிவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுறுசுறுப்பானவர்களாகவும், விளையாட்டு குணம் கொண்டவர்களாகவும், நகைச்சுவை குணம் கொண்டவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.
குணங்கள் : தாராளமான குணம், லட்சிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமானவர்கள்
நெகட்டிவ் குணம்: மற்றவர்களை சார்ந்து இருப்பார்கள், வேக குணம் கொண்வர்கள்
சிறந்த வேலை: பேஷன் அல்லது கலைத்துறை சார்ந்த வேலைகள்.
   

1 – 7 ஜனவரி, 19 – 28 ஜூன், 1 – 7 செம்படம்பர் மற்றும் 18 – 26 நவம்பர்
இவர்கள் பிறப்பில் இருந்தே மற்றவர்கள் மீது அன்பு, அக்கறை கொண்டவர்கள்.. தனக்கு பிடித்த ஒருவரை எந்த காரணம் கொண்டு விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.
குணங்கள் : அமைதியானவர்கள்
நெகட்டிவ் குணம்: ஆதிக்க குணம்
சிறந்த வேலை: ஆசிரியர்.
   

22 – 31 ஜனவரி மற்றும் 8 – 22 செம்டம்பர்
மற்றவர்களை பாதுகாக்கும் குணம் கொண்டவர்கள். தான் செய்யும் செயலில் மிகவும் கவனம் செலுத்தும் குணம் கொண்டவர்கள். ஒரு விஷயத்தை சாதித்தே ஆக வேண்டும் என்ற மனப்பான்மை இவர்களிடம் அதிகமாகஇருக்கும். தன்னம்பிக்கை குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். அமைதியானவர்கள். பொருமையானவர்கள்..
குணங்கள் : உறுதி, கவனம் மற்றும் கடின உழைப்பாளி.
நெகட்டிவ் குணம்: மன சோர்வு
சிறந்த வேலை: கணக்காளர்
   

1– 10 மார்ச் மற்றும் 27 நவம்பர் – 18 டிசம்பர்
இவர்கள் பிறப்பிலேயே மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், அறிவாளிகளாகவும் இருப்பார்கள். பிறப்பிலேயே தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களது பேச்சிலேயே ஒரு அன்பு தெரியும்.
குணங்கள் : நேர்த்தியானவர்கள், தன்னை மாற்றிக் கொள்ளும் இயல்பு கொண்டவர்கள்
நெகட்டிவ் குணம்: அதிகார குணம்
சிறந்த வேலை: ஆசிரியர்
   

29 ஜூலை - 11 ஆகஸ்ட் மற்றும் 30 அக்டோபர் - நவம்பர் 7
நன்றாக அனைவருடனும் பேசும் திறமை கொண்டவர்கள்.. எளிமையானவர்கள்.. இவர்கள் மிகவும் நேர்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் செண்சிடிவாகவும் இருப்பார்கள்.
குணங்கள் : மகிழ்ச்சியாக இருப்பார்கள்
நெகட்டிவ் குணம்: பொறுமை இல்லாதவர்கள்
சிறந்த வேலை: பிறரை மகிழ்விக்கும் வேலை
   

28 மே - 18 ஜூன் மற்றும் 28 செப்டம்பர் - 2 அக்டோபர்
இவர்கள் கருத்துக்களை சிறப்பான முறையில் மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.. சமூக நலனில் அக்கறை உள்ளவர்களாகவும், சமூகத்தில் அனைவரிடமும் நல்ல முறையில் பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.
குணங்கள் : அனைத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்கள்
நெகட்டிவ் குணம்: பிறரை அடிபணிய வைக்கும் குணம்
சிறந்த வேலை: வேலைவாய்ப்பு அதிகாரி அல்லது ஆசிரியர்
   

1 - 19 ஏப்ரல் மற்றும் 8 - நவம்பர் 17
இவர்கள் அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மை கொண்வர்கள். எளிதாக தன்னை சுற்றி ஒரு கூட்டத்தை அமைத்துக் கொள்வார்கள். மற்றவர்களின் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒருவேலையை முடிக்கும் வரை இவர்களுக்கு பொறுமை இருக்காது.
குணங்கள் : க்ரியேட்டிவிட்டி, கேட்கும் திறன், தலைமை குணம்
நெகட்டிவ் குணம்: வேலை செய்வது கடினம்
சிறந்த வேலை: ஆசிரியர் அல்லது வழக்கறிஞர்

ஆங்கிலத்தில் இன்டர்கோர்ஸ் என்பது பொதுச்சொல். இது போக இரண்டு உடல் இணையும் உறவை லவ் மேக்கிங் மற்றும் ஹேவிங் செக்ஸ் என இரண்டு சொல்லாடலில் கூறலாம்.

இதுவே நாம் தமிழில் சொல்ல வேண்டும் என்றால் தாம்பத்தியம் மற்றும் உறவு ஆகும்.

இதில் என்ன அப்படி ஒற்றுமை என்று பார்த்தால் சொல்லக்கூடிய வாக்கியம், மற்றும் வார்த்தை வேற்றுமை மட்டுமே உணர முடியும்.

அதுவே நாம் நிதானமாக உற்று நோக்கினால், உடலுறவில் உள்ள மனம், உணர்ச்சி சார்ந்த விஷயங்கள் புதைந்திருப்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

தகுந்த சூழல்:
தகுந்த சூழல் அமைந்து வரும்போது ஆணும், பெண்ணும் இணைவது தாம்பத்தியம். இந்த சூழலை அமைத்துக் கொண்டு கூடுதல் உடலுறவு இச்சையின் வழியே உறவு என்று சொல்லலாம்.

இறுதி முடிவு:
முடிவில் காதல் அடுத்த நிலைக்கு உயர்ந்திருந்தால் மனதில் மகிழ்ச்சி இரண்டாக மாறிய பின்னர், இரு உடல் நிலத்தில் மிதந்திருந்தால் அது தாம்பத்தியம்.

இந்த ஆண்டும் பட்டையைக் கிளப்பத் தொடங்கிவிட்டது குளிர். `விஷப் பனி மாதிரியில்ல இருக்கு… காலையில எட்டு மணி வரைக்கும் வீட்டை விட்டு வெளியவே வர முடியலை’ என்கிற குரல்களைக் கேட்க முடிகிறது.

`இந்தத் தட்பவெப்பநிலை, கிருமிகள் செழித்து வளர உதவும். சூரிய ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால், நோய்க் கிருமிகள் அதிக வீரியம் பெற்று, குறிப்பாக ‘வைரஸ்’ நோய்க்கிருமிகள் அதிகம் உற்பத்தியாகும். ஆக, குளிர்காலம் கிருமிகளுக்குக் கொண்டாட்டமான காலம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

பனிக்காலத்தில் சளி, இருமல், தலைவலி, தொண்டைக்கட்டுதல், ஆஸ்துமா, காதடைப்பு, சோர்வு, நுரையீரல் பாதிப்பு, மூட்டுவலி, அலர்ஜி போன்ற பல பிரச்னைகளும் வரிசைகட்டி வரத் தொடங்கிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களைத் தொற்று நோய்கள் எளிதில் தாக்கும். ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, ‘பனிக்காலம்’ என்பதே படு அவஸ்தையான காலம்.

“உடல்நலனில் தனிக் கவனமும் முன்னெச்சரிக்கையும் இருந்தால், இந்தப் பனிக்காலத்தில் நோயை நெருங்க விடாமல் கடந்து விடலாம். உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதும், உடலுக்கு உஷ்ணம் தரும் உணவுகளை உட்கொள்வதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதும் குளிர்காலத்தில் தாக்கக் கூடிய நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள உதவும்”

குளிர்கால பிரச்னைகளிலிருந்து தப்பிக்க… சில எளிய வழிமுறைகள்

நாமிருக்கும் இடம் நல்ல காற்றோட்டத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குடிக்கவும் குளிக்கவும் வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தவும். பனிக்காலத்தில் அதிகம் மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவும். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளலாம். குளிர்பானங்கள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளைத் தவிர்க்கலாம்.

ரோட்டோரக் கடைகளில் சாப்பிடுவதோ, ஃபாஸ்புட் உணவுகளை உண்பதையோ தவிர்க்கலாம். ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இயல்பான வெப்பநிலைக்கு வந்தவுடன் அவற்றைப் பயன்படுத்தலாம்.

ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள், பகல் நேரங்களைத் தவிர, அதிகாலை, மாலை நேரத்துக்குப் பிறகு வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். மேலும், ஒட்டடை அடிப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்யாமலிருக்கலாம். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. மூச்சுப்பயிற்சி, யோகா, தியானத்துக்கு தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் ஒதுக்கலாம். இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

பனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். சிறுநீர் கழித்த பின்னர் கை,கால்களைச் சுத்தப்படுத் திக்கொள்ள வேண்டும். இதைக் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தலாம். சுகாதாரமற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.

பனி பொழியும் அதிகாலையிலும், பின் இரவுகளிலும், வெளியில் செல்லும் போது காதுக்குப் பஞ்சு வைத்துக்கொள்ளலாம் அல்லது மப்ளர் போன்றவற்றால் காதுகளை மறைத்துக்கொள்ளலாம்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.