Latest Post

இன்றைய ஆண்களுக்கு 25 வயதிலேயே வழுக்கை ஏற்படும் அளவில் முடி அதிக அளவில் கொட்டுகிறது. இப்படி முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் தொப்பி அல்லது ஹெல்மெட் அணிவது, ஆரோக்கியமற்ற டயட், மன அழுத்தம், மாசுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, மருந்துகள், மரபணுக்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இக்காரணங்களால் தலை முடி உதிர்வதைத் தடுக்க முடியாதா என்று கேட்டால், நிச்சயம் முடியும் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வுலகில் முடியாதது என்று எதுவும் இல்லை. அதிலும் மூலிகைகள் அதிகம் நிறைந்த இந்தியாவில் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல வழிகள் உள்ளன. 

புரோட்டீன் உணவுகள்
புரோட்டீன் அதிகம் நிறைந்த இறைச்சிகள், மீன், சோயா அல்லது இதர புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொண்டு வர வேண்டும். இதனால் புரோட்டீனால் ஆன முடியின் ஆரோக்கியம் அதிகரித்து, முடி உதிர்வது குறையும்.

நறுமணமிக்க எண்ணெய்கள்
உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்தால், நறுமணமிக்க அத்தியாவசிய எண்ணெய்களைக் கொண்டு தினமும் 2 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள். இதனால் மயிர்கால்கள் ஆரோக்கியத்துடன் இருக்கும். அதற்கு லாவெண்டர் எண்ணெயை நல்லெண்ணெயுடனோ அல்லது பாதாம் எண்ணெயுடனோ சேர்த்து கலந்து பயன்படுத்தலாம்.

தலையை ஈரப்பசையின்றி வைத்துக் கொள்ளவும் 
எண்ணெய் பசையுடைய தலையைக் கொண்ட ஆண்களுக்கு, கோடையில் அதிகப்படியான வியர்வை வெளியேற்றத்தால் பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படக்கூடும் மற்றும் தலைமுடி உதிரவும் செய்யும். எனவே அத்தகையவர்கள் கற்றாழை மற்றும் வேப்பிலை சேர்த்து தயாரிக்கப்பட்ட ஷாம்பு கொண்டு தலை முடியை அலச வேண்டும். இதனால் பொடுகு நீங்கி, முடி உதிர்வது தடுக்கப்படும்.


இஞ்சி சாறு, வெங்காயச் சாறு அல்லது பூண்டு சாறு 
உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்தால், இஞ்சி, வெங்காயம் அல்லது பூண்டு ஆகியவற்றில் ஒன்றின் சாற்றினை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.


க்ரீன் டீ 
ஒரு கப் சுடுநீரில் க்ரீன் டீ பையை ஊற வைத்து, குளிர்ந்ததும் அந்த நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து பின் அலச வேண்டும். இப்படி ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்திருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.


வேப்பிலை 
வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம், ஸ்கால்ப்பில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, ஸ்கால்ப்பில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களும் நீங்கும்.


நெல்லிக்காய் பவுடர் 
நெல்லிக்காய் பொடியில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதைக் காணலாம்.

வெந்தயம் 
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டு வறுத்து, பின் அந்த எண்ணெயை தினமும் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவ வேண்டும். இப்படி செய்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்கி, முடி உதிர்வதும் குறையும்.


தேங்காய் பால் 
தேங்காய் பாலில் தலைமுடியின் வளர்ச்சிக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே வாரம் ஒருமுறை தேங்காய் பாலை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து அலச, முடி உதிர்வது குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.


முட்டை 
ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனை ஸ்கால்ப்பில் படும் படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். மஞ்சள் கருவைப் பயன்படுத்துவதால், தலையில் முட்டை நாற்றம் இருக்கும் என்பதால், இந்த முறையை வார இறுதியில் முயற்சிப்பது நல்லது.


வினிகர் 
வினிகரில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் பொடுகை ஒழிக்கும், பொட்டாசியம் மற்றும் இதர நொதிகள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே 1/4 பக்கெட் நீரில் 1/2 கப் வினிகரை ஊற்றி அந்த நீரில் தலையை 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் பொடுகு நீங்கி, ஸ்கால்ப்பின் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, தலைமுடியும் உதிராமல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்கள் பற்றி பெண்கள் தவறாக எண்ணுவதும், பெண்கள் பற்றி ஆண்கள் தவறாக எண்ணுவதும் மனித குணாதிசயங்களுள் இயல்பானவையாக மாறிவிட்டன.

ஆனால், சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் குற்றம் குறை கூறிக் கொண்டு திரிவது நல்லதல்ல.

நண்பர்களுடன் வெளியே சென்று வந்தால் நம்ம வீட்டு அம்மணிகளுக்கு சுத்தமாக பிடிக்காது. அதே மனைவிகள் பிறந்து வீட்டு சொந்த பந்தங்களுடன் ஓரிரு நிமிடங்கள் அதிகமாக நேரம் செலவழித்தால் ஆண்களுக்கு பிடிக்காது.

இதை மாற்றுவது என்பது சற்றுக் கடினம் தான்.

ஆனால், ஆண்கள் சில விஷயங்களை சாதாரணமாக செய்தாலும் கூட பெண்கள் அதை தவறாக தான் பார்க்கிறார்கள்.

அவற்றை பற்றி இனிக் காண்போம்…

அனுமானம்
பெரும்பாலும் ஆண்கள் யாராவது எதையாவது கூறிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் என்ன முடிவாக கூற வருகிறார்கள் என்பதை அனுமானம் செய்துவிடுவார்கள். இது பெண்களுக்கு பிடிக்காது. ஏனெனில், பெண்கள் முழுவதுமாக கேட்டப் பிறகு தான் தங்கள் பதிலை அளிப்பார்கள்.

சிறிய பதில்கள்
ஆண்கள் மணிரத்னம் போல, பெண்கள் பழைய புராணத்தை போல. ஏன் தாமதம் என்ற கேள்விக்கு ஆண்கள் “டிராபிக்” என்ற ஒற்றை வார்த்தையில் பதிலை முடித்துவிடுவார்கள். ஆனால், பெண்கள், “நான் இன்னிக்கி காலையில எழுந்து..” என ஆரம்பித்து, தன்னுடன் பயணித்தவர்கள் வரை என விலாவாரியாக தான் பதிலளிபார்கள். பதிலை இப்படி தான் மற்றவரிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள்.

கேட்பது
ஆண்களால் வெறுமென காதுக் கொடுத்து கேட்டுக் கொண்டே இருக்க முடியாது. பெண்கள் பேசும் போது, டிவி பார்த்துக் கொண்டே கேட்பது, மொபைலை நோண்டிக் கொண்டே கேட்பது என இருப்பார்கள். இதை பெண்கள் வேண்டா வெறுப்பாக ஆண்கள் நடந்துக் கொள்வதாய் எண்ணுகின்றனர்.

அபூர்வம் 
ஆண்கள், பெண்களிடம் கேள்வி கேட்பது என்பது மிகவும் அரிது. ஆனால்,. பெண்கள் அப்படி இல்லை. கேட்ட கேள்வியையே ஆயிரம் தடவை கேட்பார்கள்.

நேருக்கு நேர்
பெரும்பாலும் ஆண்களால் எதையும் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொள்ள முடியாது. ஏதேனும் சந்தேகம், பிரச்சனை என்றால் முகத்திற்கு நேராக கேட்டுவிடுவார்கள். இது, அநாகரிகமான செயல், பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என பெண்கள் சிலர் கருதுவதுண்டு.

ஒரே கேள்வி
ஒரே விஷயத்தை பற்றி பலநூறு தடவை யோசிப்பது பெண்களிடம் மட்டும் தான் சாத்தியம். நிகவுகளுக்கு செல்லும் பொது புடவை தேர்வில் இருந்து காலை உணவு சமைப்பது வரையில் பெண்கள் சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் பலமுறை யோசிப்பார்கள். இதே விஷயங்களை ஆண்கள் வேகமாக செய்தால், அவசர குணம் படைத்தவர்கள் என கூறுவார்கள்.

இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்கின்றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்….

ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?

பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ் வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது.

தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?

உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில பெண்களுக்கு உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம் தெரியப்படுத்தி, அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் திரவங்களை உபயோகிக்கலாம்.

குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?

பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும். ஆனால் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?

நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள் ஏற்பட்டு, மாத விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலுமோ தள்ளிப் போகலாம்.

கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?

கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள தண்ணீரின் சேமிப்பு காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும், மென்மையான உணர்வும் ஏற்படலாம். ஆனால் மார்பக அளவு கூட வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள் உண்டு. அதனாலும் மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.

திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?

ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும் பின்பற்றாமல் தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர் ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது.

பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?

பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற் கான பிற காரணங்கள். தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு ஏற்படலாம்.

பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?

சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும் மருத்துவரிடம் ஒருமுறை நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.

ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?

சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம் இது பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த போதும் கர்ப்பமடைகிறார்கள்.

ஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால் பைத்தியமாய்த் திரிவார்கள் என்பதும் இயல்புதான்.

ஆனால் ஆண்களைக் கிறங்கடிக்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் தந்திரங்கள்தான் எத்தனை எத்தனை! ஆண்களைப் பார்த்ததும் அவர்களுடைய நடை, உடை, பாவனைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பாருங்கள்.

அதுவே ஒரு கவிதைதான்!! ஏதோ ஒரு சினிமாப் படத்தில் ஒரு இளைஞன் சொல்வதைப் போல், அவ்ளோ நேரமும் லோக்கல் மொழியில் பேசிக்கொண்டு வரும் பெண்கள், தங்களுக்குப் பிடித்த ஆண்களைப் பார்த்ததும் ஆங்கிலத்தில் பேசிக் கொள்வார்கள்.

இதுவும் ஆண்களுக்கு ஒரு கிரக்கம் தான்! இதில் கொடுமை என்னவென்றால், இவ்வளவையும் செய்துவிட்டு அந்தப் பெண்கள் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

ஆண்களை மயக்கத்தான் இப்படியெல்லாம் செய்கிறோமா என்றுகூடத் தெரியாமல் இன்னும் சில பெண்கள் இருப்பார்கள். நாள்தோறும் நம் ஆபிஸிலேயே நாம் இதுபோன்ற செயல்களை நேரடியாகப் பார்க்கலாம். ஆண்களைக் கவர பெண்கள் செய்யும் கிறங்கடிக்கும் தந்திரங்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

இறுக்கமாக ஜீன்ஸ்
இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்து வரும் பெண்களை நாம் நாள்தோறும் பார்க்கத் தான் செய்கிறோம். அவசர அவசரமாக ஆபிஸுக்கு வருவது போல் பாசாங்கு செய்து, மெல்லிய ஸ்டைலுடன் ஒரு டான்ஸ் மூவ்மெண்ட் கொடுப்பார்கள் பாருங்கள். எப்பேற்பட்ட ராமனும் ஒரு பெர்ஸெண்ட்டாவது கிறங்கத் தான் செய்வான்!

அழகான சோம்பல்
அந்தப் பெண்களுக்கு சோர்வே இருக்காது. ஆனால் அப்படி இருப்பதுபோல், ஆண்களாகிய நமக்கு முன்னே கைகளை உயர்த்தி கழுத்தைச் சாய்த்துக் கொண்டு நாமே எதிர்பார்க்காத நேரத்தில் சோம்பல் முறிப்பார்கள். அதுவும் ஒரு அழகுதான்!

முடி படும் பாடு
எத்தனையோ சினிமாப் படங்களில் கூட இதைப் பார்த்திருக்கிறோம். ஆண்களுடன் பேசும் போது, அல்லது பேசத் துடிக்கும் போது, இந்தப் பெண்கள் தங்கள் கூந்தலை முன்னால் இழுத்துப் போட்டுக் கொண்டு அதை வாரி வாரி விடுவார்கள். இதில் சில ஆண்கள் க்ளீன் போல்டு ஆவது நிச்சயம்!

கடிபடும் உதடுகள்
தனக்குப் பிடித்த ஆண்களைப் பார்த்து உற்சாகம் ஆகும் பெண்கள், சந்தோஷத்தில் தங்கள் உதடுகளைக் கடிக்கும் அழகே தனிதான். இதில் ஆண்கள் ரொம்பவும் சொக்கித்தான் போவார்கள்!

அன்ன நடை
அந்தப் பெண்கள் ஒயிலாக நடந்து வரும் அழகில் நிச்சயமாக ஆண்களாகிய நாம் ஒரு நிமிடமாவது கவிஞர்களாகவே ஆகிவிடுவோம். அதுவும் அவர்கள் ‘கேட்வாக்’ என்னும் பூனை நடையில் இடுப்பை அசைத்து நடந்து வரும் போது, நம் இதயமும் அந்த நடைக்கு ஏற்ப தடதடவென அடிக்கும் தானே!

ஆண்களின் சட்டையில்…
நமக்குப் பிடித்த பெண்கள், ஆண்களாகிய நம்முடைய சட்டையை அணிந்து கொண்டு வருவதைப் பார்த்தால் எப்படி இருக்கும்? அந்தச் சட்டை எவ்வளவு அழுக்காக இருந்தாலும் சரி, அவர்கள் நம் கண்களுக்கு செக்ஸியாகத் தான் தெரிவார்கள். அதுக்கு அப்புறம் என்ன நடக்கும் என்பது வேறு விஷயம்!

என்ன தான் அழகு, பணம், வசதி இருந்தாலும் மனம் மற்றும் குணாதிசயங்கள் தவறாக இருந்தால் மொத்தமாக ஒருவரின் மீதான பார்வை தவிடுப்பொடியாகிவிடும். இது காதல் வாழ்க்கை மட்டுமின்றி அலுவலகம், சமூகம் என பொது வாழ்க்கையையும் வலுவாக பாதிக்கக் கூடியது.

அதிலும், பெண்களோடு பழக முயற்சிக்கும் போது ஆண்கள் வெளிப்படுத்தும் சில குணாதிசயங்கள், அவர்களை வெறுத்து ஒதுக்க செய்துவிடும். ஓவர் பில்டப் கொடுப்பது, பெண்களை வசைப்பாடுவது, மயக்கும் வகையில் பேசுகிறேன் என உடல் அழகை புகழ்வது என நிறைய விஷயங்கள் பெண்களுக்கு பிடிப்பதில்லையாம்.

ஓவர் பில்டப் 
தங்களை மிஞ்சும் அளவிற்கு ஓவர் தற்புகழ்ச்சி பாடிக் கொண்டு, தன்னழகை பற்றி பெருமைப்படும் ஆண்களுடன் டேட்டிங் செய்வதை பெண்கள் பெரிதாய் விரும்புவதில்லையாம்.

அழகை குறைக் கூறுபவன்
தங்கள் அழகை குறைக் கூறிக் கொண்டு, அதை மற்றவர் மத்தியில் கேலிக் கிண்டல் செய்யும் ஆண்களுடன் பெண்கள் நெருங்குவதே கிடையாது.

சீட்டிங் ஃபெல்லோ
பெண்களுடன் மாறி மாறி பழகும் ஆண்களிடம் இருந்து தூர சென்றுவிடுகிறார்கள். பிறகு எங்கு டேட்டிங், காதல் எல்லாம்.

தோழிகளின் புகார் 
தோழிகள் ஒரு நபர் மீது அடுக்கடுக்காக புகார் சுமத்தி, குற்றிப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டால். அந்த நபருக்கு வாழ்நாள் தடை விதித்துவிடுகிறார்கள் பெண்கள்.

தப்பு தண்டா 
தப்பு தண்டா செய்யும் இடங்களில் திரிவோர், அடுத்தடுத்து அந்நபரின் மீது எதிர்மறை எண்ணம் தோன்றுகிறது எனில், அவர்கள் பற்றி துளிக்கூட பெண்கள் நினைப்பது இல்லையாம்.

உடலழகை மட்டும் புகழுவோர்
மற்றவை விட தாங்கள் உடுத்தும் உடை மற்றும் உடல் அழகு பற்றி மட்டுமே அதிகமாய் புகழ்ந்து தள்ளும் ஆண்கள் முன்னால் சிரித்தாலும், பின்னால் வெறுக்க தான் செய்கிறார்கள் பெண்கள்.

வசைப்பாடுவோர்
அடிடா அவள, ஒதடா அவள என எப்போது பார்த்தாலும் பெண்களை வசைப்பாடி திரியும் ஆண்களை பெண்கள் வெறித்தனமாய் வெறுக்கிறார்கள்.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?”

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். “நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை”

வீரன் மகனைக் கேட்கிறான். “பின் யார் அப்பா?”

“தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்”

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். “இதோ என் அப்பா”

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும்.

ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.