December 25, 2024

இயற்கை வழியில் வெள்ளையாக வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

ஒவ்வொருவருக்கும் தான் அழகாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அதற்காக சருமம், தலைமுடி போன்றவற்றிற்கு பல பராமரிப்புக்களைக் கொடுத்து வருவோம். அதிலும் வெள்ளைத் தோலின் மீதுள்ள மோகத்தால், பலரும் தங்களின் சருமத்தையும் வெள்ளையாக்க முயற்சிப்பார்கள். குறிப்பாக சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது க்ரீம்கள் நல்லதல்ல என்பதை உணர்ந்த மக்கள், இயற்கை வழிகளை நாடுகின்றனர். நீங்கள் உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்களா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய பாட்டி வைத்தியங்களைப் பின்பற்றி வாருங்கள். இதனால் நிச்சயம் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும். சரி, இப்போது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் அந்த எளிய பாட்டி வைத்தியங்களைப் பார்ப்போமா!!!

பாதாம் 
சிறிது பாதாமை காலையில் நீரில் ஊற வைத்து, இரவில் அதன் தோலை நீக்கிவிட்டு, 2 டீஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, படுக்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

கடலை மாவு 
தினமும் கடலை மாவு தேய்த்து குளிப்பதன் மூலமும், கடலை மாவை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவுவதன் மூலமும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும். வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள்.

மாட்டுப் பால் 
தினமும் மாட்டுப் பால் கொண்டு முகத்தை பலமுறை துடைத்து எடுத்து வர, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடும், சருமத்தின் நிறமும் மேம்பட்டும் காணப்படும்.

ஆப்ரிக்காட் 
ஆப்ரிக்காட் பழத்தை மசித்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, சரும நிறம் அதிகரிக்கும்.


அரிசி மாவு மற்றும் தேன் 
2 டீஸ்பூன் அரிசி மாவில், சிறிது குளிர்ந்த டீ டிகாசனை சேர்த்து, 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

மஞ்சள், எலுமிச்சை சாறு, பால் 
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், தங்களின் சரும நிறத்தை அதிகரிக்க இந்த ஃபேஸ் பேக்கைப் போடலாம். அது சிறிது கடலை மாவுடன், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Tags

Post a Comment

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.