காந்தக் குரல் அழகி… கணீர் பாட்டழகி… கல்பனா அக்காவின் தீபா”வலி” ஸ்பெஷல்!

பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா, தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைப் பாடலாகப் பாடி அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தீபாவளி ஸ்பெஷலாக தனது பேஸ்புக் பக்கத்தில், ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலைப் பாடி ரசிகர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா.

தமிழ் சினிமாவின் பிரபல பாடல்களை தன் கான குரலில் பாடி பேஸ்புக் பக்கத்தில் அப்லோட் செய்வது தான் கல்பனா அக்காவின் தலையாய வேலை. கல்பனா பேல்ஸ் பிறந்தது யாழ்பாணத்தில். மேற்படிப்பை இந்தியாவில் பயின்ற இவர், தற்போது ஆஸ்திரேலியா சென்ற இவர் மெல்பேர்ன் பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது முழுப்பெயர் கல்பனா பாலேஸ்வரன். அவ்வப்போது தனது காந்தக் குரலால் பாடல்களைப் பாடி ரசிகர்களைக் குஷியாக்கும் கல்பனா, கபாலி ரிலீசான சமயத்தில் நெருப்புடா பாடி அனைவரையும் அதிர வைத்தார்.

இவரை ரசிகர்கள் செல்லமாக அக்கா என்றே குறிப்பிடுகின்றனர். இவருக்கென பேஸ்புக்கில் ரசிகர் பக்கம் எல்லாம் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படியாக சும்மாவே பாடல்களைப் பாடி அசத்தும் கல்பனா அக்கா, தீபாவளியும் அதுவுமாய் தன் ரசிகர்களை ஏமாற்றுவாரா? இதோ தனது தீபாவளி வாழ்த்துக்களைப் பாடலாகவே பாடி பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். என்ஜாய் மக்களே…!

பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா, தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைப் பாடலாகப் பாடி அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.