போலீஸ் இப்படி ஒரு காதலா என்று ஆழ்ந்து யோசிக்கின்றனர்.. மூன்றவது காதலனிடம் போய் அழுது முதல் காதலனை கொன்ற காதலி

ரித்திகா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பவர்.( பெயர்கள்  மாற்றப்பட்டுள்ளது )இவரின்  முதல் காதலன் வினோ. அதே கல்லூரியில் படிப்பவர ரித்திகாவிற்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஒருவருடம் மட்டுமே ஒருவனை காதலிப்பது. இவரின் இன்னொரு பாலிசி ஒரே நேரத்தில் மூவரை காதலிப்பது.!?  அதில் பெட்டர் யாரோ அவருடன் காதலை தொடர்வது. மற்ற இருவரை கழட்டி விடுவது..!கழட்டி விட்ட இடத்திற்கு மேலும் இருவரை இண்டர்வ்யூ  பண்ணி காதலில்  இணைப்பது ( கண்ணைக் கட்டுதுல்ல )
முதல் காதலன் ஒரு வேலைபார்த்தான் அதாவது ரித்திகாவின் புது காதலர்கள் யாரென்று துப்பறிந்து ரித்திகா பற்றி போட்டு கொடுப்பது…( கல்லூரியில் படிக்கிறதை தவிர பக்கிங்க எல்லாம் வேலையும் பண்ணியிருக்குத்துங்க..) இந்த விஷயம் தெரிந்த இரண்டு காதலர்கள் எஸ்கேப்.. ! கடுப்பாகி விட்டாள் காதலி ரித்திகா …!
மூன்றவது காதலனிடம் போய் அழ, என்ன செல்லம் பண்ணனும் என்று உருக, வினோவை கூலிப்படை வைத்து போட்டுத் தள்ளனும் என்று கூற ,சென்னை புறநகரில் ‘குரங்கு குப்பன்’ (பொதுநலம் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது )  என்பவர் மூலம் பேசி ஐம்பதாயிரம் பணமும் கொடுத்து விட்டான். வினோ கோட்டூர் புறம் ரயில் நிலையத்தில் காத்திருக்க ‘குரங்கு குப்பன்’ ஆட்கள் பைக்கில் வந்து பிச்சுவா கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.வினோவை மருத்துவ மனையில் சேர்த்தார்கள்.
ஆபத்தான நிலையில் வினோ..! போலீஸ் விசாரித்து,  ரித்திகா மற்றும் மூன்றாவது காதலனை கைது செய்தது. இதில் ஒரு திருப்பம் என்ன வென்றால். எதற்கும் இருக்கட்டுமே என்று ரித்திகா ஐந்தாவது காதலனிடமும் வினோவை முடிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அவனும் புறநகர் பகுதியில் ‘நாய் சேகர்’ என்பவரிடம் ( தன்னலம் கருதி பெயர் மாற்றப் பட்டுள்ளது.) ஐம்பதாயிரம் அட்வான்ஸ் கொடுத்திருகிறார். இப்போது அவரும் போலீசில்.. !! போலீஸ் இப்படி ஒரு காதலா என்று ஆழ்ந்து யோசிக்கின்றனர்..!!என்னமோ போங்க..!!

ரித்திகா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பவ

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.