12 வயதிலேயே பக்குவம் அடைந்து விடுவதால் இவர்களுக்கு இதெல்லாம் தடையில்லை!

தற்கால குழந்தைகள் உடல் மற்றும் அறிவு ரீதியாக 12 வயதிலேயே பக்குவமடைந்து விடுவதால், குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமல்ல என புதிய சட்டமொன்றை மலேசியா அரசு இயற்றியுள்ளது.

12 வயதிலேயே பக்குவம் அடைந்து விடுவதால் குழந்தை திருமணம் குற்றமல்ல: மலேசியா அரசு புதிய சட்டம் கோலாலம்பூர்: மலேசியா பாராளுமன்றத்தில் குழந்தைத்திருமணம் குற்றமல்ல என புதிய சட்டம் இன்று இயற்றப்பட்டது.இதுகுறித்த விவாதம் மலேசியா பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. விவாதத்தின்போது மலேசிய எம்.பி ஒருவர் கூறுகையில் “ தற்போதைய காலத்தில் சிறுமிகள் 9 அல்லது 12 வயதிலேயே பருவமடைந்து விடுகின்றனர். இந்த காலகட்டத்தில் உடல் மற்றும் மனோரீதியாக அவர்கள் திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.

இந்த காலகட்டத்தில் அவர்கள் 18 வயது பெண் போலவே காட்சியளிக்கின்றனர். இதனால் திருமணத்திற்கு வயது ஒரு தடையாக இல்லை. குடிமையியல் மற்றும் முஸ்லீம் சட்டங்களின்படி ஆண், பெண் இருவரும் 18 வயதுக்குக் குறைவாகவே திருமணம் செய்து கொள்கின்றனர்.

குடிமையியல் சட்டத்தின்படி திருமண வயது 18 ஆக இருந்தாலும், மாநில முதல்வர்களின் அனுமதி பெற்று 16 வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர்” என்றார். இந்த புதிய சட்டத்திற்கு பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.