16 வருடங்களாக இருட்டறையில் நிர்வாணமாக சிறைப்படுத்தப்பட்ட பெண்.

இளம் வயதில் ஏற்பட்ட காதல் காரணமாக 20 வயதில் தாய்மையடைந்த பெண்ணொருவரை, 16 வருடங்களாக இருட்டறையில் நிர்வாணமாக சிறைப்படுத்திய கொடிய சம்பவமொன்று பிரேசிலில் பதிவாகியுள்ளது.

பிரேசிலின் புறநகர் பகுதியான உருபிரேடமா எனும் பகுதியில், ஒதுக்கு புறமாக இருந்த வீடொன்றில் 36 வயதான பெண்ணொருவர் சுமார் 16 வருடங்களாக சிறைப்படுத்தப்பட்டு, கொடூரமான முறையில் வஞ்சிக்கப்பட்டுள்ள குற்றத்திற்காக குறித்த பெண்ணின் சகோதரருக்கு 8 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் மரியா லூசியா எனும் பெண்ணின் சகோதரர் மற்றும் தந்தை என்போர் இணைந்து,

குறித்த பெண் 20 வயதில் ஏற்பட்ட காதல் காரணமாக தாய்மை அடைந்தமையினால், அவரை தண்டிப்பதற்காக, 3x3 மீற்றர் அளவான அறையில், மின்சார வசதி, மலசலக்கூட வசதிகள் இல்லாமல், கயிற்று கட்டிலொன்றுடன் சுமார் 16 வருடங்களாக அடைத்து வைத்து, விலங்குகளுக்கு போல் இரண்டுவேளை உணவு மாத்திரம் கொடுத்துள்ளனர். மரியா லூசியாவிற்கு பிறந்த ஆண் குழந்தையை வேறொருவருக்கு தத்து கொடுத்துள்ளதோடு, குறித்த பெண் வெளியில் வருவதற்காக சத்தமிட்டுள்ள நிலையில் அவரது ஆடைகளையும் பறித்து சுமார் 16 வருடங்கள் அவரை நிர்வாணமாகவே வைத்துள்ளனர். இந்நிலையில் மரியா லூசியா தொடர்பான தகவல் அயலவர்கள் மூலம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெறவே,

குறித்த பெண்ணை மீட்டுள்ளதுடன், அவரின் நிலைமைக்கு காரணமான சகோதரருக்கு 8 வருட சிறை தண்டனை விதித்துள்ளதோடு, அவரின் தந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரை கைது செய்ய முடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு மரியா லூசியாவின் 15 வயதான மகன் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.