August 2017

திருமணம் ஆகும் முன்னரே, பெண்களுக்கு தங்கள் கணவனாக வரப்போகும் நபர் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்ற ஆசைகள் நிறைய இருக்கும். ஆரம்பத்தில் அழகு சார்ந்திருக்கும் இவை, முதிர்ச்சி அடைந்த பிறகு மனம் சார்ந்து மாற ஆரம்பிக்கிறது.

அனைவருக்கும், அவர்கள் விரும்பியவாறு துணை அமைவதில்லை. ஆகவே, திருமணதிற்கு பிறகு மீண்டும் இந்த பட்டியல் தூசுத் தட்டப்பட்டு, அதில் ஒருசில மாற்றங்கள் ஏற்படுத்தி, திருமணத்திற்கு பிறகு நீங்கள் இப்படி தான் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் இருந்தால் தாங்கள் சந்தோசமாக இருப்போம் என பெண்கள் சில விஷயங்கள் வைத்திருக்கின்றனர்.

அதில், அவர்கள் கூயிருக்கும் பத்து விஷயங்கள் குறித்து இனிக் காண்போம்...
(post-ads)
விஷயம் #1 உதவி செய்யனும்! பசங்க வேலை, பொண்ணுங்க வேலை என்று பேதம் பார்க்க கூடாது. சமையலாக இருந்தாலும், சரி, துணி துவைப்பதாக இருந்தாலும் சரி.

விஷயம் #2 டென்ஷன்! வேலை இடத்தில் இருக்கும் டென்ஷனை தங்கள் மீது காண்பிக்கக் கூடாது. இது எங்களை மனதளவில் எவ்வளவு பாதிக்கிறது என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.

விஷயம் #3 அரவணைப்பு! எப்போதும் தங்கள் மீது ஓர் அரவணைப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களோடு ஒப்பிடுகையில் தங்கள் மீது ஒரு சதவீதம் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விஷயம் #4 ஓபன்! திறந்த மனதுடன் பேசுகிறேன் என சொல்லி, மனம் வந்தும்படி பேசக் கூடாது. சில விஷயங்கள் நீங்கள் தமாஷாக பேசினாலும், அந்த வார்த்தை எங்களை எவ்வளவு வேதனை படுத்தும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

விஷயம் #5 பொறுப்பு! கல்யாணம் ஆகிவிட்டது என்ற பொறுப்பு இருக்க வேண்டும். குடும்ப தலைவன் என்பது போல இருக்க வேண்டும்.

விஷயம் #6 நண்பர்கள்! நண்பர்களுடன் மட்டும் நேரம் செலவழிக்காமல், தங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். உங்களை போல நாங்களும் தோழிகளுடன் ஊர் சுற்றிவிட்டு நள்ளிரவு வந்தால் கதவு திறந்து விடுவீர்களா?

விஷயம் #7 தண்ணி, தம்மு! முன்பு எப்படி இருந்தாலும் ஓகே, திருமணத்திற்கு பிறகு தண்ணி, தம்மு போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

விஷயம் #8 கால் அட்டன்ட்! எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஒருமுறை கால் அட்டன்ட் செய்து என்ன எது என்றி சொல்லிவிட்டால் நிம்மதி. நீங்கள் தாமதமாக வரும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்குள் ஏற்படும் பயத்தை சற்று யோசித்து பாருங்கள்.

விஷயம் #9 இன்ப அதிர்ச்சி! உணவு, உடை, பரிசுகள் என அவ்வப்போது இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் தர வேண்டும். விலையுயர்ந்த பொருட்கள் தான் வேண்டுமென்று இல்லை. எங்கள் மனதிற்கு பிடித்தவையாக இருந்தாலே போதுமானது.

விஷயம் #10 பில் கட்டுவது, காய்கறி வாங்கி வருவது என சில வேலைகளை தாமாக முன்வந்து செய்துக் கொடுக்க வேண்டும்.

சில இராசிகள் இயல்பாகவே சக்தி வாய்ந்து காணப்படும். அந்த இராசிகள் மத்தியில் சில பொதுவான குணங்கள், பண்புகள் அவர்களை வலிமையாக வைத்திருக்கும் என கூறப்படுகிறது.

அப்படி பட்டியலிடப்பட்டிருக்கும் இந்த ஐந்து ராசிகளில் உங்களுடைய ராசியும் இருக்கிறதா?

அப்படி இருந்தால், இந்த ரகசிய குணங்கள், பண்புகள் உங்களிடம் இருக்கிறதா?

அல்லது உங்களின் சக்தியாக, வலிமையாக திகழ்கிறதா? என அறிந்துக் கொள்ளுங்கள்....
(post-ads)
மேஷம்!
இந்த ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்கள். இவர் எந்த உயரத்தையும் எட்டிப்பிடிக்கும் குணம் கொண்டிருப்பார்கள். இதனால், கூடுதல் உயரம் அடையும் வாய்ப்புகள் உண்டு. எனர்ஜி லெவல் தான் இவர்களது மைன்ஸ் பாயின்ட். மேலும். இவர்கள் கொஞ்சம் அடம்பிடிக்கும் ஆட்களாகவும் இருப்பார்கள். இந்த ஒரு குறையை இவர்கள் நிவர்த்தி செய்துக் கொண்டால் இவர்கள் தான் டாப்பில் வரலாம்.

கடகம்!
வலிமை வாய்ந்த இராசி. அன்பும், அக்கறையும் இவர்களது கூடுதல் பலம்.சின்ன, சின்ன விஷயங்களை தங்கள் பாதையில் தாக்கம் ஏற்படுத்த இவர்கள் விடமாட்டார்கள். இவர்களது உறுதியான குணம் எதையும் வென்று காட்ட காரணியாக இருக்கும். இதில் இவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். தன்னை தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் பண்பு கொண்டுள்ள இவர்கள் தங்களால் எதெல்லாம் சாதிக்க முடியும் என்றும் அறிந்து வைத்திருப்பார்கள்.

சிம்மம்!
ஆதிக்கம் நிறைந்த இராசி. தங்கள் ராசி பிறப்பிலேயே ஆதிக்கம் கொண்டதாக கருதுவார்கள். ஊக்கசக்தி கொண்ட இவர்கள், ஒவ்வொரு முறையும் அவர்களது வேலைகளை கச்சிதமாக முடிக்காமல் ஓயமாட்டார்கள். யாராக இருந்தாலும் தங்கள் பேசும் திறனால் அவார்களது பார்வையை மாற்றிவிடுவார்கள். இவர்களது ஒரே குறை கோபம், ஆக்ரோஷமான கோபம்!

விருச்சிகம்!
 விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பாகவே தீவிரமாக செயற்படுபவர்கள். இந்த குணத்தால் தங்கள் கனவை ஓயாமால் பின்தொடர்வார்கள். கடுமையாக உழைக்க கூறுவார்கள். மேலும், இவர்களை சுற்றி இருக்கும் மக்கள், இவர்களுடன் இருப்பதை விரும்புவார்கள். அன்புடன், அன்பின் வழியில் நடப்பார்கள். எதையும் கலந்தாய்வு செய்து, ஆராய்ந்து கணக்கிடுவதில் இவர்கள் கில்லி.

கும்பம்!
அறிவாற்றல் காரணத்தால் வலிமையான ராசியாக திகழ்பவர்கள் கும்ப ராசிக்காரர்கள். வயதுக்கு அதிகமான ஸ்மார்ட்னஸ் இருக்கும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கான தீர்வை கண்டறிந்து வருவதில் சிறப்பாக செயற்படுவார்கள். அசௌகரியமான சூழலில் இருந்து தங்களை தாங்களே வெளிக் கொண்டுவருவதில் சிறந்து திகழ்வார்கள்.

மகன்கள் அம்மாவுக்கும், மகள்கள் அப்பாவுக்கும் தான் அதிகமாக வக்காளத்து வாங்குவார்கள். ஓர் தகப்பனாக உங்கள் மகளிடம் தினமும் பல்வேறு விஷயங்கள் பற்றி நீங்கள் கூற வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.

எல்லா அப்பாக்களின் குட்டி தேவதை அவர்களது மகள் தான். ஆனால், இதை நீங்கள் வெளியேவும் வாயை திறந்து சொல்ல வேண்டும். இயல்பாகவே பெண் குழந்தைகள் அப்பா செல்லமாக தான் இருப்பார்கள். மேலும், ஆண் குழந்தைகளை விட தங்கள் தந்தையை பற்றி பெருமிதமாய் பேசுவதும் பெண் குழந்தைகள் தான்.
(post-ads)
உங்களிடம் இருந்து சில ஆசை வார்த்தைகள், உத்வேகப்படுத்தும் பொன் மொழிகளை பெண் குழந்தைகள் எப்போதும் எதிர்பார்பார்கள். மேலும், அம்மாவை விட, அப்பாவின் சொல்லுக்கு தான் பெண் குழந்தைகள் அதிகமாக கட்டுப்படுவார்கள். இதற்காகவாவது நீங்கள், அவர்களை செல்லம் கொஞ்சுவதற்கு மேலாக ஓரிரு உத்வேக வார்த்தைகள் சொல்லி ஊக்கமளிக்க வேண்டும்.

முகநூலில் முகப்பு படம் வைப்பதில் இருந்து, பேருந்தின் நடுவில் கம்பியை பிடித்து நிற்கும் வரை பல இடங்களில் பெண்கள் இன்றளவும் அஞ்சி தான் நடந்து வருகிறார்கள். எனவே, ஓர் தகப்பனாக உங்கள் மகளுக்கு நீங்கள் தினமும் தைரியத்தை ஊட்ட வேண்டும். இந்த தைரியம் தான் பின்னாளில் உங்கள் பெண் எங்கு சென்றாலும் வெற்றியுடன் திரும்ப முக்கிய காரணியாக இருக்கும். எத்தனையோ பெண்கள் தைரியம் குறைவாக இருப்பதால் தான் தங்கள் திறமையை வெளிப்படுத்தாமலேயே இருக்கிறார்கள்.

செயல் முறை அறிவும், கலாச்சாரமும் கற்றுக் கொண்டாலே, இவ்வுலகின் எந்த மூலை, இடுக்கிலும் சென்று சாதித்து வரலாம். பட்டறிவு மட்டுமின்று செயல் முறை அறிவையும், மனிதர்களை படிக்கவும் உங்கள் மகளுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

எல்லா மகள்களும் தங்கள் அப்பா ஓர் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். தங்களுடைய அப்பா நேர்மையான, உன்னதமான, மற்றவர்களுடைய உணர்வை புரிந்துக் கொள்ள தெரிந்த நல்ல ஹீரோவாக இருக்க வேண்டும் என்று தான் அனைத்து மகள்களும் விருப்புவார்கள்.

நமது தமிழக கலாச்சாரத்தில் மீசை என்பது ஆண்களின் வீரத்தையும், ஆண்மையையும் குறிக்கும் ஓர் இலட்சினையாக கருதப்பட்டு வரும் ஒன்று.

இடையே சற்று டீசன்ட் லுக், ஸ்மார்ட் லுக் என மீசை வைப்பதை தவிர்த்து வந்த நமது இளைஞர்கள் இப்போது மீண்டும் டிஸைன், டிஸைனாக மீசை, தாடி வைக்க துவங்கிவிட்டனர். இந்த தலைமுறை இளம் பெண்களுக்கு மீசை வைத்த ஆண்களை மிகவும் பிடிக்கிறதாம்.
(post-ads)
மீசை வைத்துள்ள ஆண்கள் தான் மிகவும் செக்ஸியாக தோற்றமளிக்கின்றனர் என்றும் இன்றைய இளம் தலைமுறை பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆண்களின் மீசை மீதான ஆசைக்கான நான்கு காரணங்களும் பகிர்ந்துள்ளனர்.

காரணம் #1 மீசை முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. பதின் வயது ஆண்களாக இருப்பினும் கூட மீசை ஆண்மை அடைந்ததை வெளிகாட்டும் அறிகுறியாக தென்படுகிறது. இது, அவர்கள் மீது ஈர்ப்புக் கொள்ள ஓர் காரணியாக விளங்குகிறது என சில பெண்கள் கூறியுள்ளனர்.

காரணம் #2 பொதுவாகவே மீசை வைத்த ஆண்கள் தான் முழுமையான ஆண்களாக காணப்படுகின்றனர். குறைந்தபட்சம் ட்ரிம் செய்த மூன்று நாள் மீசையாவது இருந்தால் தான் அது ஆண்களுக்கு அழகு.

காரணம் #3 நமது ஊர்களில் மீசை ஆண்களின் வீரம், ஆண்மையை வெளிப்படுத்துகிறது என்று கூறுவார்கள். ஆனால், அதற்கும் மேல் அது அவர்களது துணிவை எடுத்துக் காட்டும் கருவியாக இருக்கிறது. மேலும், ஸ்டைலாக மீசை வைப்பது அவர்களை செக்ஸியாக உணர வைக்கிறது.

காரணம் #4 மீசை மட்டுமல்ல, ஆண்கள் என்றாலே முகத்தில் சற்று முடி இருக்க வேண்டும். மூன்று நாள் தாடி, மீசை தான் ஆண்களை ஆணாகவே எடுத்துக் காட்டுகிறது. இல்லையேல் குழந்தை போன்ற தோற்றம் தான் இருக்கும். அடடே!!! அப்பறம் என்ன மீசையை தீனி போட்டு வளர்க்க ஆரம்புச்சிடுங்க!

மக்களுக்கு கண்ணாடியை அடிப்படையாக கொண்டு ஏராளமான நம்பிக்கைகள் உண்டு.

கண்ணாடியை முன்னிருத்தி பல அபத்தங்களையும் கடைபிடித்து வருகிறார்கள்.

நம் பிம்பத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி, உடைந்தால் நமக்கு எதாவது கெட்டது நடக்கும் என்ற சிலரது நம்பிக்கை தவறானது.

இங்கே கண்ணாடி குறித்து இன்னும் வேறென்ன கற்பிதங்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

பிறந்த குழந்தை :
பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்துக்கு கண்ணாடியை பார்க்க கூடாது. குழந்தைகள் பிறந்ததிலிருந்து ஒரு வருட காலத்துக்கு அவர்கள் கண்ணாடி பார்க்க கூடாது என்பது அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூறப்பட்டது என சொல்லப்படுகிறது. குழந்தைகள் பிறந்து அந்த ஒரு வருடம் தவழ்வது குப்புறவிழுவது, முட்டி போடுவது என ஒவ்வொன்றாக கற்று கொள்ளும் கால கட்டம். கண்ணாடி கையில் கிடைத்தால் என்னாகும்? கீழே விழுந்து உடையும். இதனால் குழந்தைக்கு அபாயம் தானே.
(post-ads)
கண்ணாடியில் தெரியும் வருங்கால கணவன்!
தன் வருங்கால கணவன் யாரென்று தெரிய வேண்டுமாயின், ஒரு பெண் ஆப்பிளை மென்றவாறு கூந்தலை வாரிய படி கண்ணாடியை பார்த்தால் அவளின் வருங்கால கணவனின் முகம் அவள் தோளுக்கு பின்னால் நிற்பது போல கண்ணாடியில் தெரியும். பழைய காலத்தில் இங்கிலாந்து நாட்டில் ஹலோவீன் நாளன்று இளம்பெண்கள் கயிற்றில் வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும் ஆப்பிளின் தோலை வாயால் உரித்து எடுக்க, அது கீழே விழுந்து ஒரு கண்ணாடி மூலமாகப் பார்த்தால் அது எதேச்சையாக ஏதோ ஒரு எழுத்து வடிவத்தை ஒத்திருக்குமாம். அது வருங்கால கணவன் பெயரின் முதல் எழுத்து என நம்பப்பட்டது. அதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தனர். அது நாளாக நாளாக மேற்குறிப்பிட்ட நம்பிக்கையாக உருவெடுத்து உள்ளது.

அம்மை நோய் தாக்கியிருக்கும் போது கண்ணாடி பார்க்க கூடாது
அம்மை நோயின் போது கண்ணாடியை பார்த்தால் நோய் இன்னும் கொடுரமாகும். இந்த நம்பிக்கை உருவான விதம் அனுபவத்திலிருந்து எழுந்தது. அம்மை நோயின் போது முகத்திலும் உடலின் மற்ற பாகங்களிலும் கொப்பளங்கள் உருவாகி இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் கண்ணாடியில் முகத்தையும் உடலின் மற்ற பாகங்களையும் பார்த்தால் கை சும்மா இருக்குமா? கண்டிப்பாக கொப்பளங்களை கிள்ள செய்யும். இதனால் அம்மை நோயின் தாக்கம் இன்னும் அதிகமாகும். வலியும் அதிகரிக்கும். எனவே தான் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டன.

 வாசலில் கண்ணாடி கூடாது :
 வீட்டு வாசலில் கண்ணாடியை வைத்தால் கெட்ட ஆவிகள் பேய் பிசாசுகள் வராது என்ற நம்பிக்கையின் பின்புலம் சீனாவில் துவங்கியிருக்கிறது. சீனர்களின் எல்லா குடியிருப்புகளின் வாசலில் எல்லாமே கண்ணாடி மாட்டப்பட்டிருக்கும். என்னவென்று ஆராய்ந்தால் எல்லாமே சீன வாஸ்துசாஸ்திரம்தான். அதாவது கெட்ட சக்திகளை திசை திருப்ப வாசலில் வைக்க படுவதாக அவர்கள் நம்புகிறார்கள். அதாவது வீட்டின் சில இடங்களில் கண்ணாடி வைக்கலாம் சில இடங்களில் வைக்க கூடாது. எல்லாவற்றுக்கும் காரணம் வீட்டின் மூலைகள் பூமியின் காந்த திசைகளை வைத்து கட்டப்படிருப்பதாகவும் அதனால் உண்டாகும் ஈர்ப்பு சக்தி அதிர்வலைகளை உண்டாக்கி நல்ல கெட்ட சக்திகளை உருவாக்கும் என நம்பப்படுகிறது.

கண்ணாடியில் மாட்டிக் கொள்ளும் ஆத்மா :
ஒருவர் இறந்து விட்டால் அவரின் வீட்டிலோ அல்லது அறையிலோ இருக்கும் கண்ணாடியை துணிகளை கொண்டு மூடி வைக்க வேண்டும். இல்லையெனில் இறந்தவரின் ஆத்மா வெளியே செல்ல முடியாமல் கண்ணாடியின் பின்னால் மாட்டி கொள்ளும். பிம்பத்தின் பிரதிபலிப்பு எப்படி உருவாகுகின்றது என்பதன் அடிபடை தெரியாமல் இருந்ததன் விளைவாக கண்ணாடிக்கு பின்னால் இன்னொரு உலகம் இருப்பது போன்ற ஒரு கற்பனை நம்பிக்கையாக உருவாகி இருக்கலாம். ஆனால் கண்ணாடி ஒளியை உள்வாங்காத ஒரு பொருள் என்பதுதான் நிஜம்.

(post-ads)
ஜோதிடத்தில் ரிஷபம், சிம்மம், மகரம் மற்றும் மீனம் போன்ற ராசிகள் மட்டும் தான் அதிக அன்பாக இருப்பார்கள் என்றும் அவர்கள் மட்டுமே அதிர்ஷ்டசாலி ராசிகள் என்றும் கூறப்படுகிறது.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் மீதும் உணர்வுப் பூர்வமான பாசத்தை வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் அன்பிக்குரிய பிரதிபலனை எதிர்பார்க்கும் போது, சில வேளைகளில் ஏமாற்றம் கூட அடைவார்களாம்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் தன்னிடம் மரியாதை கொண்டவர்கள் மீது அதிக நம்பிக்கையும், அன்பும் செலுத்துபவராக இருப்பார்கள். இவர்கள் தனது இல்வாழ்க்கையில் இருக்கக் கூடிய பாச உணர்வுகளுக்கும், ஒற்றுமைக்கும் ஏங்குபவராக இருப்பார்கள்.

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் ஓரளவு மறைவின்றி எதையும் வெளிக்காட்டும் நல்ல குணத்தை கொண்டவராக இருப்பார்கள். சலிக்காமல் செய்யும் மனப்போக்கை கொண்ட இவர்களுக்கு ஏமாற்றம் என்பது மட்டும் பிடிக்காது.

ஓரளவு மறைவின்றி எதையும் வெளிக்காட்டும் நல்ல குணத்தை கொண்டவராக இருப்பார்கள்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் இயற்கையான உணர்வுகளுடன் கூடிய அதிக அன்பை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் அனைவரிடமும் இயல்பான அன்பை காட்டும் குணத்தை உடையவர்களாக இருப்பார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

(post-ads)
மனைவி என்பவள் சிலருக்கு நல்ல தலைவியாகவும், சிலருக்கு தலைவலியாகவும் அமைகிறார்கள். அன்பார்ந்த மனைவிகள் தங்கள் கணவன் மற்றும் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாக செய்யும் விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். நாய் குணம் மாறாது என்பது போல, ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், வீட்டில் மனைவியிடம் பொறுமை இருந்தால் அந்த வீட்டில் சண்டைக்கு பதிலாக சந்தோஷம் பொங்கி வழியும். அன்பார்ந்த மனைவியிடம் இருக்கும் சிறந்த குணம் பொறுமை!

சில மனைவிகள் அவர்களது கணவனை மட்டும் தான் விரும்புவார்கள். புரியவில்லையா? அவரது வேலை, பணம், சொத்து, ஆடம்பரம் போன்றவற்றை விடுத்து, அவரது மனதை மட்டுமே விரும்புவார்கள்.

கணவரை மனதளவில் கூட ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் மனைவிக்கு இருக்காது. உறவு சார்ந்து மட்டுமில்லாது. கணவனுக்கு தெரியாமல் எதையும் செய்யமாட்டார்கள். தான் செய்யும் எந்த ஓர் செயலும் கணவனை பாதித்துவிடக் கூடாது என மிக கவனமாக இருக்கிறார்கள்.

கணவன் தவறு செய்தால் திட்டும் முன்னர், மன்னிக்கவும், அந்த தவறினால் ஏற்படும் தாக்கம் மற்றும் விளைவுகள் பற்றி எடுத்துக் கூறி மாற்ற முனைவார்கள். மேலும் அலுவலகத்தில் இருந்து கோபமாக வீட்டிற்கு வரும் கணவரை நச்சரிக்காமல் அவர்களிடம் பக்குவமாக  பேசி அவர்களை அமைதி படுத்துவார்கள்.

தன்னலமற்று, குடும்பத்தின் மீது அதிக அக்கறை செலுத்தும் மனைவி. எந்த ஒரு செயல்பாட்டிலும், குடும்பம், கணவன், குழந்தைகளுக்கு என்ன நல்லது என பார்த்து, பார்த்து செய்வார்கள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் மேலும் காட்டும் அக்கறையில் தங்கள் காட்ட மாட்டார்கள். குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைக்கும் பெண்கள் தங்கள் உடல் நலத்தில் மேல் அக்கறை காட்டுவதில்லை.

அறிவு ரீதியாக, உணர்ச்சி ரீதியாக சமநிலையில் செயல்படக்கூடியவர்கள் பெண்கள். இன்பம், துன்பம் இரண்டையும் ஒரே பார்வையில் கண்டு, வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் பெண்கள் இவர்கள். மன அளவில் கணவனுக்கு பெரியளவில் உறுதுணையாக இருப்பார்கள்.

தன் கணவனின் நிலையை கண்டறிந்து, எது வேண்டியது, எது வேண்டாதது என புரிந்து செயல்படக் கூடியவர்கள். தங்கள் வாழ்க்கையின் சுதந்திரத்தை கெடாமால் பார்த்துக் கொள்ளும் வீட்டு சாமி என கூறலாம். தன் சுதந்திரம் என்ன என்று அறிந்த பெண்களால் மட்டுமே இதை சரியாக செய்ய முடியும்.

(post-ads)
என்னதான் காதலித்தாலும், அன்புக் காட்டினாலும், ஒருக்கட்டதிற்கு மேல் ஆண்கள் வேறு பெண்களை சைட் அடிக்க சென்றுவிடுவார்கள் என ஆண்கள் மீது பெண்களுக்கு பொதுவான கருத்து ஒன்றிருக்கிறது. ஆனால் அந்த நேரங்களில் ஆண்களின் ஒரு அணைப்பு போது பெண்களை சமாதானம் செய்வதற்கு.

கட்டிப்பிடிப்பது என்பது உணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஓர் வைத்தியம் என்று கூட கூறலாம். மிகவும் மகிழ்ச்சியான, துக்கமான தருணங்களின் போது யாராக இருப்பினும் கட்டியணைத்துக் கொள்வது மனிதர்கள் மத்தியில் இயல்பு தான்.

உறவு, காதல் என வரும் போது கட்டியணைப்பதில் பல விதம் உள்ளன. ஒவ்வொரு மாதிரி கட்டியனைப்பதற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. காதல் உணர்வு பெருக்கெடுக்கும் போது ஆண்கள் வித விதமாக கட்டிபிடிப்பது உண்டாம்.

ஒரு கையில் தோளில் சாய்த்துக் கொள்வது போல கட்டிப்பிடிப்பது, ஒருவர் சார்ந்து உணர்ச்சிபூர்வமாக இருக்கும் நிலை அல்லது வெறுமென கட்டிப்பிடிப்பது போன்றதாகும்.

மனதில் நிறைந்த மகிழ்ச்சியை உங்களிடம் தான் முழுமையாக பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என காத்திருந்து அணைக்கும் போது ஆண்கள் இவ்வாறு வேகமாக கட்டியணைப்பதுண்டு.

உங்களை நீண்ட நாள் பிரிந்திருந்து அல்லது அதிகளவு மிஸ் செய்தது போன்ற உணர்ச்சி அதிகரித்திருந்தால் தூக்கிப்பிடித்து கட்டிப்பிடிப்பார்கள்.

காதல் சார்ந்து உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில் இருக்கும் போது ஆண்கள், கண்களை பார்த்தவாறு கட்டிப்பிடிப்பது உண்டு.

வெட்கம் அல்லது நாணம் எட்டிப்பார்க்கும் போது ஆண்கள் தலைகள் ஒட்டியிருப்பது போன்று கட்டியணைப்பார்கள்.

ஆண்களுக்கு பிடித்த விஷயத்தை துணை செய்யும் போது, இறுக்கமாக கட்டித்தழுவி உடலோடு உடல் பிணைந்தது போல கட்டியணைப்பார்கள். இது மிகுதியான ரொமாண்டிக் சூழலிலும் ஏற்படலாம்.

பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர்களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன்ற உணர்வுகளை சாந்தப்படுத்த வேண்டும் அல்லது வெளியேற்ற வேண்டும். சாந்தபடுத்துதல் என்றால் நட்போடு அணுகுதல் என்று அர்த்தம். ஆனால் சாந்தபடுத்துதலை விட வெளியேற்றுவதே நல்லது.

பொதுவாக பாலியல் உணர்வுகளை சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாலே அது வேகமாக மேலே கிளம்பி, பிறகு மெல்ல சாந்தமாகி விடும்.
(post-ads)
உதாரணமாக ஒரு சிறு வயது பையன் மிகவும் துடிப்பாக விளையாட்டுப் பொருட்களை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறான் அல்லது கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்களை நீங்கள் மூர்க்கமாக அடக்க நினைத்தால் என்ன ஆகும்? அது மேலும் மேலும் கூடிக்கொண்டே தான் போகும் அல்லது அது அடங்கியது போல நடிக்கும்.

ஆனால் இப்படி விளையாடும் பொழுதும், பேசும்பொழுதும், அவனை சற்று வெறுமனே, எதுவும் கூறாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள். அவன் சற்று போக்கிரித்தனமாக விளையாடுவான். இல்லை மேலும் அசிங்கமாகப் பேசக்கூடும். அந்த எல்லையை அடைந்தவுடன் அவன் கீழே இறங்கித்தான் வரவேண்டும் இல்லையா?

ஆகவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாலுணர்வைக் கண்டிக்காமல், அடக்காமல் அதன் போக்கை மனக்கண்ணுள் சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருங்கள். இப்படித்தான் அதைச் சாந்தபடுத்த முடியும். இப்படிச் சாந்தபடுத்திய பாலுணர்வுச் சக்தி வேறு வகையில் மெல்ல மாறிவிடும்.

அப்படியும் சாந்தபடுத்த முடியவில்லை என்றால் அதன் போக்கிலேயே நீங்களும் சென்று விடுங்கள்! சில காலம் சென்று அது தானே சாந்தநிலைக்கு வந்து விடும். தேவை உங்களுக்கு விழிப்புணர்வு தான். எதிலும் இயந்திரத்தனமாக செயல்படாதீர்கள். குற்ற உணர்வு தேவை இல்லாதது.

காதல்... எல்லோருக்கும் எல்லா வயதிலும் தேவையான உணர்வு. அறிவியல்பூர்வமாக ஆராயப்படாத ஓர் உணர்வும் கூட. ‘மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிக் குழந்தைகளிடம் அம்மாக்கள் முதலில் செல்லமாக இருப்பார்கள். ஆனால், பெறுகிற பிரியத்துக்கேற்ற எதிர்வினையை குழந்தைகளால் ஆற்ற முடிவதில்லை.

இதனால் காலப்போக்கில் அம்மாக்களுக்கு குழந்தைகளின் மீதான ஈடுபாடு குறைந்துவிடுகிறது. அதே போல, குழந்தைகள் பிரியமாக இருந்து, அம்மாக்கள் அதை கவனிக்காமல், அன்பை வெளிப்படுத்தாமல் இருப்பார்கள்.
(post-ads)
இது போல காதலிலும் சரியான எதிர்வினை இரு பக்கமும் இருக்க வேண்டும். ஒருவர் மட்டுமே பேசிக்கொண்டும் மற்றவர் எதிர்வினை ஆற்றாமலும் இருந்தால் எப்படி அந்தக் காதல் வளரும்? எத்தனையோ காதல்கள் மோதலில் முடிவதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

காதலில் ஒருவர் மற்றவரை குறை, நிறைகளோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். கஷ்ட, நஷ்டங்களில் பங்கெடுப்பது அவசியம். ‘காதலுக்குக் கண்ணில்லை’ என்பதெல்லாம் பொய். முதல் பார்வையில் காதல் வருவது என்பதும் உண்மையல்ல. அப்படி வருவது ‘பிசிக்கல் அட்ராக்ஷன்’ எனும் உடல் கவர்ச்சியில் சேரும். முதல் சந்திப்புக்கு பிறகு நன்கு பழகி, ஒருவரை ஒருவர் புரிந்து வருவதே உண்மையான காதல்.

அது ஆணோ, பெண்ணோ... தங்களுடைய சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள நம்பிக்கையான, சிறந்த ஒரு Companion ஒவ்வொருவருக்கும் அவசியம். அதுதான் காதல் இணை. பல விஷயங்களை காதல் இணையுடன் மட்டுமே நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ள முடியும். காதலர்கள் தங்களுக்குள் பிரச்னைகள் வராமல், சுமுகமாக இருக்க சில வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

ஒருவர், எல்லாவற்றிலும் தனது துணை சரியாக (Perfection) இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்துப் போவது அவசியம். உங்கள் துணையின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பினால் கூட துணையின் இணக்கமும் சம்மதமும் இருந்தால் மட்டுமே ஈடுபட வேண்டும்.

அவர் உங்களுக்காகவே படைக்கப்பட்டவராக நினைத்து ஆதிக்கம் செலுத்தக் கூடாது. காதலிக்கும் போது இருக்கும் தீவிரம் திருமணத்துக்குப் பிறகும் இருக்க வேண்டும். இருபதோ, அறுபதோ... எந்த வயதிலும் உங்களுக்கு துணையின் மேல் காதல் இருக்குமானால் உங்கள் இல்லற வாழ்க்கையில் என்றென்றும் ஆனந்தமே!

இயல்பாகவே காதலிக்கும்போது ஆண்கள் பெண்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நிகராகவும், பெண்கள் ஆண்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நிகராகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

பொதுவாக பெண்கள், ஆண்களிடம் எதிர்பார்ப்பது அழகை விட அதிக அக்கறையுடம் நம்மை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது தான்.

அதே போன்று பெண்களிடமும் சில நல்ல நற்பண்புகளை எதிர்பார்க்கும் ஆண்கள், கொஞ்சம் அழகையும் எதிர்பார்ப்பார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

காதலியின் கண்கள் இவ்வாறு இருக்க வேண்டும், முகம், ஆடை என எல்லாவற்றிலும் அக்கறை காட்டுவார்கள்.

அவ்வாறு ஆண்கள் எதிர்பார்க்கும் சில விடயங்கள் இதோ,

கண்கள்
காதலில் அதிகமாக பேசிக்கொள்வது கண்கள்தான், காதலர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டால் அவர்களின் உதடுகள் திறக்காவிட்டாலும், கண்கள் வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளும்.

ஆதலால், இந்த கண்களால் காதலன் மயங்க வேண்டுமெனில், பெண்கள் தங்களுடைய கண்களை அழகாக்கி கொள்ள வேண்டும்.

இதழ்கள்
கண்களுக்கு அடுத்தபடியாக பெண்களிடம் பிடித்தது அவர்களின் இதழ்கள். ஒவ்வொரு பெண்களுக்கும் இதழ்களின் அமைப்பு வேறுபட்டிருக்கும், சிலருக்கு பெரியதாகவும், இன்னும் பலருக்கு சிறியதாகவும் இருக்கும்.

எதுவாயினும் இயற்கை அளித்துள்ள அழகான இதழ்களை இன்னும் கொஞ்சம் அழகாக்கி கொள்வது நல்லது.
(post-ads)

நீண்ட கூந்தல்
இன்றைய பெண்கள் பேஷன் என்ற பெயரில், முடியினை ஷார்ட்-கட் செய்து கொள்கின்றனர், ஆனால் நீளமான கூந்தல் தான் கவர்ச்சியின் அறிகுறி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

நீளமான கூந்தல் கொண்ட பெண்களை தான் ஆண்கள் அதிகமான விரும்புவார்கள்.

அழகிய புன்னகை
புன்னகைக்கும் பெண்கள் என்றால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், அதுவும் அவர்களின் பற்கள் பார்ப்பதற்கு முத்துப்போன்று இருந்தால், புன்னகைக்கும்போது பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

எனவே, தங்கள் பற்களின் மீது பெண்கள் கொஞ்சம் அக்கறை காட்டலாம்.

அழகிய முகம்
கண்கள், காது, இதழ்கள் என எல்லாவற்றையும் ரசிக்கும் ஆண்கள், இவைகள் அமைந்திருக்கும் முகத்தை ரசிக்காமல் இருப்பார்களா என்ன? ஆதலால் சருமத்தை நன்கு பொலிவாக வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களுடைய முகத்திற்கு எந்தவகையான மேக்கப் போட்டால் நன்றாக இருக்கும் என்பதை அறிந்துகொண்டு அந்த வகையான மேக்கப்பை தெரிவு செய்யுங்கள்.

குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்... பெண்ணும் காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் என பொது காரணிகளும் இருக்கலாம்.

சில வழிமுறைகள்

* இன்று ஆண்கள், பெண்கள் இரண்டு தரப்பினரும் தாமதமாக திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவாகி வருகிறது. அதனால், தாமதமாக திருமணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை ஒன்று செய்துகொள்வது சிறந்தது. ஆண்கள் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சாதாரண ரத்தப்பரிசோதனை நிலையத்திலேயே இதை செய்துகொள்ளலாம்.
(post-ads)
* இன்று ஜீன்ஸ் அணிவது கலாசாரமாகிவிட்டது. குறைந்தபட்சம், அணிகிற ஜீன்ஸ் தளர்வானதாகவாவது இருக்க வேண்டும். நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கிறவர்களாக இருந்தால், உடையால் ஏற்படும் அழுத்தமும் இதனால் கூடுதலாகிவிடும். ஜீன்ஸ் அணிகிற நேரத்தையும் முடிந்த வரை குறைத்து, மற்ற நேரங்களில் தளர்வான  காட்டன் உடைகள் அணிவது நல்லது.

* சிலர் தூங்குகிற நேரங்களில் கூட இறுக்கமான ஆடைகள் அணிந்துகொள்வார்கள். இதனால் விதைப்பைக்குப் போதுமான ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் கிடைக்காமல் போகும்.

* லேப்டாப், மொபைல் என்ற எலெக்ட்ரானிக் பொருட்களினால் ஏற்படுகிற பாதிப்புகள் நேரடியாக நிரூபிக்கப்படாவிட்டாலும், கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை பார்ப்பது, மொபைல் போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்வது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
* உடன்பிறந்தவர்களில் யாருக்காவது குழந்தையின்மை பிரச்சனை இருந்தால், மற்றவர்கள் அதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்துகொள்ளலாம்.

* சில ஆண்களுக்கு விதைப்பையே இருக்காது. இவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். ஆணுறுப்பில் வீக்கம் உள்ளவர்கள், அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

* புகை, மது ஆகியவை ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்குவதில் முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்பதால், அப்பாவாக ஆசை உள்ளவர்கள் இந்தப் பழக்கங்களைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.

* பெண்களில் முறையான மாதவிலக்கு இல்லாதவர்கள், மாதவிலக்கு ஏற்படுவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைவிட பாலிசிஸ்டிக் ஓவரி குறைபாடு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பது முக்கியம்!

இன்று ஆண்மைக்குறைவு, குழந்தையின்மைக்கு சிகிச்சை என்ற பெயரில் போலி மருத்துவர் பலர் இருப்பதால், உங்கள் மருத்துவரை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.

சில ஆண்களிடம் ஆரம்பத்தில் நட்பு உறவில் பழகும் பெண்கள், அவர்களது குணங்களை கண்டு நாளடைவில் விலகி போக ஆராம்பித்து விடுவார்கள்.

பெண்களை சிறிது நேரம் கூட பேச விடாமல், ஆண்களே அதிக நேரம் பேசுவது, அவர்களின் பேச்சை கேட்ட உங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் அதற்கு ஏற்றது போல நடந்துக் கொள்ளாத ஆண்களை பெண்கள் திருமணம் செய்ய யோசிப்பார்கள்.

ஆண்கள் அனைவரும் நல்லவர்கள், பெண்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று பேசுவது கூடாது. இவ்வாறு பேசும் ஆண்களை கண்டாலே பெண்களுக்கு பிடிக்காது.

பெண்களை எவ்வளவு சீண்டினாலும், கோபப்பட்டாலும், தவறு செய்தாலும் அது அனைத்தையும் தாங்கி கொண்டு பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களை பெண்கள் விரும்பவே மாட்டார்கள்.


நீங்கள் உங்களது துணையை கிண்டல், காமெடி என்ற பெயரில் அவரது மனதை கஷ்டப்படுத்துவது போன்ற செயல்களை செய்யும் ஆண்களின் அருகில் பெண்கள் நெருங்கவே மாட்டார்கள்.

பெண் என்பவள் சமையல், வீட்டு வேலைகளை மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்று எந்தவொரு தனிப்பட்ட இலட்சியமும், ஆசையும் இருக்கக் கூடாது என நினைக்கும் ஆண்களை, பெண்கள் விரும்புவதில்லை.

உங்களது துணைக்கு யாருமே இல்லை என்பது போல நினைத்துக் கொண்டு, அவரது அனைத்து வேலைகளிலும் முக்கை நுழைக்கும் ஆண்களை பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். தனது மனைவி இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று தனது ஆசைகளை அவர்கள் மீது திணிக்கும் ஆண்களை, பெண்கள் திருமணம் செய்ய மாட்டார்கள்.


உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படும் செயல்களின் தாக்கம் நாள்பட மறைந்து போகும்.

ஆனால், மன ரீதியாக உண்டான தாக்கம் சாகும் வரை ஆறாத வடுவாக இருக்கும்.

முக்கியமாக செய்யாத தவறுக்கு பொறுப்பாகி ஏசப்படும் போது பெண்கள் மனரீதியாக மிகவும் புண்பட்டு போவார்கள்.

இதற்கான சூழலையோ, நிலையையோ ஆண்கள் (கணவர்கள்) ஏற்படுத்திவிடக் கூடாது.

தவறே செய்தாலும் சுட்டிக்காட்டி திட்டக் கூடாது, தட்டிக் கொடுத்து தான் திருத்தவேண்டும்.

ஒருவேளை நேரடியாக உங்களாலோ அல்லது மற்ற உறவுகளாலோ துணை மனம் புண்பட்டு போனால், அவர் மீண்டும் எப்படி இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். அந்த சூழலில் ஒரு சிறந்த துணையாக நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இந்த தொகுப்பில் காணலாம்...

கைக்கெட்டும் தூரத்தில்...
எக்காரணம் கொண்டும் அவர்கள் மனம் புண்பட்டு போன தருணத்தில் வெளியூர் பயணங்கள் மேற்கொண்டுவிட வேண்டாம். நீங்கள் அருகே இல்லாதிருப்பது அவர்கள் மேலும் மன வருத்தம் கொள்ள செய்யலாம். அல்லது அதையே எண்ணி, எண்ணி மென்மேலும் மன வருத்தம் அடைய வைக்கலாம்.

ஆரத்தழுவுதல்...
முடிந்த வரை மனைவியுடன் அதிக நேரம் செலவழிக்க தவற வேண்டாம். அவரை நெஞ்சோடு தழுவி அரவணைத்துக் கொள்ளுங்கள். மனைவியின் புண்பட்ட மனதை ஆற்ற இதவிட பெரிய மருந்து ஒன்று இருந்து விட முடியாது. நெஞ்சின் அந்த சூடு அவரது சோகத்தை கரைந்து போக செய்துவிடும்.

மெதுவாக...
 ஒருவரது மனம் புண்படும் படி நடந்துக் கொள்வது எளிது. ஆனால், அதில் இருந்து அவரை மீண்டும் வெளிக் கொண்டுவருதல் கடினம். ஆண்கள் சில சமயங்களில் கோவத்தில் திட்டி விடுவார்கள். பிறகு மன்னிப்பு கேட்டுவிட்டு, "ஏன் மூஞ்சிய இன்னும் அப்படியே வெச்சுருக்க.. சிரி சிரி..." என கேட்பார்கள். இதை முதலில் நிறுத்த வேண்டும். ஓர் நொடியில் உண்டாகும் தீக்காயம் ஆறுவதற்கு ஒருசில நாட்கள் ஆகும். ஆறாத வடுக்கள் ஏற்படுத்தும் சொல் காயம் உடனே ஆற வேண்டும் என கருதுவது தவறு.

சந்தேகமற்ற...
முக்கியமாக தவிர்க்க வேண்டிய விஷயம் இது. ஏற்கனவே மனம் புண்பட்டிருக்கும் அவரிடம் சந்தேக பார்வையோ, சந்தேக பேச்சையோ வெளிப்படுத்தக் கூடாது. இது, எரியும் நெருப்பில், எண்ணெய்யை ஊற்றுவதற்கு சமம். இதனால், இல்லற உறவில் விரிசல் தான் அதிகரிக்கும்.

தயக்கம் வேண்டாம்...
 சில சமயம் ஆண்கள் திட்டிவிட்டு, தவறு நம் மீது என உடனே அறிந்துவிடுவார்கள். ஆனால், உடனே சென்று மன்னிப்பு கேட்க மாட்டார்கள். கொஞ்சம் ஈகோ எட்டிப்பார்க்கும். சரி, முதலில் அவள் தலை திருப்பட்டும் பிறகு பார்த்துக் கொள்வோம் என இருப்பார்கள். ஒருவேளை மனைவி மனம் புண்பட்டிருப்பதற்கு காரணம் நீங்கள் எனில், அதை நீங்கள் உடனே அறிந்துவிட்டால். தயக்கம் காட்டாமல், உடனே சென்று மன்னிப்பு கேளுங்கள். இதுவொரு சிறந்த கைவைத்தியம் ஆகும். நல்ல பலனை அளிக்கும்.

அதே சொற்கள்...
மனைவி எதன் காரணத்தால் மனம் புண்பட்டு இருக்கிறாரோ, அந்த சொல், விஷயம், சூழல் மீண்டும் உண்டாக செய்திட வேண்டாம். இது வருத்தம் மென்மேலும் அதிகரிக்க காரணமாகிவிடும். முடிந்த வரை அந்த சூழல், அந்த நிகழ்ச்சி கொஞ்ச நாட்களுக்கு உங்கள் வீட்டில் நடக்காமல் இருந்தால் சிறப்பு. ஏனெனில், அது மீண்டும், மீண்டும் மறக்க நினைக்கும் விஷயத்தை தூண்டிவிட்டுக் கொண்டே இருக்க செய்யும்.

முழுமையான காதல்...
முழுமையான காதலை வெளிப்படுத்துங்கள், முழுமையான காதலை அவரை உணர செய்யுங்கள். அவர் விரும்பும், உங்களிடம் அதிகம் விரும்பும் செயல்களை வெட்கப்படாமல் செய்யுங்கள். இது அவரது மனதை திசை திருப்பும். இதனால், அவர் மனம் வேகமாக இயல்பு நிலைக்கு வர வாய்ப்புகள் இருக்கின்றன.

மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே கனவு வருவது வழக்கம்தான். அதில் பெரும்பாலானோர்களுக்கு பாலியல் கனவும் வருவதுண்டு. இதில் ஆண்களும் சரி, பெண்களும் சரி தப்பவே முடியாது. கனவுகளுக்கு அர்த்தம் என்று கூறுவோர், பாலியல் கனவுகளுக்கு என்ன அர்த்தங்கள் கூறியுள்ளனர் என்பதை பார்ப்போம்.

காதலை புரபோஸ் செய்வது போல ஒரு கனவு உங்களுக்கு வந்தால் நீங்கள் செய்து கொண்டிருக்கும் ஒரு பணி அல்லது செய்யப்போகும் பணி சக்ஸஸ் ஆகப்போகிறது என்று அர்த்தம்

முன்னாள் துணைவி அல்லது முன்னாள் காதலியுடன் உடலுறவு கொள்வது போல கனவு வந்தால், அந்த உறவு முடிவுக்கு வரப்போகின்றது என்று அர்த்தம்

கர்ப்பம் ஆவது போல் கனவு வந்தால் நீங்கள் வளர்ச்சி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் உறவு கொள்வது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டு முன்னேற போகின்றீர்கள் என்று அர்த்தம்

ஒரே பாலினத்தவர்களுடன் உறவு கொள்வது போல் கனவு வந்தால் நட்புக்கு ஆபத்து என்று அர்த்தம்

லிப்கிஸ் கொடுப்பது போல் கனவு வந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களை நோக்கி ஒரு பிரச்சனை வரப்போகின்றது என்று அர்த்தம்

எப்போதாவது பாலியல் கனவு வந்தால் ஓகே. ஆனால் அடிக்கடி பாலியல் கனவு வந்தால் வாழ்க்கையில் நீங்கள் விரும்பியது எதுவுமே கிடைக்காது என்று அர்த்தம்.

அனைத்து பெண்களுக்குமே தங்களது கணவனின் அன்பை முழுமையாக பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் அந்த அன்பை முழுமையாக பெறுவது எப்படி என்று தான் பெண்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கும்.

இந்த பகுதியில் கணவனின் அன்பை முழுமையாக பெறுவது எப்படி என்பது பற்றி காணலாம்.

ஐ லவ் யூ!
கணவன், மனைவி இருவரும் பிஸியான வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் ஐ லவ் யூ சொல்லிக்கொள்வதில்லை. தினமும் உங்களது கணவரிடம் ஐ லவ் யு சொல்லுங்கள்...! அவருக்கு இது தன்னம்பிக்கையையும், உங்கள் மீதான காதலையும் அதிகரிக்கும்.

முத்தம்!
தினமும் உங்களது கணவர் அலுவலகத்திற்கு செல்லும் போது, ஒரு ஆசை முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். இது அவரது நாள் உற்ச்சாகமாக அமையவும், அலுவலகத்தில் கூட உங்களை பற்றியே நினைத்துக்கொண்டிருக்கவும் உதவியாக இருக்கும்.

 நம்பிக்கை!
 உங்களது கணவர் எடுக்கும் முடிவுகளின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர் ஏதாவது கூறினால் சரியாக தான் இருக்கும் என்று நம்புங்கள். ஒருவேளை அது தவறாக இருந்தால், அன்புடன் மென்மையாக எடுத்துக்கூறுங்கள்.

பெருமை வேண்டாம்!
 கணவரிடம் எங்க அம்மா வீட்டில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா என்று பெருமையாக பேசாதீர்கள். பெறுமை பேசியே ஆக வேண்டும் என்றால், உங்கள் அம்மாவின் வீட்டில், என் கணவர் என்னை எப்படி பார்த்துக்கொள்கிறார் என்று தெரியுமா...? என்று பெருமை பேசுங்கள். இதுவரை நன்றாக பார்த்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட, இதை கேட்டதும் உங்களை ராணி மாதிரி வைத்து பார்த்துக்கொள்வார்.

குழந்தை தனம்
 உங்கள் கணவரிடம் குழந்தை தனமாக பேசுங்கள்.. விளையாடுங்கள்.. நீங்கள் இவ்வாறு செய்தால் அவர் அத்தனை பிரச்சனைகளையும் மறந்து, குஷியாகிவிடுவார். அவரது மன இறுக்கம் குறையும்.

குறை கூற வேண்டாம்!
உங்களது மாமியார், நாத்தனார் போன்றவர்களை பற்றி உங்களது கணவரிடம் குறை கூறுவதை முடிந்த வரை தவிர்க்கவும். அப்படியே அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்றாலும், மென்மையாக கூறி புரிய வையுங்கள். சட்டென குறை கூறிவிட்டால், உங்களது கணவருக்கு உங்கள் மீது உள்ள மதிப்பு குறையும். மென்மையாக கூறினால், மாமியார், நாத்தனார் உங்களுடன் சண்டை போட்டால் கூட உங்கள் கணவர் உங்கள் பக்கம் இருந்து பேசுவார்.

சண்டை!
சண்டை இல்லாத குடும்பமே இல்லை.. எனவே உங்களுடன் கணவர் சண்டையிட்டுவிட்டால், அதையே மனதில் வைத்துக்கொண்டு இருக்க வேண்டாம். சிறிது நேரத்தில் அதை மறந்துவிட்டு வழக்கம் போல இருங்கள். கட்டிப்பிடி வைத்தியம்! கட்டிப்பிடி வைத்தியத்திற்கு அதிக பலன் உண்டு. எனவே உங்களது கணவரை அடிக்கடி ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள். இது உங்களது உறவுக்குள் நெருக்கத்தை உண்டாக்கும்.

உடலுறவு என்று வரும் போது இருவேறு பாலினருக்கும் இடையே உள்ள எதிர்பார்ப்புகள், ஆசைகள், கருத்துக்கள் என அனைத்தும் வேறுபடுகிறது.

ஒருவரின் தேவையை பற்றி மற்றொருவர் புரிந்து கொள்ள முடியாத நிலை ஒன்று உருவாகிறது.
இதனால் பலருக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போகிறது.

இன்றைய சூழ்நிலையில் பலரும் உடலுறவில் ஈடுபாடு குறைந்துவிட்டது என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.

நல்ல ஒரு கணவன் மனைவி உறவுக்கு உடலுறவும் ஒரு முக்கியகூறாக இருக்கிறது.

பாலியல் பற்றிய சில கட்டுக்கதைகள் ஆண்களின் மீது உடலுறவில் ஏற்படுத்தும் தாக்கத்தை என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

எப்போதும் தயாராக இருப்பது :
ஆண்கள் உடலுறவுக்கு பெரும்பாலும் அனைத்து நேரங்களிலும் தயாராக இருக்கின்றனர் என்ற ஒரு கட்டுக்கதை உள்ளது. ஆண்கள் தயாராக உள்ள நேரத்தில், பெண்கள் உடலுறவுக்கு நோ சொல்லும் போது எல்லாம் ஆண்கள் மனதில் உடலுறவு ஆசை குறைந்து விடுகிறது.



பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?
 ஆண்கள் எந்த நேரமும் உடலுறவுக்கு தயாராக இருக்கும் போது, பெண்கள் மனதில் இவரது குணமே இப்படியா? ஏதேனும் உடலுறவு சம்பந்தப்பட்ட பாதிப்பா? என்ன இது எப்போது பார்த்தாலும் இதே வேலையாக இருக்கிறார் போன்ற எண்ணங்கள் எழலாம்.

இது வேண்டாமே!
ஆண்கள் மனதளவில் உடலுறவுக்கு தயாராகவும் நேரத்தை விட, பெண்கள் மனதளவில் உடலுறவுக்கு தயாராக வெகுநேரம் எடுத்துக்கொள்கிறார்கள். அதை புரிந்து கொள்ளாமல், உங்களது துணை உடலுறவுக்கு தயாராகும் முன்னரே அவருடன் உடலுறவு வைத்துக்கொள்வது கூடாது.

 வேறுபட்ட எண்ணம்!
ஆண்களை பொருத்தவரையில் உடலுறவு என்றால் அதற்கு உடலுறவு என்ற அர்த்தம் மட்டும் தான். மற்ற பிற உணர்வுகள் இதனுடன் சேராது..! ஆனால் பெண்களுக்கு அவ்வாறு இல்லை..! உடலுறவு என்றால் காதல், அன்பு என பலவும் அடங்கும். உணர்வு பூர்வமான உடலுறவுக்கு ஆண்கள் பழக்கப்பட வேண்டும். பெண்கள் உடலுறவுக்கு முன்னர் அதீத காதலை தன் துணையிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.

உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவி
ஆண்கள் தங்களது மனதில் உள்ள காதல் போன்ற உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த முடிவதில்லை. மனதில் காதல் இருந்தாலும் கூட அதனை பெண்கள் அளவிற்கு ஆண்களால் வெளிப்படுத்த முடிவதில்லை. தன் அன்பை வெளிப்படுத்தும் கருவியாக உடலுறவு அமைகிறது.

அதிக உடலுறவு
உடலுறவுக்கு அடிமையாதல் மிகவும் கொடியது. உடலுறவு தேவை அதிகரிப்பதால் பல உறவுகள் பிரிந்து விடுகின்றன. இது ஆண், பெண் என இருபாலருக்கும் தீங்கானது. இது பிறரிடம் உங்களை தவறானவராக கூட வெளிப்படுத்தும். எனவே உங்களுக்கு உடலுறவு பற்றிய அதீத சிந்தனைகள் இருந்தால், அதனை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சு தான்...!

ஆண்களின் நிறம் கருப்பாக இருந்தால் பரவாயில்லை ஆனால், உயரும் குறைவாக இருக்கக் கூடாது என்று பெண்கள் நினைப்பார்கள். அப்படி நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளது.

பெண்கள் உயரமான ஆண்களை விரும்புவது ஏன்?

உயரமான ஆண்களிடம் பெண்கள் இயல்பாகவே ஒருவித பாதுகாப்பை உணர்கிறார்கள். உயரமான ஆண் தன்னருகே இருந்தால், யாரும் தங்களை சீண்ட மாட்டார்கள் என்ற எண்ணம் பெண்களிடம் உள்ளது.

படுக்கை அறையில் உறங்கும் போது, அவர்களது மார்பு, கால் பகுதிகளுக்குள் ஒரு குட்டி பறவை போல சுருங்கி படுத்து உறங்குவதை பெண்கள் விரும்புவார்கள்.

திடீரென மழை வந்துவிட்டால், உயரமான ஆண்கள் குடை பிடிக்கும் போது, தலையின் மீது படாமல், ஜாலியாக நடந்து செல்லலாம்.

பெரிய அளவில் நடக்கும் ஏதேனும் விழாக்களுக்கு செல்லும் போது, நம்மை கூட்டத்தில் உயரமான ஆண்களால் ஈஸியாக கண்டுபிடிக்க முடியும்.

நடந்து செல்லும் போது கைகளை பிடித்து செல்வது போன்ற சின்ன சின்ன அழகான விடயங்களுக்காகவே உயரமான ஆண்களை பெண்கள் விரும்புகின்றனர்.

உயரமான ஆண்களை கட்டிப்பிடிக்கும் போது அவர்களது இதய துடிப்பை கேட்க முடியும். அவர்களது இதயமும், பெண்களது காதும் ஒரே உயர நிலையில் இருப்பதை பெண்கள் விரும்புகின்றனர்.

உயரமான ஆண்கள் வீட்டில் பல உதவிகளுக்கு சரியான தேர்வாக இருப்பார்கள். மேலடுக்கில் வைத்த பொருட்களை எடுக்க, வைக்க, சில அடிப்படை வீட்டு மேலாண்மை வேலைகள் செய்ய உதவியாக இருக்கும்.

உயரமான ஆண்களின் கால்கள் நீளமாக இருக்கும். உட்காரும் போது கூடுதல் ஸ்டைலாக இருக்கும். ஒரு கூட்டில் தஞ்சம் புகுந்தது போல, அவர்கள் காலுக்கு நடுவே அமர்ந்தவாறு ரொமாண்டிக் செய்வதை பெண்கள் விரும்புவார்கள்.

உயரமான ஆண்களை காணும் போது ஒரு ஈர்ப்பு இருக்கும். கருப்பு, வெள்ளை என்று எந்த வேறுபாடுமின்றி அவர்கள் கொஞ்சம் கூடுதல் ஈர்ப்புடன் தோற்றமளிப்பார்கள்.

கன்வெண்டரி யுனிவர்சிட்டி உடலுறவு பற்றி நடத்திய ஆய்வில் தினசரி உடலுறவு கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உடலுறவு கொள்வதால் வயதானவர்களுக்கு கூட மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறதாம்.

மேலும் தொடர்ச்சியாக உடலுறவு வைத்துக்கொள்பவர்களால் மொழிகளை சரளமாக பேச முடிகிறது எனவும் அவர்களால் பொருட்களை தெளிவாக பார்க்க முடிகிறது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியாக உடலுறவு வைத்துக்கொள்வதால் மேலும் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. மனநிலை மேம்படுகிறது
உடலுறவை காட்டிலும் காதல் உணர்வு உடலில் ஒரு வித வேதியியல் மாற்றத்தை உண்டாக்குகிறதாம். மேலும் உடலுறவுக்கு முன் விளையாட்டுகள் உடலில் பாலியல் உணர்வை தூண்டும் செயல்களை அதிகரிக்க செய்கிறது. ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் உடலுறவுக்கு பின்னர் விடுவிக்கப்படுகிறது. இது மன அமைதியையும் நல்ல நிம்மதியான உறக்கத்தையும் தருக்கிறது.

2. கட்டிப்பிடித்தல்
ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் இருபது நிமிடங்கள் உங்களது துணையை கட்டி அணைப்பதாலும் விடுவிக்கப்படுகிறது. ஆண்களுக்கு இதனால் ஏற்படும் உணர்வை விட பெண்களுக்கு நான்கு மடங்கு அதிகமாக இந்த உணர்வு ஏற்படுக்கின்றது. இது பெண்களுக்கு பாலியல் உணர்வை தூண்டுவதாகவும் அமைகிறது.

3. உடலுறவுக்கு பின்னர் மகிழ்ச்சி
செரோடோனின் என்ற உடலின் முக்கிய ஆண்டிடிஸ்பெரன்ட் என்ற ரசாயனமானது உடலுறவுக்கு பின்னர் மகிழ்ச்சியடையவும், சிரிக்கவும், நிம்மதியடையவும் இது காரணமாக உள்ளது.

4. ஆய்வு முடிவுகள்
300 பெண்களிடம் நடத்திய ஆய்வில், உடலுறவு ரீதியாக மகிழ்ச்சியாக வாழும் ஒரு பெண், உடலுறவு இன்றி வாழும் ஒரு பெண்ணை விட மகிழ்ச்சியாக வாழ முடிகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உடலுறவு ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

5. இருதயத்திற்கு நல்லது
வாரத்திற்கு மூன்று முறை உடலுறவு வைத்துக்கொண்டால் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தில் இருந்து தப்பிக்க முடியும் என க்யின்ஸ் யுனிவர்சிட்டி தெரிவித்துள்ளது. பெரும்பாலும் காதல் அதிகரிக்கும் போது ஆண்களுக்கு மாரடைப்பிற்கான ஆபத்து அதிகரிக்கிறது என்ற கருத்து முற்றிலும் தவறானது எனவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

6. உடற்பயிற்சி
உடலுறவு என்பது உங்களது உடலை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்வதற்கான ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவும் உள்ளது. உடலுறவு வைத்துக்கொள்வது மையில் கணக்கில் ஓடுவதற்கும், விமானங்களின் படிக்கட்டுகளில் இரண்டு முறை ஏறி இறங்குவதற்கும் சமமானதாக இருக்கிறதாம். மேலும் உடல் ரீதியாக பலமாக உள்ளவர்கள் தினமும் உடலுறவு வைத்துக்கொள்வதில் தவறு எதுவும் இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

7. நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கிறது உடலுறவு வைத்துக்கொள்வதால் சளி மற்று காய்ச்சலை எதிர்த்து செயல்படும் நோயெதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறதாம். மேலும் இது உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறதாம்.

8. வாழ்நாள் அதிகரிக்கிறது
தொடர்ந்து உடலுறவு வைத்துக்கொள்வது உங்களது வாழ்நாளை அதிகரிக்கிறதாம். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உடலுறவு வைத்துக்கொள்பவர்களை காட்டிலும் தினமும் உடலுறவு வைத்துக்கொள்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்கிறார்களாம்.

9. கருவுறுதல்
அதிகமாக உடலுறவு கொள்வது கருவுறும் திறனை அதிகரிக்கிறது என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பொதுமான அளவு விந்தணுக்கள் இல்லாத ஆண்களுக்கு கூட தினசரி உடலுறவு வைத்துக்கொள்வது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறதாம். இது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கருவுறுதலுக்கு உதவி செய்கிறது.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.