உங்கள் ராசியில் சந்திரன் இருந்தால் என்ன அதிர்ஷ்டம் தெரியுமா?

ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இருந்தால் அல்லது ராசியில் சந்திரன் இருக்கும் போது பிறந்தால், அவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? அதற்கான பலன்களை தெரிந்துக் கொள்ளலாம்.

மேஷம்
மேஷம் ராசியில் சந்திரன் இருக்கும் போது பிறந்தவர்கள் தைரியசாலி மற்றும் புத்திசாலியாக திகழ்வார்கள். இவர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். பெண்மையை மதிக்கும் இவர்கள், எடுத்த காரியத்தில் வெற்றி பெறும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ரிஷபம்
ரிஷபம் ராசியில் சந்திரன் இருந்தால், நல்ல உடல் உழைப்பு, மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் நல்ல திறமை உள்ளவராக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்வின் இடை அல்லது முடிவுப் பகுதியில் செல்வம் பெருகும். இவர்களின் மனம் எப்போதும் அலைபாய்ந்தபடியே இருக்கும்.

மிதுனம்
மிதுனம் ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் கல்வி அறிவு மிக்கவராகவும், நீண்ட ஆயுள், நிம்மதியான வாழ்க்கை, அதிக ஆன்மீக ஈடுபாடு கொண்டு இருப்பார்கள். இளமை தோற்றத்துடன் இருக்கும் இவர்கள் வாழ்வில் அதிக கஷ்டங்களை சந்திக்க மாட்டார்கள்.

கடகம்
கடகம் ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் மற்றவர்களிடம் இரக்கமாக நடந்துக் கொள்வார்கள். பெண்களால அனுகூல பலன் அடைவார்கள். இவர்களுக்கு வீடு வாங்கும் யோகமும், அந்நிய நாட்டிற்கு செல்லும் யோகமும் கொண்டவர்கள்.

சிம்மம்
சிம்மம் ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் தைரியம் மிக்கவராக இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சில நேரத்தில் மற்றவர்கள் வெறுப்பது போல நடந்துக் கொள்வார்கள். தற்பெருமை கொண்ட இவர்களின் வாழ்க்கை பெரும் போராட்டமாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் செல்வந்தராக திகழ்வார்கள். செல்வம், செல்வாக்கு, புகழ், ஆகிய அனைத்தும் இவர்களை தேடி வரும். உண்மை, ஒழுக்கம் மிக்க இவர்களுக்கு, ஆண் குழந்தையை விட பெண் குழந்தைள் அதிகமாக பிறக்கும்.

துலாம்
துலாம் ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் வியாபார நோக்கம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களின் உடல் ஆரோக்கியம் குறைவாக இருக்கும். வசீகரம் மற்றும் திறமைசாலியாக திகழும் இவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடையும் நோக்கத்துடன் செயல்படுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசியில் சந்திரன் இருந்தால் அவர்கள் செல்வம் படைத்தவராக திகழ்வார்கள். இவர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் கொடூரமாக இருப்பதால், இவர்கள் பெற்றோர்களை பிரிந்து வாழ்வார்கள்.

தனுசு
தனுசு ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை பெறுவார்கள். இவர்களுக்கு அதிக சொத்துக்கள் வந்து சேரும். கலைத்துறையில் திறமை மிக்க இவர்கள் இலக்கியம் மற்றும் கலைகளில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள்.

மகரம்
மகரம் ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் மனைவி, குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் சுயநலவாதியாகவும், சோம்பேறியாகவும் இருப்பார்கள்.

கும்பம்
கும்ப ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் நல்ல உயரம், சிறந்த உடல் அமைப்பு, மேன்மையான கல்வி, ஆன்மீக ஈடுபாடு ஆகியவற்றில் ஈடுபாடுடன் இருப்பார்கள். இவர்களின் வாழ்வில் பிற்பகுதியில் உயர்ந்த அமைப்பை பெரும் யோகம் உள்ளது.

மீனம்
மீனம் ராசியில் சந்திரன் இருந்தால், அவர்கள் உறுதியான மன வலிமை கொண்டவராக திகழ்வார்கள். கடல் மற்றும் நீர் தொடர்புள்ள வியாபார தொழில் அமைப்பை பெற்ற இவர்களுக்கு ஆடை, அணிகலன்கள் அதிகம் வந்து சேரும்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.