மனிதர்கள் ஒரு வகை தான். ஆனால், அவர்களுக்குள் இருக்கும் மனநிலை தான் பலவகை. ஒரே சூழலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கையாள்வது உண்டு. அதில் யார் சிறந்த முறையில் கையாள்கிறார்களோ அவர்களே அந்த காரியத்தில் வெற்றி பெறுகிறார்கள்.
காதல் மட்டும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உண்மையில் காதலில் தான் ஆண்கள் ஓர் சூழ்நிலையை பலவகைகளில் கையாள்கிறார்கள். இதனால் தான் காதல் எனும் போது நண்பர்கள் தரும் ஐடியாக்கள் பல வகைகளில் இருக்கின்றன…
நானும் ரவுடி தான் விஜய் சேதுபதி
அந்த பெண்ணுக்கு நாம் பேசுவது புரியுமா, நம்மை பிடிக்குமா? அவர் யார்? என்ன? என எதுவும் தெரியாமல் இம்ப்ரஸ் செய்ய முனையும் ஆண்கள்.
மெட்ராஸ் கார்த்தி
பெண்கள் விலகி, விலகி போனாலும், உருகி உருகி காதலிக்கும் ஆண்கள்.
பொல்லாதவன் தனுஷ்
தன் காதல் கதையை காதலிக்கும் பெண்ணிடம் கூறமால், உடைந்த ரேடியோ போல நண்பர்களிடம் மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் ஆண்கள்.
பாஸ் ஆரியா
இம்ப்ரஸ் செய்ய முடியாமல், அந்த பெண்ணை விட்டு விலகவும் முடியாமல் விடா முயற்சி தான் விஸ்வரூப வெற்றி என வெறித்தனமாக துரத்தி துரத்தி காதலிக்கும் ஆண்கள்.
மௌனம் பேசியதே சூர்யா
காதலே வேணாம்… ஏண்டா லவ்வு, லவ்வு-னு சாவுறீங்க என அறிவுரை கூறும் ஆண்கள்.
விண்ணைத்தாண்டி வருவாயா சிம்பு
வசனமாக பேசி இம்ப்ரஸ் செய்யும் நபர்கள், கட்டம் கட்டியாவது தூக்கிவிடும் குணாதிசயம் கொண்டவர்.
ஆடுகளம் தனுஷ்
ஆடம்பர பெண்ணை காதலிக்கும் மிடில் கிளாஸ் ரோமியோ.
அம்பி விக்ரம்
வருடக்கணக்கில் காதலை கூறாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் அப்பாவி அம்பி.
பூவே உனக்காக விஜய்
தன் காதல் நிறைவேறாமல் போனாலும், தான் காதலித்த பெண் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணும் நல்ல உள்ளம் படைத்த ஆண்கள்.
காதல் மன்னன் அஜித்
தான் விரும்பும் பெண்ணுக்கு நிச்சயம் ஆயிருந்தாலும் கூட தன் காதல் மூலம் வெற்றிக்கனியை தட்டிப் பறிக்கும் ஆண்கள்.
குணா கமல்
பைத்தியக்காரத்தனமாய் காதலிக்கும் ஆண்கள். தன் காதல், காதலி தான் தன் உலகம் என இருப்பவர்கள்.
தளபதி ரஜினி
மூர்க்கத்தனமாக இருப்பினும், காதல் என்றால் உருகும் மனம் கொண்டவர்கள். கோபம் இருக்குமிடம் தான் அன்பு இருக்கும் என்பதற்கான அடையாளங்கள்.
பீப் சாங் சூப் பாய்ஸ்
காதல் தோல்வியில் பெண்களை திட்டித் தீர்க்கும் ஆண்கள்.