Latest Post

தமிழர் வரலாற்றை கொஞ்சம் பின்சென்று அதாவது இருபது ஆயிரம் வருடங்களுக்கு முன் சென்று கடலில் மூழ்கிய ஓர் தனி உலகிற்கு சென்று பார்க்கலாம். பயப்பட வேண்டாம் நீண்ட தூரப் பயணம் என்ற அச்சமும் வேண்டாம் நான்கு அல்லது 5 நிமிடத்தில் முடிந்து விடும். ஆனாலும் அவசியமான தொன்று என்பது இறுதியில் புரியும். தனக்கே உரிய சிறப்பினால் உலகுக்கே எச்சரிக்கை விடுத்தான் அன்றைய வீரத் தமிழன் அவன் சேர்த்து வைத்த பெருமையை இப்போது நாம் காத்துக் கொண்டு வருகின்றோமா என்பது கேள்விக் குறிதான். நாவலன் தீவு அல்லது குமரிக்கண்டம் என்றும் இப்போது லொமூரியா எனவும் வரலாற்றில் பதிவான ஓர் இடத்தை நோக்கிய பயணமே அது. நம்மில் பலருக்கு தெரிந்த கதைதான் இது ஆனாலும் நவீன காலத்திற்கு தொடர்புண்டு.

   
இந்த கண்டம் முழ்கிப்போனாலும் கூட அழியவில்லை இன்றும் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. அது உயிர் இயக்கமல்ல சிறப்பு. அந்த வரலாற்று இயக்கமே இன்று தமிழர் தனித்துவத்தையும் பெருமையையும் உலகுக்கு பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றது.

அந்த குமரிக்கண்டத்திலேயே தமிழர் கலாச்சாரம் தோன்றியது, அதே இடத்தில் தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த குமரிக்கண்டமே தமிழரின் மூதாதையர் பிறப்பிடம், அதனையும் தாண்டி இப்போது நான் எழுதி நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் தமிழ் அங்கே தான்பிறந்தது என்பது ஆய்வாளர் கூற்று மட்டுமல்ல உண்மையும் கூட.

பல மர்மங்களின் பிறப்பிடமும் இதுவே, வரலாற்றில் இன்று வரை விளக்க முடியாத அதிசயங்களை கொண்ட இந்த குமரிக்கண்டம் இன்று கடலுக்கடியில் மௌனமாக உறங்கிக் கொண்டு இருக்கின்றது.

மௌனமும் எழுச்சியும் தமிழருக்கே உரிய திமிர், வீரம் என்பன போன்றதே என்பது இங்கு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

அப்போது பிரம்மாண்ட சிறப்புடன் திகழ்ந்த ஓர் நாடாக இருந்த தனித் தமிழ்க் கண்டத்தின் இன்றைய நிலை தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட பல சிறு சிறு தீவுகளாக சிதறிப்போய் உள்ளது.

சிதறுவதும் இணைவதும் கூட தமிழரிடம் உள்ள இன்னுமோர் அம்சம் அல்லது பிரச்சினை என்றும் கூறலாம்.

உலகின் மிகத் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் கூட 4000 வருடங்கள் முந்தையதே. நக்கீரர் தனது இறையனார் அகப்பொருள் என்ற நூலில் முத்தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் இடை விடாது தொடர்ச்சியாக நடைபெற்று வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

முதற் சங்கத்தில் இந்த கடலடியில் உள்ள தென் மதுரையில் கி.மு 4440களில் 4449 புலவர்களுடனும் சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்களை இயற்றப்பட்டுள்ளது.

இயற்றப்பட்டு என்ன பயன், இப்போது அதனைக் காக்க முடியாமல் போய் விட்டோமே அதனால் இவை அனைத்துமே அழிந்து விட்டது என்பது வேதனை.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700களில் 3700புலவர்களுடன் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டு இப்போது அதில் எஞ்சியது தொல்காப்பியம் மட்டுமே.

அடுத்த தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850 களில் 449 புலவர்களுடன் அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இதன் மூலம் தெளிவாகின்றது என்னவென்றால் தமிழ் வரலாறு படிப்படியாக அழிந்து வந்தது என்பதே. இப்போதும் இது தொடர்கதையாக இருப்பது யார் செய்த குற்றம் என்பது தெரியாது.

இந்த வரலாறு பலருக்கும் தெரிந்த கதைதான் ஆனாலும் இதில் இருந்து ஒன்று தெளிவாகின்றது ஆண்டாண்டு காலமாக தமிழர் என்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அருகி வரத் தொடங்கியுள்ளனர்.

இந்த குமரிக்கண்ட வரலாற்றினை தொல் பொருள் ஆய்வாளர்களும் கூட ஏற்றுக் கொண்ட போதும் இன்று வரை இருக்கு ஆனால் இல்லை என்ற வகையில் தான் தொடருகின்றது.

எப்போதே புதைந்து போனதை இப்போது தோண்டி எடுத்தால் மட்டும் போதாது அது நாளைய வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் இல்லாவிடின் அதனால் எந்த வித பெருமையும் இல்லை தேவையும் இல்லை.

இப்படி வரலாறு அழிந்ததற்கு காரணம் ஆவணங்கள் முறையாக பாதுகாக்கப்படாமையே, உதாரணமாக இப்போது யாழ் நூலகங்கள் எரிக்கப்பட்டமைக்கு மன்னிப்பு கோருவதால் எதுவுமே மாறாது.

உடைந்த கண்ணாடியை மறுபடியும் ஒட்டினாலும் கூட அதன் பிம்பம் மாறியே தெரியும் என்பதே நிதர்சனம். இங்கு மறுபடியும் ஆரம்பத்திற்கு சென்று பார்த்தால்.,

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்னது எம் மரபுதான் ஆனாலும் தண்டிப்புகள் எதனையும் திருத்தி விடாது மன்னிப்பும் கூட தமிழருக்கு உரித்தானது தான்.

அந்த மன்னிப்போடு அடுத்த தலைமுறைக்கு புதிய வரலாற்றை படிப்பிக்காமல் திருத்தப்பட்ட வரலாற்றை புகுத்தாமல் தனித்துவத்தை சொல்லுங்கள் தமிழ் 2000 வருடங்கள் அல்ல 20000 ஆயிரத்திற்கும் பழமையானது எம் தமிழ் என்று.

சில அப்பா மார்களின் துணிச்சலை பாராட்டாமல் இருக்கவே முடியாது. இங்கே பாருங்கள் தனது மகளை மட்டும் அல்ல, அவரது நண்பியையும் அப்பா காப்பாற்றியுள்ளார். குறித்த தந்தை ஒரு நிஞ்சா பாதுகாப்பு கலை நிபுணர் என்று கூறப்படுகிறது. தனது பிள்ளை இருக்கும் பக்கம் அவர் திரும்பும் வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் வருவதை அவதானித்த அவர். உடனே இரண்டு பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு பின் நோக்கி நகர்ந்துள்ளார். 

இன்ரர் நெட் பாவனையாளர்கள் பலரை கண்ணீரில் மூழ்கடித்த புகைப்படமாக இது உள்ளது. சுமார் 1 வருடங்களுக்கு முன்னர் திருமணமான தம்பதிகள் இவர்கள்.

அவர் கர்பிணியாக இருக்கும் வேளை தான் அந்த அதிர்ச்சி சம்பவத்தை கேள்வியுற்றார். தனது கணவருக்கு மூளையில் புற்று நோய் ஏற்பட்டுள்ளது என்று.

மூளையில் ஏற்படும் இந்த புற்று நோய் கட்டியை அகற்றினால், அவர் இறந்துவிடுவார். அகற்றாவிட்டாலும் இறந்துவிடுவார் என்ற நிலை தோன்றியது. இதனால் மருத்துவர்கள் அவர் வாழும் நாள் வரை வாழட்டும் என்று கூறிவிட்டார்கள்.

மூளை புற்று நோய் முற்றிய கட்டத்திலேயே கண்டறியப்பட்டதால் மருத்துவர்களால் எதனையும் செய்ய முடியவில்லை. கணவர் இறக்க முன்னரே பிள்ளை பிறந்துவிட்டது.

ஆனால் சில நாட்களில் கணவர் இறந்து போக , கைகளில் பிள்ளையோடு கதறும் ஒரு உண்மையான மனைவி: பாசம் என்பது இது தான் . அதற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை. இதற்காக தான் பூமி இன்னும் சுற்றுகிறது.


பிரபல தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜெசிக்கா. இவர் பல்வேறு ஆல்பங்களுக்காக பாடல்களை இதுவரை பாடியுள்ளார்.

இவரது குரலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு தனது குரலினாலும், குணத்தினாலும் அனைவரது மனதிலும் குடிகொண்டுள்ளார் இவர்.

இவர் தற்போது றெக்க படத்தில் வரும் 'கண்ண காட்டு போதும்' பாடலை பாடி வெளியிடுள்ளார். அந்த பாடல் இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடியது. அவரின் குரலுக்கு இணையாக பாடி அசத்தியுள்ளார் ஜெசிக்கா.

நேற்று முன் தினம் துருக்கிக்கான ரஷ்ய உயர்ஸ்தானிகர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான பல வீடியோக்கள் வெளியாகிய போதும் குறித்த இந்த வீடியோவை முன்னால் உள்ள ஒரு நபர் தனது மோபைல் போனில் எடுத்து தற்போது வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரே உயர்ஸ்தானிகரை சுட்டுக் கொன்றுள்ளார். இதில் 3க்கும் அதிகமான நபர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்.



Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.