கடலுக்கடியில் இயங்கும் தனி உலகம்..! – மர்மங்களின் பிறப்பிடம்

தமிழர் வரலாற்றை கொஞ்சம் பின்சென்று அதாவது இருபது ஆயிரம் வருடங்களுக்கு முன் சென்று கடலில் மூழ்கிய ஓர் தனி உலகிற்கு சென்று பார்க்கலாம். பயப்பட வேண்டாம் நீண்ட தூரப் பயணம் என்ற அச்சமும் வேண்டாம் நான்கு அல்லது 5 நிமிடத்தில் முடிந்து விடும். ஆனாலும் அவசியமான தொன்று என்பது இறுதியில் புரியும். தனக்கே உரிய சிறப்பினால் உலகுக்கே எச்சரிக்கை விடுத்தான் அன்றைய வீரத் தமிழன் அவன் சேர்த்து வைத்த பெருமையை இப்போது நாம் காத்துக் கொண்டு வருகின்றோமா என்பது கேள்விக் குறிதான். நாவலன் தீவு அல்லது குமரிக்கண்டம் என்றும் இப்போது லொமூரியா எனவும் வரலாற்றில் பதிவான ஓர் இடத்தை நோக்கிய பயணமே அது. நம்மில் பலருக்கு தெரிந்த கதைதான் இது ஆனாலும் நவீன காலத்திற்கு தொடர்புண்டு.

   
இந்த கண்டம் முழ்கிப்போனாலும் கூட அழியவில்லை இன்றும் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. அது உயிர் இயக்கமல்ல சிறப்பு. அந்த வரலாற்று இயக்கமே இன்று தமிழர் தனித்துவத்தையும் பெருமையையும் உலகுக்கு பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றது.

அந்த குமரிக்கண்டத்திலேயே தமிழர் கலாச்சாரம் தோன்றியது, அதே இடத்தில் தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த குமரிக்கண்டமே தமிழரின் மூதாதையர் பிறப்பிடம், அதனையும் தாண்டி இப்போது நான் எழுதி நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் தமிழ் அங்கே தான்பிறந்தது என்பது ஆய்வாளர் கூற்று மட்டுமல்ல உண்மையும் கூட.

பல மர்மங்களின் பிறப்பிடமும் இதுவே, வரலாற்றில் இன்று வரை விளக்க முடியாத அதிசயங்களை கொண்ட இந்த குமரிக்கண்டம் இன்று கடலுக்கடியில் மௌனமாக உறங்கிக் கொண்டு இருக்கின்றது.

மௌனமும் எழுச்சியும் தமிழருக்கே உரிய திமிர், வீரம் என்பன போன்றதே என்பது இங்கு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

அப்போது பிரம்மாண்ட சிறப்புடன் திகழ்ந்த ஓர் நாடாக இருந்த தனித் தமிழ்க் கண்டத்தின் இன்றைய நிலை தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட பல சிறு சிறு தீவுகளாக சிதறிப்போய் உள்ளது.

சிதறுவதும் இணைவதும் கூட தமிழரிடம் உள்ள இன்னுமோர் அம்சம் அல்லது பிரச்சினை என்றும் கூறலாம்.

உலகின் மிகத் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் கூட 4000 வருடங்கள் முந்தையதே. நக்கீரர் தனது இறையனார் அகப்பொருள் என்ற நூலில் முத்தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் இடை விடாது தொடர்ச்சியாக நடைபெற்று வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

முதற் சங்கத்தில் இந்த கடலடியில் உள்ள தென் மதுரையில் கி.மு 4440களில் 4449 புலவர்களுடனும் சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்களை இயற்றப்பட்டுள்ளது.

இயற்றப்பட்டு என்ன பயன், இப்போது அதனைக் காக்க முடியாமல் போய் விட்டோமே அதனால் இவை அனைத்துமே அழிந்து விட்டது என்பது வேதனை.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700களில் 3700புலவர்களுடன் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டு இப்போது அதில் எஞ்சியது தொல்காப்பியம் மட்டுமே.

அடுத்த தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850 களில் 449 புலவர்களுடன் அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இதன் மூலம் தெளிவாகின்றது என்னவென்றால் தமிழ் வரலாறு படிப்படியாக அழிந்து வந்தது என்பதே. இப்போதும் இது தொடர்கதையாக இருப்பது யார் செய்த குற்றம் என்பது தெரியாது.

இந்த வரலாறு பலருக்கும் தெரிந்த கதைதான் ஆனாலும் இதில் இருந்து ஒன்று தெளிவாகின்றது ஆண்டாண்டு காலமாக தமிழர் என்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அருகி வரத் தொடங்கியுள்ளனர்.

இந்த குமரிக்கண்ட வரலாற்றினை தொல் பொருள் ஆய்வாளர்களும் கூட ஏற்றுக் கொண்ட போதும் இன்று வரை இருக்கு ஆனால் இல்லை என்ற வகையில் தான் தொடருகின்றது.

எப்போதே புதைந்து போனதை இப்போது தோண்டி எடுத்தால் மட்டும் போதாது அது நாளைய வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் இல்லாவிடின் அதனால் எந்த வித பெருமையும் இல்லை தேவையும் இல்லை.

இப்படி வரலாறு அழிந்ததற்கு காரணம் ஆவணங்கள் முறையாக பாதுகாக்கப்படாமையே, உதாரணமாக இப்போது யாழ் நூலகங்கள் எரிக்கப்பட்டமைக்கு மன்னிப்பு கோருவதால் எதுவுமே மாறாது.

உடைந்த கண்ணாடியை மறுபடியும் ஒட்டினாலும் கூட அதன் பிம்பம் மாறியே தெரியும் என்பதே நிதர்சனம். இங்கு மறுபடியும் ஆரம்பத்திற்கு சென்று பார்த்தால்.,

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்னது எம் மரபுதான் ஆனாலும் தண்டிப்புகள் எதனையும் திருத்தி விடாது மன்னிப்பும் கூட தமிழருக்கு உரித்தானது தான்.

அந்த மன்னிப்போடு அடுத்த தலைமுறைக்கு புதிய வரலாற்றை படிப்பிக்காமல் திருத்தப்பட்ட வரலாற்றை புகுத்தாமல் தனித்துவத்தை சொல்லுங்கள் தமிழ் 2000 வருடங்கள் அல்ல 20000 ஆயிரத்திற்கும் பழமையானது எம் தமிழ் என்று.

இந்த கண்டம் முழ்கிப்போனாலும் கூட அழியவில்லை இன்றும் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.