Latest Post

அழகைப் பராமரிப்பது அவ்வளவு சாதாரண விஷயமெல்லாம் கிடையாது. அதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டுமானால், அதற்கு நாம் நிச்சயம் மெனக்கெட வேண்டும். அழகும் இளமையும் மாறாமல் நீடித்திருப்பது மட்டும் எளிதாக வாய்த்துவிடுமா என்ன?

கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டும். சிரமத்தைப் பார்த்தால், வெளியில் பேரழகியாக உலா வர முடியுமா?

அப்படி உங்கள் சருமத்தை மிகவும் இளமையாக வைத்திருக்க வேண்டுமென்றால் என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?

வெந்தயம் உடல் சூட்டைத் தணிக்கும் மிகச்சிறந்த பொருள்.

வைட்டமின் பி3 மற்றும் நியாசின் ஆகியவை வெந்தயத்தில் நிரம்பியிருக்கின்றன.

அது சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்கிவிடும். ஒரு கைப்பிடியளவு வெந்தயத்தை 2 மணி நேரம் வரையிலும் ஊற வைத்து, நன்கு மை போல அரைத்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும். தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.

மத்திய கிழக்கு நாடுகளில் பெண்கள் உடல் எடையை அதிகரிப்பதற்காக சர்க்கரை, ஆலிவ் ஆயில் உடன் வெந்தயம் சேர்த்து சாப்பிடுவது அந்த காலத்தில் வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்த பொடி தயாரிப்பது அவ்வளவு பெரிய விஷயமெல்லாம் கிடையாது.

வெறும் வாணலியில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து பொடி செய்யவும். சிலருக்கு இது அதிக கசப்பாக இருப்பதுபோல் இருந்தால், வெந்தயத்துடன் சிறிது வேர்க்கடலை அல்லது பாதாம், வால்நட் ஏதாவது ஒன்றையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

தினமும் இரவு படுக்கைக்கு போகும்முன் மிதமான சூடுள்ள பாலில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து குடித்து வரலாம்.

இட்லி, தோசை மற்றும் சூடான சாதத்துடன் நெய் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தையோ அல்லது வெந்தயப் பொடியையோ காய்ச்சி கொடுத்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

மாதவிலக்கு காலத்தில் அதிகமான ரத்தப் போக்கையும் கட்டுப்படுத்தும்.

இரவில் ஊற வைத்து காலையில் அரைத்து முடியில் தடவி ரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கொட்டுவது, பொடுகு, அரிப்பு போன்ற பிரச்னைகள் தீரும்.

முடி அடர்த்தியாகவும் வளரும்.

வெந்தயத்தை பருக்கள் மீது தடவினால் முகப்பரு நீங்கும்.

இது எப்போதும் நம்மை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

ஒருவர் பாலியல் உணர்விலுள்ளார் என்பதை அறிய சில வழிமுறைகள்.

மக்கள் பொதுவாக பிறரிடமுள்ள பாலுறவு ஆர்வத்தை உடல்மொழியின் மூலம் வெளிப்படுத்துவார்கள், இருப்பினும் அதன் துல்லியமான வடிவம், அளவு ஆகியவை கலாச்சாரம், காலம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆர்வத்தை வெளிப்படுத்தும் சில அடையாளங்களில் மிதமிஞ்சிய உடல் அசைவுகள் மற்றும் இயக்கங்கள்,

எதிரொலித்தல் மற்றும் பிரதிபலித்தல், அறை முழுதும் அளக்கும் பார்வைகள், கால் மேல் கால் போடுதல், மூட்டுகளைக் குறித்தல், முடியைக் கோதுதல் அல்லது தொடுதல், தலை சாய்த்தல், இடுப்பை சுழற்றுதல், மணிக்கட்டைக் காண்பித்தல்,

ஆடை சரிசெய்தல், சிரித்தல் மற்றும் புன்னகைத்தல், பார்வைத் தொடர்பு, தொடுதல், விளையாட்டாக இருத்தல் மற்றும் நெருக்கமாக இருப்பது ஆகியவை அடங்கும்.

மனிதர்களும் பாலுறவு உணர்வு எழும்போது, கருவிழி விரிதல் போன்ற உடலியக்கவியல் ரீதியான செய்கைகளின் மூலம் அதை வெளிப்படுத்துகின்றனர்.
எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை எமக்கு வழங்குங்கள்.

எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை எமக்கு வழங்குங்கள்.

ஒவ்வொருவருக்கும் விரல்கள் வேறுபடும். அது வடிவம் மற்றும் நீளத்தில் மட்டுமின்றி, கைவிரல்களில் உள்ள மூன்று பகுதிகளிலும் வேறுபாடு இருக்கும்.

மேலும் சில மக்கள் சுண்டு விரல் ஒருவரது குணநலன் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாக நம்புகின்றனர். இப்போது சுண்டு விரலில் உள்ள மூன்று பகுதிகள் ஒருவரது குணநலன்களைப் பற்றி சொல்வது என்று பார்ப்போம். கீழே இருக்கும் படத்திருக்கும் கலரினை ஒப்பிட்டு பார்க்கவும்.

சிகப்பு: சுண்டு விரலின் மேல் பகுதி நீளமாக இருந்தால் அவர்கள் பல மொழிகளை அறிந்தவராக அனைவரையும் கவரக்கூடியவறாக இருப்பர். மேலும் இத்தகையவர்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது.

பச்சை: சுண்டு விரலின் இரண்டாம் பகுதி நீளமாக இருந்தால், அவர்களிடம் உதவும் மனப்பான்மை அதிகமாகவும், மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பர். மருத்துவர்கள், உடல்நல நிபுணர்கள் இந்த வகையினராக இருக்க வாய்ப்புள்ளது.

மஞ்சள்: சுண்டு விரலின் கடைசி பகுதி நீளமாக இருந்தால், நேர்மையானவர்களாக, எப்போதும் உண்மையையே பேசுபவர்களாக இருப்பர். மேலும் இவர்கள் நல்ல சொற்றொடர்பு உள்ளவர்களாக, சமூக திறமை கொண்டவர்களாக இருப்பர். அதுமட்டுமின்றி இத்தகையவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவர்.

சிகப்பு: இந்த வகை மக்கள், மற்றவர்கள் விரும்பத்தகாத வகையில் இருப்பர். மேலும் இவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.

பச்சை: சுண்டு விரலின் இரண்டாம் பகுதி குட்டையாக இருந்தால், பிடிவாத குணமிக்கவர்களாகவும், சிறிது சோம்பேறியாகவும் இருப்பர். மேலும் இந்த வகையினர் மற்றவர்களுக்காக தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

மஞ்சள்: சுண்டு விரலின் மூன்றாம் பகுதி குட்டையாக இருப்பின், அவர்கள் அப்பாவியாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பர். இந்த வகையைச் சேர்ந்தவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்கள் இவர்களை எளிதில் தன்வசப்படுத்திக் கொண்டு, வேலையை செய்து முடிப்பார்கள்.

இத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள்.

சனிபகவான் உங்கள் ராசிக்கு 5 ஆவது இடமான தனுசு ராசியில் புண்ணிய சனியாக சஞ்சாரம் செய்கிறார்.

சிம்மம் ராசியில் மகம், பூரம் , உத்திரம் 1ஆம் பாதம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் பார்க்கலாம்.

டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.

இதுநாள்வரை சிரமத்தில் இருந்தவர்கள் விடுதலை பெறுகிறார்கள். நோய் நொடிகள் பிரச்சினைகள் தீரும்.

சனிபகவானின் பார்வை தனுசில் இருந்து கும்பம், மிதுனம், கன்னி ராசி மீது விழுகிறது. சிம்மம் ராசிக்கு 2வது இடம்,7வது இடம் 11வது இடங்களின் மீது சனிபகவானின் பார்வை விழுகிறது.

பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். அல்லல்பட்டவர்களுக்கு வியாதிகளில் இருந்து விடுதலை கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் நாட்டம் குறையும். குழந்தைகளை கண்காணியுங்கள். கூட்டு குடும்பத்தில் சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் வந்து சேரும். குடும்பத்தில் குழப்பங்கள் வந்தாலும் அது நன்மையிலே முடியும்

புதிய வாய்ப்புகள் உருவாகும். திருமணம் நடைபெறாத சிம்ம ராசிக்காரர்களே காதல் வயப்படுவீர்கள். சனிபகவான் 7வது இடத்தை பார்ப்பதால் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் பிரிந்து செல்ல வாய்ப்பு ஏற்படும். புதியதாக வீடு வாகனம் வாங்க ஏற்படும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு தனவரவை தரும் காரணம் 11வது இடத்தை 7வது பார்வையாக சனிபகவான் பார்க்கிறார். மூத்த சகோதர சகோதரிகள் அன்பும் ஆதரவும் கிட்டும். சனிபகவான் 2வது இடத்தை லாப ஸ்தானத்தை பார்க்கிறார்.

மூத்தவர்களிடம் ஆலோசனை பெறலாம். குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பணம் வரவும், அதே போல செலவும் ஏற்படும். சிக்கனம் அவசியம் சிம்மராசிக்காரர்களே.

சுறுசுறுப்பாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். கல்விக் கடன்கள் கிடைப்பதில் தடைகள் ஏற்படும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க போராடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்காக ஒரு சிலர் வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். அவநம்பிக்கை தாழ்வு மனப்பான்மை விடுங்கள் வெற்றி நிச்சயம்.

உத்யோகத்தில் உயர்வை காண்பது சற்று கடினமாக இருக்கும். ஊதிய உயர்வும் எதிர்பார்த்த அளவு இருக்காது. எனவே கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்த பின் உங்களை ஸ்த்திரபடுத்திக் கொள்ளுங்கள் எதிரிகள் விஷயத்தில் அலட்சியம் காட்டுதல் கூடாது. சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. தொழில் பங்குதாரர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. அடிக்கடி உடல் அசதி, சோர்வு அலைச்சல்களால் கால்வலி, அடிவயிற்று பிரச்சனைகளை சமாளித்து கொள்ள வேண்டி வரும். திருவாதவூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரனை எள் தீபம் போட்டு வழிபடலாம்.

பார்க்கும் வேலையில் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும். பாஸ்போர்ட் விசா போன்றவற்றில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சரியாகி விடும்.

வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மனவருத்தங்களும் வந்து சேரும். காதல் விஷயங்களில் தேவையற்ற பிரச்சனைகளும் போராட்டங்களும் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். திருச்செந்தூர் முருகனை தரிசித்து வந்தால் திருப்பம் ஏற்படும்.

குடும்பத்தில் இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். இனி உங்களை அறியாமலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

மனசஞ்சலம் தடுமாற்றம் இல்லாமல் ஒரே சீராக எடுத்த காரியத்தை முடிக்க முயல்வீர்கள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் அமையும். காதல் கைகூடும் குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும்.

தப்பிக்க போராடுபவர்கள்...
ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். அனுமன் துதியை கேளுங்கள் உற்சாகம் தானாக கிடைக்கும்.

இத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள்.

பேபி வைப்ஸ் போலவே தற்போது பெரும்பாலானோர் ஸ்கின் கேர் வைப்ஸ் பயன்படுத்துகிறார்கள். காற்று புகாத வண்ணம் டைட்டான பாக்ஸில் ஈரப்பசையுடன் வைப்ஸ் இருக்கும்.

இதனை நாம் எளிதாக பயன்படுத்தலாம். தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவ முடியாத சமயங்களில் இதனைப் பயன்படுத்தலாம். மேக்கப் ரீமூவ் செய்வதற்கு சருமம் வறண்டு காணப்பட்டால் இதனைப் பயன்படுத்தி முகத்தை துடைக்கலாம்.

இதனைப் பயன்படுத்த எளிதாக இருந்தாலும் இதனால் ஏராளமான தீமைகள் ஏற்படுகிறது.

ஸ்கின் கேர் வைப்ஸில் ஏராளமான கெமிக்கல்ஸ் இருக்கும். எப்போதும் அவை ஈரப்பதத்துடன் இருப்பதற்காக அவற்றில் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இவற்றால் சென்ஸிட்டிவ் ஸ்கின் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் சருமம் வரண்டு போகும். இதனால் பல்வேறு சரும பாதிப்புகள் உண்டாகும்.

தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளில் தான் அதிகமாக இதனை பயன்படுத்துகிறார்கள் ஆனால் இதனை பயன்படுத்துவதால் முகம் முழுவதுமாக சுத்தம் ஆகாது. சில நுண்ணிய துகள்கள் முகத்தில் ஒட்டியபடியிருக்கும். இப்படியே அடிக்கடி செய்து வந்தால் அது சருமத்திற்கு பாதிப்பையே உண்டாக்கும்.

வைப்ஸில் இருக்கும் ஆல்கஹால் நம் சருமத்தை வறட்சியாக்கிடும். இது சீக்கிரத்திலேயே சருமத்தில் சுருக்கம் விழுவதற்கு காரணமாக அமைந்திடும். இதனால் பருக்கள், கரும்புள்ளி தோன்றும்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.