சனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிவிட்டது சிம்மம்! தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் படியுங்கள்!!!!

இத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள்.

சனிபகவான் உங்கள் ராசிக்கு 5 ஆவது இடமான தனுசு ராசியில் புண்ணிய சனியாக சஞ்சாரம் செய்கிறார்.

சிம்மம் ராசியில் மகம், பூரம் , உத்திரம் 1ஆம் பாதம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் பார்க்கலாம்.

டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.

இதுநாள்வரை சிரமத்தில் இருந்தவர்கள் விடுதலை பெறுகிறார்கள். நோய் நொடிகள் பிரச்சினைகள் தீரும்.

சனிபகவானின் பார்வை தனுசில் இருந்து கும்பம், மிதுனம், கன்னி ராசி மீது விழுகிறது. சிம்மம் ராசிக்கு 2வது இடம்,7வது இடம் 11வது இடங்களின் மீது சனிபகவானின் பார்வை விழுகிறது.

பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். அல்லல்பட்டவர்களுக்கு வியாதிகளில் இருந்து விடுதலை கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் நாட்டம் குறையும். குழந்தைகளை கண்காணியுங்கள். கூட்டு குடும்பத்தில் சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் வந்து சேரும். குடும்பத்தில் குழப்பங்கள் வந்தாலும் அது நன்மையிலே முடியும்

புதிய வாய்ப்புகள் உருவாகும். திருமணம் நடைபெறாத சிம்ம ராசிக்காரர்களே காதல் வயப்படுவீர்கள். சனிபகவான் 7வது இடத்தை பார்ப்பதால் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் பிரிந்து செல்ல வாய்ப்பு ஏற்படும். புதியதாக வீடு வாகனம் வாங்க ஏற்படும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு தனவரவை தரும் காரணம் 11வது இடத்தை 7வது பார்வையாக சனிபகவான் பார்க்கிறார். மூத்த சகோதர சகோதரிகள் அன்பும் ஆதரவும் கிட்டும். சனிபகவான் 2வது இடத்தை லாப ஸ்தானத்தை பார்க்கிறார்.

மூத்தவர்களிடம் ஆலோசனை பெறலாம். குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பணம் வரவும், அதே போல செலவும் ஏற்படும். சிக்கனம் அவசியம் சிம்மராசிக்காரர்களே.

சுறுசுறுப்பாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். கல்விக் கடன்கள் கிடைப்பதில் தடைகள் ஏற்படும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க போராடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்காக ஒரு சிலர் வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். அவநம்பிக்கை தாழ்வு மனப்பான்மை விடுங்கள் வெற்றி நிச்சயம்.

உத்யோகத்தில் உயர்வை காண்பது சற்று கடினமாக இருக்கும். ஊதிய உயர்வும் எதிர்பார்த்த அளவு இருக்காது. எனவே கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்த பின் உங்களை ஸ்த்திரபடுத்திக் கொள்ளுங்கள் எதிரிகள் விஷயத்தில் அலட்சியம் காட்டுதல் கூடாது. சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. தொழில் பங்குதாரர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. அடிக்கடி உடல் அசதி, சோர்வு அலைச்சல்களால் கால்வலி, அடிவயிற்று பிரச்சனைகளை சமாளித்து கொள்ள வேண்டி வரும். திருவாதவூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரனை எள் தீபம் போட்டு வழிபடலாம்.

பார்க்கும் வேலையில் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும். பாஸ்போர்ட் விசா போன்றவற்றில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சரியாகி விடும்.

வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மனவருத்தங்களும் வந்து சேரும். காதல் விஷயங்களில் தேவையற்ற பிரச்சனைகளும் போராட்டங்களும் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். திருச்செந்தூர் முருகனை தரிசித்து வந்தால் திருப்பம் ஏற்படும்.

குடும்பத்தில் இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். இனி உங்களை அறியாமலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

மனசஞ்சலம் தடுமாற்றம் இல்லாமல் ஒரே சீராக எடுத்த காரியத்தை முடிக்க முயல்வீர்கள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் அமையும். காதல் கைகூடும் குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும்.

தப்பிக்க போராடுபவர்கள்...
ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். அனுமன் துதியை கேளுங்கள் உற்சாகம் தானாக கிடைக்கும்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.