January 2016

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு காரணம் பாதங்களில் அளவுக்கு அதிகமாக வறட்சி ஏற்படுவது தான். நம் உடலிலேயே உள்ளங்கை மற்றும் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகளே இல்லை. அதனால் தான் அவ்விடங்களில் அதிகளவு வறட்சி ஏற்படுகிறது. ஆனால் அவ்விடங்களுக்கு போதிய அளவில் ஈரப்பசையை வழங்க வேண்டியது அவசியம்.

பொதுவாக உள்ளங்கையில் உள்ள சருமம் மென்மையாகவும், பாதங்களில் உள்ள சருமம் கடினமாகவும் இருக்கும். எனவே பாதங்களுக்கு இன்னும் அதிகளவிலான பராமரிப்பைக் கொடுக்க வேண்டும். அதற்கு அடிக்கடி பாதங்களில் உள்ள இறந்த தோல்களை நீக்கி, பாதங்களில் நேச்சுரல் மாய்ஸ்சுரைசர்களைத் தடவ வேண்டும். அதுமட்டுமின்றி குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும். சரி, இப்போது பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழம் 
நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

எலுமிச்சை சாறு 
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும். குறிப்பாக இச்செயலை செய்த பின்னர், பாதங்கள் உலர்ந்ததும், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களுக்கு தடவுங்கள். இல்லாவிட்டால் வறட்சி இன்னும் அதிகமாகும்.

சோப்புத் தண்ணீர் 
குதிகால் வெடிப்பை விரைவில் நீக்குவதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் இது. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து கால்களை நீரில் கழுவிய பின் உலர வைக்க வேண்டும். பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.

கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் 
கிளிசரினில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் அதனை பாதங்களில் தடவி வர, பாதங்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைய ஆரம்பிக்கும்.

பாராஃப்பின் மெழுகு 
பாராஃப்பின் மெழுகை உருக்கி, அதில் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதிகம் வறட்சியடையும் குதிகாலில் தினமும் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம், ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கிளிசரின், ரோஸ்வாட்டர், எலுமிச்சை சாறு 
தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என பாதங்களை ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள சோர்வு நீங்கும். மேலும் 2 டீஸ்பூன் கிளிசரின், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் தொடர்ந்து செய்வதால், பாதங்கள் மென்மையாவதோடு, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

ஒவ்வொருவருக்கும் தான் அழகாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அதற்காக சருமம், தலைமுடி போன்றவற்றிற்கு பல பராமரிப்புக்களைக் கொடுத்து வருவோம். அதிலும் வெள்ளைத் தோலின் மீதுள்ள மோகத்தால், பலரும் தங்களின் சருமத்தையும் வெள்ளையாக்க முயற்சிப்பார்கள். குறிப்பாக சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது க்ரீம்கள் நல்லதல்ல என்பதை உணர்ந்த மக்கள், இயற்கை வழிகளை நாடுகின்றனர். நீங்கள் உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்களா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய பாட்டி வைத்தியங்களைப் பின்பற்றி வாருங்கள். இதனால் நிச்சயம் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும். சரி, இப்போது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் அந்த எளிய பாட்டி வைத்தியங்களைப் பார்ப்போமா!!!

பாதாம் 
சிறிது பாதாமை காலையில் நீரில் ஊற வைத்து, இரவில் அதன் தோலை நீக்கிவிட்டு, 2 டீஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, படுக்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

கடலை மாவு 
தினமும் கடலை மாவு தேய்த்து குளிப்பதன் மூலமும், கடலை மாவை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவுவதன் மூலமும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும். வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள்.

மாட்டுப் பால் 
தினமும் மாட்டுப் பால் கொண்டு முகத்தை பலமுறை துடைத்து எடுத்து வர, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடும், சருமத்தின் நிறமும் மேம்பட்டும் காணப்படும்.

ஆப்ரிக்காட் 
ஆப்ரிக்காட் பழத்தை மசித்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, சரும நிறம் அதிகரிக்கும்.


அரிசி மாவு மற்றும் தேன் 
2 டீஸ்பூன் அரிசி மாவில், சிறிது குளிர்ந்த டீ டிகாசனை சேர்த்து, 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

மஞ்சள், எலுமிச்சை சாறு, பால் 
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், தங்களின் சரும நிறத்தை அதிகரிக்க இந்த ஃபேஸ் பேக்கைப் போடலாம். அது சிறிது கடலை மாவுடன், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று கூறி நாம் அறிந்திருப்போம். சில சமயங்களில் இராசியை வைத்து ஜோதிடம் பார்ப்பது போல பிறந்த தேதியை வைத்தும் பார்க்கும் வழக்கம் இருக்கிறது. எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்? சிலர் இயற்கையாகவே ஆளுமை திறன் கொண்டிருப்பார்கள், சிலர் உணர்ச்சிப்பூர்வமான நபராக இருப்பார், சிலர் எதை பற்றியும் துளியும் அக்கறையின்றி நான், என் வாழ்க்கை என்று இருப்பார்கள். அந்த வகையில் உங்கள் பிறந்த தேதியை வைத்து நீங்கள் எப்படிப்பட்ட நபர், உங்கள் குணாதிசயங்கள் என்னென்ன என்று இனிக் காணலாம்…

02.உணர்ச்சிப்பூர்வமாகவும், உள்ளுணர்வு ரீதியாகவும் செயல்படும் நபர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று உற்று கருதும் நபர்கள், அமைதியான நிலை இருக்க வேண்டும் என்பதற்காக ஒத்துழைத்து போகும் பழக்கம் இருக்கும். தந்திரங்களும் செய்ய தெரிந்தவர்கள். அன்புக்குரிய நபர்களுடன் மிகவும் இணக்கமாக பழகுபவர்கள். குழந்தைத்தனம் அதிகமாக இருக்கும். எதுவாக இருப்பினும் உன்னித்து முழுமையாக அறியும் மனோபாவம் இருக்கும்.

03.படைப்பு திறன் அதிகமாக இருக்கும். ஈரநெஞ்சம் கொண்டவர்கள், எழுதுவதில் திறன் அதிகமாக இருக்கும். தொழில் ரீதியாக இல்லை எனிலும் ஹாபி என்ற பெயரிலாவது உங்கள் படைப்பு திறனை பின்தொடர்ந்து செய்வீர்கள். கற்பனை திறன் அதிகம். அனைவரையும் உற்சாக படுத்துவீர்கள், உங்கள் மனநிலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். நேரத்தை வீணடிக்க விரும்ப மாட்டீர்கள். நிலைத்து நிற்கும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

04.கடினமாக உழைப்பவர்கள், மனசாட்சிக்கு கட்டுப்படுபவர்கள், தங்களுக்கான சுயக் கட்டுபாடுகள் வரையறுத்து அதற்கு பொறுப்பேற்று வாழ்பவர்கள். குடும்பத்தின் மீது பாசமும் அக்கறையும் அதிகமாக இருக்கும். அதிகமாக உணர்ச்சிவசப்படமாட்டீர்கள். வாழ்க்கை, தொழில், உறவுகள் என அனைத்திற்கும் சரியான அளவு நேரத்தை ஒதுக்கி வாழ்பவர்கள். உடன் பணிபுரியும் நபருடன் நல்ல முறையில் வேலை செய்யும் குணாதிசயங்கள் இருக்கும்.

05.சாகசங்கள், நீண்ட பயணங்கள் போன்றவற்றை அதிகம் விரும்பும் நபர்கள். எப்போதுமே ஓர் உற்சாகத்துடன் இருக்க வேண்டும் என எண்ணுவீர்கள். திறமைகள் நிறைய இருக்கும், எழுத்து, மக்களுடன் தொடர்புக் கொள்வது போன்றவற்றில் சிறந்து விளங்குவீர்கள். ஓர் இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது உங்களை பொறுத்தவரை மிகவும் கடினம். மிக விரைவாக ஓர் விஷயத்தின் மீது அலுப்பு ஏற்பட்டுவிடும். சுய ஒழுக்கும் சற்று குறைவாக இருக்கும்.

06.குடும்பப்பாங்கான நபர், மக்களை திருப்திகரமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். சொந்த வாழ்க்கை மற்றும் வேலையை சமநிலையாக எடுத்து செல்வீர்கள். எந்த விதமான உணர்வாக இருந்தாலும் அதை சரியாக கையாளும் நபர், தன் எல்லை அறிந்து செயல்படும் நபர். உறவுகள் மீது அதிக கவனம் இருக்கும். மற்றவர்களுக்கு உதவும் குணாதிசயம், சுயநலம் இன்றி வாழ்பவர்.

07.பெரிய மூளைக்காரர், எதையும் ஆராய்ந்து பார்க்க மனம் அலைபாயும். மனது சொல்வதை கேட்டு நடப்பவர், உணர்வு ரீதியாக யாரேனும் நெருங்க நினைத்தால் பெரிதாக நம்பமாட்டீர்கள், பொறுப்பற்ற முறையை நீங்கள் கைவிட வேண்டும், இல்லையேல் உங்களையே அது ஒருநாள் பாதிக்கும்

08.தொழில் ரீதியான திறமை அதிகம். தைரியமாக தொழில் இறங்க முனைவார்கள். கசப்பான அனுபங்கள், தோல்வி போன்றவற்றை எதிர்க்கொள்ள தயங்கமாட்டீர்கள். தலைமை வகிக்கும் தன்மை உங்களது பலம். தன்னம்பிக்கை, சுயமரியாதை, போன்றவை உங்களது நல்ல குணங்கள். எத்தனை தடைகள் வந்தாலும் நீங்கள் விடாமுயற்சியை கைவிடக் கூடாது.

09.தொலைநோக்குப் பார்வை, புதிய சிந்தனைகள், படிப்பாற்றல் போன்றவை உங்களது பலம். உங்களது சிறந்த வேலை எதுவென நீங்களாக தேர்வு செய்துக் கொள்வீர்கள். மற்றவர்களை ஈர்க்கும் தன்மை அதிகம். எதையும் பெரியளவில் செய்ய வேண்டும் என நினைப்பீர்கள்.

10.பெரும் இலட்சியங்கள் இருக்கும், சுதந்திரம் எதிர்பார்ப்பீர்கள். வெற்றியை அடைய உங்கள் தலைமை குணம் உதவும். ஆளுமை திறன் உங்களிடம் சிறப்பாக இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்வதில் நீங்கள் கில்லாடி.

11.சிந்தனைகளும், உள்ளுணர்வும் உங்களிடம் சிறந்து இருக்கும் குணங்கள். மற்றவர்களுக்கும் நல்லது, தீயது பற்றி எடுத்துரைக்கும் குணநலம் உங்களிடம் இருக்கும். எளிதாக ஒருவரை விமர்சனம் செய்துவிடுவீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் ஊக்கமளிக்கும் நபராக திகழ்வீர்கள்.

12.கேளிக்கை விரும்பும் நபர், அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் நபர், எழுத்தில் அதிக திறமை உள்ளவர், சூழ்நிலைகளை சிறந்த முறையில் கையாளும் நபரும் கூட. நட்பு ரீதியாக சிறந்து பழகும் நபராக நீங்கள் இருப்பீர்கள்.

13.கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், சமூகம் மீது பற்று அதிகமாக இருக்கும். மிகவும் ஆழமாக அன்பு செலுத்துவீர்கள். இயற்கையை விரும்பும் நபர், ஓர் விஷயத்தில் கவனமாக செயல்படும் பண்பு உங்களிடம் இருக்கும்.

14.ஒரு விஷயத்தின் மீதான விருப்பம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். விரைவாக அலுப்பு ஏற்படும், இடத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் இருக்கும். ஊரோடு சேர்ந்து வாழ்வது, பழகுவது போன்றவை உங்களுக்கு பிடித்தவை. எளிதாக சோர்வடைந்து விடுவீர்கள். வாழ்க்கையில் சில முடிவுகளை நீங்கள் ஆராய்ந்து எடுக்க வேண்டும்.

15.என்ன வேலை செய்கிறீர்கள் என்பதை விட, அதை எப்படி செய்கிறீர்கள் என்பது உங்கள் சிறப்பு. கலை திறமைகள் அதிகம் இருக்கும். உறவுகளில் தீர்கமான முடிவுகளை எடுப்பீர்கள். சிறந்த துணையை தேடுவீர்கள். பெரும்பாலும் உங்கள் அன்பு, பாசம், காதல் எல்லாம் உங்கள் குடும்பத்தின் மீது தான் இருக்கும்.

16.ஆன்மிகம் மற்றும் தத்துவ ரீதியான நம்பிக்கை உடையவர்கள். பார்க்காத உலகை புரிந்துக் கொள்ள, பயணிக்க விரும்புவார்கள். எதையும் செயல்முறையில் அறிந்துக் கொள்ள முயற்சிப்பார்கள், அதை மற்றவருடன் பகிர்ந்துக்கொள்ள முனைவார்கள்.

17.பெரும் இலட்சியங்களை கொண்டிருப்பீர்கள், பொருளாதாரம் மற்றும் தொழில் சிறந்து விளங்குவீர்கள். படைப்பு திறன் மற்றும் தைரியம் அதிகம் இருக்கும். சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள், பெரிய திட்டங்களை எடுத்து வேலை செய்ய அதிகமாக ஈடுபடுவீர்கள்

18.பிறப்பிலேயே ஆளுமை திறன் கொண்டவர்கள் நீங்கள். அரசியல், மதம், கலை, போன்றவற்றில் உங்கள் திறமை மேலோங்கி இருக்கும். மக்களை புரிந்துக் கொள்வதில் நீங்கள் சிறந்தவர்.

19.சுதந்திரமாக செயல்படும் திறன் கொண்டிருப்பீர்கள், வெற்றிபெற எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து முன்னேறி செல்லும் துணிவு இருக்கும். உங்கள் இதயத்தை முன்னோடியாக கொண்டு பயணம் செய்பவர் நீங்கள்.

20.உணர்ச்சிப்பூர்வமான நபராக இருப்பினும், எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டவர். விழிப்புணர்வு அதிகம் இருக்கும், உங்கள் உள்மனதின் எண்ணங்களை மறைத்து வைத்துக் கொள்வீர்கள், வெளிக்காட்ட மாட்டீர்கள். அழகு, காதல், நல்லிணக்கம் போன்றவற்றை பின்தொடர்ந்து நடக்கும் நபராக இருப்பீர்கள்.

21.பளிச்சிடும் பேச்சு தான் உங்கள் வெற்றியின் இரகசியம். சுட்டித்தனம் உங்கள் காலடியிலேயே இருக்கும். எழுத்து மற்றும் பேச்சாற்றல் கொண்டவர். சவால்களை எதிர்கொள்ளும் நபர், சில சமயங்களில் உங்களது பதட்டம் உங்களது திறமையின் வெளிப்பாட்டை குறைத்து விடும்

22.ஒரு தொழிலை தொடங்கி அதை வளர்த்து செல்வதில் சிறந்து திகழ்வீர்கள், தலைமை பண்பு, திட்டமிடுதல் போன்றவை உங்களது பலம். அசாதாரண எண்ணங்கள் கொண்டிருப்பீர்கள். செயல்முறை மற்றும் சிந்தனைகள் குறித்த இரண்டு வகையான செயல்பாடுகளிலும் ஈடுபடுவீர்கள். மனிதநேயம் கொண்ட நபராக இருப்பீர்கள்.

23.எதையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வாழ்க்கை சுவாரஸ்யமானது என்று எண்ணுபவர் நீங்கள், ஏமாற்ற பிடிக்காது, உறவுகளில் சீக்கிரம் ஒட்டிக்கொள்ளும் குணமுடையவர், கூர்மையான புத்திக் கொண்டவர், புரிதலும் அப்படி தான்.

24.குடும்பம் சார்ந்து வாழ்பவர், உறவுகளுக்கு சமநிலை அளித்து திகழ்வீர்கள். உணர்ச்சி ரீதியாக காதலை ஆளுமை செய்வீர்கள். உணர்ச்சிப்பூர்வமாக உங்கள் பிரச்சனைகளை பெரிதாக்கிவிடுவீர்கள். சோகத்தில் இருக்கும் போது யாரேனும் தோள் கொடுக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும்.

25.அறிவு சார்ந்து வாழ்க்கையை நடத்தும் நபர். அதே சமயம் உள்ளுணர்வுகளுக்கும் மதிப்பளிப்பீர்கள். எதையும் ஆழமாக ஆராய்ந்து செயல்படும் நபராக இருப்பீர்கள். உங்களது ஆராயும் குணம் தான் எதையும் எதிர்கொள்ள உங்களை தயார்ப்படுத்தும்.

26.திறமையை வைத்து தொழில் ரீதியாக பணம் பார்க்கும் குணம் கொண்டவர். சிறந்த ஆளுமை குணம் கொண்டவர். தந்திரமாகவும், சாமார்த்தியமாகவும் காய்களை நகர்த்தும் நபர். தான் செய்யும் எந்த செயலுக்கும் ஓர் பரிசு அல்லது ஊக்கம் எதிர்பார்க்கும் நபர்.

27.மற்றவரை எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டவர். தொலைநோக்கு பார்வை கொண்டவர், பல துறை சார்ந்து ஆழ்ந்த ஞானம் கொண்டவர், மக்களை புரிந்துக் கொள்ள நீங்கள் கொஞ்சம் முதிர்ச்சி அடைய வேண்டும். அவசரப்படக் கூடாது.

28.தலைமை குணம் உங்களுக்கு கிடைத்த பரிசு. அனைவருடன் ஒத்துழைத்து வேலை செய்யும் குணம் இருக்கும். லட்சிய வெறி இருக்கும், எதையும் ஆராய்ந்து தான் செய்வீர்கள், சிறந்த முறையில் திட்டமிடுவீர்கள். எதையும் துணிந்து செய்ய ஆர்வம் காட்டுவீர்கள்.

29.படைப்பாற்றலும், உள்ளுணர்வும் அதிகம். உங்கள் மனம் எதையும் காட்சிப்படுத்தி தான் செயல்படும். உடல்நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மக்களுக்கு நல்ல ஊக்கமளிக்கும் நபராக இருப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல், உங்களை பலர் பாராட்டுவார்கள்.

30.கற்பனை திறன் அதிகமாக இருக்கும். நீங்கள் எழுச்சியூட்டும், அழகான மற்றும் கவர்ந்திழுக்கும் நபராக இருப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரியும் நபர்களோடு எளிதாக ஒட்டி உறவாட ஆரம்பித்துவிடுவீர்கள்.

31.கற்பனை திறன் அதிகமாக இருக்கும். நீங்கள் எழுச்சியூட்டும், அழகான மற்றும் கவர்ந்திழுக்கும் நபராக இருப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரியும் நபர்களோடு எளிதாக ஒட்டி உறவாட ஆரம்பித்துவிடுவீர்கள்.


இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள். இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும். வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள். ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்!

அதேப்போன்று அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும். எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும்.

தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும். மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.

இவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும். மேற்கூறியவற்றில் உங்களுக்கு வசதியானவற்றை பின்பற்ற ஒரு சில நிமிடங்கள்தான் தேவை. அதை செய்தால் பள பளக்கும் மேனியை நிச்சயம் பெறலாம்.


பச்சைக் காய்கறிகள்
பச்சைநிறக் காய்கறிகள், கீரைகள், கறிவேப்பிலை அதிக அளவில் எடுத்துக் கொள்வது, முடி வளர உதவும். இதில் உள்ள அதிகப்படியான ஊட்டச் சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், முடி உதிர்வையும் தடுக்கும். கறிவேப்பிலையைச் சாப்பிடுவதுடன் தலைக்கும் பூசலாம்.

இதர காய்கறிகள் பழங்கள் கேரட், வெங்காயம், பூண்டு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஆரஞ்சு, பப்பாளி, வாழை போன்றவற்றை எடுத்துக் கொள்வதும் முடி வளர்ச்சியைத் தூண்டும். பூண்டில் உள்ள அலிசின் என்ற மூலக்கூறு, முடி உதிர்வுப் பிரச்னைக்கு எதிராகச் செயல்படக்கூடியது. மேலும், வைட்டமின் இ-யுடன் இணைந்து, முடிக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.

முளை கட்டியவை
முளை கட்டிய தானியம் மற்றும் பயிறு வகைகள் முடிவளர்ச்சிக்குத் துணை புரிகின்றன. பயிறு அல்லது தானியத்தைத் தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் அதை ஒரு துணியில் கட்டிவைத்தால், முளை விட ஆரம்பித்து விடும். அவ்வப்போது, இதில் தண்ணீர் தெளித்தால் போதும், மூன்று நான்கு நாட்களில் நன்கு முளைவிட்டு விடும். இதில் உள்ள அதிக அளவிலான புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் முடிவளர்ச்சியைத் தூண்டும். முடி உதிர்வைத் தடுக்கும்.

வெந்தயம்
சமையலில் அதிகம் சேர்க்கப்படும் வெந்தயத்துக்கு முடிவளர்ச்சியைத் தூண்டும் ஆற்றல் உள்ளது. இதில் உள்ள புரதம் மற்றும் லெசிதின் என்ற மூலக்கூறு முடிக்கு வலு வூட்டுகிறது, ஈரப்பதத்தை அளிக்கிறது. இதை அரைத்து, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துத் தலையில் பூசி வந்தால், பொடுகுத் தொல்லையைப் போக்கலாம்.

வைட்டமின்
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, கொய்யா, நெல்லிக்காய் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இது முடிக்கு ஊட்டம் அளித்து, முடி உடைவதைத் தடுக்கிறது. நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டும், நெல்லிக்காய்ச் சாற்றை தலையில் தடவியும் வந்தால்,முடி பிளவு படுவது தடுக்கப்படும், நல்ல நிறம் கிடைக்கும்.

பொதுவாகவே நண்பர்கள் மத்தியில் கூட இடது கை பழக்கம் உள்ளவர்களை காண்பது மிகவும் அரிது தான். அதையும் தாண்டி அப்படிப்பட்ட ஓர் நபர் நமது நண்பர் அல்லது உடன் பணிபுரியும் நபராக இருந்தால், அவர் கண்டிப்பாக தனித்தன்மையுடன் காணப்படுவார். மேலும் அவர் அனைத்து வகையிலும் சிறந்து செயல்படும் நபராக காணப்படுவார். உண்மையிலேயே இடது கை பழக்கம் உள்ளவர்கள் உலகளவில் சிறந்து காணப்படுகிறார்கள். கலை, அறிவு, செயல்பாடு, மல்டி டாஸ்கிங், கோபம் என அனைத்தும் இவர்களுக்கு அதிகமாக வருகிறது......

சிறந்த கலைஞர்கள் 
இடது கை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்கிறார்கள். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள். மெக்கின்டோஷ் வடிவமைப்பாளர்களில் ஐந்தில் நால்வர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலமானவர்கள் 

வலது கை பழக்கமுள்ளவர்களோடு ஒப்பிடுகையில் சராசரி சதவீதத்தில் இடது கை பழக்கமுள்ளவர்கள் தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின்,பில் கேட்ஸ், லியோனார்டோ டாவின்சி என இந்த பட்டியல் நீள்கிறது.

மல்டி டாஸ்கிங் 

இடது கை பழக்கமுள்ளவர்களது மூளை சிறந்து செயல்படுகிறதாம். இதனால் இவர்கள் மல்டி டாஸ்கிங்கிலும் சிறந்து காணப்படுகிறார்கள்.

சமநிலை 
உடலளவிலும் கூட சமநிலையை கட்டிப்பாட்டில் வைத்திருப்பதில் இவர்கள் மேலோங்கிக் காணப்படுகிறார்கள். வலது கை பழக்கமுள்ளவர்களால் இடது கையில் வேலை செய்வது கடினம், ஆனால், இடது பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்வார்கள்.

வாழ்நாள் 
வலது கை பழக்கம் உள்ளவர்களை விட இடது கை பழக்கம் உள்ளவர்கள் சராசரியாக 9 வருடங்கள் குறைவாக தான் உயிர் வாழ்கிறார்கள்.

குடிப் பழக்கம் 

உலகளவில் 12 நாடுகளை சேர்ந்த 25000 பேரை வைத்து நடத்திய ஆய்வில், வலது கை பழக்கம் உள்ளவர்களை விட, இடது கை பழக்கம் உள்ளவர்கள் தான் அதிகம் குடிக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கோபம் 

இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது.

பார்வை 
தண்ணீருக்கு கீழேயும் கூட நல்ல பார்வை திறன் இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இருக்கிறது.

வயது வருவது 
வலது கை பழக்கம் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் சராசரியாக 4-5 மாதங்களுக்கு முன்னரே இடது கை பழக்கம் உள்ளவர்கள் வயது வந்துவிடுகிறார்கள்.

ஐ. க்யூ 

அறிவியல் ரீதியாகவே இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திசாலிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள செயின்ட். லாரன்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டது. ஐ. க்யூ அளவு 140க்கு மேல் உள்ளவர்களில் அதிகமானவர்கள் இடது கை பழக்கம் உள்ளவர்கள் தான். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின், மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற அனைவரும் இடது கை பழக்கம் உள்ளவர்கள் தான்.

ஆகஸ்ட் 13 
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13ஆம் நாள் உலக இடது கை பழக்கம் உள்ளவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது.


Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.