January 2017

தீவிரவாதிகளை விசாரிக்க கொடூர விசாரணை முறையை கொண்டு வர, தீவிரமாக முயற்சிப்பதாகவும், குத்திய முள்ளை, முள்ளைக் கொண்டுதான் எடுக்கவேண்டும். என்பதை தான் ஆழமாக நம்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கேள்விப்பட்டிராத வகையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் தமது போராட்டங்களையும், தண்டனைகளையும் நடைமுறை படுத்துகின்றனர். அதனால்அதற்கு பரிகாரம் செய்யும் வகையிலான முறையில் வாட்டர்போர்டிங் சித்திரவதை முறையை மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக அமெரிக்க ஊடகமொன்றிற்கு அளித்த செவ்வியில் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கும், தீவிரவாத குற்றவாளிகளை விசாரிப்பதற்கும் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.

புஷ் வாட்டர்போர்ட் எனும் சித்திரவதை முறையை நடைமுறை படுத்தியிருந்தார். இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா குறித்த கொடூர சித்திரவதை முறைகளுக்கு தடையை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் வேற்றுமதங்களை சேர்ந்த அப்பாவி மக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து படுகொலை செய்கிறார்கள்.

இந்நிலையில் நாம் அதற்கேற்ற முறையிலேயே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அத்தோடு முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்பதை தான் முழுமையாக நம்புவதாக குறித்த செவ்வியில் டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த விசாரணை முறையால் கைதியிற்கு ஒரு கட்டத்தில் நுரையீரல் சேதம், மூளைச்சேதம் என்பன ஏற்படுவதோடு, சிலவேளைகளில் உடல் அசைவுகள் அதிகமானால் எலும்பு உடைவுகள் மற்றும் உயிராபத்துகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்காவில் சித்திரவதைகளுக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

ஸ்ரீலங்காவில் கடந்த ஏப்ரல் மாதத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு, சிறிலங்காவின் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிசார் உட்பட சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக விமர்சித்து நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் தற்போதைய ரணில் – மைத்ரி அரசாங்கத்திலும் வெள்ளை வான் கடத்தல்கள் மாத்திரமன்றி கைதுசெய்யப்படுபவர்கள் பாலியல் ரீதியிலான வன்கொடுமைகளுக்கும் உட்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள் தொடர்பான குழு வெளியிட்டுள்ள 24 பக்கங்களைக் கொண்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படைத்தரப்பினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கட்டமைப்பு ரீதியான விசாரணை செய்வதற்கு முடியாமை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீன நிறுவனமாக இயங்காமை ஆகிய விடையங்கள் நீதியை நிலைநாட்டுவதற்கு பெரும் தடையாக இருப்பதாகவும் ஐ.நா குழு சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய சட்ட கட்டமைப்பு இராணுவம் உட்பட முப்படையினர் பொலிசார் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றம் நீதிமன்றம் ஆகியற்றை மறுசீரமைப்புக்கு உட்படுத்தாமையால் சித்திரதைகள் தொடரக்கூடிய ஆபத்து நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீ.ஐ.டி மற்றும் சீ.ஐ.டி யினர் தொடர்ந்தும் உடல் மற்றும் உள ரீதியான சித்திரவதைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கும் பேராசிரியர் ஜுவான் மெண்தெஸ் இவை தொடர்பில் விசாரணை நடத்தாமை குறித்தும் விசனம் வெளியிட்டுள்ளார். அத்துடன் சித்திரவதைகளுக்கு உட்படுத்தி பெற்றுக்கொள்ளும் ஒப்புதல் வாக்குமூலங்களை எந்தவித கேள்விக்கும் உட்படுத்தாது அப்படியே சாட்சியாக ஏற்றுக்கொள்ளும் நீதிமன்றத்தின் நடைமுறையை வன்மையாகக் கண்டிக்கும் மெந்தெஸ் இந்த நடவடிக்கைகள் சித்திரவதைகளை தொடர்ந்தும் ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். சித்திரவதைகளுக்கு துணையாக இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ள ஐ.நா அதிகாரி அதற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள உத்தேச சட்டமூலம் சர்வதேச விதிமுறைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சித்திரவதைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை உண்மையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் சிறிலங்கா அரசாங்கத்தை ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் தலைவர் யுவான் மெந்தெஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை, சுரேன் என்னும் கனேடிய தமிழர் பிரித்தானியாவின் மில்டன் கீன்ஸ் பகுதியில் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக நாம் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து 20 க்கும் மேற்பட்ட நபர்கள் எம்மோடு தொடர்புகொண்டு பல தகவல்களை வழங்கி வருகிறார்கள். இதில் குறித்த பெண் வீட்டார், அவரை தெரிந்தவர்கள். கொலைசெய்யப்பட்ட நபரது நண்பர், கொலை செய்துவிட்டு தற்போது சிறையில் உள்ள நபரின் நண்பர்கள் என பலரும் எம்மோடு தொடர்புகொண்டு, ஒன்றுக்கு பின் ஒன்று சம்பந்தமே இல்லாத தகவல்களை தருகிறார்கள். அவை என்ன என்று நாம் தருகிறோம். மக்களே நீங்கள் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள் !

கொல்லப்பட்ட சுரேன்: இவர் கனடாவில் இருந்து எதற்காக லண்டன் வந்தார் ? பின்னர் எதற்காக மில்டன் கீன்ஸ் நகர் சென்றார் என்பது பற்றி இதுவரை எவரும் சரியான தகவலை தரவில்லை. இவர் சுகந்தா என்னும் பெண்ணோடு நட்புரீதியாக பழகியதாகவும். அவரை பார்க்கவே சென்றதாகவும். அவரை கூட்டிக்கொண்டு ஷாப்பிங் சென்ரர் வரை சென்றதாகவும் அறியப்படுகிறது. ஆனால் இவரைக் கொலை செய்த நபர்கள் மிகவும் கொடூரமாக இவரை கொலைசெய்து  இருக்கிறார்கள். அந்த அளவு ஆத்திரம் இருக்க காரணம் என்ன என்று தெரியவில்லை. இது பெரும் சந்தேகம்.

கொலை செய்தவரின் மனைவி: இவர் கணவரை விட்டு விலகி வாழ்ந்த பெண். ஒரு ஆண் குழந்தையும் உண்டு. இவர் பேஸ் புக் ஊடாக சுரேனோடு நட்பு ரீதியாக பழகி வந்ததாக சுகந்தாவுக்கு வேண்டப்பட்ட நபர் ஒருவர் பேசும் போது குறிப்பிடுகிறார். ஆனால் எதனையும் அடித்துச் சொல்ல முடியாது என்பது அவரது வாதமாக உள்ளது. அவர் குறிப்பிடும்போது. சுகந்தாவின் கணவர் கல்யாணம் முடித்த நாள் முதல் , பல தடவை ஜெயில் சென்று வந்ததாகவும். இருவருக்கும் இடையே நல்ல உறவு எப்பொழுதும் இருந்ததே இல்லை என்கிறார்.

கொலை சந்தேக நபர்: இவர் பல தடவை ஜெயில் சென்று வந்தது உண்மையே. இவை பெரும்பாலும் அடி பிடி பிரச்சனை மற்றும் கிரெடிட் கார்ட் விடையம் என்று, பலர் கூறியிருக்கிறார்கள். இவரோடு சேர்த்து மேலும் 3 பேரை பொலிசார் கைதுசெய்து வைத்திருக்கிறார்கள். அதுபோக சுமார் 5 வீடுகளையும் ஒரு உணவகத்தையும் கூட பொலிசார் பூட்டி சீல் வைத்துள்ளதாக அறியப்படுகிறது. ஏன் எனில் இன்னும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இன் நிலையில் நட்பாக பழகியதை பொறுக்க முடியாது, கணவர் சுரேனை அடித்து கொன்றதாக பெண் தரப்பு கூற. இல்லை இல்லை மனைவி கணவனை பல தடவை ஏமாற்றியுள்ளார் என்று கணவன் தரப்பில் உள்ள நபர்கள் கூறுகிறார்கள்.

இதேவேளை ஒரு உயிர் அனியாயமாக போய் விட்டது என்று ஒரு பெண் கதறுகிறார். இந்த முக்கோண வளையத்தில் எங்கே உண்மை இருக்கிறது என்பது உங்களுக்கு புரிந்துவிடும் இலகுவாக. ஆனால் இந்த 3 பேரது பெற்றோர் , மற்றும் நெருங்கிய உறவினர்கள் என்ன பாவம் செய்தார்களோ தெரியவில்லை. இதனை அவர்கள் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.

பிரித்தானியாவின் லங்கஷியர் பகுதியில், பிறந்த குழந்தை ஒன்றை. சமையல் அறைக்கு எடுத்துச் சென்று, கத்தியால் பல தடவை குத்திக் கொலை செய்து. அங்கிருந்த குப்பை தொட்டியில் போட்டுள்ளார் ஒரு தாய். அங்கே சென்ற நபர் ஒருவர் கொடுத்த தகவலுக்கு அமைவாக பொலிசார் திடீரெனச் சென்று, வீட்டை சோதனை செய்த வேளை அங்கே குப்பை தொட்டியில், குழந்தை இறந்த நிலையில் இருந்துள்ளது.

பொலிசார் தகவல் கொடுத்த நபரையும், தாயாரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இன் நிலையில் தகவல் தெரிவித்த நபருக்கும் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும். தாயாரே குழந்தைகை கத்தியால் பல தடவை குத்திக் கொலை செய்துள்ளார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். பிரேதப் பரிசோதனை மற்றும் தடையவியல் நிபுணர்கள் கொடுத்த சாட்சியங்களை வைத்தே தாம் இந்த முடிவை எட்டியுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.


பேஸ் புக் ஊடாக பல பெண்களை தொடர்புகொண்டு. அவர்களை தனியாக அழைத்து, போதை மாத்திரைகளை கொடுத்து கற்பழித்து வந்த கும்பல் ஒன்றை பொலிசார் அதிரடியாக கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தி இருந்தார்கள். இவர்கள் 4 பேருக்கும் 44 வருட சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பல இளம் பெண்களை சட்டிங்கில் மடக்கி. அவர்களுக்கு ஆசை காட்டி, தனியான ஒரு இடத்திற்கு வரவளைப்பது. பின்னர் போதை மாத்திரைகளை கொடுத்து அவர்களை மயக்கி பின்னர் கற்பழிப்பதே இவர்கள் தொழிலாக இருந்துள்ளது. ஏற்கனவே போதை பழக்கத்திற்கு அடிமையான பெண்கள், மற்றும் அதில் ஆர்வமுள்ள பெண்கள் என்று பலரை இவர்கள் இவ்வாறு கற்பழித்துள்ளார்கள்.

பிரித்தானியாவின் மில்டன் கீன்ஸ் பகுதியில், கடந்த சனிக்கிழமை அதிகாலை சுரேன் என்னும் தமிழர் அடித்துக் கொல்லப்பட்டதும். அவரது உடல் கோப்பிரட்டிவ் கடையின் கார்பார்கில் இருந்து மீட்க்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. கனடாவில் இருந்து பிரித்தானியா வந்த சுரேன் என்னும் இந்த இளைஞர், சுகந்தா என்ற இப்பெண்ணோடு காதல் தொடர்பில் இருந்துள்ளார்.

சுகந்தா என்னும் இப்பெண்ணுக்கு 11 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் தனது கணவரை பல தடவைகள் ஏமாற்றியுள்ளதாக மில்டன் கீன்ஸ் நகரில் உள்ள பலர் தெரிவித்துள்ளார்கள். இறுதியாக கணவர் விவாகரத்து பெறும் அளவுக்கு விடையம் சென்றுள்ளது. ஆனால் சுகந்தா என்னும் இப்பெண் 2016ம் ஆண்டு முதல் சுரேனோடு பேஸ்புக் தொடர்பில் இருந்துள்ளார். இவர்கள் ரகசியமாக பரிமாறிக்கொண்ட பல, அரட்டைகள் தற்போது ஆதாரமாக எமக்கு கிடைத்துள்ளது. சுரேன் லண்டன் வந்து , "நான் எங்கே தங்கி இருக்கிறேன் என்று கண்டு பிடி பார்கலாம்" என்று செல்லமாக சொல்ல , "எனக்கா தெரியாது" என்று சுகந்த அரட்டை அடித்த பல தகவல்கள் ஆதாரங்களோடு வெளியாகியுள்ளது.

சுகந்தா என்னும் இப்பெண்ணின் அக்காவின் நெருங்கிய நண்பரான இந்த சுரேன், லண்டன் வந்து பகிரங்கமாகவே சுகந்தாவை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். தட்டிக் கேட்ட கணவரை மிரட்டியும் உள்ளார். இதற்கும் ஆதாரம் உண்டு(போன் உரையாடல்) (மற்றும் நேரடி சாட்சி) இதற்கு முன்னதாக ஒரு பாக்கிஸ்தான் டக்சி ஓட்டுனர். அதற்கு முன்னர் வேறு ஒரு இளைஞர் என்று, இந்த சுகந்தா அடிக்காத லூட்டியே கிடையாது என்கிறார்கள்.

இதுபோக மில்டன் கீன்ஸ் நகரில் சுமார் 15 க்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள், கணவனை பிரிந்து. சிங்கிள் அம்மா( single mum)  என்று பதிவில் போட்டு காசை எடுத்துக்கொண்டு அங்கே உல்லாச வாழ்க்கை வாழ்வதாகவும். அங்கே ஒரு அன்ரி( 2பெண் பிள்ளையின் தாயார்) ஒரு சோமாலியா காரணை தனது காதலனாக வைத்துக்கொண்டு. அவனை தனக்கு தெரிந்த மேலும் சில தமிழ் பெண்களுக்கு அறிமுகப்படுத்தி டேட்டிங் கூட செய்வதாகவும் மில்டன் கீன்ஸ் நகர வாசிகள் தெரிவிக்கிறார்கள். லண்டனில் இருந்து சற்று ஒதுக்குப் புறமாக இன் நகர் இருப்பதால், வேறு தமிழர்களுக்கு தெரியாமல் எதனை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று அங்குள்ள சில பெண்கள் மற்றும் ஆண்டிமார்கள் நினைக்கிறார்கள்.  இதில்வேறு விசா இல்லாத இளைஞ்ர்களுக்கு உதவிசெய்வது போல நடித்து. அவர்களை தமது காம வலைக்குள் விழுத்தும் தமிழ் ஆண்டி மார்களும் மில்டன் கீன்ஸ் நகரில் தான் உள்ளார்கள் என்று பாதிக்கப்பட்ட 21 வயது இளைஞர் எமக்கு தெரிவித்துள்ளார்.

ஒரு கொலை கணவன் சிறை, பல ஏமாற்றுகள், பல போலி பிரட்டுகள். இவரைப் போன்ற பெண்களால் பெண் சமுதாயத்திற்கே ஒரு மானக் கேடு. மிலடன் கீன்ஸ் நகரில் நடக்கும் மேலும் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், மற்றும் சில பல உண்மை சம்பவங்கள் எமது இணையத்தில் புகைப்பட ஆதாரங்களோடு வெளியாக உள்ளது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

நீர்வேலியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வயோதிபரை வேகமாக சென்ற முச்சக்கரவண்டி இடித்துள்ளது. பின்னர்  முச்சக்கரவண்டி சாரதி வாகனத்தை நிறுத்தாது சென்றுள்ளார். இவ் விபத்து தொடர்பாக பொலிசாருக்கு உடன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
வீதியில் அதிவேகமாக பயணிப்பது உங்களை மரணத்திற்கு இட்டுச்செல்லும். வாகன சாரதிகள் மிக அவதானத்துடன் செயற்படவும். 
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்



ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து முஸ்லீம் இளைஞன் ஒருவரை தற்போது பொலிஸார் தேடி வருகின்றனர்.

கொலை இடம்பெற்ற போது யாழ் ஐந்து சந்திப்பகுதியை தற்காலிக வசிப்பிடமாகவும் புத்தளத்தை பிறப்பிடமாகவும் கொண்ட முஹம்மட் பரீன் (வயது-33) என்பவர் அப்பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பொலிஸார் குறித்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இவர் தலைமறைவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும் ஊர்காவற்றுறை பகுதியில் இடம்பெற்ற மாடுகள் திருட்டு சம்பவம் தொடர்பு பட்டுள்ளதுடன் இரும்பு வியாபாரத்தில் இந்நபர் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு முன்னாள் மாநகர மாநகர சபை முஸ்லீம் உறுப்பினர்கள் தற்போதைய வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆகியோர் அடைக்கலம் வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இது தவிர யாழிற்கு போதைப்பொருட்களை புத்தளத்தில் இருந்து கடத்தி விநியொகம் செய்யும் முகவராகவும் இவர் செயற்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் முச்சக்கரவண்டி ஒன்றில் இவரும் வந்து தனித்திருந்த குறித்த பெண்ணின் வீட்டுக்குள் சென்று அவர் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படும் சகோதரர்களான வட்டுக்கோட்டை பழைய நீதிமன்றத்தடி கரம்பகம் என்ற இடத்தைச் சேர்ந்த நாகேந்திரன் துஷியந்திரன் (வயது-30) நாகேந்திரன் துஷியந்தன் வயது -32) ஆகிய சகோதரர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


அரச சேவையாளர்களின் சம்பளத்தை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊழியர்களின் தொழில் தரத்தை மையமாக கொண்டு அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.

இரண்டாயிரம் ரூபா தொடக்கம் 16 ஆயிரம் ரூபா வரையிலான சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

மேலதிக நேர வேலை சம்பளம் மற்றும் கடன் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு இந்தாண்டு அரச சேவையாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள அரச மருந்தாளர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

காணாமல் போன தமது உறவுகளை தேடி தருமாறும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் கூறி நல்லூரில் இன்று அடை மழையிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள், யுத்தத்திற்கு பிறகு விசாரணைகளுக்காக அழைத்துச்செல்லப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என காணாமல் போனவர்களின் பெயர் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.

இந்த போராட்டம் இதோடு நின்றுவிடாது. நாடெங்கிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும். என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மிகவும் மனவேதையில் இவர்கள் காணப்படுகின்றார்கள். வெள்ளை வானில் வந்தவர்கள் எனது மகனை கடத்தினார்கள் எனவும் 10 வருடங்களாகியும் இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கண்ணீர்மல்க ஒரு தாய் தெரிவித்தார்.

கொட்டும் மழையிலும் இந்த பாவப்பட்ட தமிழ் மக்கள் தமது சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

மேலும் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்



சற்றுமுன் கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் தலை துண்டித்துப் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதிப் புகையிரதமும்புகையிரதக் கடவையை கடக்க முற்ப்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

தனது சொந்த 23 வயது மகளுடனான முறைகேடான உறவின் மூலம் அவரை இரு குழந்தைகளுக்குத் தாயாக்கிய 37 வயது தந்தையொருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் நியூஸிலாந்தில் இடம்பெற்றுள்ளது.


குறித்த தந்தை 13 வயது சிறுவனாக இருந்த போது 30 வயதான பெண்ணுடனான தகாத தொடர்பின் மூலம் சம்பவத்துடன் தொடர்புடைய மகளுக்கு தந்தையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி தந்தை 2010 ஆம் ஆண்டு தனது மகள் 16 வயது சிறுமியாக இருந்த போது அவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த தந்தைக்கும் அவரது மகளுக்கும் முதலாவது குழந்தை பிறந்த போது இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதன் போது மகளை விட்டு பிரிந்திருக்க எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த போதும், மீண்டும் மகள் மூலம் பிறிதொரு குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் எனினும் குறித்த இரண்டாவது குழந்தை 3 மாதங்களில் உயிரிழந்துள்ளது. இந்நிலையில் இறந்த குழந்தை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனைகளில் அக் குழந்தை சம்பவத்துடன் தொடர்புடைய தந்தைக்கும் அவரது மகளுக்கும் பிறந்தது என கண்டறியப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று காலை டனிடின் மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிபதி குறித்த தந்தையினை 6 மாத காலம் சமூக தடுப்புக் காவலிலும் இரு வருட கால தீவிர கண்காணிப்பின் கீழும் வைத்திருக்க உத்தரவிட்டுத் தீர்ப்பளித்துள்ளார்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தினால் டிஜிட்டல் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளது. எதிர்வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இந்த மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றது.

குறித்த மாநாட்டை இலங்கையில் நடாத்த தேவையான நடவடிக்கைகளை கெற்கொள்வது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த மாநாட்டுக்கு பேஸ் புக், கூகுள்,

சோசல் கெப்பிட்டல், இன்பொயிஸ் போன்ற உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றைய தினம்(25) விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், மழைதொடர்வதால் சீரற்ற வானிலை காரணமாக தரையிறக்குவதில் ஏற்பட்ட சிக்கலினால் தனது பயணத்தை இடைநடுவில் முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளார்.

இந்தியாவில் கோவையில் பீளமேடுபுதூரில் வீட்டை எழுதி தர மறுத்த தந்தையை மகனே இரும்பு கம்பியால் அடித்துக்கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை - பீளமேடுபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசியப்பன். 80 வயதான இவருக்கு பாலச்சந்திரன் என்ற மகன் உள்ளார்.

அம்மாசியப்பனுக்கு நகர் பகுதியில் 2 வீடுகள் சொந்தமாக உள்ளன. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி அம்மாசியப்பன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் தனது வீட்டில் பிணமாக கிடந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அம்மாசியப்பனின் மகன் பாலச்சந்திரன் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சிங்காநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

அம்மாசியப்பன் மரணம் குறித்து பாலச்சந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. விசாரணையில் பாலச்சந்திரன் கூறியதாவது, "என் தந்தை அம்மாசியப்பன் பேரில், சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளன. அதை என் பெயரில் எழுதி தருமாறு அவரிடம் பல நாட்களாக கேட்டு வந்தேன். ஆனால், அவர் என் பெயருக்கு எழுதித்தர மறுத்து விட்டார்.

அவரை கொலை செய்துவிட்டால், அவருக்கு பிறகு, அந்த இரண்டு வீடுகளும் எனக்கு வரும் என்பதால், அவரை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்தேன்" என வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

சீனாவில் உள்ள ஹூபேமா காணம் ஹன்கூ நகரில் பழமையான அடுக்கு மாடி கட்டிடங்கள் இருந்தன. அவற்றை வெடி வைத்து இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

அதனால் 15 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து 19 கட்டிடங்களை தகர்க்க, 5 டன் வெடிபொருட்கள் 19 கட்டிடங்களிலும் நிரப்பப்பட்டன. அவை கட்டிடங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களில் வைக்கப்பட்டன. பின்னர் நள்ளிரவில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் தகர்க்கப்பட்டது. அதையடுத்து 10 வினாடிகளில் 19 அடிக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. அந்த கட்டிடங்கள் முறையே 7 முதல் 12 மாடிகளை கொண்டவை.

அவற்றில் ஒன்று 707 மீட்டர் உயரம் கொண்டது. இது உலகிலேயே மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாக இருந்தது. ஹன்கூ வர்த்தக நகரமாகும். இங்கு இதுவரை 32 அடுக்குமாடி கட்டிடங்கள் இதே போன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் ஒரே நேரத்தில் இது போன்று அதிக கட்டிடங்கள் இடித்து தகர்க்கப்பட்டது.

 இதுவே முதல் முறையாகும். கட்டிடங்களை தகர்ப்பதற்கான பணிகள் சுமார் 4 மாதங்களாக நடைபெற்றதாக சீன என்ஜினீயரிங் அகாடமி நிபுணர் வாங்ஸுகுயாங் தெரிவித்தார். 19 கட்டிடங்களும் இடிக்கப்பட்டவுடன் ஏற்படும் புகையை கட்டுப்படுத்த தன்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது. இவ்வாறு செய்வதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும் கூறினார்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக, யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வருடம் சென்ற கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ம.ரவிசங்கர் என்ற இளைஞன்,மேற்கு ஆபிரிக்காவில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில், திங்கட்கிழமை (23) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு ஆபிரிக்காவிலுள்ள கடற்கரை பிரதேசமான சியாரா லியோன் என்ற பகுதில் வைத்தே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். யுத்தத்தின் போது, காலொன்றை இழந்த இவர், கடந்த வருடம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சுவிற்க்குஸர்லாந்துக்குச் செல்வதற்காக, முகவரொருவர் மூலம் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

இவர்களை அழைத்துச் சென்ற முகவர், ஆபிரிக்காவின் கடற்கரைப் பிரதேசத்தில் இவர்களைத் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, கடந்த 3 நாட்களுக்கு முன் குறித்த இளைஞன் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த இளைஞனின் நண்பர், கரவெட்டியிலுள்ள அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (22) அவ்விளைஞன் உயிரிழந்துள்ளதாக பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் போன்று பல இளைஞர்கள் அம்முகவரினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து வருவதாக குறித்த பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்த சுப்பையா சண்முகம் ஆகியோருக்கு 16 இலட்சம் ரூபாய் பணம் வழங்கியே தமது மகன் சுவிற்ஸர்லாந்துக்கு செல்வதற்காக ஆபிரிக்காவுக்கு சென்றுள்ளார்.

மேலும் பணம் கேட்டு மகனை துன்புறுத்தியதால் அவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவனை தாக்கிக் கொன்று விட்டார்கள். மேலும் தற்போது 15 இலட்சம் ‌ரூபாய் பணம் தந்தாலே அவனுடைய சடலத்தைத் தருவோம். அல்லாவிட்டால் தரமாட்டோம் என, தற்போது எம்மை மிரட்டுகின்றனர் என்று இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


சிதம்பரம், திருமண மண்டபத்தில், மது அருந்தி, போதையில் மாப்பிள்ளை கலாட்டா செய்ததால், அதிர்ச்சிஅடைந்த மணப்பெண், திருமணத்தை நிறுத்தினார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கிள்ளையைச் சேர்ந்தவர், தர்மராஜன், 28; திருப்பூரில் உள்ள, பனியன் கம்பெனியில் பணிபுரிகிறார்.இவருக்கும், சிதம்பரம் அடுத்த, ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், நேற்று காலை, சிதம்பரத்தில் திருமணம் நடக்க இருந்தது. நேற்று முன்தினம் இரவு, இருதரப்பு உறவினர்களும் மண்டபத்தில் கூடினர்.

இரவு மாப்பிள்ளை, நண்பர்களுடன் மது அருந்தினார். போதை ஏறியதும், சமையல் அறைக்கு சென்று, சமையல்காரர்களிடம் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள், சமைக்க முடியாது என, வெளியேறினர்.இதையடுத்து, மணப்பெண் - மாப்பிள்ளை வீட்டார் இடையே, தகராறு ஏற்பட்டு, நள்ளிரவு வரை வாக்குவாதம் நீடித்தது.

ஆவேசமடைந்த மணப்பெண், 'குடிகார மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்' என தெரிவித்து, பெற்றோர் மற்றும் உறவினர்களுடன், நள்ளிரவே, தன் ஊருக்கு கிளம்பி சென்றார்.
நேற்று காலை, மாப்பிள்ளை தரப்பினர், மணப்பெண் திருமணத்தை பாதியில் நிறுத்தி சென்று விட்டதாக, சிதம்பரம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் மோகன், இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார். மணப்பெண், 'குடிகார மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடியாது' என, கறாராக தெரிவித்து, காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார்.
இதனால், நேற்று நடக்க இருந்த திருமணம் நின்றதால், மாப்பிள்ளை வீட்டாரும் சோகத்துடன் சென்றனர்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


தூத்துக்குடியில்  திருச்செந்தூர் சாலை பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அப்துல் கபூர்(60). இவரது மனைவி சரோஜா(58). இவர்களது மகன்கள் சலீம் என்ற முகமது சலீம், புகாரி. இவர்கள் இருவரும் பிரபல ரவுடிகள்.

இவர்கள் மீது 2 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள், கஞ்சா விற்ற வழக்குகள் என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தூத்துக்குடி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.   கஞ்சா விற்பனை மற்றும் கொலை வழக்குகள் தொடர்பாக இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூட்டாளியான சபரிக்கும்  முன்விரோதம் இருந்துவந்தது.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் வீட்டின் உள்ளே  சலீமும், வெளியே புகாரியும் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ராஜபாண்டி நகரை சேர்ந்த சபரி என்ற செல்வகுமார் (43), பாலஆறுமுகம் (44) உள்ளிட்ட 5 பேர் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர்.

வெளியே படுத்திருந்த புகாரியை சரமாரியாக வெட்டி சாய்த்ததோடு உள்ளே சென்று சலீமையும்  வெட்டினர். அப்போது அவரும் பதிலுக்கு அரிவாளால் சபரி கும்பலை வெட்டினார். இதில் பாலஆறுமுகத்துக்கு வெட்டு விழுந்தது. ஆனாலும் புகாரி, சலீம் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  காயமடைந்த பாலஆறுமுகத்திடம் போலீசார் நடத்திய  விசாரணையில் சபரி மற்றும் சலீம், புகாரி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கூட்டாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும், தொழில் போட்டியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதும்  தெரியவந்தது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


பிரித்தானியாவில் நிலவிவரும் கடுமையான பனிமூட்டமான காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்துக்களில் பல்வேறு தடைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பிரித்தானியாவின் தென்பகுதி கடுமையான உறைபனிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் ஹீத்ரோ விமான நிலையத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், லண்டன் நகர விமான நிலையத்தில் 37 விமானங்களும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்துத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, லண்டன் முழுவதற்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த எச்சரிக்கையானது பிரித்தானியாவின் தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளிலும் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் கடுமையான உறை பனி மூட்டம் காரணமாக அடுத்த இரண்டு நாட்கள் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பனி மூட்டத்தின் தாக்கம் தொடர்ந்தும் இரண்டு நாட்களில் அதிக அளவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. வானிலை ஆய்வு நிலையத்தின் திடீர் எச்சரிக்கையால் பிரித்தானிய மக்களிடையே பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்





சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் 185 அணு குண்டுகள் ஒன்றாக வெடித்தால் எப்படி அதிருமோ, அவ்வாறு ரஷ்யாவின் மையப் பகுதி அதிர்ந்துள்ளது. காரணம் என்னவென்றால் பெரும் விண் கல் ஒன்று அன்று தான் பூமி மீது மோதி அது ரஷ்யாவில் இந்த இடத்தில் விழுந்துள்ளது. அருகில் இருந்த செடி கொடிகள் பல கருகி. அங்கே பெரும் நெருப்பு வலையம் உருவாகியது. ஆனால் இன்று விண் கல் விழுந்த அந்த பெரும் பரப்பு ஏரியாக மாறியுள்ளது.

அதாவது குறித்த பெரும் கல் அந்த இடத்தில் நிலத்தின் கீழ் புதையுண்டு உள்ளதால். நீர் மேலே தங்கி. அது ஒரு அழகான ஏரியாக மாறியுள்ளது. ஆனால் விடையம் தெரிந்த சிலர் அந்த ஏரிக்கு மேல் படகில் சென்று. கீழ் உள்ள கல்லை சிறிதாக நோண்டி அதில் உள்ள சிறு துகள்களை எடுத்துச் செல்வது வழக்கமாம். ஏன் எனில் அந்தக் கல், வேற்றுக் கிரக கல். அது பூமிக்கு சொந்தமானது அல்ல.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்




கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏ. நாகூரை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்அங்குள்ள நர்சிங் கல்லூரியில் 2- ஆண்டு படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கார்த்திக் (18). நர்சிங் மாணவிக்கும் கார்த்திக்கிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. அவர்கள் பல இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

அப்படி சென்றபோது எல்லையை மீறி இருவரும் உல்லாசம் இருந்தனர்.  உல்லாச காட்சிகளை மாணவிக்கு தெரியாமல் கார்த்திக் தனது செல்போனில் படம் பிடித்துக்கொண்டார். பின்னர் உல்லாசம் அனுபவித்த வீடியோ பதிவுகளை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார் அந்த காட்சியை பார்த்த நெகமத்தை சேர்ந்த வெள்ளச்சாமி என்பவரது மகன் கார்த்திக் (23) ஆபாச காட்சியை மாணவியிடம் காண்பித்து உல்லாசத்துக்கு வரவேண்டும் இல்லை என்றால் இந்த காட்சிகளை பரப்பி விடுவேன் என்று மிரட்டினார்.

அதிர்ச்சியில் உறைந்த மாணவி அவருக்கு பணிந்தார். அடுத்தபடியாக பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்த சபரீஸ்வரன் (20) என்பவர் அதே வீடியோ காட்சியை காண்பித்து மாணவியை கற்பழித்தார்.  இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள 3 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள். 
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


பெண் ஒருவரை இளைஞர் குழுவொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காட்சியை பேஸ்புக் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்த அதிர்ச்சி சம்பவம் சுவிடனில் பதிவாகியுள்ளது. சுவிடனின் தலை நகரான ஸ்டோக்ஹோம் நகரின் வடக்கு பகுதியில் உள்ள உப்சாலா பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்ததாவது,

பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் மூன்று இளைஞர்கள், ஒரு பெண்ணை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். குறித்த சம்பவம் சில மணி நேரங்கள் நீடித்த நிலையில் குறித்த சம்பவ நிகழ்ந்த பகுதியை பொலிஸார் இணங்கண்டுள்ளனர்.

இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை கடந்த வருடத்தில், பேஸ்புக் நேரடி ஒளிபரப்பு மூலம், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்தமை மற்றும் அமெரிக்காவில் வெள்ளை இன விசேட தேவையுடையவரை நான்கு கறுப்பினத்தவர்கள் கொடுமை படுத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


கனடா ரொரண்டோவில் 883,000 ஆயிரம் டாலர்களை ஆட்டையை போட்டு, தலைமறைவாகியுள்ள சாம்பசிவம் பாலமுருகானந்தம் என்னும் நபரை தான் தொடர்ந்தும் தேடிவருவதாக கனேடியப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அதி தீவிரமாக தேடுவேர் பட்டியலில் அவரை தாம் இணைத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

சாம்பசிவம் என்னும் இன் நபர் நூதனமான முறையில், 883,000 ஆயிரம் கனேடிய டாலர்களை தனது வங்கி அக்கவுண்டுக்கு மாற்றி. பின்னர் அதனை தங்கமாகவும், வெளிநாட்டு நாணயமாகவும் மாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளார். அவர் இன்னும் கனடாவில் தான் இருக்கிறாரா என்பது சந்தேகமே.

இருப்பினும் பிடியாணை பிறப்பித்து அவரை பொலிசார் தேடிவரும் நிலையில். இவர் தொடர்பான தகவலை தமக்கு தந்தால் 200,000 ஆயிரம் கனேடிய டாலர்களை தாம் பரிசாக தரவுள்ளதாக பொலிசார் தற்போது அறிவித்துள்ளார்கள்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்பின் முகத்திரையை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.

ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அவற்றின் நலன் கருதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாய் கிழிய கூறியது விலங்குகள் நல அமைப்பான பீட்டா.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீட்டா ஆண்டுதோறும் ஏகப்பட்ட விலங்குகளை கொன்று குவித்து வருகிறது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் காளைகளை காப்பதாகக் கூறி வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பீட்டா கொலை செய்துள்ள விலங்குகளின் விபரத்தை ட்விட்டரில் வெளியிட்டு அதன் முகத்திரையை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. இது தான் அரவிந்த் சாமி ட்விட்டரில் கூறியிருப்பது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்






தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தும் போராட்டம் உலகத் தமிழர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களால் பீட்டா தலைமையகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் அமைந்திருக்கும் பீட்டாவின் தலைமையகத்தை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் முற்றுகையிடுள்ளனர். அந்த அலுவலகம் முன்பு குவிந்த அமெரிக்காவின் பதினாறு மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்கள் கறுப்புக்கொடி காட்டி, பீட்டாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்








சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலபேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கூகுள் மேப்ஸ் சென்று பார்த்தால் மெரினாவில் குவிந்துள்ள போராட்டக்காரர்களின் வலிமையை படம் போட்டு காட்டுகிறது கூகுள் மேப்ஸ்!

2009-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் கிரவுட்சோர்சிங் என்று கூறப்படும் தொழில்நுட்பத்தின் மூலம், அதாவது மக்களிடமிருந்தே தகவலை பெற்று அதனை சீர் செய்து மக்களுக்கே திரும்பி அளிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது.

இதற்கு முதல் தேவை மக்களின் மொபைல் போனில் “லொக்கேஷன்” வசதி ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் எங்கு இருக்குறீர்கள், எந்த வேகத்தில் நகர்கிறீர்கள் என்பது குறித்த தகவல் கூகுளை சென்றடையும்.

அது மட்டுமின்றி ஒரே இடத்திலிருந்து பல வாகனங்களின் லொக்கேஷன் வந்து சேருமாயின் அந்த இடத்தில் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, என்ன வேகத்தில் நகர்கின்றன என்ற தகவல்களை கூகுள் எளிதாக பெறும்.

இங்கே கூகுள் நிறுவனம் செய்யும் வேலை என்னவென்றால், எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, எவ்வாறு நகர்கின்றன என்பதனை வைத்து போக்குவரத்து நெரிசலில்லை, சிறிய அளவு நெரிசல், மிக நெரிசல் என கணக்கிடுவது தான்.

இந்த முறையில் தான் கூகுள் மெரினாவின் கூட்டத்தையும் காட்டுகிறது. போராட்டத்தில் இருக்கும் நபர்களில் 90 சதவிகிதம் பேர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள். ஈஸியாக மக்கள் கூட்டத்தை காட்டுகிறது.

சென்னையின் மற்ற இடங்களின் டிராபிக்கையும் தற்போது பார்க்கலாம். ஆனால், போராட்டக்காரர்கள் அதிகம் குவிந்திருக்கும் மெரினா கடற்கரையை காட்டும் போது, சிவப்பு நிறத்தில் காட்டுகிறது கூகுள் வரைப்பட மேப்.

ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவனைக் கொன்று தின்ற 16 வயதுச் சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் தீபு குமார் (9) என்ற சிறுவன் கடந்த திங்களன்று காணாமல் போனான். மறு நாள் செவ்வாய்க்கிழமையன்று அவனது தலையற்ற உடல் ஒரு வெட்டவெளியில் வீசப்பட்டிருந்தது.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கெமரா ஒன்றில் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் சிறுவனுடன் தீபு குமார் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதன் அடிப்படையில் குறித்த சிறுவனை பொலிஸார் விசாரணை செய்தபோது அதிர்ச்சித் தகவல்கள் சில வெளியாகின.

சந்தேக நபர் அளித்த வாக்குமூலத்தில், திங்கட்கிழமை மதியம் சுமார் ஒன்றரை மணியளவில், பட்டம் விடும் நூலை தருவதாகக் கூறி தீபு குமாரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தீபுவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து குளியலறையில் வைத்து தலையை வெட்டியெடுத்தபின் உடலைக் கூறு போட்டதாகவும், தீபுவின் உடல் பாகங்களைக் கடித்துத் தின்றதாகவும், வழிந்த இரத்தத்தைக் குடித்ததாகவும் தெரிவித்துள்ளான்.

மேலும், தனது ஆசிரியர்கள் மேல் இருந்த வெறுப்பினால், தீபுவுன் இதயத்தை தான் கல்வி கற்றுவரும் பாடசாலையின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்து அந்தப் பாடசாலை வளவுக்குள் வீசியதாகவும் குறிப்பிட்டுள்ளான்.

சந்தேக நபருக்கு ஏற்கனவே இறைச்சியைப் பச்சையாக உண்ணும் வழக்கம் இருந்திருக்கிறது. கோழி இறைச்சியை பச்சையாகவே சாப்பிடுவதையும், எதுவும் கிடைக்காதபோது தனது கையையே கடித்துச் சாப்பிட முயன்றதையும் வாக்குமூலத்தில் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.

இதையடுத்து குறித்த சந்தேக நபர் மீது பொலிஸார் நரமாமிசத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, அவனை மனவள ஆலோசகரிடம் பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்துள்ளனர்.

கொல்கத்தாவில் பள்ளி மாணவன் ஒருவன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'குட் பாய்' என்று பதிவிட்ட பின் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பதினோராம் வகுப்புப் படித்து வரும் சம்ப்ரித் பானர்ஜி, கடந்த புதன்கிழமை இரவு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'குட் பாய்' என்று பதிவிட்டு, வீட்டில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மறுநாள் சம்ப்ரித்தை எழுப்ப வந்தபோது, அவர் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது. 


நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதால் கவலையில் இருந்த சம்ப்ரித் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சம்ப்ரித்தின் பெற்றோர்கள் அவரது படிப்பை கருத்தில் கொண்டு எப்போதும் கண்டிப்புடன் நடந்துக் கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர்.


இந்நிலையில், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சம்ப்ரித்தை வணிக ஆசிரியர் கொடுமைப்படுத்தி வந்ததாக ஆசிரியர் மீது அவரது தாயார் அபர்ணா குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



     
45-வது அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்க துணை அதிபராக மைக்கெல் பென்ஸ் பதவியேற்றார். வாஷிங்டன், கேபிடல் ஹில்லில் நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில் முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்சேல் ஆகியோரும் ஹிலாரி கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.














Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.