April 2017

சமூக வலைதளமான பேஸ்புக்கில் லைவ் வீடியோ ஒளிபரப்பு செய்யும் வசதி வந்ததில் இருந்து பல்வேறு அதிர்ச்சி வன்முறை சம்பவங்கள் அதன்வாயிலாக வெளியிடப்பட்டு வருகிறது. கொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் தற்கொலை போன்ற சம்பவங்கள் லைவாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது, இவ்விவகாரத்தில் பேஸ்புக் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. 

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுவிடனில் பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ லைவாக வெளியிடப்பட்டது, இது தொடர்பாக விசாரணை செய்த அந்நாட்டு நீதிமன்றம் நேற்று குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதித்தது. 

இந்நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோவானது வெளியாகி உள்ளது தாய்லாந்து நாட்டில் இருந்து. தாய்லாந்து நாட்டை சேர்ந்த இளம் தந்தை தன்னுடைய 11 வயது மகளை தூக்கிட்டு கொலை செய்து உள்ளான், அதனை வீடியோவாக பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளான். தாய்லாந்து நாட்டை சேர்ந்த 21 வயது இளைஞர் வுட்டிசன் வோங்டாலே இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளான். 

வுட்டிசன் வோங்டாலேவிற்கும், திரிராத்னா என்ற பெண்ணிற்கும் திருமணம் ஆகிய பெண் குழந்தை பிறந்து உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் திரிராத்னாவின் முன்னாள் கணவனுக்கு பிறந்த குழந்தையை வுட்டிசன் தொடர்ந்து தாக்கி உள்ளார், இதனால் கோபம் அடைந்த திரிராத்னா வீட்டைவிட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவிய பிரிந்து வுட்டிசன் வாழ்ந்து வந்து உள்ளார். 

மகளை வளர்ப்பதாக கூறி தன்னுடன் வைத்து உள்ளார். திரிராத்னா திரும்ப வராத காணத்தினால் அமைதியை இழந்து உள்ளார். மனைவி பிரிந்து சென்றதிலிருந்து வுட்டிசன் கடும் மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் உள்ள தாய்லாந்தின் முக்கிய சுற்றுலாத்தளமான புக்கெட் தீவிற்கு தனது மகளுடன் சென்ற வுட்டிசன் சென்று ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று 11 மாத பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல், தனது மகளை தூக்கிட்டு கொன்று உள்ளான். இதுமட்டுமல்லாமல் இந்த கொடூர செயலை இரு வீடியோவாக பேஸ்புக் லைவ் மூலமாக ஒளிபரப்பு செய்து உள்ளான். 

இந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த வுட்டிசனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். சுமார் 24 மணி நேரங்கள் வீடியோவானது பேஸ்புக்கில் ஒளிபரப்பு ஆகி கொண்டே இருந்து உள்ளது. போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்த போது வுட்டிசனும் தற்கொலை செய்துக் கொண்டான் என்பது தெரியவந்து உள்ளது. வுட்டிசன் ஒளிபரப்பு செய்த கொலை காட்சிகளை, 24 மணி நேரத்திற்கு பிறகு அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்த பின்னரே பேஸ்புக் பகுதியில் இருந்து நீக்கப்பட்டது. அதற்குள் இந்த வீடியோ காட்சிகளை சுமார் 3 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 

கொடூரமான சம்பவம் தொடர்பாக தகவல்கள் பரவியும் நடவடிக்கை எடுக்காத பேஸ்புக் நிறுவனத்திற்கு பலரது தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் காதல் பிரச்சனையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தன்னுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வைத்து காதலன் மிரட்டியதால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மேற்படிப்பிற்காக டெல்லி சென்றுள்ளார்.

அங்கு அவர் பிரகாஷ் என்பவரை காதலித்துள்ளார். மூன்று வருடங்களாக கதலித்து வந்த விவகாரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் பிரச்சனையாகியுள்ளது. இதனையடுத்து பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறு பிரகாஷ் அழைத்துள்ளார்.

ஆனால் வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலால் அந்த பெண் பிரகாஷின் கோரிக்கைக்கு உடன்படவில்லை. இதனையடுத்து தன்னுடன் வரவில்லை என்றால் இருவரும் படுக்கையறையில் இருக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக பிரகாஷ் அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி அந்த பெண் பிரகாஷ் மீது பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

ஆனால் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து அந்த பெண் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஆரம்பித்த ஈராக்கின் மசூல் நகர முற்றுகையானது ISIS அமைப்பை மிகவும் பலவீனமாக்கி நகரின் மேற்குப் பகுதியில் ஒதுங்க வைத்துள்ளது.

மசூல் நகரின் மேற்குப் பகுதியை மீட்கும் நடவடிக்கை பல மாதங்களாக இடம்பெறலாம் என்ற நிலையிலிருந்த போது, சிரியாவின் இரசாயனத் தாக்குதலும், அதற்கான அமெரிக்காவின் பதிலடித் தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.

இதனால் களநிலைமைகளில் மாற்றமேற்பட வாய்ப்புண்டு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை ISIS அமைப்பிற்கு எதிராக போராடி வந்த அமெரிக்கத் தரப்பு,

சிரியா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தம்மிடையேயான போட்டி பொறாமைகளின் காரணமாக, ISIS அமைப்பிற்கு எதிரான போரில் பாதிப்புக்களை ஏற்படுத்தினாலும், சிரியா மீதான அமெரிக்காவின் நேரடித் தாக்குதல் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியது என நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் சுரேஸ் தர்மா கூறியுள்ளார்.

தற்கால குழந்தைகள் உடல் மற்றும் அறிவு ரீதியாக 12 வயதிலேயே பக்குவமடைந்து விடுவதால், குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமல்ல என புதிய சட்டமொன்றை மலேசியா அரசு இயற்றியுள்ளது.

12 வயதிலேயே பக்குவம் அடைந்து விடுவதால் குழந்தை திருமணம் குற்றமல்ல: மலேசியா அரசு புதிய சட்டம் கோலாலம்பூர்: மலேசியா பாராளுமன்றத்தில் குழந்தைத்திருமணம் குற்றமல்ல என புதிய சட்டம் இன்று இயற்றப்பட்டது.இதுகுறித்த விவாதம் மலேசியா பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. விவாதத்தின்போது மலேசிய எம்.பி ஒருவர் கூறுகையில் “ தற்போதைய காலத்தில் சிறுமிகள் 9 அல்லது 12 வயதிலேயே பருவமடைந்து விடுகின்றனர். இந்த காலகட்டத்தில் உடல் மற்றும் மனோரீதியாக அவர்கள் திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.

இந்த காலகட்டத்தில் அவர்கள் 18 வயது பெண் போலவே காட்சியளிக்கின்றனர். இதனால் திருமணத்திற்கு வயது ஒரு தடையாக இல்லை. குடிமையியல் மற்றும் முஸ்லீம் சட்டங்களின்படி ஆண், பெண் இருவரும் 18 வயதுக்குக் குறைவாகவே திருமணம் செய்து கொள்கின்றனர்.

குடிமையியல் சட்டத்தின்படி திருமண வயது 18 ஆக இருந்தாலும், மாநில முதல்வர்களின் அனுமதி பெற்று 16 வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர்” என்றார். இந்த புதிய சட்டத்திற்கு பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

மகள் காதலித்ததால் ஆத்திரமடைந்த தந்தை மகளுடன் சேர்த்து அவளது காதலனையும் கோடாரியால் வெட்டிக்கொலை செய்தார். இந்த சம்பவம் உ.பி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

காதலித்ததால் ஆத்திரம்: மகள்-காதலன் இருவரையும் கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டம் பாம்காரி குர்மின் கிராமத்தை சேர்ந்தவர் மூல்சந்த். இவரின் மகள் கீதாவும்(வயது 19), அதே பகுதியை சேர்ந்த சுனில் அகர்வாரும் (வயது 19) ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலித்து வந்தனர். 3 ஆண்டுகளாக நீண்ட இவர்களது காதல் கீதாவின் தந்தை மூல்சந்துக்கு தெரியவந்தது. அவர் தன் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று கீதாவை சந்திப்பதற்காக சுனில் சென்றுள்ளார். அப்போது, கீதாவின் தந்தை மூல்சந்த் கோடாரியால் சுனிலைத் தாக்கியிருக்கிறார். சுனிலைக் காப்பாற்ற முயன்ற கீதாவையும் மூல்சந்த் கோடாரியால் தாக்க, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக சுனிலின் தாத்தா போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய, புகாரைத் தொடர்ந்து மூல்சந்தை போலீசார் கைது செய்துள்ளனர். 

கீதா-சுனில் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொட்டி வாக்கத்தை சேர்ந்த ஜெனிபர் புஷ்பா மற்றும் செம்மஞ்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த ஜான்மேத்தீசும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜெனிபர் காதலை முறித்துக் கொள்வோம் என்று கூறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெனிபரின் பிறந்தநாள் வந்தது. அப்போது கடைசியாக மாமல்லபுரத்தில் இருவரும் சந்தித்து விட்டு பின்னர் பிரிந்து விடுவோம் என்று ஜான்மேத்தீஷ் கூறினார்.

அப்போது உனக்கு நான் பரிசு ஒன்று கொடுக்கிறேன் என்றும் கூறியுள்ளார். காதலனை ஜெனிபர் மாமல்லபுரத்திற்கு சென்றார். இருவரும் புலிக்குகை அருகே பேசி கொண்டிருந்தனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி ஜெனிபரை வற்புறுத்தினார்.

ஆனால் ஜெனிபர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து பரிசு பொருளையாவது வாங்கி கொள் என்று கூறி அட்டை சுத்தியல் ஒன்றை எடுத்த ஜெனிபர் தலையில் ஓங்கி அடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஜெனிபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் காதலியின் துப்பட்டாவை எடுத்து சவுக்கு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ஜான்மேத்தீஷ். மாமல்லபுரம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலியல் தொல்லை கொடுத்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 2-வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு மகேஸ்வரி தம்பதி. இவர்களது மகள் மணிமாலா(வயது 15). 10ம் வகுப்பு தேர்வு எழுதிவரும் இவர் நேற்று முந்தினம்  திடீரென மண்ணெண்னை ஊற்றி தீ  வைத்துக்கொண்டார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டும்  கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி மணிமாலா உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸார் மாணவி வீட்டில் விசாரணை நடத்தினர். அப்போது மணிமாலா எழுதிவைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தனது மரணத்திற்கு சரவணன்தான் காரணம் என்று எழுதிவைத்திருந்தார். மாணவி குறிப்பிட்டிருந்த சரவணன் என்பவர் பழனிவேலுவின் தங்கை கணவர். விருகம்பாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் விசாரணையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மணிமாலாவை சந்திக்க வந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்தார். மேலும் அதனை செல்போனில் படம் பிடித்தார். இதைத்தொடர்ந்து செல்போனில் படம்பிடித்த காட்சிகளை காட்டி, வெளியே சொன்னால் புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்றும் மாணவியை மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் மணிமாலாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மணிமாலாவை பரிசோதித்த மருத்துவர், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார். தனது தங்கையின் கணவரை எப்படி புகார் கொடுப்பது என்ற வேதனையில் பழனிவேல் இருந்துள்ளார். இந்த சூழ் நிலையில் மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சரவணனை போலீஸார் கைது செய்தனர்.

கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் பள்ளியில் சோதனை செய்ய வேண்டுமென 70 மாணவிகளின் உடையை களைத்த வாடனின் மேல் பெற்றோர் மற்றும் மாணவிகள் கோபத்தில் உள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளியின் கழிவறையில் இரத்த கறை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அது எவ்வாறு வந்தது என கண்டுபிடிக்க மாணவிகள் ஆடையை களையுமாறு வற்புறுத்தி உள்ளார். அவ்வாறு செய்யாவிடில் அடித்து துன்புறுத்த படுவீர் என மிரட்டி உள்ளார். இதனால் வேறு வழியின்றி மாணவிகள் அவ்வாறு செய்துள்ளனர். இச்சம்பவம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. பள்ளி வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆனால், இவை அனைத்தையும் அந்த வார்டன் மறுத்துள்ளார். படிப்பு விஷயத்தில் நான் கண்டிப்பாக இருப்பேன். எனவே மாணவிகளுக்கு என்னை பிடிக்காது. என்னை பிடிக்காத சிலரின் தூண்டுதலின் பெயரில் இவ்வாறு செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

இளம் வயதில் ஏற்பட்ட காதல் காரணமாக 20 வயதில் தாய்மையடைந்த பெண்ணொருவரை, 16 வருடங்களாக இருட்டறையில் நிர்வாணமாக சிறைப்படுத்திய கொடிய சம்பவமொன்று பிரேசிலில் பதிவாகியுள்ளது.

பிரேசிலின் புறநகர் பகுதியான உருபிரேடமா எனும் பகுதியில், ஒதுக்கு புறமாக இருந்த வீடொன்றில் 36 வயதான பெண்ணொருவர் சுமார் 16 வருடங்களாக சிறைப்படுத்தப்பட்டு, கொடூரமான முறையில் வஞ்சிக்கப்பட்டுள்ள குற்றத்திற்காக குறித்த பெண்ணின் சகோதரருக்கு 8 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் மரியா லூசியா எனும் பெண்ணின் சகோதரர் மற்றும் தந்தை என்போர் இணைந்து,

குறித்த பெண் 20 வயதில் ஏற்பட்ட காதல் காரணமாக தாய்மை அடைந்தமையினால், அவரை தண்டிப்பதற்காக, 3x3 மீற்றர் அளவான அறையில், மின்சார வசதி, மலசலக்கூட வசதிகள் இல்லாமல், கயிற்று கட்டிலொன்றுடன் சுமார் 16 வருடங்களாக அடைத்து வைத்து, விலங்குகளுக்கு போல் இரண்டுவேளை உணவு மாத்திரம் கொடுத்துள்ளனர். மரியா லூசியாவிற்கு பிறந்த ஆண் குழந்தையை வேறொருவருக்கு தத்து கொடுத்துள்ளதோடு, குறித்த பெண் வெளியில் வருவதற்காக சத்தமிட்டுள்ள நிலையில் அவரது ஆடைகளையும் பறித்து சுமார் 16 வருடங்கள் அவரை நிர்வாணமாகவே வைத்துள்ளனர். இந்நிலையில் மரியா லூசியா தொடர்பான தகவல் அயலவர்கள் மூலம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெறவே,

குறித்த பெண்ணை மீட்டுள்ளதுடன், அவரின் நிலைமைக்கு காரணமான சகோதரருக்கு 8 வருட சிறை தண்டனை விதித்துள்ளதோடு, அவரின் தந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரை கைது செய்ய முடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு மரியா லூசியாவின் 15 வயதான மகன் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.