May 2017

பெண்கள் லெக்கின்ஸ் அணிவதை மிக அதிகமாக விரும்புகின்றனர். லெக்கின்ஸ் அவர்களுக்கு வசதியான உடையாகவும், அழகாகவும் காட்டுகிறது. ஆனால் இது நமது நாட்டில் இருக்கும் வெப்பநிலைக்கு ஏற்றது தானா? இதனால் எத்தனை ஆரோக்கிய பிரச்சனைகள் வருகிறது என தெரியுமா?

லெக்கின்ஸ் மட்டுமில்லாமல் இறுக்கமான உடை அணிவதையும் பெண்கள் நிறுத்த வேண்டியது அவசியம். ஏன் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று செய்யும் யோகவிற்கு அணியும் யோக உடை கூட ஆபத்தை உண்டாக்கும் என தெரியுமா?

உடல் சூடாகிறது
இறுக்கமான உடைகள் மற்றும் லெக்கின்ஸ் அணிவது, சருமத்தில் வறட்சியை உண்டாக்குகிறது. இது சருமத்துளைகளில் இருக்கும் அழுக்கை வியற்வை மூலமாக வெளியேற அனுமதிப்பதில்லை. இதனால் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது.பாக்டிரியா மற்றும் பூஞ்சைகள்இறுக்கமான உடைகளை அணிவதால் சில இடங்களில் சிவப்பு கொப்புளங்கள் உண்டாகிறது. கால்களில் உள்ள வேர்கால்கள் அதிகமாக பாதிக்கிறது. இதனால் பாக்டிரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஏற்படுகின்றன. இரவிலாவது தளர்ச்சியான உடைகளை அணிவது சிறந்தது.

படர்தாமரை
பெரும்பாலான சரும பிரச்சனைகளுக்கு உடல் சூடு காரணமாக உள்ளது. இறுக்கமான ஆடைகள் அணிவதால் உடல் சூடு வெளியேற முடியாமல் போகிறது. மேலும் அதிகப்படியான வியற்வையும் உள்ளேயே தங்கிவிடுகிறது. இதனால் அரிப்பு, உடல் சிவப்பாதல் ஆகியவை உண்டாகிறது.இது படர்தாமரை வர காரணமாக உள்ளது. படர்தாமரையால் உண்டாகும் அரிப்பு தாங்கமுடியாதது. மேலும் இது பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் உடற்பயிற்சி செய்யும் போது இறுக்கமான உடைகளை அணிவது அதிகமான வியர்வை  தேங்க வழிவகுக்கும்.

அரிப்பு
படர்தாமரையை விட கொடுமையானது அரிப்பு தான். இது பூஞ்சைகளினால் உண்டாகிறது. உடல்பயிற்சி மற்றும் ஓடும் போது லெக்கின்ஸ் அணிவதால் அதிகமான வியற்வை உண்டாகிறது. இதனால் பல தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நீங்கள் லெக்கின்ஸ் அணிந்து உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், உடற்பயிற்சி முடிந்ததும், உடையை மாற்றிவிடுவது நல்லது, மேலும் சுத்தமாக குளிப்பது அவசியம். பூஞ்சைக்கு எதிராக செயல்படும் க்ரீம்களை பயன்படுத்தலாம்.

ஈஸ்ட் தொற்று
அதிகப்படியான பெண்கள் ஈஸ்ட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்ட் சூடாக இருக்கும் இடத்தில் நன்றாக வளர்ச்சியடைகிறது. நீங்கள் அணியும் லெக்கின்ஸ் அது வளர நல்ல சூழ்நிலையை உருவாக்கி தருகிறது. நாள் முழுவதும் லெக்கின்ஸ் உடன் இருப்பது தவறானது.வறட்சியை உண்டாக்குகிறதுலெக்கின்ஸ் உங்களது உடலின் ஈரப்பதத்தை குறைத்து உடல் அரிப்பு ஏற்பட காரணமாவதுடன், லெக்கின்ஸில் இருக்கும் தூசிகள் உங்களது தோலை வறட்சியடைய வைக்கிறது. இறந்த செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. வலியை உண்டாக்கும் சிவப்பு புண்களை உண்டாக்குகிறது. லெக்கின்ஸை கழட்டிய உடன் குளிக்க வேண்டியது அவசியம்.

உடல் எடையை அதிகரிக்கிறது
லெக்கின்ஸ் அணிவதால் உடல் அதிகரிக்கிறது. சதைகள் இறுக்கமாகி தோற்றத்தையும் கெடுக்கிறது.

இந்த உலகில் பாலியல் தொழிலாளிகளாக இருக்கும் பெண்கள் எவரும், அந்த தொழிலை ஆசைப்பட்டு ஏற்றுக்கொள்ளவில்லை.மாறாக, பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகவே இந்த நிலைக்கு ஆளாகின்றனர். அலங்காரம் செய்துகொண்டு தங்களை தேடி வரும் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் அவர்களுக்கு பின்னால் சில அலங்கோலமான சம்பவங்களும் உள்ளன.குடும்ப வறுமை, சமுதாயத்தில் அனுபவிக்கும் சித்ரவதைகள், சில பெண்கள் கடத்தப்பட்டும் இந்த பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர்.குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதன்பின்னர், அந்த தொழிலுக்கு தங்களை பழக்கப்படுத்திக்கொள்ளும் பெண்களின் மனம் பாலியல் தொழிலை விட்டு வெளியேற மறுக்கிறது. காரணம், நான் ஒரு பாலியல் தொழிலாளி என்று தெரிந்தால், இந்த சமூகம் நம்மை ஏற்றுக்கொள்ளுமா? என்ற கேள்வியே அவர்களின் மனதில் ஏற்படுகிறது.இதில், விதிவிலக்காக சில பெண்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த தொழிலை விட்டு வெளியே வந்து, சமூகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிகொண்டு வெற்றிநடை போடும் பெண்கள் பலர்.அப்படி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து ஒரு மங்கை எழுதிய மடல்தான் இது.குவாரா என்பது என்னுடைய பெயர். பெற்றோர்களின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த நான் 12 வயதை பூர்த்தி செய்திருந்தேன்.ஒரு நாள் எனது வீட்டிற்கு அருகில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, 5 பேர் அடங்கிய கும்பலால் கடத்தப்பட்டேன். அதன்பின்னர்கண்விழித்து பார்த்தபோது, ஒரு பங்களாவில் இருந்தேன்.கண்விழித்த என்னால், சற்றும் கூட அசையமுடியவில்லை, அந்த அளவுக்கு எனது உடல் பலவீனமாக இருந்தது. ஆனால் எனக்கு என்ன நடந்து என்பதை அப்போது உணரமுடியவில்லை.நாலைந்து பெண்கள் ஒன்று சேர்ந்து எனது உடலை சுத்தப்படுத்தினர். நான் இருந்து ஒரு ஷேக் வீடு என்பது எனக்கு தெரியவந்தது. அவர் என்னை ஒரு வாரம் தனது வீட்டில் வைத்திருந்து, அவருக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னை பலாத்காரம் செய்தார்.இதில், எனது உடல் பலவீனமடைந்ததால் மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர், ஒரு வாரம் கழித்து நான் வேறொரு நபரின் வீட்டில் இருந்தேன்.அதுவும் ஒரு பெரிய பங்களாவாக இருந்தது. அந்நபரின் வீட்டில் சுமார் 1 மாதகாலம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். அங்கு என்னை விட வயதில் மூத்த பெண்களும் வந்து செல்வார்கள்.ஆனால், நான் மட்டும்தான் அங்கு நிரந்தரமாக தங்கியிருந்தேன். நான் வயதில் சிறிய பெண் என்பதால் அங்கு வரும் வயதில் மூத்த பெண்கள் என்னை பார்த்து பரிதாபப்படுவார்கள்.நான் அனுபவிக்கும் வேதனைகளை அவர்களால் உணரமுடிந்ததே தவிர, ஒன்றும் செய்ய இயலவில்லை. என்னுடைய ஒவ்வொரு இரவுகளும் நரகமாய் கழிந்தன.இப்படி, பல்வேறு ஆண்களுக்கு பல இரவுகள் இரையாக்கப்பட்ட எனக்கு 17 வயதானது. சுமார் 5 வருடங்கள் பாலியல் தொழிலாளியாக பயன்படுத்தப்பட்ட நான், எங்கு இருக்கிறேன் என்பது தெரியவில்லை.ஒருமுறை நான் இருந்த பகுதிக்கு பெண் பொலிஸ் ஒருவர் வந்து என்னை அடித்து உதைத்தார். அவர் எதற்காக என்னை அடிக்கிறார் என்பது தெரியாமல், சத்தம்போட்டு அழுதேன். அவர் என்னிடம் உனது பெயர் என்ன என்று கேட்டார்.அதன் பின்னர், நீ இங்கிருந்துசெல்ல விரும்புகிறாயா? என கேள்வி எழுப்பினார். அப்போது தான் நான், 12 வயதில் கடத்தப்பட்ட விவரத்தை அவரிடம் கூறினேன்.அதன்பின்னர், எனது சொந்த ஊரானஹைதராபாத்திற்கு என்னை அழைத்து சென்றனர். ஆனால் அங்குதான் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, நான் காணமால் போனதை தாங்கிகொள்ள முடியாத எனது தாய் முறையாக உணவு சாப்பிடாதா காரணத்தால் உடல் நலம் குன்றி இறந்துபோயுள்ளார். எனது தந்தையும் தற்கொலை செய்துகொண்டார் என்று தகவலை கேட்ட எனக்கு இந்த உலகில் நாம் இனி வாழ்ந்து என்ன பயன் என்று தோன்றியது.அதன்பின்னர், தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட எனக்கு அவர்கள், மனநல ஆலோசனை வழங்கினார்கள். கணனி மையம் ஒன்றில் கணனி பயின்ற நான் தற்போது அங்கு ஆசிரியையாக பணியாற்றுகிறேன்.இந்த சந்தர்ப்பத்தில் தான் எனக்கு ராகுலின் அனுபவம் கிடைத்தது. என்னோடு நன்றாக பழகிய அவருக்கு என்னுடைய குணநலன்கள் பிடித்துவிட்டதால் என்னை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.எனது பழைய வாழ்க்கைய பற்றி அறிந்திருந்தும், அதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் திருமண உறவிற்குஎன் மனம் இடம்கொடுக்க மறுக்கின்றது.எனது பழைய வாழ்க்கையை மறந்து புதிய வாழ்க்கைக்குள் நான் அடியெடுத்து வைத்துவிட்டாலும், சில நேரங்களில் நான் ஒரு பங்களாவில் இருப்பது போன்று எனக்கு தோன்றி, பழைய வாழ்க்கையை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.அதிலிருந்து, முற்றிலும் வெளிவரவேண்டும் என்பதே எனது விருப்பமாக உள்ளது. இதனால் ராகுலை திருமணம் செய்துகொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. என்னை சூழ்ந்துகொண்டிருக்கும் இருட்டிய எண்ணங்கள் என்னை விட்டு விலகும்வரை, விடியலை தேடி எனது வாழ்க்கை பயணித்துக்கொண்டிருக்கும்.

பெரும்பாலான பெண்களுக்கு ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதாவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கின்றன? ஏன் மாதவிடாய் நிற்கிறது? அதனால் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? அந்த மாற்றங்களை மனரீதியாக எப்படி எதிர்கொள்வது? என்ற விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதேபோல, ‘மாதவிடாய் நிற்கும் காலம்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயப்படுவதுண்டு. “இத்தகைய அச்சங்கள் தேவையில்லை. மாதவிடாய் நிற்கும் காலம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்-தான், அந்தக் கட்டத்துக்குள் நுழையும் பெண்கள் ஒருவிதமான அதிர்ச்சி மனநிலைக்கு ஆளாகிறார்கள். பெண்ணின் வாழ்க்கையில் இது அடுத்தக் கட்டம். ஒரு வகையில் சுதந்திரமும் கூட என்கிறார்கள் மருத்துவர்கள்.

மாதவிடாய் நிற்பது இரண்டு விதங்களில் நிகழலாம். ஒரு பெண்ணுக்கு 42 வயது முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் தொடங்கும் மாதவிடாய் நிற்றல் செயல்பாட்டு மாற்றங்கள், அடுத்த மூன்று முதல் பத்து ஆண்டுகளுக்குத் தொடரலாம். மாதவிடாய் நின்றதற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. இயற்கையான முறையில் மாதவிடாய் நிற்றல் ஏற்படும் சராசரி வயது அய்ம்பது. 40 வயதுக்கு முன்பாக மாதவிடாய் நிற்றல் ஏற்படுவது இயல்புக்கு மாறான முன்முதிர்ச்சி (Premature Menopause)நிலைதான். அறுவைச் சிகிச்சை காரணமாகவும் மாதவிடாய் நிற்றல் நடைபெறும். கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சை (Hysterectomy), அல்லது சினைப்பை நீக்க அறுவைச் சிகிச்சை (Hysterectomy) அல்லது இரண்டாலும் இது நிகழ்கிறது. 12 மாதங்கள் தொடர்ந்து மாதவிடாய் வரவில்லையென்றால்  அது மாதவிடாய் நிற்றல்தான்.

சினைப்பைகள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜஸ்டிரான் ஹார்மோன்கள் சுரப்பைக் குறைப்பதன் விளைவுதான் மாதவிடாய் நிற்றல். ஒவ்வொரு மாதமும் சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியாவதை நெறிப்படுத்துபவை இந்த ஹார்மோன்கள்தாம். மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கிய பெண்களின் சினைப்பையில் வெகுசில கருமுட்டைகள் மட்டுமே எஞ்சி-யிருக்கும் என்பதால் இந்த ஹார்மோன்கள் உற்பத்தியை உடல் குறைத்துக்கொள்கிறது.

மாதவிடாய் நிற்றல் அறிகுறிகள்

மாதவிடாய் நிற்கும் நிலையில் உடல் பல அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இதில் முதன்மையானது மாதாமாதம் வரும் மாதவிலக்கு நிற்பது. சிலருக்கு திடீரென முற்றிலுமாக நின்றுபோகலாம். சிலருக்கு பல மாதங்கள் தள்ளிப் போகலாம். இந்தக் காலகட்டத்திலும் கருத்தரிக்க வாய்ப்புண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால், கடைசி மாதவிலக்கு ஏற்பட்டதில் இருந்து ஓராண்டுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றுவது நல்லது. அதேபோல, கடைசி மாதவிலக்கு ஏற்பட்டதில் இருந்து ஆறு மாதத்துக்கு பிறகு ஏதேனும் ரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.

அடுத்து ஏற்படக்கூடிய அறிகுறி திடீரென உடல்சூடு பரவுதல் (Hotflushes), மற்றும் வியர்த்தல். சிலருக்கு உடல் முழுவதும் சூடு பரவலாம். சிலருக்கு தலைவலி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படலாம். முகம், கழுத்து, மார்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் என சூடு மற்றும் எரிச்சல் உணர்வு பரவலாம். இதைத் தொடர்ந்து அதிகம் வியர்க்கும். ஒரு மணி நேரத்துக்கு சில நொடிகள் இப்படி நடக்கலாம். இது ஆளாளுக்கு வேறுபடும். இந்த அறிகுறி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் மறைந்து விடும். இரவில் வியர்த்தல் மற்றொரு அறிகுறி. இது தூக்கத்தைக் கெடுத்து சோர்வை ஏற்படுத்தும். பெண்ணுறுப்பில் ஈரத்தன்மை குறைந்து வறண்டு போகத் தொடங்குவது மற்றொரு பொதுவான அறிகுறி. இதனால், சிலருக்கு பாலியல் ஆர்வம் குறையலாம். ஒரு சிலருக்கு இருமும்போதும், தும்மும்போதும் சிறுநீர் கசிதல் (Stressincontinence) ஏற்படலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் போவதைக்

கட்டுப்படுத்த முடியாமை போன்றவை ஏற்படும்.

மூட்டு, தசை வலி ஏற்படும். ‘ஆஸ்டியோ போரோஸிஸ்’ என்னும் எலும்பு அடர்த்திக் குறைதல் நிலை ஏற்பட்டால், சிறு காயங்களுக்கே எலும்பு முறிவு ஏற்படும். இடுப்பு, கை, முதுகுத் தண்டு எலும்புகள்தான் பொதுவாக பாதிப்புக்கு உள்ளாகும். மாதவிடாய் நின்றபிறகு, சிலருக்கு முகத்தில் முடி அதிகமாகலாம். தலைமுடி உதிர்தலும் அதிகமாகலாம். உமிழ்நீர் சுரப்பது குறையும். பற்களும் பலமிழக்கும். சருமம் உலர்ந்து அரிப்பு ஏற்படும். சிலருக்கு சருமத்தில் எரிச்சல், மரத்துப் போதல், ஏதோ ஊறுவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.

இவற்றுடன் தோல் மற்றும் தலைமுடி மெலிதல், எடை அதிகரித்தல் போன்ற உடலியல் மாற்றங்கள் மாதவிடாய் நிற்றலுடன் தொடர்புடைய முக்கிய உடலியல் மாற்றங்கள் ஆகும். இந்தக் காலகட்டத்தில்தான் இதயம் மற்றும் ரத்தநாளத் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதுபோல, சில உணர்வெழுச்சி பாதிப்புகளும் ஏற்படலாம். அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி, சோகம் என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும்.

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் இந்தக் காலகட்டத்தில், பொறுப்புகள் அதிகரிப்பதால் உண்டாகும் மன அழுத்தத்துடன், இந்த உடலியல் மாற்றங்கள் கொடுக்கும் அசவுகரியங்களும் சேர்ந்து மாதவிடாய் நிற்கும் பெண்களின் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மாதவிடாய் நிற்றலை எதிர்கொள்ளல்

உடலியல் மற்றும் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும் இக்கட்டத்தில், நல்ல ஆரோக்கிய பழக்கங்களை கடைபிடித்தால், எந்த மாற்றங்களையும் எளிதாக எதிர்கொள்ளலாம். சத்தான சரிவிகித உணவுகள் எடுத்துக்-கொள்வது, குறிப்பாக கால்சியம் நிறைந்த உணவைச் சேர்த்துக்கொள்வது, முடிந்த அளவுக்கு உடற்பயிற்சியில் ஈடுபடுவது, புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தைத் தவிர்த்தல், ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனநிலையை பராமரிப்பது, தேவைப்பட்டால் மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்-களின் அறிவுரையைப் பெறுவது என எளிதாகவே இந்த கட்டத்தைப் பெண்கள் கடக்க முடியும்.
மாதவிடாய் நிற்றல் ஏற்படுவது ஓர் இயற்கையான செயல்முறை. அதில் நாம் தலையிட முடியாது. ஆனால், அதனால் ஏற்படும் சில விளைவுகளை சமாளிக்கலாம். குறிப்பிட்ட சில அறிகுறிகளையும், அவற்றை எப்படி சமாளிப்பதென்பதையும் இங்கு பார்க்கலாம்:

மாதவிடாய் நிற்றல் சமாளிப்பது எப்படி?

உடல் வலிகள், வலிமைக் குறைதல், சத்துக் குறைபாடுகள்

உடற்பயிற்சி: நடைப்பயிற்சி இதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலை நடைப்பயிற்சி செய்யலாம். நல்ல காற்றோட்டம் கிடைக்கக்கூடிய இடங்கள், பூங்காக்கள், அல்லது கடற்கரை சாலைகளில் நடைப்பயிற்சி செய்யலாம்.

உணவு முறை: பசியெடுக்கும்போது மிக எளிதாக சீரணிக்கத்தக்க உணவுகளை உண்ணுதல் வேண்டும். மசாலா நிறைந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். நீண்ட பட்டினி, உபவாசம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். காலையில் சரியான நேரத்தில் சிற்றுண்டி, மதியம் காய்கள், கீரைகள் கலந்த அளவுடன் ஆன உணவு, இரவு அரை வயிறு மட்டுமே நிரம்பக்கூடிய எளிதில் சீரணமாகக்கூடிய உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். நொறுக்குத் தீனி தவிர்த்துவிட வேண்டும். காபி, டீ, அளவுடன் அருந்த வேண்டும், தவிர்ப்பது மிக நல்லது.

உடல் தளர்ச்சியை போக்க ஊட்டச்-சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். பால், மீன், முட்டை, இறைச்சி, கீரைகள் ஆகியவற்றையும் அவசியம் சேர்த்துக் கொள்ளலாம். கால்சியம் மற்றும் இரும்புச் சத்து, வைட்டமின் பி, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் மாதவிடாய் நிற்கும் காலத்து சோர்வினைப் போக்கி, உடல் வலிமையை மீட்டெடுக்க முடியும். பயறு மற்றும் பருப்பு வகைகள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கழிவுகளை வெளியேற்றும் தண்ணீர்

மாதவிடாய் நிற்றல் பருவத்தை எட்டி-யவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. சருமத்தை புத்துணர்ச்சி-யாக்கும்.
யோகாவும் உதவும்

தினசரி அரை மணிநேரம் அமைதிப் பயிற்சி மற்றும் யோகா செய்தவன் மூலம் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும். அட்ரீனலினை ஊக்குவிக்கும். யோகா பயிற்சி, மனம் சம்பந்தப்-பட்ட பிரச்சினைகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது. அமைதிப் பயிற்சி, மனதில் ஏற்படும் தேவையில்லாத எண்ணங்-களை வெளியேற்று-கிறது. இதனால் எதையும் தெளிவுடன் அணுக முடிகிறது. மேலும் இதய சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

மனம்விட்டுப் பேசுங்கள்

உங்கள் வேதனையை யாரிடமும் சொல்லாமல் தனியாக தவிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் குடும்பத்தினரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். நீங்கள் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறீர்கள் என அவர்கள் புரிந்துகொண்டால், அதிகமாக கவலைப்பட மாட்டார்கள். இப்படிச் செய்யும்போது உங்கள் குடும்பத்தார் பொறுமையோடும் கரிசனை-யோடும் நடந்துகொள்வார்கள். உங்களுக்கு உதவி செய்வதுடன் ஆறுதலாகவும் இருப்பார்கள்.

40 வயதில் இருந்து பெண்கள் இத்தகைய வாழ்வியல் மாற்றங்களை சரியான முறையில் கடைப்பிடித்தால், மாதவிடாய் நிற்கும் கட்டத்தை மிகச் சிரமங்களுடன் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. மிகவும் மகிழ்ச்சி-யாகவே ஏற்றுக்கொள்ளலாம்.

திபெத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு வழங்கப்படுவது போலவே எல்லாச் சலுகைகளும் ஈழ உறவுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ் சொந்தங்கள் தாக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீமான் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,

இராமேஸ்வரம், மண்டபம் முகாமில் வாழும் ஈழ உறவுகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனவேதனையையும், அளவிட முடியா பெருங்கோபத்தையும் தருகிறது.

போரில் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, தாய்நிலத்தைப் பிரிந்து நிராதரவற்றவர்களாய் தமிழகத்திற்கு வந்திருக்கும் ஈழ உறவுகள் மீதான தாக்குதலை மனசாட்சியுள்ள எவராலும் ஏற்க முடியாது.

வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் நிலத்தில் சொந்த இனத்தவர் அடித்து உதைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது சகித்துக்கொள்ள முடியாத பெருங்கொடுமை. அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களும், எளிய மக்கள் மீதான கோரத்தாக்குதல்களும் வன்மையானக் கண்டனத்திற்குரியவையாகும்.

நீதியின்பால் பற்றுகொண்டு, சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு மானுடநேயத்தைப் பின்பற்றிக் கடைபிடிக்கும் எவராலும் இதனை அனுமதிக்க முடியாது.

கடந்த 7ஆம் தேதி அங்கு நடைபெற்ற சகாயமாத கோயில் திருவிழாவின்போது நிறைந்த மதுபோதையில் பெண்களிடம் அத்துமீற முயன்ற காவல்துறையினரின் போக்கை முகாம் வாழ் இளைஞர்கள் கண்டித்ததையொட்டி இவ்வகைத் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் புனையப்பட்டிருக்கிறது.

காவல்துறையினரின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலைக் கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளும் வர்க்கம் கண்டும் காணாதிருப்பது காவல்துறையினருக்கு அவர்கள் அளிக்கும் மறைமுக ஆதரவினை தெரிவிப்பதாகவே உள்ளது.

தமிழகத்திற்குத் தஞ்சம் தேடிவரும் ஈழத்தமிழ் சொந்தங்கள் இங்குச் சந்திக்கும் துன்பத்துயரங்கள் எண்ணிலடங்காதவை. ஈழத் தமிழில் பேசினாலே பயங்கரவாதி என்று முத்திரை குத்துவது, அவர்களை எத்தகைய பணிகளிலும் ஈடுபடவிடாமல் தொந்தரவு செய்வது, எப்பொழுதும் கண்காணிப்பிலேயே வைத்திருப்பது, நாள் முழுக்க உழைத்து அவர்கள் பெறும் ஊதியத்தை அபகரித்துக் கொள்வது, அவர்களது உடைமைகளைச் சேதப்படுத்துவது.

ஆபாச வார்த்தைகளால் வசைபாடுவது, பெண்களிடமும், குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தல்களைத் தருவது, காரணமில்லாமல் அகதி முகாமுக்குள் அடைத்து சித்திரவதை செய்வது, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்துதராது இழுத்தடிப்பது, பொய்யாக வழக்குகளைப் புனைந்து சிறையிலடைப்பது என அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் சொல்லி மாளாதவையாகும்.

கடந்தாண்டு மதுரை உச்சம்பட்டி முகாமில் இரவீந்திரன் எனும் இளைஞர் உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்டது ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக விளைந்தவையே!

இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் முதலான நாட்டினைச் சேர்ந்த அகதிகளுக்கெல்லாம் குடியுரிமை வழங்கும் இந்திய அரசானது, 20 ஆண்டுகளுக்கு மேலாக இம்மண்ணில் வாழும் ஈழ உறவுகளுக்கு அடிப்படை உரிமைகளையும், அடிப்படை வசதிகளையுமே தர மறுத்து மூன்றாம் தர மக்களை நடத்தி வரும் போக்கினை மாற்றிக்கொண்டு திபெத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்

அகதிகளுக்கு வழங்கப்படுவது போலவே எல்லாச் சலுகைகளும் ஈழ உறவுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இத்தோடு, ஈழ உறவுகள் தாங்கள் கல்வி கற்பதற்கும், விரும்பிய பணிகளைச் செய்வதற்கும் எவ்வித இடையூறு இல்லாமையை உறுதிசெய்ய வேண்டும் எனவும், சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமை மூடி

அவர்களின் மறுவாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

மேலும், மண்டபம் ஈழ முகாமிலுள்ள இளைஞர்கள் மீது தாக்குதல் தொடுத்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன். இதனைச் செய்ய மறுத்து, ஈழ உறவுகளை ‘அகதிகள்’, ‘அந்நியர்கள்’ என்றெண்ணி படுபாதகச்செயல்களை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தொடர்ந்து மேற்கொள்வார்களேயானால் மிகப்பெரிய எதிர்விளைவுகளை ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்துமுடிந்திருக்கிறது. பிரான்ஸின் மிகவும் இளைய வயதில் அதிபராக இருக்கிறார் இமானுவேல் மக்ரான்.அவருக்கு வயது 39! அவரின் பொதுவாழ்வு மட்டுமல்ல, அவரின் தனிப்பட்ட வாழ்வும் சுவாரஸ்யங்கள் கொண்ட திருப்பங்கள் கொண்டன. அதற்கு காரணம் அவரின் மனைவி பிரிஜ்ஜெட் மக்ரான்!

பிரான்ஸ் நாட்டின் முதல் பெண்மணியாகவிருக்கும் பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ், அப்போது பள்ளி ஒன்றில் நாடக ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரின் கணவர் ஒரு வங்கி ஊழியர். அழகானமூன்று குழந்தைகளும் இருந்தன.அதே பள்ளியில் பிரிஜ்ஜெட்டின் மகள் ஆசிர்ரே(Auziere) படித்துக்கொண்டிருந்தாள்.

ஆசிர்ரே வகுப்பில் படித்த மற்றொரு மாணவர்தான் தற்போது பிரான்ஸ் அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரான். 15 வயதே நிரம்பிய மக்ரானுக்கு, பிரிஜ்ஜெட்டைக் கண்டதும் காதல் வயப்பட்டார்.

மக்ரானின் நடவடிக்கைகளில் தெரிந்த மாற்றங்களால் பெற்றோருக்கு தன் மகன் காதல் வயப்பட்டிருக்கிறான் எனப் புரிந்துகொண்டனர். ஆனாலும் அவன் யாரைக் காதலிக்கிறான் என்பது தெரியவில்லை.ஒருவேளை, பிரிஜ்ஜெட்டின் மகள் ஆசிர்ரே மீது காதல் இருக்கலாம் என்று யூகித்தனர். ஆனால், அதற்கு பிறகுதான், அவன் தன் ஆசிரியரான பிரிஜ்ஜெட்டைக் காதலிக்கிறான் என்பது தெரிந்து. கடும் அதிர்ச்சி அடைத்தனர்.தன் மகன் 18 வயது நிரம்பும் வரை, அவனை விட்டு விலகியிருக்குமாறு, பிரிஜ்ஜெட்டிடம் கேட்டனர்.

மக்ரானின் பெற்றோர். ஆனால், அதற்கு பிரிஜ்ஜெட், “என்னால் அதை உறுதியாக கூற முடியாது” என்றார்.பள்ளிக் காலத்தில், பிரிஜ்ஜெட் எழுதிய நாடகங்களின் நடித்துவந்திருக்கிறார் மக்ரான். அதன்பிறகு, இருவரும் சேர்ந்து நாடகங்கள் எழுதி நடித்தனர். மக்ரானைப் பற்றி பிரிஜ்ஜெட் பேட்டி ஒன்றில் கூறுகையில், "15 வயதுள்ள மக்ரான், வயதுக்கு மிஞ்சிய புத்திசாலித்தனத்துடன் நடந்துகொண்டான்.ஓர் இளைஞரைப் போல நடந்துக்கொள்வதைவிட, முதிர்ச்சியான மனிதனாகவே மக்ரான் நடந்துகொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக அவனின் அறிவுதிறன் என்னை ஆட்கொண்டது” என்கிறார்.

பிரிஜ்ஜெட் தனது முதல் கணவரை கடந்த 2006ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.ஒரு கட்டத்தில், ஏதோ காரணத்தால் மக்ரானைவிட்டு விலகியிருக்கிறார் பிரிஜ்ஜெட். ஆனால், “என்னை விட்டு நீ எங்கும் விலகிசெல்ல முடியாது. நான் உன்னை மீண்டும் சந்திப்பேன். அப்போது நிச்சயம் நாம் திருமணம் செய்துகொள்வோம்" என்று கூறியிருக்கிறார் மக்ரான்.அப்போது மக்ரானுக்கு வயது 17! சரியாக பத்து ஆண்டுகள் கழித்து, கடந்த 2007-ம் ஆண்டு, பிரிஜ்ஜெட்டைக் கரம்பிடித்திருக்கிறார் மக்ரான். இருவருக்கும் கிட்டதட்ட 25 வயது வித்தியாசம்!

இவர்களின் திருமணத்தின்போதே மக்ரான் ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறார். ”எங்களின் திருமணம் சாதாரணமானதல்ல என்றோ, அசாதாரணமானது என்றோ குறிப்பிடப்படுவதை நான் விரும்பவில்லை.இதுபோன்ற ஒரு தம்பதியர் வாழ்கிறார்கள் என்பதை மட்டுமே கேட்க விரும்புகிறேன்” என்று கூறினார். இப்போது மக்ரானின் தாய், 'பிரிஜ்ஜெட்டை மருமகளாக பார்ப்பதைவிட ஒரு தோழியாக பார்க்கிறேன்' என்று நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

ஆனால், பிரான்ஸ் ஊடகங்கள் இவர்களின் திருமணம் குறித்துசர்ச்சை எழுப்பாமல் இல்லை. அதற்கு பிரிஜ்ஜெட், “அமெரிக்கஅதிபர் டோனால்ட் டிரம்பிற்கு70 வயது; அவரது மனைவிக்கு மெலானியா டிரம்பிற்கு வயது 46.இவர்களின் திருமண உறவைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லையே. எங்களுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி மட்டும் ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்?”, என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.கடந்த மாதம், மக்ரானும், ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நான் அதிபராக தேர்வுசெய்யப்பட்டால், இல்லை.. இல்லை... நாங்கள் அதிபர்தேர்தலில் தேர்வுசெய்யப்பட்டால், பிரிஜ்ஜெட்டிற்கு தனித்துவமான கடமைகளும் பொறுப்புகளும் வழங்கப்படும்”என்று கூறினார்.

எந்தச் சூழலில் பிரிஜ்ஜெட்டைபிரித்துப்பார்க்காத மக்ரானுக்கு உள்ள அன்பின் சாட்சியே இந்த வரிகள்!

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.