கோடீஸ்வர யோகம் யாருக்கு? உங்க கைரேகையை பாருங்க இருக்கானு?

ஜோதிடத்தில் எந்தக் கிரகம் கெட்ட இடத்தில் இருந்தாலும், அந்த இடத்தை குரு பார்க்க நேரிட்டால், கெட்ட தோஷம் அடியோடு நீங்கிவிடும்.

நவக்கிரகங்களுக்கு மேலான குரு பகவான் பிரம்மாவின் பேரன் என்று புராணம் கூறுகிறது. இந்த குரு பலம் ஒருவரின் திருமணம் போன்ற மங்களகரமான காரியங்களுக்கு அடிப்படையாக அமைகிறது.

ஒருவர் ஜாதகத்தில் குருவும், கேதுவும் இணைந்து அமைந்திருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பதுடன் ஒருநாள் கோடீஸ்வரர் ஆவார் என்று ஜோதிடம் கூறுகிறது.

ரிஷபம் லக்னமாக அமைந்து, பாக்கிய ஸ்தானமான 5-ம் வீட்டில், அதாவது கன்னி ராசியில் குருவும், கேதுவும் இணைந்திருந்தால், அந்த ஜாதகத்தை உடையவர் கோடீஸ்வரர் ஆவது உறுதி.

கோடீஸ்வர யோகம் யாருக்கு அமையும்?

நடுவிரல், சனி விரல் என்று அழைக்கப்படும் விரலின் அடிப்பாகத்தில் அமைந்திருப்பது சனி மேடு என்று அழைக்கப்படுகிறது.

விரலின் கீழ் காணப்படும் வட்டத்துக்கு சனி வளையம் என்று பெயர்.

ஒருவரின் கையில் நடுவிரலில் சனி வளையம் அமைந்து, அந்த வளையத்தில் இருந்து சிறு ரேகைகள் மேல் நோக்கிச் செல்லும்.

அதே சமயம் விதி ரேகை, கங்கண ரேகையில் இருந்து எந்த குறுக்கு வெட்டும் இல்லாமல் நேராக சனி விரலை தொட்டு நிற்கும் அல்லது சனி மேட்டில் முட்டி நிற்கும்.

இவ்வாறான கைரேகை அமைப்பு அனைவருக்கும் அமையாது. ஆனால் இப்படி உள்ளவர்களுக்கு கோடீஸ்வர யோகம் உண்டு என்று கைரேகை சாஸ்திரம் கூறுகிறது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.