பக்கத்து வீட்டாருடன் பெண்கள் செய்யும் வேடிக்கையான 10 விஷயங்கள்!!

பெண்கள் தங்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை கண்டு, அவர்களைப் போல் அது வாங்க வேண்டும், பிறந்த நாளை அவர்களை போல் கொண்டாட வேண்டும் என அனைத்து விஷயங்களையும் “அவர்களை போல் அவர்களை போல்” என்றே எண்ணி, மற்றவர்களின் வாழ்வினை கவனித்து, தங்களின் வாழ்க்கையை கவனித்து, மகிழ்ந்து வாழ மறந்து விடுகின்றனர். சில சமயங்களில் அக்கம் பக்கத்தார் உங்களை பார்த்து வாழவும் தொடங்குவதுண்டு; சில பக்கத்தவரோ உங்கள் தயவினால் மட்டுமே அவர்களின் வாழ்வு நகரும் அளவிற்கு வாழ்க்கையை வழிநடத்துவதுண்டு.

அப்படி அக்கம் பக்கத்தாருடன் நடக்கும் 10 வேடிக்கையான விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

1. பக்கத்தவர் இரவலாக ஏதேனும் காய்கறி அல்லது பலசரக்கு சாமான் கேட்டு உங்களிடம் வந்து நீங்கள் தந்துவிட்டால் போதும், சில பக்கத்தவர் பொருட்கள் வாங்குவதற்கு கடை என்று ஒன்று உள்ளது என்பதையே மறந்து விட்டு, உங்கள் வீட்டையே நியாய விலைக்கடையாக (ration) மாற்றிவிடுவர்..!

2. நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவராய் இருந்தால், பக்கத்து வீட்டுகாரர் உங்கள் மேல்மாடத்தில் துணிகளை துவைத்து காயப்போடுவதை, அவர்களின் உள்ளாடைகள் மற்றும் இதர ஆடைகளை கண்டு சகித்துக் கொள்ளும் நிலை ஏற்படும்.

3. பக்கத்து வீட்டுகாரர் உங்களுக்கு எதிரான மனநிலை கொண்டவராய் இருந்தால், அந்த இடத்தில் உங்கள் வாழ்க்கை கர்ண கொடூரமாய் செல்லும்; நீங்கள் சுத்தமாக வைத்திருந்த இடம் அவரால் அசுத்தமாகலாம், இது போல் பல நிகழ்வுகள் நடக்கலாம்.

4. உங்கள் நண்பர்கள், தனக்கு உடல் நலமில்லாத போது பக்கத்து வீட்டுகாரர் சமைத்துக் கொண்டு வந்தார் என்று தங்கள் அக்கம் பக்கத்தாரை பற்றி புகழ்கையில், உங்களின் நினைவோ உங்களிடம் வாங்கி உண்ணும் பக்கத்து வீட்டுகாரரை எண்ணிக் குமுறும்.

5. பக்கத்து வீட்டுகாரர், உங்களின் wi fi கடவுச்சொல்லை (password) கேட்கும் பொழுது உங்களுக்கு ஏற்படும் மன உணர்வினை வர்ணிக்க வார்த்தையே இல்லை.

6. அவர்களின் வீட்டிலிருந்து உங்கள் வீட்டு ஜன்னலை எட்டி பார்த்து, உங்களை தொந்தரவு செய்வது, உங்களுடன் பேச்சு கொடுத்து உங்கள் வேலையை கெடுப்பது போன்ற செயல்களை செய்யும் போது உங்களுக்கு ஏற்படும் கோபத்திற்கு எல்லையே இல்லை.

7. உங்கள் குழந்தைகளை பற்றி, ஏதேனும் வேண்டாத கருத்து தெரிவிக்கையில், உங்களுக்கு குழந்தை வளர்ப்பை கற்றுக் கொடுக்கையில் நீங்கள் அடையும் ஆத்திரத்திற்கு அளவே இல்லை.

8. உங்களை பற்றியும் உங்கள் குடும்பத்தை பற்றியும் நீங்கள் எண்ணுவதை விட அதிகமாக உங்கள் அண்டை வீட்டார் எண்ணி பேசும் பொழுது, ‘இவளுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை’ என்று எண்ணுவதை உங்களால் தடுக்க முடியாது.

9. நீங்கள் எங்கேயாவது அவசரமாக வெளியே செல்லும் போது, அந்த சமயத்தில் அண்டை வீட்டார் தேவையில்லாத, அர்த்தமில்லாது பேசிக்கொண்டிருந்தால், உங்களுக்கு ஏற்படும் எரிச்சலின் அளவிற்கு எல்லையே இல்லை.

10. உங்கள் வீட்டில் விருந்து உணவு சமைக்கும் போது, உங்களுக்கு உணவு சமைப்பதில் அறிவுரை கூறுவது போல் வந்து உணவினை ஒரு கை பார்த்துவிட்டு செல்கையில், ‘இது என்ன பிழைப்பு’ என்ற எண்ணம் உங்கள் மனதில் எழுவதை யாராலும் தடுக்க முடியாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.