தாம்பத்தியத்தில் இளம் தலைமுறையினர் தோற்றுப்போக காரணம் என்ன?

இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறையினரிடம் வாழ்வியல் சார்ந்து நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் இவர்கள் செய்யும் வேலை, வேகம், சூழ்நிலையே என்று குறிப்பிடலாம்.

பெரும்பாலான இளம் ஆண், பெண் தலைமுறையினர் வேலையை காரணம் காட்டி சரியான உணவுகளை எடுத்துக்கொள்வதில்லை. தவறான பழக்கத்தால் ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்து வருகின்றனர்.

அளவுக்கு அதிகமான வேலை செய்தல், இதனால் மன அழுத்தம் அதிகமாகி இல்லறத்தில் இருவரும் சேர்ந்து செயல்பட முடிவதில்லை என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.

அதிலும் ஐடியில் பணியாற்றும் தம்பதிகள் ஏறக்குறைய 10 மணி நேரத்திற்கும் அதிகமாக கம்பியூட்டர் முன்னாடி அமர்ந்து வேலை செய்கின்றனர்.

பணி முடித்து வீட்டுக்கு வந்தவுடன் அவர்கள் இல்லறத்தில் சரிவர கவனம் செலுத்த மாட்டார்கள், இதனால் கணவன் மனைவிக்குள் சண்டை வருகிறது.

எனவே இதனை சரிசெய்ய வேண்டும் என்றால் முதலில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை விரும்பி சாப்பிட வேண்டும்.

அதன்பின்னர் வேலை செய்யும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இல்லறத்திற்காகவும் ஒதுக்க வேண்டும்.

இது போன்ற செய்தால் கண்டிப்பாக நீங்களும் இல்லற வாழ்வில் இனிமையாக ஈடுபட முடியும்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.