2018

நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று கூறப்படுகிறது. 

நமது கனவில் அடிக்கடி நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், நமக்கு பிடித்தவர்கள் அல்லது தாத்தா, பாட்டி என சில நேரங்களில் நமது கனவில் வருவதுண்டு. அவ்வாறு அவர்கள் வந்தால் வீண் பயம் நம்மைத் தொற்றிக் கொள்வதும் அதுகுறித்த சிந்தனையும் அடிக்கடி தோன்றி நம்மை ஒருவித பயம் கொள்ள செய்யும்.  எனவே இதுகுறித்து ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம்.

வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.

தற்போது செய்திகளிலும், பிறர் மூலமாகவும் நாம் அதிகமாக கள்ளக்காதல் பற்றிய தகவல்களை படிக்கிறோம். இந்த கள்ளக்காதல் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறதே தவிர குறையவில்லை.

கள்ளக்காதலால் பல குடும்பங்கள் சீரழிந்துவிட்டன. குடும்ப உறவுகள் சிதைக்கப்படுகின்றன. சில சமையங்களில் உயிர்களை கூட கொல்லும் அளவுக்கு செல்கிறது இந்த கள்ளக்காதல் வெறி.

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற தாய், கணவனை கொன்ற மனைவி, மனைவியை கொன்ற கணவன். இப்படியான வன்முறை மிகுந்த செய்திகள் தினம்தோறும் நிகழ்ந்தவாறே உள்ளது.

இது இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இப்படி கள்ளக்காதல் தொடர்பான ஆய்வில் தங்கள் கணவனுக்கு தெரியாமல் 40 முதல் 55 சதவீத பெண்கள் 40 வயதுக்கு முன்னரே கள்ளக்காதலில் ஈடுபடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் படி உலகில் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களில் இந்தியா முதல் 10 இடத்துக்குள் வந்துள்ளது. நைஜிரியா, தாய்லாந்து, பிரிட்டிஷ், மலேசியா, பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவில் பெண்கள் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டா?, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது? என்ற கேள்வியைப்போல் சிக்கலான கேள்வி வேறொன்றுமில்லை.

மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காலங்காலமாக, நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவுமேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன.

மரணம்தான் இறுதியானது. மறுபிறவி என்பதோ சொர்க்கம்-நரகம் என்பதோ கிடையாது. மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை. மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையான கட்டுக்கதைகள். மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜெர்மன் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவ டாக்டர்கள் இணைந்த குழு மருத்துவ பரிசோதனை மூலம் மரணத்திற்கு பின்னரும் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மரணத்திற்கு பின் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது எனவும் இவர்கள் கண்டறிந்து உள்ளனர்.

இந்த வியப்பூட்டும் அறிவிப்பு என்பது மரணம் அடைந்தவரின் அருகில் இருந்து மரண அனுபவங்களை ஒரு புதிய வகை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ கண்காணிப்பு மூலம் எடுத்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாக கொண்டவையாகும்.

2012 மற்றும் 2016-க்கு இடையில் கடந்த 4 ஆண்டுகளாக இறக்கும் தருவாயில் இருந்த 944 பேரிடம் முக்கிய மருந்து கலவைகள் கொண்டு இந்த சர்சைக்குரிய ஆய்வு நடத்தப்பட்டது. எபிநெப்ரின் மற்றும் டைமெத்தில்டிரிப்டமைன் உள்ளிட்ட மருந்துகளின் கலவை கொண்டு மரணித்த உடலினை எந்தவித சேதமும் இன்றி உயிர்ப்பிக்க செய்யும் ‘ரீ அனிமேசன்’ முறை (உயிர்ப்பிக்கும் முறை) தொடங்குகிறது.

அதனைத்தொடர்ந்து 18 நிமிடங்கள் கழித்து அந்த உடல் தற்காலிக நினைவு இழந்த நிலையில் வைக்கப்படுகிறது. இதற்குள், அந்த உடலின் ரத்தத்தில் இருந்து மருந்து கலவைகளின் தூண்டுதலால் ஓசோன் பிரித்தெடுக்கப்படுகிறது. டாக்டர் பெர்தோல்டு ஆக்கர்மேன் மற்றும் அவரது குழுவினர் அதன்பிறகான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க தொடங்குகின்றனர்.

அவற்றின் வாக்குமூலங்களையும் தொகுத்து வைத்துள்ளனர். இந்த பரிசோதனையின் நீண்ட அனுபவத்தின் முடிவுகளை அறிவதற்காக கார்டியோபல்மோனரி ரிசைடேசன் (சி.பி.ஆர்). என்ற புதிய நவீன கருவி பயன்படுத்தப்பட்டது. அந்த கருவியின் உதவியுடன் இது சாத்தியப்படுத்தப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில், இந்த வகையிலான கருவி மரணித்த சிலரை உயிர்ப்பிக்க செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோ பல்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த ஆய்வில், அனைத்து வாக்குமூலங்களிலும் மரண நிலையில் உள்ள நினைவுகள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் பொதுவாக, உடலில் இருந்து பிரிவது போன்ற உணர்வு கொண்ட நினைவுகள், தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்றவை பெருமளவில் உள்ளன. பல்வேறு வாக்குமூலங்களில் மத நம்பிக்கைகள் சார்ந்த விஷயங்கள் எதுவும் இல்லை.

எதிர்காலத்தில் தங்களது முடிவுகள் பலரை அதிர்ச்சி அடையச் செய்யும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் ஆய்வுக்கு எடுத்து கொண்ட மனிதர்கள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் பிற மதநம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர்.

மனிதகுல வரலாற்றின் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்றிற்கு நாங்கள் பதிலளித்துள்ளோம். அதனால் மத நம்பிக்கை கொண்டவர்கள் எங்களை மன்னித்து விடுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது. இது ஒவ்வொருவருக்கும் உள்ளது என கருதுகிறோம் என இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற டாக்டர் பெர்தோல்டு ஆக்கர்மேன் கூறுகிறார்.-

அமெரிக்காவில் மேஜிக் செய்யும் ஒருவர் தனது குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் ஃபோலோம் என்பவர் ஒரு மேஜிக்மேன். இவர் தனது பெண் குழந்தையை மேஜிக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூங்கிக் கொண்டிருக்கும் அவரது குழந்தையை புத்தகத்தை கொண்டு இரண்டாக பிளந்து, மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுகிறார். இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் கடந்த மாதம் தீ மேஜிக் ஷோ என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த வீடியோவை 143 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 628 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர்.

உடலுறவில் ஈடுபடுதல், கொஞ்சி குலாவுதல் தான் உணர்ச்சி நிலை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும். ஆனால், இதை தவிர்த்து, பொதுவான சில காரியங்கள் மற்றும் சில தருணங்களில் கூட ஆண்களுக்கு உணர்ச்சி நிலை மேலோங்க வாய்ப்புகள் உண்டு. அவை என்னென்று பார்க்கலாம்.

மற்ற வண்ணங்களை விட சிவப்பு நிற உடை ஆண்களின் உணர்சிகளை தூண்டுகிறதாம். சிவப்பு நிறம் இயற்கையாகவே ஆண், பெண் மத்தியில் உணர்ச்சிகளை தூண்டும் தன்மை கொண்டுள்ளது என ஆய்வுகள் மூலமாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

அடர்த்தியான தன்மை கொண்ட வாசனை திரவியம் பயன்படுத்தும் பெண்கள் அருகில் வருகையில், அதை சுவாசிக்கும் போது ஆண்களுக்கு உணர்ச்சி மேலோங்குகிறது.

சில ஆண்களுக்கு கண்ணாடியில் தங்கள் உடலையே பார்த்து ரசிக்கும் போது உணர்ச்சி அதிகரிக்கிறது.

தனது துணை, தன் முதுகை தேய்த்து குளிப்பாட்டும் போதுமட்டுமல்ல, அரிக்கும் போது முதுகை சொறிந்துவிட்டால் கூட ஆண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்குமாம்.

துவைத்த சுத்தமான படுக்கை விரிப்புகள் கொண்ட படுக்கையில் படுக்கும் போது ஆண்களுக்கு உணர்ச்சி அலை சுனாமி போல பொங்குகிறது. அந்த நேரத்தில் மனைவி அருகில் இருந்தால் சொல்லவே வேண்டாம்.

மனைவி, வீட்டில் தங்களது உடையை உடுத்தி வேலை செய்கையில் ஆண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்கிறது. இதை பற்றி நசுக்காக தெரிந்து தான் பெண்கள் கணவரின் உடையை அணிந்து கணவரின் உணர்ச்சியை தூண்டி விடுகின்றனர்.

காலை எழுந்தவுடன், துணை முத்தமிட்டு நாளை துவக்கும் போது ஆண்கள் அந்த நாள் முழுவதுமே உணர்ச்சி நிலை மோலோங்கி தான் காணப்படுவார்களாம். தன் துணை மகிழ்ச்சித்து, சிரிக்க சிரிக்க பேசும் தருணங்களில் ஆணுக்கு உணர்ச்சி அலைகள் மேலோங்குகிறது. அதுவும் மனைவி தன்னை தொட்டு தொட்டு பேசி சிரிக்கும் போது கணவரால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது.

அந்தக் காலத்தில் காளைய அடக்குவது, இளவட்டக் கல்லைத் தூக்குவது மாதிரி மக்களோட வீரம், கம்பீரத்தை வெளிகாட்டுகின்ற ஒரு விஷயமாக புல்லட் இருந்தது நிதர்சனமான உண்மை. ஆயிரம் வாகனங்கள் ரோட்டுல போனாலும் புல்லட் அந்த “தட தட தட”ங்கற சத்ததோட போறது தனியா தெரியும். பார்க்கறதுக்கு தாங்க அது முரட்டுத்தனமான வண்டியா தெரியும், ஒட்டிப்பார்த்தா சூதுகவ்வும் படத்துல ஒரு டைலாக் வருமே “நான் காரா ஓட்டுறேன், கடவுளையே ஓட்டறேன்”னு அது அப்படியே புல்லட்டிற்கும்  பொருந்தும். சுருக்கமா சொல்லப்  போனா யானைய ஓட்டற மாதிரி. ஏறி உக்கார்ந்துட்டா அப்புறம் நாம சொல்றபடி கேட்கும். அந்த காலத்து புல்லட்டில் ஸெல்ப் ஸ்டார்ட் எல்லாம் கிடையாது. ஆம்ப்ஸ்  மீட்டர் ஜீரோ வந்திருச்சா’னு பார்த்து “சலக்” னு ஒரே ஒரு உதை, உதைச்சா போதும். சிங்கம் கெளம்பீருச்சு. சண்டியர் கணக்கா போய்ட்டே இருக்கலாம். எத்தனை நூரம் போனாலும் அலுப்பே தெரியாமல் போகக் கூடிய வாகனம் இது மட்டுமே. மைனர் என்றால் நம் நினைவிற்கு வருவது தங்கச் சங்கிலியும், புல்லட் வண்டியும் ஆகிய   இரண்டுதான். புல்லட் வைத்திருக்கும் மைனர் மாப்பிள்ளைகளுக்கு கிராமத்தில் இன்றளவும் மவுசு கூடத்தான். ஆக அப்படிப்பட்ட இந்த வண்டியோட கதை தான் என்ன ?அதுக்கு ஏன் “புல்லட்” டுனு பெயர் வந்தது ?

இங்கிலாந்தைச்  சேர்ந்த ராயல் என்பீல்ட் நிறுவனம் 1893 ஆம் ஆண்டு தொடங்கி மோட்டார் சைக்கிள், பை சைக்கிள், புல் வெட்டும் இயந்திரங்கள், மற்றும் நகரும் இயந்திரங்கள்’னு பலவற்றை தயாரித்து விற்பனை செய்தனர். இவர்களுடைய முதல் என்பீல்ட் புல்லட் 19௦1 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. அது ராயல் என்பீல்ட்’ங்கற பெயருடன் வெளிவந்தது. இவர்களுடைய தயாரிப்பில் “என்பீல்ட் ரைபிள்” என்ற துப்பாக்கியும் அடக்கம். அதனால் அவர்களுடைய லோகோ-வில் “மேடு லைக் எ கன்” (Made Like a Gun) என்ற வாக்கியத்துடன் வரும். அவர்களுடைய வாகனத்தையும் புல்லட் என்ற பெயரிட்டனர், Royal Enfield Bullet என்றே வெளிவந்தது. இந்த வாகனம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. எல்லை பாதுகாப்பு பணிக்கு அது சரியானதொரு வாகனமாக இந்திய அரசு கருதியது.

இதன் வரவேற்பு அதிகரிக்கவே இந்த வாகனத்தை இந்தியாவில் தயாரிக்க 1949 ஆம் ஆண்டு என்பீல்ட் நிறுவனம் இந்தியாவின் மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து சென்னையில் “என்பீல்ட் ஆப் இந்தியா” என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்திய அரசாங்கம் காவல்துறை மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு இவைகளுக்காக பயன்படுத்தத்  தொடங்கினர். 1955 ஆம் ஆண்டு ஒரே முறையில் 800, 350-cc புல்லட் வண்டிகளுக்கு இந்திய அரசு ஆர்டர் கொடுத்தது. இது அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய ஆர்டராகும். 1957 ஆம் ஆண்டில் இருந்து வாகனத்திற்கான உதிரி பாகங்கள் இந்தியாவில் தயார் செய்யப்பட்டது. சுமார் 197௦ ஆம் ஆண்டு இங்கிலாந்துக் கம்பெனி ஒரு சில காரணங்களால் மூடப்பட்டது. எனினும் இந்தியாவில் ராயல் என்பீல்ட் பாக்டரி தங்கு தடையின்றி இந்தியாவில் தயாரிப்புகளை தயார் செய்தும் விற்பனை செய்தும், மற்றும் யூரோப், அமேரிக்கா, தென்னாப்பிரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வந்தது குறிப்பிடத்தக்கது. இடையில் நவீன ரக பைக்குகளின் வரவுகள் சில காலம் ராயல் என்பீல்ட்’டின் விற்பனை சந்தையை மந்தமாகியது. இதனால் தங்களின் மாடல்களை எப்பொழுதும் நவீனப்படுத்திக் கொண்டு வந்த நிறுவனம் புது படைப்புகளுடன் இப்பொழுது மீண்டும் விற்பனை களத்தில் முன்னணியில் உள்ளது. இன்றைய இளைய தலைமுறை புல்லட்களை பெரிதும் விரும்பி வாங்க துவங்கியுள்ளனர். இப்பொழுது சந்தையில் உள்ள ஒரு ரகங்கள் பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்.

ராயல் என்பீல்ட் புல்லட் ஸ்டாண்டர்ட் 350 cc என்பது ஆரம்ப மாடலாகும். இதில் கிக் ஸ்டார்ட் மட்டுமே உள்ளது. பரமாரிப்பு சரியாக இருந்தால் லிட்டருக்கு 5௦ கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைத்தாலும் நிறுவனம் நமக்கு தரும் உத்தரவாதம் நாற்பது தான். இதன் மற்றொரு மாடல் எலெக்ட்ரா கிக் ஸ்டார்ட் உடன் வருகிறது.

ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 cc மற்றும் கிளாசிக் 5௦0 cc – என்பீல்ட் நிறுவனம் பழைய மாடல் புல்லட்களை போல் மீண்டும் தயாரிக்க முற்பட்டதில் பிறந்தது தான் இவ்விரண்டு மாடல்கள். பழைய ரக ஒற்றை ஸ்பீடாமீட்டர், அதன் கீழ் சாவி மற்றும் ஆம்ப்’க்கான வசதிகள். ஹெட்லைட்டிற்கு மேல் இருபுறமும் சிறய நைட் விளக்குகள், நவீன ஹாலோஜன் ஹெட்லைட். இதன் நவீன என்ஜின் கிராமப்புறம் மற்றும் நகர்புறம், ஹைவே அனைத்திலும் எளிதாக பயணம் செய்வதற்கான தரத்தில் உள்ளது. நமக்கான தினசரி பயன்பாட்டிற்கு 35௦ cc மாடலும், அடிக்கடி நீண்ட தூரம் செய்பவர்களுக்கு 50௦ cc மாடல்களும் பொருந்தும். இதன் மைலேஜ் உத்தரவாதம் நாற்பது. சுமார் 9 கலர்களில் இவ்வகை வாகனங்கள் கிடைக்கிறது.

தண்டர்பேட் 350 மற்றும் 5௦0 வகைகள் –சுமார் 5௦ ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வகை உருவத்தில் வாகனங்கள் தயாரிப்பதானால் ஒரு சில மாடல்களுக்கு உருவத்தை மாற்றி அமைத்தால் மட்டுமே அடுத்த தலைமுறையை கவர முடியும் என்று உருவாக்கப்பட்டதே தண்டர்பேட் மாடல்கள். நீண்ட தூர சொகுசு பயணத்திற்கு ஏற்ற உயர ஹாண்டல்பார்கள், 20 லிட்டர் பெட்ரோல் டேங், பெரிய இருக்கைகள் என்று அதிர்வில்லாத நீண்ட தூர பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டது. இது போக பிற மாடல்களும் ரேஸ் பைக் உட்பட என்பீல்ட் கம்பெனி தயாரிப்புகளில் வருகிறது. அதோடு டீசல் என்ஜினில் வந்த ஒரே இரு சக்கர வாகனம் புல்லட் மட்டுமே

புல்லட் அல்லது உயர் ரக பைக்’குகள் வாங்குவது நம்மில் ஒரு சாராருக்கு அன்றாட தேவைக்கான விஷயமாக இருந்தாலும் மற்றொரு சாராருக்கு அது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இவ்வகை மாடல்கள் வாங்கி அதை பெரிய பொருட்செலவில் தங்களுக்கு ஏற்றார் போல் எஞ்சின் ஆல்டர் செய்துகொள்ளவும், சைலன்சர்கள், ஹெட் லாம்ப்கள், மக்கட், போன்ற பாகங்களை மாற்றிக்கொள்ளவும் ஒரு தனி சந்தை, தனி பணிமனைகள் செயல்படுகிறது.

பெரு நகரங்களில் ராயல் என்பீல்ட் ஒநெர்ஸ் க்ளப், தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளின் ரைடர்ஸ் க்ளப், போன்ற பல க்ளப்கள் உள்ளன. இவர்கள் வார அல்லது மாத இறுதி என்று முடிவு செய்து மாநிலங்களை கடந்து நீண்ட தூர பயணம் சென்று வருகிறார்கள். கோவா போன்ற நகரங்களில் ராயல் என்பீல்ட்காக பிரத்யேக ரேஸ்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மோட்டார் வாகன வரலாற்று பட்டியலில் ராயல் என்பீல்ட்க்கு ஒரு சிறப்பிடம் நிலையாக உள்ளது. பல துறைகளில் உள்ள நிறுவனங்களில் 1949 முதல் இயங்கும் பழங்கால பிராண்டுகளில் இதுவும் ஒன்று. இரு சக்கர வாகனத்திலும் சொகுசாக செல்ல முடியும் என்று மக்கள் உணர்ந்தது இவ்வகை வாகனங்கள் வந்த பிறகே. முறுக்கு மீசை, வேஷ்டி சட்டை போட்டவர்கள் மட்டுமே புல்லட் பயன்படுத்தி வந்த கலாசாரம் இப்பொழுது மாறி, நவீன உடையில் அலுவலகம் செல்லும் இன்றைய தலைமுறையும் புல்லட்டில் செல்கிறது.

புல்லட் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் உடனே முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது சென்னையில் இரண்டு இடங்களில் இதன் தயாரிப்பை விஸ்தரிப்பு செய்தாலும் வாடிக்கையாளர்கள் ஆறு மாதத்திற்கு முன்பில் இருந்தே முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உங்களுக்கு வேண்டுகின்ற நிறம், மாடல், அனைத்தையும் முடிவு செய்து ஒரு முன்பதிவு தொகையை மட்டும் செலுத்திக்  காத்திருந்தால் குறித்த நேரத்தில் உங்கள் வாகனம் உங்களை வந்தடையும்.

ஒருவருடைய உதட்டின் வடிவம் மற்றும் அளவை வைத்து அவர்களின் குணங்களை கூறிவிடலாம் உங்களுக்கு தெரியுமா?

இதய வடிவ உதடுகள்
ஒருவருக்கு இதய வடிவ உதடுகள் இருந்தால், அவர்கள் எப்போதும் புதிய ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்த விரும்புவார்கள். எதையும் மிகவும் வேகமாக யோசித்து செயல்பட்டு அனைவரையும் வசீகரிப்பார்கள். இந்த வகையினர் எதற்கும் அஞ்சாமல் செயல்படுவார்கள். மேலும் இவர்கள் மிகவும் ரொமான்டிக்காக இருப்பார்கள்.

பருத்த உதடுகள்
பருத்த உதடுகளைக் கொண்டவர்கள் மிகவும் தைரியமானவர்கள். இவர்கள் மற்றவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து கவனிப்பார்கள். தாராள மனம் படைத்தவர்கள் மற்றும் எளிதாக பல நல்ல நண்பர்களின் பழக்கத்தைப் பெறுவார்கள்.

பரந்த உதடுகள்
சிலருக்கு வாய் மிகவும் பெரிதாக இருப்பதால், அவர்களிக்கு பரந்த உதடாக இருக்கும். இத்தகையவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். எதையும் பரிபூரணமாக செய்ய முயல்வார்கள். மேலும் இந்த வகையினர் மற்றவர்களுக்கு வளைந்து கொடுக்கும் தன்மையினராக இருப்பதால், இவர்களுக்கு மிகப்பெரிய நண்பர் கூட்டம் இருக்கும்.

மெல்லிய உதடுகள்
உதடுகள் சிலருக்கு மெல்லியதாக உதடு இருப்பதே தெரியாமல் இருக்கும். இத்தகையவர்கள் வெளிப்படையாக பேசமாட்டார்கள், தனிமையை அதிகமாக விரும்புவார்கள், வாழ்க்கையில் தனது இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பார்கள். மேலும் இவர்கள் எப்போதும் உஷாராக இருப்பார்கள்.

வட்டமான உதடுகள்
வட்டமான உதடுகளைக் கொண்டவர்கள் மிகவும் அழகான இதயத்தைப் படைத்தவர்கள் மற்றும் துணிச்சலானவர்கள். மேலும் இத்தகையவர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்கள். இவர்களுக்கு ரிஸ்க் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டதால், நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.

பருத்த கீழ் உதடுகள்
கீழ் உதடு மட்டும் சிலருக்கு பருத்து இருக்கும். இத்தகையவர்கள் சிறந்த செயல்திறனாளராக இருப்பதால், இவர்கள் மிகவும் பிரபலமாக இருப்பார்கள். மேலும் இவர்கள் எந்த ஒரு இடத்திலும் அனைவரையும் கவரும் வண்ணம் இருக்க விரும்புவார்கள். இந்த வகையினர் நல்ல நகைச்சுவை குணம் படைத்த இனிமையானவர்களாக இருப்பார்கள்.

சமச்சீரான உதடுகள்
சமச்சீரான உதடுகள் என்பது உதடுகள் சரியான வடிவத்தில் அழகாக இருப்பதைக் குறிக்கும். இந்த மாதிரியான உதடுகளைக் கொண்டவர்களைக் காண்பது மிகவும் அரிது. ஆனால் இவர்கள் மற்றவர்களுடன் அவ்வளவு எளிதில் பழகமாட்டார்கள். இதனால் இவர்களுக்கு நண்பர்கள் கூட்டம் குறைவாக இருக்கும்.


பிப்ரவரி மாதமே காதல் மாதம் தான். ஆனாலும் பிப்ரவரி 14 ஆம் தேதியே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதோடு பிப்ரவரி 7 ஆம் தொடங்கி 14 ஆம் தேதி வரையிலான ஏழு நாட்கள் காதல் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் காதலோடு தொடர்புடைய ஏதேனும் ஒரு நாளை குறியீடாகக் கொண்டாடி, இறுதியில் ஏழாவது நாள் காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த காதல் வாரத்தின் ஏழு நாட்கள் பற்றிய விவரங்கள்

பிப்ரவரி 7 – rose day

இந்த தினத்தில் காதலிக்கு, காதலர்கள் ரோஸ் கொடுத்து அன்பை வெளிப்படுத்தலாம்.


பிப்ரவரி 8 – propose day

காதலர்கள் இன்று தங்கள் அன்புக்குரியவர்களிடம் காதலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவார்கள். இதற்கான தினமாக கொண்டாடப்படுகிறது.


பிப்ரவரி 9 – chocolate day

காதலை வெளிப்படுத்த இனிப்பை சிறந்த வழி ஏதும் உண்டா என்ன? அதுவும் குறிப்பாக சாக்லேட்டை விட … எனவே உங்கள் காதலை விதவிதமான வண்ணமயமான சாக்லேட்களை வழங்கி காதலை வெளிப்படுத்தலாம்.


பிப்ரவரி 10 – teddy day

உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு டெடிபேர் உள்ளிட்ட செல்ல பொம்மைகளை வழங்கி மகிழ்விக்கலாம்.

பிப்ரவரி 11 – promise day

ஒருவொருக்கு ஒருவர் நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டு, மனம் ஒத்த தம்பதிகளாக இறுதிவரை பிரியமால் இருப்போம் என்று காதலர்கள் உறுதி செய்ய வேண்டிய நாள் இன்று .


பிப்ரவரி 12 – hug day

அன்புக்குரியவர்களை அரவணைத்து மனதில் உள்ள காதல் உணர்வை உருக உருக வெளிப்படுத்துங்கள். காதலின் மனதை ஐஸ் போல உருகும் அளவுக்கு வெளிப்படுத்தினால். சுவராஸ்மான, சுவையான நாளாக இருக்கும்.

பிப்ரவரி 13 – kiss day

காதலர்கள் முத்த மழைபொழிந்து ரொமாண்டிக்காக இருக்கலாம் . இந்த முத்தங்கள் உங்கள் காதல் உணர்வை இன்னும் அதிகரிக்கும்.


பிப்ரவரி 14 – valentine day

காதலர்களுக்கு இன்றைய நாள் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். காதலை உங்கள் அன்புக்கு உரியவர்களிடம் இன்று வெளிப்படுத்தி ஒகே வாங்க சிறந்த தினம் இன்று. ஏற்கனவே காதலர்கள் என்றால் பல்வேறு பரிசுகள் வழங்கி , சுற்றுலா சென்று, வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு இனிமையாக கொண்டாடலாம்.

காதலிக்காமல் நேரடியா திருமணத்தை சந்தித்தவர்களும், மனைவியிடம் அல்லது, கணவனிடம் இந்த ஒரு வாரம் உருக உருக காதல் மழையை பொழிந்து பரிசுகள் கொடுத்து மகிழுங்கள்.

தம்பதியர்கள், ஒளிவு மறைவு இல்லாமல் மனம் விட்டு பேசி, தினசரி போதும் போதும் என்ற அளவுக்கு முத்தமழை பொழிந்து, உருகி உருகி காதலித்தால் அவர்களுக்கு தினசரி காதலர் தினம் தான்.


இந்தியாவுக்கு தெற்கே இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவு இன்று அரசியல் சுழலில் சிக்கி தவிக்கிறது.

மாலத்தீவு தனி நாடாக இருந்தாலும் இந்திய கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த பகுதி ஆகும். குறிப்பாக, தமிழ் மற்றும் மலையாள கலாச்சாரம் கொண்ட நாடாக மாலத்தீவு திகழ்கிறது. அங்கு மலையாளம் முக்கிய மொழியாகவும் இருக்கிறது.

மாலத்தீவு மொத்தம் 26 தீவு கூட்டத்தை கொண்டது. அதில், சுமார் 1192 குட்டி தீவுகள் இருக்கின்றன. இந்த தீவு கூட்டங்கள் மாலை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளன. எனவே, அது மாலை தீவு என அழைக்கப்பட்டு பின்னர் மாலத்தீவாக பெயர் மாறியது. இத்தனை தீவுகள் இருந்தாலும் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.

மாலத்தீவின் மொத்த மக்கள் தொகை 4 லட்சத்து 27 ஆயிரத்து 756. இதன் தலைநகரமாக மாலி உள்ளது. இது, 5.8 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 412 பேர் வசிக்கிறார்கள். உலகிலேயே மக்கள் அடர்த்தியாக வாழும் நகரங்களில் ஒன்றாகவும் மாலி நகரம் உள்ளது.

மாலி தீவில் கி.மு. 200-ம் ஆண்டிலேயே மக்கள் வசித்ததற்கான தடயங்கள் உள்ளன. கி.மு. 2000-ம் ஆண்டுக்கு முன்பில் இருந்தே இங்கு மக்கள் வசித்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் கேரளா, தமிழகம் பகுதியை சேர்ந்த மக்கள் பெருமளவில் இந்த தீவுக்கு சென்று குடியேறி இருக்கிறார்கள்.

பின்னர், இலங்கை, மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து குடியேறி இருக்கிறர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து அதன் மூலம் கலப்பின சந்ததியினரும் உருவாகி உள்ளனர்.

ஆரம்பத்தில் கிராவரு என்ற தமிழர்கள் அங்கு ஆட்சி செலுத்தி இருக்கிறார்கள். பின்னர் சோழர் காலத்தில் அவர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலமாக மாலத்தீவு இருந்துள்ளது. இதன் பிறகு சிங்களவர்கள் மாலத்தீவை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர். சிங்கள இளவரசன் கொயிமலா நீண்ட காலமாக ஆட்சி செய்துள்ளான். அப்போதெல்லாம் அங்கு புத்த மதம் தழைத்தோங்கி இருந்துள்ளது.

இடையில் 1153-ம் ஆண்டு அங்குள்ள மக்கள் அனைவரும் முஸ்லிம்களாக மாறி விட்டனர். அதை தொடர்ந்து சுல்தான் ஆட்சி முறை வந்தது. 1558-ல் போர்சுக்கீசியர்கள் மாலத்தீவை கைப்பற்றி கொண்டனர். 1654-ல் டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள்.

1887-ல் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் மாலத்தீவு வந்தது. 1965-ல் மாலத்தீவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் சுல்தான் ஆட்சி முறை வந்து 1968-ம் ஆண்டுவரை நீடித்தது.

பின்னர், மாலத்தீவு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. முதல் அதிபராக இப்ராகிம் நசீர் தேர்வு செய்யப்பட்டார். 1978-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்துல் கயூம் அதிபராக தேர்வு செய்யப்பட்டு 30 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்தார்.

அதன் பிறகு முகமது நசீத், முகமது வாகித் உசேன், அப்துல்லா யாமீன் ஆகியோர் அதிபராக பதவி ஏற்றனர். தற்போது அப்துல்லா யாமீன் அதிபராக இருக்கிறார். இந்த நாட்டின் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. மீனை பதப்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி சம்பாதித்து வருகின்றனர்.

மேலும், உலகின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும் மாலத்தீவு திகழ்கிறது. சுற்றுலாவின் மூலம் ஏராளமான வருமானம் கிடைக்கிறது. மாலத்தீவின் அதிகாரப்பூர்வ மொழியாக திவெயி மொழி உள்ளது. இது சிங்கள மொழியை ஒட்டியே அமைந்துள்ளது.

1988-ல் இலங்கை தமிழ் போராளி குழு ஒன்று மாலத்தீவை கைப்பற்றி கொண்டது. அப்போது, இந்திய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பி சில மணி நேரங்களில் மாலத்தீவை மீட்டு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது


ராண்டி லூயிஸ் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த கிராபிக் டிசைனர் மற்றும் கிரியேட்டிவ் டைரக்டர் ஆவார். இவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.


இவர் போட்டோஷாப் மூலமாக அளவிலாத கற்பனை திறனையை உலகில் அள்ளித்தெளித்து வருகிறார். SurReal ArtWorks என்ற பெயரில் ராண்டி லூயிஸ் பல கிரியேட்டிவ் கிராபிக் டிசைன்கள் செய்து வருகிறார்.

இவரது பல கலைகள், அட இப்படி கூட யோசிக்கலாமோ என சிந்திக்க வைக்கிறது. இவர் தேர்வு செய்யும் பொருள்களும், அதன் வெளிப்பாடும் வேறு வகையில் இருக்கிறது.

உதாரணமாக இவர் டிசைன் செய்திருந்த வாட்டர்மெலன், ஜெல்லி ஃபிஷ் மற்றும் பட்டர்ஃப்ளை போன்றவை எல்லாம் கற்பனையின் உச்சம் என கூறலாம்.

பேருக்கு எற்றப்படியும், உருவ தோற்றத்திற்கு எற்றப்படியும் கிராபிக் டிசைனில் புகுந்து விளையாடும் வல்லுநர் தான் ராண்டி லூயிஸ். இனி! ராண்டி லூயிஸின் சிலிர்ப்பூட்டும் டிசைன்கள் சிலவன....

பிகினி!
நான் ஈயில் நடித்த ஈக்கு ஜோடி இருந்தால் எப்படி இருக்கும்? இதோ ஒருவேளை இப்படி இருக்கலாம். உடன ராஜ மௌலிக்கு கால் செய்து இந்த படத்தை காண்பிக்கலாம். இதற்கும் ஒரு ஸ்கிர்ப்ட் எழுதி நான் ஈ 2 எடுத்து கோடிகளாக மாற்ற அவருக்கு ஒரு கதை கிடைக்கும்.


எதுக்கு?
அனைத்திலும் அழகை, மெருகேற்றி காண்பித்த ராண்டி லூயிஸ் இதில் தனது விஷமத்தனத்தை காட்டியுள்ளார். தவளையை பிடிக்கும் என கூறுவோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏனெனில், பெரும்பலம் யாருக்கும் தவளை என்றால் பிடிக்காது. அதன் மேல் சருமம் மட்டும் காண நன்றாக இருந்தாலும், அதன் உடலை தொட்டு பார்க்க முடியாது.

ஆனால், பெண்களின் இதழ்களை யாராலும் தொட்டுப் பாராமல் இருக்க முடியாது. இப்படி எல்லாமா கற்பனை திறனை காண்பிக்க வேண்டும் ராண்டி?


சிக்கன் பர்கர்
பர்கர் பிரியர்கள் அனைவரும் வகை வகையான சிக்கன் பர்கர் ருசித்திருப்பார்கள். ஆனால், இப்படி ஒரு சிக்கன் பர்கரை தங்கள் வாழ்வில் கண்டிருக்க மாட்டர்கள்.

இதை ருசிக்க முடியாது ஆனால் நன்கு ரசிக்க முடியும். முடிந்த வரை ரசித்துக் கொள்ளுங்கள்..


வவ்வால்
வவ்வாலும் Bat தான், பேஸ்பால் பேட்டும் Bat தான். பெரும்பாலான ராண்டியின் இந்த பெயர் சார்ந்த கிரியேட்டிவ் கிராபிக் டிசைன்கள் அனைத்தும் அடடே! போட வைக்கின்றன. அதில் இந்த வவ்வால் டிசைனும் இணைந்துள்ளது.


ஜெல்லி
பட்டாம்பூச்சிக்கு பிறகு அதிகமாக கவர்ந்த ராண்டியின் டிஸைன் இது. ஜெல்லி ஃபிஷ் நாம் அறிந்திருப்போம், [பார்த்திருப்போம். ஏன், நம்மில் பலர் வளர்த்திருப்போம். ஆனால், இப்படி ஒரு ஜெல்லி ஃபிஷ் நாம் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டோம்.


ஆமை
தர்பூசணி, பட்டாம்பூச்சியில் பெயரை வைத்து விளையாடிய ராண்டி லூயிஸ், இந்த பர்கரில் தோற்றத்தை வைத்து விளையாடியுள்ளார்.

பார்கரின் மேல் பகுதியின், ஆமையின் ஓடு பகுதியும் ஒரே வண்ணத்தில் இருந்தால் ஒருவேளை இப்படியாக தான் இருக்கும் என நாம் ஒருபோதும் யோசித்திருக்க மாட்டோம். ஆனால், ராண்டி அதை யோசித்து டிசைன் செய்து அசத்தியுள்ளார்


ஜீனியஸ்
மிக சிலரால் மட்டும் தான் ராண்டி போல யோசிக்க முடியும் Butterflyயில் இருக்கும் Butterஐ கொண்டு இந்த கிராபிக் டிசைன் செய்துள்ளார் ராண்டி லூயிஸ். ராண்டியின் கிரியேடிவ் வர்க்கில் இது மிகவும் சிறந்ததாக திகழ்கிறது.


நீங்க வெஜ்டேரியனா?
இது வெஜ்டேரியன்களுக்கான ஆடு. சாப்பிட முடியாது என்றாலும் படமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை உங்கள் வீட்டில் இன்று அம்மா விரதம் இருந்தால் இந்த காலிபிளவர் வாங்கிக் கொடுத்து சமைத்து தர கூறுங்கள்.


உவேக்!
நத்தையை இதற்கு முன்னர் இவ்வளவு க்ளோஸ் அப்பில் நாம் கண்டிருக்க வாய்ப்பில்லை. மேக்ரோ கேமரா லென்சில் பார்த்தால் மட்டுமே நத்தையின் இந்த தோற்றம் தென்படும். நத்தையின் உடல் சருமமும் பேஸ்ட் போல தான் இருக்குமோ?

அது கொஞ்சம் வழவழ கொழகொழன்னு தான் இருக்கும். ஆனால், இத்துடன் சேர்த்து டிசைன் செய்ய ராண்டிக்கு எப்படி தோன்றியதோ?


சாப்பிட்டு தான் பாருங்களேன்...
பார்த்தும் கேண்டி என்பது தெரிகிறதா...? கொஞ்சம் உற்றுப் பாருங்கள் இது விஷமான கேண்டி என்பதும், இதை நீங்கள் கடித்தாலோ, அல்லது அது உங்களை கடித்தலோ மரணம் என்பது நமக்கு தான் என்பது புரியும். பச்சை, மஞ்சள் பாம்பை கேண்டியில் சேர்த்துள்ளது ராண்டியின் கலை.


இனி அள்ளி கொஞ்சலாம்...
முள்ளம்பன்றியை கண்டு நாம் அஞ்சுவதற்கு ஒரே காரணம் அதன் முள் போன்ற தோற்றம் தான். அப்படி முற்கள் இல்லை எனில், மனிதர்கள் எப்போதோ அதையும் உண்ணும் பட்டியலில் சேர்த்திருப்பார்கள். நம்மில் பெரும்பாலானோர் முள்ளம்பன்றியை படத்தில் மட்டும் தான் பார்த்திருப்போம்.

இப்படி ஒரு முள்ளம்பன்றி இருந்தால் முயல், பூனை, நாயை காட்டிலும் இது தான் பெருவாரியாக செல்லப் பிராணியாக இருக்கும்.


தர்பூசணி
தர்பூசணி என்பதை ஆங்கிலத்தில் Water Melon என்று கூறுகிறோம். வாட்டர் என்பதை தர்பூசணியில் நாம் பெயராக மட்டுமே கண்டிருப்போம்.

ஆனால், ராண்டி லூயிஸ் கண்முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார். நெசம்தானே... வாட்டர் மெலன்ல இதுக்கு முன்ன இப்படி வாட்டர் பாத்திருக்கீங்களா?

ஆணுக்குப் பெண்ணுடல் மீதும் பெண்ணுக்கு ஆணுடல் மீதும் ஈர்ப்பு உண்டாவது இயற்கை. பொதுவாக ஆண்களுக்குப் பெண்களின் அந்தரங்க உறுப்புகளின் மீதும் பெண்களுக்கு ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளின் மீதும் தான் அதிக அளவில் ஈர்ப்பு இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அந்த இடங்கள் மட்டுமல்லாது, இருவரது உடலிலும் இன்னும் என்னென்ன இடங்களின் மீது ஈர்ப்பும் கவனமும் அதிகமாக இருக்கிறது என ஆண்களிடமும் பெண்களிடமும் சர்வே எடுக்கப்பட்டது. அப்போது கிடைத்த முடிவுகள் கீழே தரப்படுகின்றன.

ஆணுடலில் கவர்ச்சியான இடங்கள் என பெண்கள் கூறுபவை

  • முகம் – 2 சதவீதம்
  • கால்கள் – 1 சதவீதம்
  • மார்புக்குக் கீழ் இடுப்புப்பகுதியின் v போன்ற அமைப்பு – 9 சதவீதம்
  • ABS – 13 சதவீதம்
  • மார்பு – 24 சதவீதம்
  • தலைமுடி – 22 சதவீதம்
  • புஜங்கள் (ஆர்ம்ஸ்) – 19 சதவீதம்
  • மற்றவை – 1 சதவீதம்

பெண்ணுடலில் கவர்ச்சியான இடங்கள் என ஆண்கள் கூறுபவை
  • இடுப்புப்பகுதி – 4 சதவீதம்
  • வயிறு மற்றும் இடுப்புப்பகுதி – 4 சதவீதம்
  • கண் – 1 சதவீதம்
  • முகம் – 46 சதவீதம்
  • மார்பு – 8 சதவீதம்
  • கால் – 9 சதவீதம்
  • தலைமுடி – 11 சதவீதம்
  • பிட்டம் – 18 சதவீதம்

எல்லோருக்குமே மச்சங்கள் இருக்கும். அது எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொருத்து தான் அதற்கான அதிர்ஷ்டத்தைத் தீர்மானிக்க முடியும்.

ரேகையைப் போலவே மச்சத்தை வைத்து பலன் சொல்லுவது ஆண்களுக்கும் பெண்களுக்கு சற்று வேறுபட்டு தான் இருக்கும்.

பிறக்கும்போதே மச்சம் இருக்கும். இடையில் தோன்றுவதும் உண்டு. ஆனால் அது அரிதாகவே நிகழும். புள்ளி, சிறு கோடு, பொட்டு வடிவம், மிளகளவு என பல விதங்களில் இருக்கும். மச்சங்கள் மறையாது என்பதால் தான், நாம் அவற்றை அடையாளமாகக் குறிப்பிடுகிறோம். ஆனால் மிக மெல்லியதாய் இருக்கும் சில மச்சங்கள் மறைந்து போவதும் உண்டு.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்ச பலன்கள் சற்று வேறுபட்டிருக்கும். இதில் ஆண்களுக்கான மச்ச பலன்களை மட்டும் இப்போது காண்போம்.

இரு புருவங்களுக்கு இடையே மிச்சமிருந்தால் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள்.

நெற்றியின் வலதுபுறம் இருந்தால் தனயோகமும் மனைவியால் யோகமும் கிட்டும் உண்டாகும்.

வலது நெற்றிப்பொட்டில் இருக்கும் மச்சத்தால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

வலது கண்ணில் மச்சம் உள்ளவர்களுக்கு, நண்பர்களால் உயர்வும் புகழும் உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும்.

இடதுபுருவத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வரும். அதிகம் செலவு செய்யக்கூடிய ஆளாக இருப்பீர்கள்.

மூக்கின் மேல் மச்சமிருந்தால் சுகபோக வாழ்க்கை வாழ்வீர்கள்.

மூக்கின் வலதுபுறம் இருக்கும் மச்சம் நீங்கள் நினைத்ததை அடையும் அம்சத்தை உங்களுக்குத் தரும்.

மூக்கின் இடதுபுறம் மச்சமிருந்தால் கூடா நட்பில் கூடித் திளைப்பீர்கள். பெண்களால் அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

மூக்கின் நுனியில் மச்சம் இருப்பவர்கள் ஆணவம் கொண்டவர்களாகவும் கர்வமும் பொறாமை குணமும் உடையவர்களாக இருப்பர்.

மேல் மற்றும் கீழ் உதடுகளில் மச்சம் இருந்தால் எளிதில் காதல் வயப்பட்டுவிடுவார்கள்.

கன்னங்களில், இடது கன்னம் – ஏற்றத்தாழ்வைத் தரும்.

வலது கழுத்து மச்சம் – சொத்து சேர்க்கை , ஆடம்பர வாழ்க்கை

தொண்டடையில் மச்சம் இருந்தால் திருமணத்துக்குப் பின் யோகம்

அடிவயிற்றில் இருக்கம் மச்சம் வாழ்க்கையின் உச்சத்துக்கே கூட்டிச் செல்லும். பெண்களால் யோகம் கிட்டும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

இடது மார்பில் மச்சம் இருப்பவர்கள் பெண்களை எளிதில் கவரும் ஆணழகர்களாக இருப்பார்கள்.

வலது மார்பில் மச்சம் இருந்தால் உங்கள் அன்பால் எல்லோரையும் சொக்க வைப்பீர்கள்.

பொதுவாக உடலுறவு என்றால் இரவிலோ அல்லது இருட்டு அறையிலோ தானட நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, அந்த நேரங்களில் மட்டும் உறவில் ஈடுபடுவதுண்டு.

ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு அதிகாலையில் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுண்டு. ஆனால் பெண்கள் அந்த நேரங்களில் அன்றைய நாளின் வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஆனால் அதிகாலையில் உடலுறவு கொள்வதால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு அதன்பின், நீங்கள் அதை முயற்சி செய்யுங்கள்.

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும்போது நம்முடைய உடலில் ஆக்சிடோசின் என்னும் வேதிப்பொருள் சுரக்கிறது. இது அன்றைய நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

மன அமைதியும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்கவும் இந்த அதிகாலை உடலுறவு துணைபுரிகிறது.

சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் நெருங்காது.

அதிகாலை உறவில் ஈடுபடுவதால் நகங்களும் தலைமுடியும் நன்றாக வளரும். சருமம் பளிச்சிடும்.

இரவில் நன்றாகத் தூங்குவதால் பகலில் உடல் புத்துணர்ச்சியோடு இருப்பதால் உடலில் உள்ள வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படட்டு உடல் வலுவுடன் இருப்பதால் அந்த நேரத்தில் சிறப்பாக செயல்படவும் முடியும்.

உலகில் அனைவரும் அனுபவிக்கும் ஒரு விஷயம் காதல். நிறம், மதம், பணம் என எதையும் பார்த்து காதல் வருவதில்லை. அதில் காதலர்கள் செய்யும் தவறு என்னவென்றால் காதலிப்பவர்களின் குணங்களையும் பார்க்காமல் போவதுதான்.

இதனால் ஆண்களும் சரி பெண்களும் சரி இப்போதெல்லாம் அடிக்கடி பிரேக் அப் செய்கிறார்கள். என்னதான் பசங்க விழுந்து விழுந்து லவ் பண்ணாலும், சில பொண்ணுங்க கடைசியில போகிற போக்கில் பிரேக்அப் அப்படினு சொல்லிட்டு போய்க்கிட்டு இருக்காங்க. பசங்களை இந்த பரிதாப நிலைக்கு ஆளாக்கும் பெண்களை இங்கு பட்டியலிடுகிறோம். இந்த குணங்கள் இருக்கும் பெண்களை தயவு செஞ்சி டேட்டிங் பண்ணிறாதீங்க. அப்படி பண்ணுன அப்புறம் ரொம்ப கஷ்டபடுவீங்க!

இவங்களுக்கு நீங்க எப்பயும் ஏதாவது கிப்ட் கொடுத்துக்கிட்டே இருக்கணும். உங்க பாக்கெட்ல காசு இருக்குற வரைக்கும் தான் நீங்க அவங்களுக்கு கிங், காசு காலியாச்சு அப்புறம் உங்களுக்கு சங்குதான்!

சில பொண்ணுங்க பார்க்க சினிமா ஹீரோயின் மாதிரி இருப்பாங்க, ஆனா மண்டையில களிமண்ண தவிர வேறு எதுவும் இருக்காது. என்னதான் லவ்வர் அழகா இருந்தாலும் அறிவுனு கொஞ்சம் இருக்கணும்ல?

இவங்கள் பத்தி சொல்ல தேவையில்லை போனும் கையுமா சுத்துவாங்க, இவங்ககூட சேர்ந்து போட்டோ வேணா எடுத்துக்கோங்க, டேட்டிங் போகணும் நினைச்சீங்க, அப்புறம் உங்க போன் மெமரி புல்லா அவங்க போட்டோ மட்டும் தான் இருக்கும். நைட்டு தூங்கும்போது செல்பி எடுக்குறது கனவுல வரும் பாத்துக்கோங்க!

செல்பி எடுக்கிறவங்கள கூட சமாளிச்சிடலாம். ஆனா இந்த ஒத்த செல்பி எடுக்க ஒன்றரை மணிநேரம் மேக்கப் போடுறவங்கள மட்டும் டேட்டிங் பண்ணீங்க அப்புறம் லைஃப் புல்லா நீங்க மேக்கப் மேனா மட்டும் தான் இருப்பீங்க!

நாய்க்குட்டி செத்ததுக்கு எல்லாம் ஓவர் ரியாக்ஷன் வரும். கண்டதுக்கெல்லாம் கண்ணீர் வடிப்பாங்க! அவுங்க எமோஷனலானவங்களா இல்ல லூசானு கண்டுபிடிக்கிறதுக்குள்ள நீங்க லூசாகிடுவீங்க!

பசங்கள எப்படி பிளேபாய்ஸ் இருக்காங்களோ, அதே மாதிரிதான் இந்த பிளேகேர்ள்ஸ், இருக்குற எல்லா பிட்சுலயும் மேட்ச் விளையாடும் ஆல்ரவுண்டர்தான் இவுங்க. கொஞ்சம் உஷார் பாய்ஸ்!

பொதுவாகவே சில பொண்ணுங்களுக்கு அடுத்தவங்கள பத்தி பேசுறது ரொம்ப பிடிக்கும். ஆனா, இவங்க ஒரு படி மேல, இருக்குற எல்லா பிரச்சனையைப் பத்தியும் உங்கக் கிட்ட வந்து கொட்டிக்கிட்டு இருப்பாங்க. கொஞ்ச நேரத்துல நீங்களே எப்படா வாய மூடுவானு யோசிக்க ஆரம்பிச்சிடுவீங்க.

இவங்க கிட்ட மாட்டுனீங்க நீங்க கடைசி வரைக்கும் அவுங்களுக்கு அடிமையாத்தான் இருக்கணும். எல்லாமே அவுங்க டிசிசன் படிதான் நடந்தாகணும். கொஞ்சம் மாத்தி எதனா பண்ணீங்க, அப்புறம் உங்க உசுருக்கு நாங்க பொறுப்பில்ல...

இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் சங்க கால வசிப்பிடமானக் கீழடித் தொல்லியல் களம் பற்றிய கட்டுரையே இது. தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற ஊருக்கு அருகில் இந்த அகழாய்வு மையம் அமைந்துள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இது.

இதையடுத்து கீழடியில் கண்டெடுக்கப்பட்ட இர‌ண்டு கார்பன்‌ மாதிரிகளின் காலத்தைக் கண்டறிய அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ‘பீட்டா அனலடிக்‘ என்ற நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அவை அனுப்பிவைக்கப்பட்டன. அந்தப் பரிசோதனையின் முடிவுகளை மத்திய கலாசாரத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா  வெளியிட்டார். அதில் “கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகளுக்கும், மற்றொரு பொருள் 2,220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை தமிழகத்தின் கீழடியில்தான் ஆய்வு நடத்தி இருக்கிறது. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் மேடானது, கிட்டத்தட்ட 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. கி.பி. 300-ம் ஆண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் கிடைத்தன. ஆனால், கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத், அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, துணை கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீராம் பணியில் அமர்த்தப்பட்டார். அதன்பிறகு மத்திய தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சிக்கு அனுமதியளித்தது. தற்போது, கீழடியில் பெயரளவிற்கு மட்டுமே ஆராய்ச்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுமார் 2200 வருடங்கள் பழமையானவை நிரூபணமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கீழடியில் கிடைக்கும் ஆய்வு முடிவுகள் தமிழகத்தின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தமிழகத்தில் கல்வெட்டுகள்,  புலவர் பாடல்கள் ஆகியவை உண்டு. ஆனால் நம்மிடம் வரலாற்று சாட்சியங்கள் இல்லை. தற்போது அவை கீழடியில் கிடைத்துள்ளன.

கீழடியில் அக்கால மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தொழிற் கூடங்கள் செயல்பட்டதற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அங்கே ஆய்வு நடத்தினால் வைகை ஆறு தடம் மாறிய தகவல்கள் கிடைக்கலாம். பழங்கால சமூகமாக இருந்தாலும் கீழடியில் வாழ்ந்த மக்கள் நாகரிக சமூகமாக இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கீழடியில் ஆய்வை தொடரும்போது கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அங்கே கிடைத்துள்ள பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகமாக அமைப்பதற்கு தேவையான இடத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்று அப்போதைய செய்தியாளர்கள் பேட்டியில் கூறினார் அமைச்சர் என்.டி.கே.ரங்கராஜன்.

இதுகுறித்து,  மத்திய தொல்லியல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கீழடியில் இரண்டு சதவிகிதம் மட்டுமே அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. இரண்டு வருடங்கள் ஆராய்ச்சி நடத்தியதற்கே 5,300 தொன்மையான பொருள்கள் கிடைத்திருக்கின்றன என்றால், இன்னும் பத்து முதல் இருபது வருடங்கள்வரை ஆராய்ச்சி நடத்தினால் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது. இன்னும் பல வருடங்கள் ஆராய்ச்சி நடத்தினால்தான் கீழடியின் உண்மையான காலத்தையும், அங்குவாழ்ந்த மக்களின் நாகரிகத்தையும் முழுமையாகக் கண்டறிய முடியும். இப்போது பரிசோதனையில் இருந்து கிடைத்திருக்கும் தகவல், மதுரைக்கு அருகே ‘சங்ககால நகரம்’  ஒன்று இருந்ததற்கான ஆதாரம் மட்டுமே. கீழடியில் முழுமையாக ஆறு மீட்டர் ஆழத்திற்கு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும். அப்போதுதான், இந்த நகரம் எப்படித் தோன்றியது என்பதை கண்டுபிடிக்க முடியும்” என்றார்.

வைகையாறு தோன்றும் தேனி மாவட்டம் தொடங்கி கடலில் கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரை வைகை ஆற்றங்கரையின் அருகமை பகுதிகளில் 2013-14இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்போது தொல்லியல் எச்சங்கள் உள்ள 293 பகுதிகள் கண்டறியப்பட்டன. இவை களஞ்சியங்கள், வணிகத் தலங்கள், துறைமுகங்கள், வாழிடங்கள், கோயில்கள் என்ற வகையிலானவை. வருசநாட்டிலும், அழகங்குளத்திலும் சிறிய அளவிலான அகழாய்வுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பெரிய அளவிலான அகழாய்வுகள் இதுவரை நடந்திருக்கவில்லை.

கிட்டத்தட்ட 48 சதுரக் குழிகள் வெட்டப்பட்டு உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் எனப் பல்வேறு தொல்லெச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பாண்டியர்களின் தொல்நகரான “பெருமணலூர்” இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கீழடியில் 10 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக இது திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது. சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது. நீர் வழங்கலும், கழிவுநீர் அகற்றலும் நாகரிக வளர்ச்சியின் முக்கிய மைல்கல்களாகக் கருதப்படுவன. கீழடியில் சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளன. இங்கு பழங்கால சுடுமண் உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பட்டினப்பாலை கூறும் உறைகிணற்றுப் புறச்சேரி’ என்ற தொடருக்குச் சான்று பகிர்கின்றதாகவும், ஆற்றங்கரைகளிலும், பெரிய குளக்கரைகளிலும் இவ்வாறு உறைகிணறுகள் அமைத்து நீரெடுக்கும் தமிழரின் பண்டைய வழக்கத்தை எடுத்துக்காட்டுவனவாகவும் உள்ளதாகத் தொல்லியல் அறிஞர் வெ.வேதாச்சலம் குறிப்பிடுகிறார். வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிதாகக் கருதப்படும் நிலையில் இங்கு பெருமளவில் செங்கல் கட்டிடங்கள் உள்ளது ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

ரோமப் பேரரசுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை மெய்ப்பிக்கும்படியான, வணிகர்களால் கொண்டுவரப்பட்ட ரௌலட் (rouletted), அரிட்டைன் (arretine) வகை மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அழகங்குளத்திலும் இத்தகைய பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் வரலாற்றின் தொடக்ககாலத்தைச் சேர்ந்தவையான கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், செம்பழுப்பு நிற கலவை பூசப்பட்ட மண்பாண்டத் துண்டுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் செம்பழுப்பு நிற ரசட் (russet) கலவை பூசப்பட்ட பாண்டங்கள் இதுவரை கொங்குப் பகுதியிலேயே கிடைத்திருப்பதைக் கொண்டு இப்பகுதி கொங்குப் பகுதியுடனும் வாணிபத் தொடர்பிலிருந்ததாகக் கருதப்படுகிறது.

‘ஆதன்’, ‘உதிரன்’, ‘திசன்’ போன்ற தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இங்கு சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டைகள், தாமிரத்தாலான கண் மை தீட்டும் கம்பி ஆகியவையும் கிடைத்துள்ளன. இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை கட்டைகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், சுடுமண் பொம்மைகள் உட்பட்ட பல்வேறு அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

முதல் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி கீழடியில் ஜூன், 2015 ஆம் ஆண்டு வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு தொடங்கியது. இரண்டாம் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி  2016 ஆம் ஆண்டு  ஜனவரி 2ந்தேதி அன்று அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவ குடுவைகள்,  பழங்கால உறை கிணறுகள், தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன.

இரண்டாம் கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அகழாய்வு சனவரி, 2017 முதல் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தலைமையில் நடைபெறுகிறது. இப்பணி 30 செப்டம்பர் 2017ல் முடிகிறது. மூன்றாம் கட்டப் பணியில் 400 சதுர மீட்டர் அளவுக்கு 16 குழிகள் தோண்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகில் பொய் சொல்லாத மனிதரே இல்லை. எவராக இருந்தாலும் ஏதேனும் ஒரு சூழலில் பொய் சொல்லித்தான் ஆக வேண்டும். இதை பொய் என்பது ஒருவிதம், உண்மையை மறைப்பது என்பது இன்னொரு விதம். நீங்கள் கேட்கலாம் இரண்டிற்கும் என வித்தியாசம் இருக்கிறது என்று இருக்கிறது.

ஒரு உதாரணம் மூலமாக சொல்லலாம். நான்கு குழந்தைகள் விளையாடும் பொழுது ஒருவருடைய பொம்மையை மற்றோருவர் எடுத்து மறைத்து வைத்து விட்டு, நான் எடுக்கவில்லை என்றால் அது பொய். பொம்மையை வைத்திருந்த குழந்தை தேடும் பொழுது, மூன்றாவது குழந்தை பொம்மையை எடுத்து சென்ற குழந்தையை காட்டி கொடுக்காமல் அமைதியாய் இருந்தால் அது உண்மையை மறைப்பது. பெரும்பாலும் கணவர் எங்கு பொய் சொல்கிறார்கள், எங்கு உண்மையை மறைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

பெண்களுக்கு எப்போதும் ஆடை, ஆபரணங்கள் மீது தனி ஈடுபாடு உண்டு. ஒரு திருமணத்திற்கு நீங்கள் கிளம்பும் பொழுது, இந்த ஆடை எனக்கு எப்படி இருக்கு என்று கேட்டால், அவ்வளவாக நன்றாக இல்லை என்றால், நீங்கள் வருத்தப்படுவீர்கள் இல்லை என்றால் மாற்றிக்கொள்ள செல்வீர்கள். அவ்வளவு பொறுமை அவர்களுக்கு கிடையாது. எனவே மிக அழகாக இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். அதற்காக உங்கள் அழகை பற்றி கவலைப்படுவதில்லை என்று அர்த்தம் இல்லை. என்றுமே என் மனைவியின் அழகை நானே ரசிக்க வேண்டும் என்ற எண்ணமும் மறைந்திருக்கிறது.

நீங்கள் பண்டிகை காலங்களில் ஆடைகள் வாங்குவதற்காக மாலை வேளையில் கடைக்கு செல்ல இரு தினங்களுக்கு முன்பே முடிவு செய்கிறீர்கள். உங்கள் கணவர் அலுவலக பணிகள் முடிந்து வந்தவுடன் போக காத்திருக்கிறீர்கள். அன்று உங்கள் கணவருக்கு அலுவலக பணி அதிகமாக இருக்கிறது மற்றும் அவர் மேலதிகாரி அவருக்கு எதோ அவசர வேலை கொடுத்திருக்கிறார். அதை உங்களிடம் சொன்னால் பிரச்சனை வரும் என கருதி அவர் சொல்ல ஆரம்பிப்பது, இதோ நான் 10 நிமிடத்தில் கிளம்பிவிட்டேன் என்பது. இப்படியே பத்து பத்து நிமிடமாக 1 மணி நேரம் போய்விடும்.

ஆண்களுக்கு எப்போதுமே பெண்களிடம் ஒரு கர்வம் இல்லை தலைக்கனம் என்றே சொல்லலாம். என்னால் எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்க முடியும், மிக மோசமான பிரச்சனைகளை கூட. உதாரணமாக, உங்கள் வீட்டின் குழாய் சரி செய்ய வரச்சொல்ல வேண்டும், இரு தினங்களாக உங்கள் கணவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அவர் வேலை சுமையின் காரணமாக மறந்துவிடுகிறார். அப்போது உங்களிடம் சொல்லவில்லை என்று சொன்னால் அவர் கர்வம் போய்விடும், உடனே உங்களிடம் நான் சொல்லிவிட்டேன். நாளை வருவார்கள் என்று பொய் சொல்வது.
உங்கள் கணவர் எதாவது ஒரு பிரச்சனையின் காரணமாக வருத்தமாய் இருக்கும் பொழுது, நீங்கள் கேட்டல் ஒன்றும் இல்லை என்பார். கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கேட்டல், இது என்னுடைய பிரச்சனை நானே சரிசெய்து கொள்வேன் என்பர். அவர் அதை உங்களிடம் சொல்லி உங்களை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்பதற்கான பொய் அது.

நீங்களும் உங்கள் கணவரும், அவருடைய அலுவலகம் முடிந்ததும் திரைப்படத்திற்கு செல்ல முடிவு செய்திருப்பீர்கள். உங்கள் கணவரே உங்களை வந்து அழைத்து செல்வதாய் கூறி இருப்பார். நீங்கள் உங்கள் கணவரின் கைபேசி அழைப்புக்காக காத்திருக்கிறீர்கள். உங்கள் கணவர் வேலை சுமையில் அதை மறந்து கால தாமதமாக வீட்டுக்கு வரும் பொழுது, அவர் மறந்ததை காட்டி கொள்ளாமல் நான் உன் கைபேசிக்கு அழைத்தேன், ஆனால் அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கூறியது என்பர்.

உங்கள் கணவருக்கு அவர் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும். உங்களிடம் கேட்கும் பொழுது, நீங்கள் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். அவரும் அதை ஏற்று கொள்வதாய் சொல்லிவிட்டு, இரவு தூங்கும் வேளையில் என்னை மிகவும் கட்டாயப்படுத்தி அழைக்கிறார்கள் என்று உங்களின் மனதை மாற்ற முயற்சிப்பது.

நீங்களும் உங்கள் கணவரும் வெளியில் சென்றிக்கும் பொழுது, உங்களை ஒரு அழகான பெண் கடந்து சென்றால், உங்கள் கணவர் அந்த பெண்ணை உற்று நோக்குவதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், உடனே உங்கள் கணவர், நான் அவளை பார்க்கவில்லை. நான் அவள் அணிந்திருந்த ஆடை அழகாக இருந்தது. உனக்கு வாங்கலாம் என்பதற்காக அவள் ஆடையையே பார்த்துக்கொண்டிருந்தேன் என்பர்.

எப்பொழுதும் உங்கள் கணவர், அவருடைய முன்னாள் வாழ்க்கையை பற்றி ஏதும் உங்களிடம் கூறி இருக்கமாட்டார். எல்லா ஆண்களுக்கும் திருமணத்திற்கு முன்பு எப்படியும் ஒரு காதல் இருந்திருக்கும். அவர் பொய் சொல்லியிருக்கமாட்டார் ஆனால் மறைத்திருப்பர். அதை பற்றி மனைவியிடம் உண்மையை சொல்லும் கணவர் மிக நேர்மையானவர். ஆனாலும் அதை பற்றி மனைவியிடம் பகிர்ந்துகொள்ள விரும்பமாட்டார்.

தான் தன் மனைவியை விட சிறந்தவன் எனும் கர்வம் எப்போதும் ஆண்களின் மனதில் வேரூன்றி இருக்கும். அவர்கள் எப்போதும் உன்னை விட நான் சிறந்தவன் அல்லது நான் தான் அறிவாளி என்று கூறிக்கொள்வதுண்டு. ஆனால் அவர்களுக்கும் தெரியும் அது பொய் என்று.

நான் எப்போதும் பொய் சொல்லமாட்டேன். இதுவே அவர் சொல்லும் மிக பெரிய பொய். அவர் உங்களிடம் எதாவது பொய் சொல்லியிருக்கலாம். ஆனால் அது பொய் என்று தெரிந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று அந்த சூழ்நிலையை சமாளிக்க பொய் சொல்வது. அப்போது தான் நான் பொய்யே சொல்லமாட்டேன் எனும் வாசகமும்.

மெய்யும், பொய்யும் கலந்ததே மனித வாழ்கை. பொய் பேசுபவன் கெட்டவனும் இல்லை, உண்மையை பேசுபவன் நல்லவனும் இல்லை. உண்மை பேசி தீமையை விளைவிப்பதை விட தக்க தருணத்தில் பொய் பேசி அதிலிருந்து காப்பது நன்மை பயக்கும். உங்கள் கணவர் சொல்லும் சின்ன பொய்களை கூட ரசிச்சு பாருங்க, அப்புறம் உங்க வாழ்க்கையே உங்களுக்கு இனிமையானது இருக்கும்.

காடுகளுக்குள்ளும் மலைகளின் மீதும் இருக்கும் பல கோயில்கள் குறித்து நாம் கேள்விபட்டிருப்போம். சில கோயில்களுக்கு நாமே சென்று வந்திருப்போம். ஆனால் 1000 அடி நீளமுள்ள மலைக்குகையில் மார்பளவு நீரில் அமைந்திருக்கும் அதிசய நரசிம்மர் கோயில் குறித்து இதுவரை அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த அதிசய நரசிம்மர் கோயில் குறித்து பாப்போம் வாருங்கள்.

கர்நாடக மாநிலம் பிதார் நகரிலிருந்து 4.8 கி.மீ தொலைவில் இருக்கும் மனிசூல மலைத்தொடரில் அமைந்திருக்கிறது ஜர்னி நரசிம்மர் குகை கோவில். மற்ற கோயில்களுக்கு பயணிப்பதை போல் இந்த ஜர்னி நரசிம்மரை தரிசிப்பது அவ்வளவு எளிதல்ல.

1000 அடி நீளமுள்ள இந்த மலை குகையில் கடுமையான வரட்சியான காலத்திலும் கூட எப்பொழுதும் 4 அடி முதல் 5 அடி நீர் நிறைந்தே இருக்கிறது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது எங்கே செல்கிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது .

இந்த தண்ணீரில் அதிசயமான பல மூலிகைகளின் சக்திகள் இருப்பதாகவும் இதில் நடத்து சென்று நரசிம்மரை தரிசித்தால் பல்வேறு வியாதிகள் குணமாகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். குகையில் எப்பொழுதும் வவ்வால்கள் தொங்கியபடியே இருக்கிறது இந்த வௌவால்கள் மனிதர்களை கண்டு பயப்படுவதுமில்லை, இதுவரை எந்த மனிதர்களையும் காயப்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குகையின் இறுதியில் சுயம்புவாக தோன்றிய ஜர்னி நரசிம்மரும் சிவலிங்கமும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். நரசிம்ம பெருமான் இரண்யகசிபுவை பிரகல்நாதனுக்காக வதம் செய்தபின்னர் ஜலாசுரன் என்ற அசுரனை இந்த குகையில் வதம் செய்ததாகவும் இறுதியில் அசுரன் நீராக மாறி நரசிம்மரின் பாதத்தில் சரணடைந்ததாகவும் தல புராணங்கள் கூறுகிறது.

நரசிம்மரை தரிசிக்கவேண்டும் என்ற மனவுறுதியுடன் கடினமான பாதைகளை கடந்து சென்றால் ஜர்னி நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற காலம் சென்று இன்று அனைத்து பெண்களும் கல்வி கற்கும் மாற்றம் நிலவி பெண்கள் துணிச்சலாக பணிக்கும் செல்ல நேர்ந்த இந்த வேளையில் தான் அவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல்களும் பணியிடங்களில் அதிகரித்துள்ளது என்று கூறுவது சற்று வியப்புகுரிய ஒன்றே. “பாலின சமத்துவம் என்பது ஓர் இலக்கு மட்டுமல்ல! வறுமை ஒழிப்பு,  நீடித்த வளர்ச்சி,  நல்லாட்சி போன்ற பெரும் சவால்களை சந்திக்கத் தேவையான ஒரு முன் நிபந்தனை” என்று கூறியவர் ஐ.நா. பொதுச் செயலாளர்  கோபி அன்னான்.

இன்னும் சொல்லப்போனால் வரதட்சணை, பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் கொலை, குடும்ப வன்முறை எனப் நீண்டுகொண்டே செல்கிறது பெண்களின் மீதான அடக்குமுறைகள். இதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள்,  பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது போல தோன்றினாலும்,  அதன் நடைமுறை விதிகள் மக்கள் எளிதில் பயன்படுத்த இயலாத வகையில் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கச் செல்வதும் அவ்வளவு சுலபமாக இல்லை. காவல்துறையின் அணுகுமுறை, தாமதமான செயல்பாடு போன்றவற்றால், காலம் கடந்துதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல வழக்குகளில் நடவடிக்கை என்பது பாதிப்புக்குள்ளானவரையே குற்றவாளி ஆக்குகிறது.

நமது சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. அதனால், குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது. உலகளவில் எடுத்துக்கொண்டாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா இருக்கிறது. இவையெல்லாம் எவ்வளவு வேதனை கொள்ளவேண்டிய தருணம். கற்புக்கு பெயர் கொண்ட நம் நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக பல பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களும் துன்புறுத்தல்களும் பணி செய்யும் இடங்களில் நடைப்பெறுகிறது.

பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து 70 சதவிகித பெண்கள் புகார் அளிப்பதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எத்தனையோ கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகளினால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடம் கிடைப்பது அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை. பார்வையால் பலாத்காரம் செய்யும் ஆண்கள்,  சிரித்து பேசினாலே பணிந்து போய்விடுவாள் என்று நினைத்து தவறாக நடக்க முற்படும் உயரதிகாரிகள் பல இடங்களில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல வளரும் நாடுகளிலும் உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. சின்னஞ்சிறு பிள்ளைகள், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் மட்டுமல்லாது சித்தாள், விவசாய கூலிகள், நெசவு தொழிலாளிகள் ஏன் நூறுநாள் வேலைக்கு செல்லும் பெண்கள் கூட பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அலுவலங்களில் பெண்கள் பார்க்கும் போது ஆபாச செய்கைகள், கீழ்த்தரமான கருத்துகள், தவறான எண்ணத்தில் தொட்டு பேசுதல், நேரடியாக பாலியல் உறவுக்கு அழைத்தல், உடல் ரீதியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கிறது.

உண்மையில் இது அனைவராலும் மறுக்க முடியாமல் ஏற்று கொள்ளக்கூடிய செய்தியே ஒரு நடிகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிற பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் போது குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதை மறந்து விடுகிறது இந்த சமூகம். பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பெரும்பாலும் வெளியில் சொல்வது கிடையாது. ஏனெனில், அவ்வாறு தெரிவித்துவிட்டால், நான்கு சுவருக்குள் நடப்பது ஊருக்கே தெரிந்துவிடுகிறதே என்ற தயக்கம்தான். மேலும் ஒரு ஆண் செய்த தவறுக்கும் உலகத்தினரால் அந்த பெண் தான் வஞ்சிக்கபடுகிறாள் இதுவும் குற்றம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

இது குறித்து இந்திய பார் அசோசியேஷன் இந்த ஆண்டு ஆய்வு நடத்தியது. ஆய்வில், 6,047 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, மும்பை என நாட்டின் முன்னணி நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நீக்கமற, இத்தகைய பாலியல் தொல்லைகள் மறைமுகமாக நடைபெறுவதாகவும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் வேலை கிடைக்க வேண்டுமெனில் அல்லது வேலையை நிரந்தரம் செய்துகொள்ளவும், சம்பள உயர்வு போன்ற சலுகைகளுக்காகவும் என பல விதங்களில் பாலியல் ரீதியாக,  ஒத்துழைத்து செல்லும்படி தங்களது உயர் அதிகாரிகள் வற்புறுத்துவதாக, பல பெண்கள் தெரிவித்துள்ளனர்.

உயரதிகாரிகளின் காம இச்சைக்கு இணங்காத நிலையில், அதிக பணிச்சுமையை ஏற்படுத்துவது இரவில் தாமதமாக வீட்டிற்கு செல்லும் சூழ்நிலையை உருவாக்குவது என உயர் அதிகாரிகளின் தொல்லை நீளுவதாகவும் பெண்கள் குறிப்பிடுகின்றனர். பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது படிக்கும் இடத்திலோ இது போன்ற சம்பவம் நேர்ந்தால், அதைத் துணிச்சலுடன் வெளியே சொல்ல வேண்டும்.

நம் அனைவருக்கும் இது தெரிந்த செய்தி என்ற ஒன்றாக கூட இருக்கலாம் கடந்த 1997ம் ஆண்டு பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விசாகா என்பவரின் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் பணியிடத்தில் பாலியல் வன்முறை என்பது மனித உரிமைமீறல் நடவடிக்கை என்பதை முதல் முறையாக ஏற்றுக் கொண்டது. இவ்வழக்கில் தனது தீர்ப்பில் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் அளித்தது. இதுதொடர்பான சட்டம் இயற்றப்படும் வரை இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் இந்த வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கியது. இதனடிப்படையில் தான் பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான சூழல் எழுந்தது.
விசாகா வழக்கில் நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்படி நிறுவனம் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்துவதாக இருந்தது. ஆனால், பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டமானது, அலுவலகங்களில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, கட்டிடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்கள், தற்காலிக அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலி அல்லது பயிற்சி அடிப்படையில் வேலை செய்பவர்கள், ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ பணிபுரிபவர், தன்னார்வு அடிப்படையில் வேலை செய்வோர் என அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் பணியிடத்தில் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்துள்ளது. இச்சட்டத்தின்படி, 10 பேருக்கு மேல் பெண்கள் பணியாற்றும் எந்தவொரு நிறுவனமும் அலுவலக அளவிலான புகார் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

அவ்வாறு புகார் குழுவிலோ அல்லது ஊடகங்களிலோ சொல்லும் பெண்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது பெண்ணியல் ஆர்வலர்களின் கருத்து. ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியமாக வெளியே சொல்லும் பட்சத்தில் அவரைச் சமுதாயம் ஏளனமாகப் பார்க்கக்கூடாது. மாறாக, அவரை ஆதரிக்க வேண்டும். எனினும், குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றோர்கள் கூட்டி வளர்க்க வேண்டும் என்றும் பெண்கள் கூறியுள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்கள் தேசிய அளவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி ஆண் உயர் அதிகாரிகளுக்கும் மனநலப் பயிற்சி முகாம்கள் வழங்குவது போன்ற சில முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டுமே வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழாமல் தவிர்க்க முடியும் என்று கூறுகின்றனர்.

பெண்களின் உடை,  நடத்தைகளைப் பற்றி பேசும் சிலர் அதே நேரத்தில் பணியிடங்களில் உள்ள ஆண்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதையும் சற்று யோசித்து செயல்படுங்கள். மேலும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆண்கள்,  பணிக்கு செல்லும் தங்களின் மனைவி,  சகோதரி,  மகளை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதும் பல பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்தாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் நம் பெண்களும் சுதந்திரமாக தான் இருக்கட்டுமே அவர்களை உடல் ரீதியாகவும் உள்ளத்தின் ரீதியாகவும் ஏன் துன்புறுத்த வேண்டும் சற்றே சிந்தியுங்கள் தோழர்களே.

பக்தர்களின் வறுமையை நீக்கி வளமடையச் செய்யும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் செருகுன்னு எனுமிடத்தில் அமைந்திருக்கும் அன்னபூரணேஸ்வரி கோவில் திகழ்கிறது.

தல வரலாறு :
காசியில் ஏற்பட்ட மிகப்பெரும் பஞ்சத்தால் மக்கள் உணவு கிடைக்காமல் பசியால் அவதியுற்றனர். அவர்களது பசிப்பிணியைத் தீர்க்க நினைத்த பார்வதிதேவி, காசியில் பெரிய மாளிகை ஒன்றை உருவாக்கி, அன்னபூரணி என்ற பெயரில் அங்கு வருபவர்களுக்கு உணவு வழங்கத் தொடங்கினார். காசி அரசாளுகைக்குட்பட்ட பகுதி மக்கள் அனைவரும் அங்கு வந்து சாப்பிட்டுப் பசியாறிச் சென்றனர்.

இதனையறிந்த காசி அரசன், உண்மை நிலையை அறிய அங்கு மாறுவேடத்தில் சென்று சாப்பிட்டான். அங்கிருந்த அன்னபூரணி அனைவருக்கும் அட்சயப் பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து வழங்கிக் கொண்டிருந்ததையும், அந்தப் பாத்திரத்திலிருந்து உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வந்து கொண்டிருப்பதையும் பார்த்து வியப்படைந்தான்.

அவனுக்கு அங்கு உணவளித்துக் கொண்டிருப்பது சாதாரண பெண்ணல்ல என்பதும், அவள் இறைவியான பார்வதி தேவி என்பதும் தெரிந்தது. உடனே அவன், அன்னபூரணியை வணங்கித் தன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பஞ்சம் தீரும் வரை அங்கேயே தங்கியிருந்து மக்களைக் காக்க வேண்டினான்.

அதனைக் கேட்ட அன்னபூரணி, தன்னால் காசியில் தங்கியிருக்க முடியாது என்றும், தான் சில நாட்களில் தென்திசை நோக்கிச் செல்லப் போவதாகவும் சொன்னார். அதனைக் கேட்ட அரசன் வருத்தமடைந்தான். அவன் வருத்தத்தை அறிந்த அன்னபூரணி, தான் இங்கு சில காலம் தங்கியிருந்ததால் இந்நாட்டில் இருந்த பஞ்சம் அனைத்தும் நீங்கிச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதால் கவலையடைய வேண்டாம் என்று அவனிடம் சொன்னாள்.

அதனைக் கேட்டு மகிழ்ந்த அரசன், “அன்னையே, தாங்கள் தென்னாடு சென்றாலும், நாங்கள் வழிபட இங்கு அன்னபூரணியாகக் கோவில் கொண்டருள வேண்டும்” என்று வேண்டினான். அன்னபூரணியும் அவன் விருப்பப்படி அங்கு கோவில் கொண்டாள். அதன் பிறகு, அன்னபூரணி தென்திசை நோக்கிச் சென்றாள்.

காசியிலிருந்து தென்னாட்டிற்குத் தங்கப்படகில் வந்த அன்னபூரணியுடன் சாமூண்டீஸ்வரி (களரிவதிக்கல் தேவி), திருவற்காடு பகவதி (மடை கவைல் தேவி) எனும் இரண்டு தேவியர்களும் வந்தனர். கடல் பயணத்தில் ஆழி தீரம் (தற்போது ஆயிரம் தெங்கு என அழைக்கப்படுகிறது) எனுமிடத்திற்கு வந்த போது, அங்கிருந்த கிருஷ்ணர் கோவில் ஒன்று அவரது கண்ணில் பட்டது.

அந்தக் கிருஷ்ணர் கோவிலின் அருகிலேயேத் தானுமிருக்க விரும்பிய அன்னபூரணி, படகோட்டியைத் திரும்பச் செல்லும்படி சொல்லிவிட்டு அங்கு தனக்குத் தனியாக ஒரு கோவில் அமைத்துக் கொண்டாள் என்று இக்கோவிலின் தலவரலாறு சொல்லப்படுகிறது.

தென்னாட்டுக்குக் கடல் வழியாக வந்த அன்னபூரணி, கோலதிரி மரபு அரசர்கள் ஆட்சி செய்து வந்த நாட்டின் செல்வவளங்களைக் கேள்விப்பட்டு அங்கு வந்த போது, அங்கிருந்த இயற்கை அழகில் மயங்கி, அங்கிருந்த கிருஷ்ணர் கோவிலை அடுத்துக் கோவில் கொண்டார் என்று செவிவழிக் கதை ஒன்றும் சொல்லப் படுகிறது.

இக்கோவில் 1500 ஆண்டுகளாகக் கிருஷ்ணர் கோவிலாக இருந்தது என்றும், அப்போது ஆட்சியிலிருந்த மன்னரான அவிட்டம் திருநாள் ராசராசா என்பவர் அக்கோவிலின் அருகில் அன்னபூரணேஸ்வரிக்குச் சிலை நிறுவித் தனிக் கோவில் அமைத்தார் என்றும் சொல்கின்றனர்.

ஆலய அமைப்பு :
இங்குள்ள கோவில் வளாகத்தில் தென்புறம் கிருஷ்ணர் கோவிலும், வடபுறம் அன்னபூரணேஸ்வரி கோவிலும் அமைந்துள்ளன. இரண்டு கோவில்களின் கருவறைகளும் ஒரே பாறையில் எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு ஒரே அளவில் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்விரு கோவில்களிலும் அன்னபூரணேஸ்வரி கோவிலே மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் அன்னபூரணேஸ்வரி அன்னப் பாத்திரம் மற்றும் அன்னக் கரண்டியுடன் காட்சியளிக்கிறார்.

வழிபாடு :
அதிகாலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காக ஆலயம் திறந்திருக்கும். இக்கோவிலில் தினமும் நான்கு வேளை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இரவு நேரத்தில் நடைபெறும் அத்தாழ வழிபாடு முடிந்தவுடன் இரண்டு கிண்ணங்களில் நெய்யமிர்து எனப்படும் நைவேத்தியம் இறைவி முன்பாகப் படைக்கப்படுகிறது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் மலையாள ஆண்டு தொடக்க நாளிலிருந்து ஏழு நாட்கள் சிறப்பு விழா நடத்தப்பெறுகிறது. இவ்விழாவில் ஆறு நாட்கள் யானையின் மேல் எடுத்துச் செல்லப்படும் அன்னபூரணேஸ்வரி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசை நோக்கிக் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் கோவிலுக்குத் திரும்பக் கொண்டு வரப்படுகிறார். இப்படிச் செய்வதால் அனைத்துத் திசையிலுமிருக்கும் மக்களும் வறுமையின்றி வளமடைவர் என்கின்றனர்.

1994-ம் ஆண்டு முதல், மலையாள நாட்காட்டியில் கும்பம் (மாசி மாதம்) பூசம் நட்சத்திர நாளில் இக்கோவில் நிறுவப்பட்ட நாள் சிறப்பு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவை தவிர, சிவராத்திரி, நவமி, ஏகாதசி போன்ற நாட்களிலும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

ஆலயச் சிறப்புகள் :
இக்கோவிலுக்கு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் கோவில் நடை அடைக்கப்படும் முன்பாக, சாப்பிடாதவர்கள் யாரும் இருக்கின்றனரா? என்று கேட்டுத் தெரிந்து கொண்டே நடை அடைக்கப்படுகிறது. இக் கோவிலுக்குத் தாமதமாக வருபவர்களும் பசியால் வாடாமலிருக்க, இங்கிருக்கும் ஆலமரம் ஒன்றில் கோவில் பிரசாதம் உணவுப் பொட்டலமாகக் கட்டித் தொங்கவிடப்படுகிறது.

இங்கு அன்னதானத்திற்கு எடுக்கப்படும் அரிசியின் அளவிற்கேற்பக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் இருக்கும் என்கின்றனர். ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், அவர்களது வறுமை அனைத்தும் நீங்கி வளமடைவர் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

பெயர்க் காரணம் :
அன்னபூரணேஸ்வரி கோவில் அமைந்திருக்குமிடம் ‘செருகுன்னு’ என்று அழைக்கப்படுகிறது. அந்த ஊரிலிருக்கும் சிறு குன்று ஒன்றின் மேல் இக்கோவில் அமைந்திருப்பதால், சிறு குன்று என்று அழைக்கப் பெற்றுப் பின்னர் அது ‘செருகுன்னு’ என்று மாறிப் போய்விட்டது என்று சிலரும், தொடக்கத்தில் இந்தக் குன்று சோற்றுமலையாக இருந்தது என்றும், சோற்றுக்குன்று என்று அழைக்கப்பட்டதே செருகுன்னு என்று மருவி விட்டது என்று சிலரும் சொல்கின்றனர்.

அமைவிடம் :
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், தாலிப்பிரம்பா எனுமிடத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செருகுன்னு எனுமிடத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிறுகுன்றின் மேல் இக்கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்குச் செல்லக் கண்ணூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

அதிக அளவு சிகரெட் பிடிப்பவர்கள் அப்பழக்கத்தை கைவிட முடியாமல் தினமும் ஒரு சிகரெட்டாவது புகைத்து விடுகிறார்கள். அதனால் உடலுக்கு எந்தவித தீமையும் ஏற்படாது என கருதுகின்றனர்.

அது தவறு என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. தினம் ஒரு சிகரெட் பிடித்தால் கூட இருதயம் பலவிதமான நோய்களால் கடுமையாக பாதிக்கும். பின்னர் அதுவே வயதான காலத்தில் பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வு கூறுகிறது.

தினசரி 20 சிகரெட் புகைப்பவர் அதை கைவிட்டு ஒரு சிகரெட்டுக்கு மாறினாலும் மரணத்தை ஏற்படுத்தும். இருதய நோய்களை உருவாக்கும்.

எனவே இருதய நோய்களில் இருந்து தப்பிக்க சிகரெட் பிடிக்க எந்த ஒரு வரையறையும் இல்லை என அறிவியல் இதழில் நிபுணர்கள் ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளனர். 1946 முதல் 2015-ம் ஆண்டு வரை படிப்படியாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் தினமும் ஒரு சிகரெட் பிடிக்கும் ஆண்களில் 48 சதவீதம் பேரும் பெண்களில் 57 சதவீதம் பேரும் இருதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் ஆண்களில் 25 சதவீதம் பேரும், பெண்களில் 31 சதவீதம் பேரும் பக்கவாதத்தால் அவதிப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடியை அலச வேண்டும் எப்போதுமே தலை முடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமான பொடுகு மற்றும்  அரிப்பிலிருந்து இது தடுக்கும். மேலும் தலை முடியின் வகையை பொறுத்து, அதற்கு தகுந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.
கடுகு எண்ணெய் ஒரு கப் கடுகு எண்ணையை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து,  பின்னர் வடிகட்டி ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை வைத்து, தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால், முடி ஆரோக்கியம்  பெரும்.

வெந்தயம் சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, 40  நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டூம். இதை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் முடி கொட்டுதல் குறையும்.  மசாஜ் முடியை குளிர்ந்த நீரில் அலசி, தலை முடியையும், ஸ்கால்ப்பையும் கைகளால் நன்கு கோதி விட்டு மசாஜ் செய்ய வேண்டும். இது தலையில் இரத்த  ஓட்டத்தை தூண்டி முடி கொட்டுவதை தடுக்கும்.

வெங்காயம் தலையில் வழுக்கை விழுவதை தடுக்க, பச்சை வெங்காயம் ஒன்றை எடுத்துக் கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை  தேய்த்து, பின்னர் அங்கே தேனை தடவினால், முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.

இயற்கை ஷாம்பு 5 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தேய்த்து, ஊற  வைத்து, நீரில் அலசினால், முடி கழிதல் நின்று, நன்கு ஆரோக்கியமாக வளரும்.

தேங்காய் எண்ணெய் ஒரு கப் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, காய வைத்த நெல்லிக்கனியை அதில் போட்டு, கொதிக்க விட்டு வடிகட்டி, அதனை ஒரு  பாட்டிலில் ஊற்றி, தினமும் தலையிலும், தலை முடியிலும் நன்கு மசாஜ் செய்தால், முடி கொட்டுதலின் அளவு கண்டிப்பாக குறையும்.

நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு நெல்லிச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால்,  முடி உதிர்வை குறைக்கலாம்.

கொத்தமல்லியை வாங்கி, அதை நன்றாக அரைத்து 1 கப் அளவு சாறு எடுத்து, முடியை நன்கு அலசுங்கள். அதுவும் ஒரு தீர்வே. தேங்காய் பால் தலையை  தேங்காய் பாலால் அலசுவதும் கூட முடி உதிர்தலை உடனடியாக தடுக்கும்.

இந்த காலத்து பெண்கள் அதிகமாக செலவு செய்வது ஷாப்பிங் தான். தலை சீப்பு முதல் வைர நெக்லஸ் வரை ஷாப்பிங்கில் செலவிடுவார்கள் பெண்கள்.

பெண்கள் ஷாப்பிங் போனால் பயந்து அலறும் ஆண்கள்தான் அதிகம். காரணம், பெண்கள் ஷாப்பிங்கின்போது எடுத்துக் கொள்ளும் நேரம்.

இதுபோல இருக்கும் பெண்களின் ஷாப்பிங் ஆசையை ஆண்கள் கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

மாத சம்பளம் வாங்கியவுடன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டும் பணத்தை எடுத்து வைத்துக் கொண்டு, மிச்சமாக இருக்கும் பணத்தை வங்கி சேமிப்பு கணக்கில் போட்டுவிட்டால் பெண்களின் ஷாப்பிங் ஆசைக்கு முற்று புள்ளியாக இருக்கும்.

ஷாப்பிங் செய்வதற்கு முன் பெண்களிடம் என்ன வாங்க போகிறோம் என்ற லிஸ்டை எடுத்து அதற்கு ஏற்ற பணத்தை மட்டும் எடுத்து செல்லுங்கள். இதை பெண்களிடம் பொருமையாக சொல்லுங்கள்.

மனதை ரிலாக்ஸாக வைத்து கொண்டு ஷாப்பிங் செல்லுவது நல்லது. பரபரப்பாக சென்று பொருட்களை வாங்கும் போது செலவிடும் நேரமும், தேர்வு செய்யும் பொருளும் சரியாக அமையாது. பொருமையுடம் நிதானமாக செல்லுங்கள்.

ஷாப்பிங் செய்வது ஒரு குறிப்பிட்ட உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் மற்றும் உங்களை பற்றி முழுதும் அறிந்தவர்களுடன் செல்லுங்கள். விருப்பத்துக்கு மாறான ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்க நிர்பந்திக்கும் நிலை வரும்.

விலை குறைவாக இருக்கிற மற்றும் வழக்கமாகச் செல்லும் கடைகளுக்கு மட்டும் செல்லுங்கள். அங்குதான் உங்களுக்கு பிடித்தமான பொருட்கள் இருக்கும்.

தேவையற்ற ஒரு பொருள் உங்களுக்கு வேண்டாம் என்பதில் உறுதியாக இருங்கள். பட்டியலிட்டதற்கு மேல் ஒரு பொருளையும் வாங்காதீர்கள்.

பணம் மட்டும் அல்ல ஷாப்பிங் செல்லும்போது தேவையின்றி நேரம் வீணாவதைத் தடுப்பதும் டென்ஷனைக் குறைக்கும்.

ஷாப்பிங் செல்லுவதற்கு முன் பெண்களை சாப்பிட வைத்து கூட்டிச் செல்லுங்கள். இதனால் ஷாப்பிங் முடித்துவிட்டு ஹோட்டலுக்கு கூப்பிடுவார்கள்.

பெரும்பாலும் பில் கட்ட கையில் பணத்தை வைத்திருங்கள். கார்டை பயன்படுத்துவதை தவிருங்கள். பணப்பரிவர்த்தனை செய்யும் போது பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது சலுகைகள் வரும் நேரமாகப் பார்த்து பொருட்களை வாங்குங்கள்

காதல் என்பது எப்போது எந்த நேரத்தில் வரும் என்பதே நம் யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் தான்.. ஆனால் ஜோதிடத்தின் பார்வையில் இருந்து பார்க்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட இரண்டு ராசிக்காரர்கள், காதலித்தால் அந்த காதலில் பல பிரச்சனைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இது உண்மை தானா என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது, இந்த இணை ராசிக்காரர்களுக்கு இடையில் காதல் அந்த அளவுக்கு மலர்வதில்லை என்று கூறப்படுகிறது. எனவே முன்னேச்சரிக்கையாக நமது எதிர் ராசிக்காரர்களுடன் காதல் ஆசையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது..
ஜோதிட ரீதியாக பார்க்கும் பொழுது, இந்த இந்த ராசிக்காரர்களுக்கு இடையில் காதல் மலர்வது என்பது சிரமமான ஒன்று.. அப்படியே காதல் மலர்ந்தாலும் கூட அதில் பல பிரச்சனைகள் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகின்றது.. அந்த வகையில் இந்த பகுதியில் எந்த 8 ராசிக்காரர்களுக்கு இந்த ராசிக்காரர்களுடன் காதல் வாழ்க்கை சிறப்பாக அமையாது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

1.துலாம் மற்றும் மீனம்
துலாம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு இடையே காதல் மலர்வது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக கருதப்படுகிறது.. இந்த இரண்டு ராசிக்காரர்களும் காந்தங்களை போன்றவர்கள் என்றே கூறலாம்.. இவர்கள் இருவரும் நேர் எதிரான சிந்தனைகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.. ஆனால் காதல் வாழ்க்கை என்பது நீண்ட கால பயணம் ஆகும். எதிலும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் துலாம் ராசிக்காரர்களின் குணமானது கனவை நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மீன ராசிக்காரர்களுக்கு ஒத்துப் போகாது. இரண்டு வெவ்வேறு அளவுகளில் உள்ள சக்கரங்களை கொண்டு வாழ்க்கை பாதையில் கண்டிப்பாக சிறப்பாக பயணிக்கவே முடியாது என்பது தான் உண்மையான ஒன்றாகும்.

துலாம் ராசிக்காரர்களின் குணம்
துலாம் ராசிக்காரர்களுடைய குணம் என்னவென்றால், எந்த ஒரு விஷயத்தையும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வருமா வராதா என்று யோசித்து முடிவு செய்ய கூடியவர்கள்.. பிராக்டிக்கலாக இருப்பவர்கள், இவர்களுக்கு ஒவ்வொரு விஷயமும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

மீன ராசிக்காரர்களின் குணம்
மீன ராசிக்காரர்கள் மெல்லிய மணம் கொண்டவர்கள், வாழ்க்கையின் பாதைக்கு ஏற்றவாறு செல்ல கூடியவர்கள். சிறு சொல்லை கூட தாங்கிக் கொள்ள முடியத இளகிய மனம் கொண்வர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு காதல் கைகூடுமா?
துலாம் மற்றும் மீனம் ஆகிய இரண்டு ராசிக்காரர்களும் காதலில் சிறப்பாக செயல்பட முடியாது.. இவர்கள் இருவரும் இரு வேறு துருவங்களாக இருக்கிறார்கள். ஆனால் நட்பு ரீதியாக பார்க்கும் பொழுது இவர்கள் மிக சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மீன ராசிக்காரர்கள் இளகிய மனம் படைத்தவர்கள்.. இவர்களால் துலாம் ராசிக்காரர்களுக்கு ஈடு கொடுக்க முடியாது.

2.மேஷம் மற்றும் விருச்சிகம்
கண்டிப்பாக மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் காதலில் சிறப்பாக செயல்பட முடியாது என்று ஜோதிடம் கூறுகிறது. இவர்களது காதல் மற்றும் திருமண வாழ்க்கையானது அந்த அளவுக்கு சிறப்பானதாக இருக்க வாய்ப்பு இல்லை..

ஆதிக்கம்
மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் இருவருமே மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இரண்டு ராசிக்காரர்களும் தனிப்பட்ட முறையில் காணும் போது மிக சிறந்த சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

3.கடகம் மற்றும் மிதுனம்
கடகம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் இருவருமே கிட்டதட்ட ஒரே மாதிரியான குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இவரும் ஒரே நேரத்தில் சோகமாகிவிடுவது, கோபமடைந்து விடுவார்கள். அதே போல இருவரும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் மாறிவிடுவார்கள்…

பிரிவு
காதல் அல்லது இல்லற வாழ்க்கையில் எப்போதுமே ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக அவரை சமாதானம் செய்து வைக்கும் நோக்கில் இருந்தால் தான் பிரச்சனை பெரியதாகாமல் இருக்கும். அல்லது ஒருவர் சோகமாக இருக்கும் போது மற்றொருவர் ஆறுதல் சொல்லும் விதமாக இருப்பது அவசியமாகும். ஆனால் இவர்களுக்கு இடையில் இது இல்லை..

4.சிம்மம் மற்றும் ரிஷபம்
பொதுவாக இரண்டு ராசிகளுக்கு இடையில் காதலில் ஏதேனும் ஒரு சில பகுதிகளாகவது சிறப்பாக அமையும் என்று கூறலாம்.. ஆனால் இந்த இரண்டு ராசிகளுமே சுத்தமாக பொருந்தாத இராசிகளாக உள்ளன. இந்த இரண்டு ராசிக்காரர்களுக்குமே மற்றவர்களை தங்களுக்கு கீழ் அடிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

பிரச்சனை
பொதுவாக முதலிடம் என்பது யாராவது ஒருவருக்கு மட்டுமே கிடைக்க கூடியதாக இருக்கும்.. இது தான் இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் இடையில் ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக அமையும். பொதுவாக காதல் மற்றும் திருமண வாழ்க்கை என்பது வாழ்வில் பெரும்பகுதியினை உள்ளடக்கியது. இதில் ஒருவரிடம் ஒருவர் தோற்றுக் கொண்டே இருப்பது என்பது இந்த இரண்டு ராசிக்காரர்களாலும் சகித்துக் கொள்ள இயலாத ஒரு விஷயமாக அமையும்.


5.தனுசு மற்றும் மகரம்
தனுசு மற்றும் மகரம் இரண்டு ராசிக்காரர்களுக்கும் இடையில் பல்வேறு வித்தியாசங்கள் இருக்க தான் செய்கின்றன. தனுசு ராசிக்காரர்கள் மாறுதல்களை விரும்புபவர்களாகவும், அனைத்து விஷயங்களிலும் நேர்மறையான சிந்தனை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்..

ஈர்ப்பு நீடிக்காது!
எப்போதுமே இரு வேறுபட்ட சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளை கொண்ட இருவர் காதலில் அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள் என்ற ஒரு கருத்து உள்ளது. தனுசு மற்றும் மகர ராசிக்காரர்களு இடையேயும் ஆரம்பத்தில் அதிக ஈர்ப்பு இருக்கும். ஆனால் இந்த ஈர்ப்பும் காதலும் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்பது தான் நடைமுறை…


6.கும்பம் மற்றும் விருச்சிகம்
கும்பம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் இருவருமே பிடிவாத குணம் மற்றும் தன்னிச்சையாக வாழ வேண்டும், சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.. மேலும், கும்ப ராசிக்கார்கள் எப்போதுமே விருச்சிக ராசிக்காரர்களின் குறைகளை தான் பார்க்கிறார்கள் என்று ஜோதிடம் கூறுகின்றது..

ஈர்ப்பு
கும்பம் மற்றும் விருச்சிக ராசிகாரர்கள் இருவரும் ஆரம்பத்தில் தங்களது அறிவார்ந்த உரையாடல்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.. ஆனால் இந்த ஈர்ப்பானது நீண்ட நாட்களுக்கு நிலையாக இருக்காது..

வேறுபாடு
கும்ப ராசிக்காரர்கள் அனைவரிடமும் மனிதாபிமான முறையில் நடந்து கொள்வார்கள். அனைவரிடமும் கருணையுடன் இருப்பார்கள். அனைவரையும் நேசிப்பார்கள்.. சுதந்திரமான வாழ்க்கையை எதிர்பார்ப்பார்கள்.. ஆனால் விருச்சிக ராசிக்காரர்கள், ஒரு குறிப்பிட்ட சில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மீது மட்டும் அன்பு செலுத்த கூடியவர்களாக இருப்பார்கள். பிரிவு எப்படி உண்டாகும்? காலங்கள் செல்ல செல்ல, விருச்சிக ராசிக்காரர்கள், கும்ப ராசிக்காரர்கள் தங்களை அதிகமாக காதலிக்கவில்லை என்று நினைப்பார்கள்..

கும்ப ராசிக்காரர்கள்
அனைவரையும் நேசிக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருப்பதால், தன் மீது காதல் என்று பொசசீவ் ஆக மாறிவிடுவார்கள் விருச்சிக ராசிக்காரர்கள்.. இது கும்ப ராசிக்காரர்களின் மனநிலையை பாதிப்படைய செய்வதாக இருக்கும்.


7.துலாம் மற்றும் கடகம்
முதலில் துலாம் மற்றும் கடக ராசிக்காரர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் ஏற்ற துணையை போல தான் தோன்றுவார்கள். ஏனெனில் இவர்கள் இருவரும் வேண்டுவது அமைதி, சமநிலை மற்றும் ஒற்றுமையாகும். சற்று கூச்ச சுபாவம் உள்ள இந்த கடக ராசிக்காரர்கள் மீது துலாம் ராசிக்காரர்கள் அக்கறையற்ற மனநிலையுடன் நடந்து கொள்வார்கள்..

பிரிவு எப்படி உண்டாகும்?
நீண்ட கால வாழ்க்கை என்று வரும் பொழுது, கடக ராசிக்காரர்கள், சின்ன சின்ன தீண்டல்கள் மற்றும் அன்பு, அரவணைப்பு போன்றவை தன் துணையிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.. ஆனால் துலாம் ராசிக்காரர்கள் அறிவு சார்ந்த விஷயங்களுக்கு தங்களது துணையுடைய துணையை எதிர்பார்ப்பார்கள்..

8.மீனம் மற்றும் மிதுனம்
மீனம் மற்றும் மிதுன ராசியை உடைய ஜோடிகள் மிகச்சிறந்த ஜோடிகளாக இருப்பார்கள்.. இவர்கள் ஒரே மாதிரியான குணாதியங்களை அதிகமாக கொண்டிருப்பார்கள்.. இவர்கள் இருவருமே மெல்லிய மனம் படைத்தவர்களாக இருப்பார்கள்.. விளையாட்டுத்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் பொருந்த கூடிய விஷயம் என்றால் இவை இரண்டு மட்டும் தான் என்று கூறலாம்.

சந்தேகம்
இவர்கள் இருவருக்கும் இடையில் சந்தேக எண்ணம் என்பது அதிகமாக உண்டாகலாம். எனவே இவர்கள் இருவருக்கும் இடையில் அதிகமாக சண்டைகள் உண்டாகும். இது காதல் பிரிவிற்கு காரணமாக அமையும்.. அல்லது மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை கொடுப்பதாக இருக்கும்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.