தாயின் கருவில் இருக்கும் குழந்தை செய்யும் விசித்திர சேட்டைகள்..!!!

தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிசு, எப்பொழுதும் தூங்கிக் கொண்டிருக்கும் என்று எண்ணினால், நம்மைப் போல் முட்டாள் எவருமிலர். ஒரு முழு மனிதன் செய்யும் அனைத்து செயல்களையும், தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் சிசு செய்கிறது. சிசு செய்யும் சேட்டைகளைக் காண்போம் வாருங்கள்..!!!

அழுகை
கருவில் இருக்கும் சிசுவை அல்ட்ராசவுண்ட் கருவி மூலம் ஆய்வு செய்த போது, வியக்க வைக்கும் வகையில், சிசு கருவறையில் அழுவது கண்டறியப்பட்டது.
பிணைப்பு

இரட்டையர்களுக்கு மத்தியில் இருக்கும் பிணைப்பு கருவறையிலேயே துவங்கிவிடுகிறது; மேலும், இரட்டையர்கள் கடைசி பத்து வாரங்களின் போது அம்மா பேசுவதை துடிப்போடு கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

விக்கல்
முதல் மூன்று மாதத்தின் போதே சிசுவிற்கு விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடுமாம். இதை கர்ப்பிணிகள் நன்கு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தால், சிறய அளவிலான நகர்தல் ஏற்படுவதை உணர முடியும்.

புன்னகை
26வது வாரத்தில் இருந்து குழந்தை இயல்பான உணர்வுகளோடு நடந்து கொள்ள ஆரம்பிக்கும்; இந்த காலக்கட்டத்தில் தான் கருவறையில் இருக்கும் சிசு முதன் முதலில் சிரிக்க ஆரம்பிக்கும்.

கொட்டாவி

குழந்தைகள் கொட்டாவி விட்டாலே, அழகாக இருக்கும். கருவில் இருக்கும் சிசுவும், அழகாக கொட்டாவி விடும்.

சிறுநீர்
முதல் மூன்று மாதங்கள் முடியும் போது சிசுவின் உடலில் சிறுநீர் உற்பத்தி ஆரம்பிக்கும்; கருவறையிலேயே சிசு சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்.

கண்கள் திறப்பது
28வது வாரத்தின் போது குழந்தை முதன் முதலில் கண்களை திறக்கும்; கர்ப்பிணி பெண்களின் வயிறு மிகுந்த வெளிச்சத்தில் வெளிப்படும் போது கருவறையில் இருக்கும் சிசு கண்களை திறக்குமாம். ஆனால், மிக சிறிய நேர அளவில் தான், சிசு கண்களை திறந்திருக்கும்.

ருசி
கர்ப்பிணி பெண் எந்த உணவை உண்டாலும், அந்த ருசியை அம்னியோடிக் அமிலத்தின் மூலமாக சிசுவும் ருசியை அறியும்; 15வது வாரத்தில் இருந்து சிசு இனிப்பை ரசித்து ருசிக்க ஆரம்பிக்கிறது, இதனால் நிறைய இனிப்பு திரவங்களை விழுங்குகிறது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.