பாலடைந்த வசிப்பிட அடுக்கு மாடியொன்றை அகற்றுவதற்கு அதன் உரிமையாளர் முடிவெடுத்துக்கொண்டார். 1970 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்த அடுக்கு மாடிக்கட்டிடத்தில் எவரும் தங்கியதில்லை. எனினும், ஒரு வீடு மட்டும் உரிமையாளார் பற்றிய தகவல்கள் இல்லாமல் திறக்க முடியாது இருந்தது. உரிமையாளர் பொலிஸாரை தொடர்பு கொண்டார். உரிமையாளர் கேட்டுக்கொண்டதன் பெயரில் பொலிஸார் வீட்டுக்கதைவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்.
அவர்கள் அங்கு கண்ட காட்சி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆம், அங்கு எலும்புக்கூடாகிப்போன ஒரு சடலம் தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னே இருந்த கதிரையில் அமர்ந்திருந்தது! அச்சடலத்தின் அருகே இருந்த மேசை மீது என்றோ போடப்பட்ட கோப்பியும் இருந்தது.
பின்னர் பெறப்பட்ட தகவல்களின் படி,
1924 ல் பிறந்த ஹெவிகா கொலிக் (Hedviga Golik) என்ற காணமல் போனதாக அறியப்பட்ட நபரின் சடலமே அது என இனங்கானப்பட்டது. 1966 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்தப்பெண்ணையாரும் கண்டிருக்கவில்லை. அவரது அயலவர்கள் அந்தப்பெண் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக நினைத்துக்கொண்டார்கள். காலப்போக்கில் அனைவரும் அந்த அடுக்குமாடியைவிட்டு வெளியேறி விட்டார்கள்.
கோப்புயுடன் தனது கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னர் அமர்ந்து, ஏதோ ஒரு காரணத்தினால் இறந்துபோன் அந்தப்பெண்ணை எவரும் தேடவில்லை. சுமார் 42 வருடங்களுக்குப்பின்னர், எதேச்சையாக பொலிஸாரால் அவரது உடல் கண்டறியப்பட்டது!