Latest Post

சிலர் எந்த புகைப்படங்களை பேஸ் புக்கில் போடுவது என்று தெரியாமல் போட்டு பெரும் சிக்கலில் சிக்கிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் தன்னிடம் உள்ள பணத்தை காட்டிக் கொண்டு செல்பி எடுத்து. அதனை அப்படியே பேஸ் புக்கில் போட்ட மொகமெட் என்னும் 20 வயது இளைஞர் ஒருவர் பொலிசாரிடம் சிக்கிக்கொண்டார்.

குறித்த இளைஞர் தனது புகைப்படத்தை பேஸ் புக்கில் போட்ட பிற்பாடு. அவர் கஞ்சா கடத்துவதாகவும். இதனூடாகவே அவர் பெரும் பணம் சம்பாதிப்பதாகவும் பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. முதலில் பொலிசார் அவரைப் பற்றி ரகசிய விசாரணை செய்ததில் அவர் வேலை எதுவும் செய்வதில்லை என்பது தெரியவர. அவ்வாறாயின் கையில் எவ்வாறு இவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்ற சந்தேகம் எழுந்தது.

இதனை அடுத்து பொலிசார் மேலும் துருவி விசாரிக்கவே, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. பொலிசார் அலேக்காக சென்று அவரை கைதுசெய்து வீட்டை சோதித்த வேளை. பல ஆயிரம் பவுண்டுகள் கைப்பற்றப்பட்டதோடு, போதைப் பொருள்களும் அங்கே இருந்துள்ளது. ஏன் இந்த வேலை காசை உழைத்தோமா எங்கேயாவது சென்றோமா என்று இருக்காமல் பேஸ் புக்கில் போஸ்ட் போட்டு தற்போது மாமியார் வீட்டில் உள்ளார் இவர்.

PeTA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.

(எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி... அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.

அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

அதிர்ச்சி அடைய வேண்டாம்... 35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் !!!

இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...

நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்! கொம்பைப் பிடிக்கிறாய்! கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!

அதனால் நீ மாட்டை மிருகவதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!

'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்!!

பீட்டா - மிருகவதை வியாபாரம் 
------------------------------------

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?

அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா? இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!

அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.

எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை. சரி.

அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.

நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.

போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை!

சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?

நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.

பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.

நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.

காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.

இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.

பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம்.

தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே?

மூன்றரை இலட்சம் கோடிகள்! சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?

இருக்கிறது, கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.

அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.

இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை.

சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும். ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.

வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!

எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.

உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.

அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.

அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள் !

அமெரிக்க நாட்டில் 13 வயது மாணவனுடன் உறவுக்கொண்டு கர்ப்பிணியான ஆசிரியை ஒருவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த Alexandria Vera(25) என்ற இளம்பெண் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதே பள்ளியில் 13 வயது மாணவன் ஒருவன் பயின்று வந்துள்ளார்.

இந்த நிலையில், மாணவனுக்கும் ஆசிரியைக்கும் இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதில், இருவரும் அடிக்கடி காரில் வெளியே சுற்றியுள்ளனர்.

மேலும், மாணவனின் வீட்டிற்கு சென்ற ஆசிரியை அவனுடன் உடலுறவில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து 9 மாதங்கள் இருவரும் உடலுறவில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.இதனால் ஆசிரியை கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

கர்ப்பம் அடைந்ததை ஒப்புக்கொண்ட ஆசிரியை ‘தாங்கள் இருவரும் மனதார காதலிக்கிறோம்’என கூறினார். ஆனால், வயது குறைவான சிறுவனுடன் ஆசிரியை உடலுறவில் ஈடுப்பட்டது சட்டப்படி குற்றம் என்பதால், கருவை கலைத்துள்ள ஆசிரியை நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும், ஆசிரியை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

50 பிரபலங்கள் மரணம் அடைவார்கள் என அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 2017 ஆம் ஆண்டு பிரித்தானிய மகாராணி உட்பட 50 பிரபலமானவர்கள் மரணமடைவார்கள் என்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இணையதளமான Morbid website ஒன்று கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் ஒரு சோகமான ஆண்டாக இருக்கும் என்று கூறிப்பிட்டுள்ளது.

அடுத்து வரும் 12 மாதங்கள் முக்கிய பிரபலங்கள் சிலர் மரணமடைவார்கள் என்று கணித்து கூறியுள்ளது.

இதில், Bruce Forsyth (88) (பிரபல ஆங்கில தொலைக்காட்சி தொகுப்பாளர்),

Vera Lynn (99) (பிரபல பாடகி மற்றும் பாடல் ஆசிரியர்),

Elizabeth (90) (பிரித்தானிய மகாராணி),

Philip (95) (பிரித்தானிய இளவரசர்),

Dave Prowse (81), (பிரித்தானியாவின் பாடி பில்டர் மற்றும் நடிகர்)

Robert Mugabe(92) (ஜிம்பாப்வே ஜனாதிபதி),

Desmond Tutu (85) (தென் ஆப்பிரிக்காவின் சமூக உரிமை ஆர்வலர்),

Hugh Hefner (90) (அமெரிக்க முன்னாள் பத்திரிக்கையாளர்),

George Bush Snr (92) (அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி) ஆகியோரும் 2017 ஆம் ஆண்டு மரணம் அடைவார்கள் என்று கணித்துள்ளது.

இந்த பட்டியலில் பிரித்தானிய மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட நடிகர் Leslie Phillips (92), பிரித்தானியாவின் நகைச்சுவை எழுத்தாளர் Dennis Norden(94), மற்றொரு பிரித்தானியாவைச் சேர்ந்த நடிகரான Peter Sallis (95) உள்ளிட்டோரும் உள்ளனர்.

மேலும் இந்த இணையதளம் அவர்களில் உடல் நிலைகள் குறித்து தான் இந்த கணிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலனோர் 90 வயதுகளை அடைந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆண்டுதோறும் இதே போன்று முக்கியமாக உள்ள 50 பிரபலங்கள் இறப்பை கணித்து கூறும் என்றும் அதில் சில சரியாக நடந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த இணையதளம் கணித்தது போலவே 12 முக்கிய பிரபலங்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் Zsa Zsa Gabor (நடிகை மற்றும் சோசியலைட்), Liz Smith (பிரித்தானிய நடிகை) மற்றும் கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Fidel Castro உள்ளிட்டோர் இதில் அடங்குவர் எனவும் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் வாசிம் அகமது (36) என்ற நபர். இவர் தற்போது செய்திருக்கும் ஒரு விஷயம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பருவத்துக்கு வந்த தன் மகளை அண்டை வீட்டில் வசிக்கும் ரம்ஜான் என்னும் நபரிடம் நிரந்தரமாக கொடுத்த வாசிம், அதற்கு ஈடாக ரம்ஜானின் சகோதரி சைமாவை இரண்டாவது திருமணம் செய்ய அவரிடம் இருந்து நிரந்தரமாக வாங்கியுள்ளார்.

இது குறித்து பேசிய வாசிம், எங்கள் வீட்டு பெண்ணை மற்றவர்களுடன் மாற்றி கொள்ள எங்களுக்கு உரிமை உள்ளது. இதில் யாரும் தலையிட முடியாது என கூறியுள்ளார்.16 வயதுகுட்பட்ட பெண்ணை திருமணம் செய்வது அந்நாட்டில் சட்டபடி குற்றம் என்பதால் வாசிமை போலீஸார் கைது செய்தனர். ஆனால் தான் திருமணம் செய்ய போகும் சைமாவிற்கு 16 வயது ஆகிவிட்டது என அவர் நிரூபித்ததால் , அவர் விடுதலை செய்யப்பட்டார்.

வாசிம் அகமது மட்டும் இவ்வாறு செய்யவில்லை, பாகிஸ்தான் நாட்டில் பழமைவாதத்தை பின்பற்றும் பல கிராமங்களில், இது போன்ற விஷயங்களை பலர் இன்னும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் பெண்களை வசியப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக அவரது முன்னாள் காதலிகள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

 15 பெண்களை வசியப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பாதிரியார் மீது புகார்  இத்தாலியின் வெனிட்டோ பிராந்தியத்தில் உள்ள பதுவா நகரைச் சேர்ந்த ஆண்ட்ரியா கண்டின் (வயது 48) என்பவர் கத்தோலிக்க பாதிரியாராக பொறுப்பு வகித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் பாதிரியார் மீது, அவரது முன்னாள் காதலிகள் மூன்று பேர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினர். அதில், பாதிரியார் ரகசியமாக விபச்சார தொழில் மூலம் வருமானம் ஈட்டி வருவதாகவும்,


அவருக்கு நன்கு பழக்கமான 15 இளம்பெண்களை அத்தொழிலில் ஈடுப்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினர். இக்குற்றச்சாட்டை தொடர்ந்து பாதிரியாரின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, வீட்டிற்குள் எடுக்கப்பட்ட ஆபாசப்படக் காட்சிகள் அடங்கிய வீடியோ சி.டி.கள் மற்றும் ஆபாச புகைப்படங்களை கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து 49 வயதான பெண் ஒருவர் கூறுகையில், பாதிரியாருடன் எனக்கு ரகசிய தொடர்பு இருந்தது. ஆனால், அதற்கு பிறகு அவருக்கு எண்ணற்ற பெண்களுடன் தொடர்புள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ளார்.


 பாதிரியார் மீதான குற்றச்சாட்டு குறித்து நகர மேயரான பாலோ டொனின் என்பவர் கூறுகையில் பாதிரியார் செய்த குற்றங்களை மறைக்க பெரும் சதி நிகழ்ந்து வருகிறது. ஆனால், இவ்விவகாரம் தேசிய அளவில் பெரிதாகிவிட்டதால் அவர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது எனக் கூறியுள்ளார். பாதிரியார் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.