பிரான்ஸில் பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு: பலர் படுகாயம் :

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் மர்ம நபர் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்கு பிரான்ஸில் உள்ள Grasse நகரில் Alexis de Tocqueville என்ற பாடசாலை இயங்கி வருகிறது.

இந்த பாடசாலையில் சற்று முன்னர் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தை இருவர் இணைந்து செய்துள்ளதாகவும், அவர்களில் 17 வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திய இருவரும் தீவிரவாதிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் கைதாகியுள்ள மாணவனிடமிருந்து 2 துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், 2 கைக்குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த துப்பாக்கிச் சூட்டில் தலைமை ஆசிரியர் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் முயற்சியிலும் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.