* மனைவியை செல்லப் பெயர் வைத்து அழையுங்கள்.
* வேலையிலிருந்து திரும்பும்போது மலர்ந்த முகத்துடன் அவளை சந்தியுங்கள்.
* நேர்மறையான நல்ல வார்த்தைகளை உபயோகித்து பேசுங்கள்.
* மனைவி பேசும்போது காது கொடுத்து கேளுங்கள். அவள் சொல்வதில் தவறு இருந்தால் அமைதியான முறையில் எடுத்துச் சொல்லுங்கள் அல்லது குறிப்பால் உணர்த்துங்கள்.
* மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் இருவரும் ஆனந்தமாக கழித்த தருணங்களை அசைபோடுங்கள்.
* நகைச்சுவையுடன் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.
* வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள். அவள் கடினமான வேலைகளை செய்யும்போது நன்றி தெரிவியுங்கள்.
* குடும்ப விஷயங்களை மனைவியுடன் ஆலோசித்து முடிவெடுங்கள்.
* மனைவிக்கு சங்கடம் தரக்கூடிய இடத்திற்கு அழைத்துச் செல்லாதீர்கள்/போகச் சொல்லாதீர்கள்.
* குடும்பச் செலவுக்கு தேவையான பணத்தை கொடுங்கள்.
* நீங்கள் வெளியூர் சென்றிருக்கும்போது அடிக்கடி தொலைபேசியில் அன்புடன் பேசுங்கள்.
* சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மனைவிக்குப் பிடித்த பரிசுப் பொருட்களை வாங்கி கொடுங்கள்.
* மனைவியை ஒருபோதும் கை நீட்டி அடிக்காதீர்கள்.
* அவமரியாதையாக பேசாதீர்கள்.
* அவள் தவறு செய்யும் நேரங்களில் அவள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவங்களை நினைத்துப் பாருங்கள். அவளின் பிற நற்குணங்களை நினைத்துப் பாருங்கள்.
* மனைவி மீது கோபம் ஏற்பட்டால் கோபம் தணியும்வரை பேசாமல் பொறுமையாக இருங்கள்.
* மனைவியை தவிர பிற பெண்களை சிந்தையினாலும் தீண்டாதீர்கள்.
* மதுப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் குடும்ப நலனுக்காக அதை கைவிடுங்கள்.
* குழந்தைகளை வளர்ப்பதில் நீங்களும் அக்கறை காட்டுங்கள்.
* மனைவியின் பெற்றோர்களுக்கு மரியாதை அளியுங்கள்.