Latest Post

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்பின் முகத்திரையை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.

ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அவற்றின் நலன் கருதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாய் கிழிய கூறியது விலங்குகள் நல அமைப்பான பீட்டா.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீட்டா ஆண்டுதோறும் ஏகப்பட்ட விலங்குகளை கொன்று குவித்து வருகிறது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் காளைகளை காப்பதாகக் கூறி வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பீட்டா கொலை செய்துள்ள விலங்குகளின் விபரத்தை ட்விட்டரில் வெளியிட்டு அதன் முகத்திரையை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. இது தான் அரவிந்த் சாமி ட்விட்டரில் கூறியிருப்பது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்






தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தும் போராட்டம் உலகத் தமிழர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களால் பீட்டா தலைமையகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் அமைந்திருக்கும் பீட்டாவின் தலைமையகத்தை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் முற்றுகையிடுள்ளனர். அந்த அலுவலகம் முன்பு குவிந்த அமெரிக்காவின் பதினாறு மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்கள் கறுப்புக்கொடி காட்டி, பீட்டாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்








சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலபேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கூகுள் மேப்ஸ் சென்று பார்த்தால் மெரினாவில் குவிந்துள்ள போராட்டக்காரர்களின் வலிமையை படம் போட்டு காட்டுகிறது கூகுள் மேப்ஸ்!

2009-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் கிரவுட்சோர்சிங் என்று கூறப்படும் தொழில்நுட்பத்தின் மூலம், அதாவது மக்களிடமிருந்தே தகவலை பெற்று அதனை சீர் செய்து மக்களுக்கே திரும்பி அளிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது.

இதற்கு முதல் தேவை மக்களின் மொபைல் போனில் “லொக்கேஷன்” வசதி ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் எங்கு இருக்குறீர்கள், எந்த வேகத்தில் நகர்கிறீர்கள் என்பது குறித்த தகவல் கூகுளை சென்றடையும்.

அது மட்டுமின்றி ஒரே இடத்திலிருந்து பல வாகனங்களின் லொக்கேஷன் வந்து சேருமாயின் அந்த இடத்தில் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, என்ன வேகத்தில் நகர்கின்றன என்ற தகவல்களை கூகுள் எளிதாக பெறும்.

இங்கே கூகுள் நிறுவனம் செய்யும் வேலை என்னவென்றால், எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, எவ்வாறு நகர்கின்றன என்பதனை வைத்து போக்குவரத்து நெரிசலில்லை, சிறிய அளவு நெரிசல், மிக நெரிசல் என கணக்கிடுவது தான்.

இந்த முறையில் தான் கூகுள் மெரினாவின் கூட்டத்தையும் காட்டுகிறது. போராட்டத்தில் இருக்கும் நபர்களில் 90 சதவிகிதம் பேர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள். ஈஸியாக மக்கள் கூட்டத்தை காட்டுகிறது.

சென்னையின் மற்ற இடங்களின் டிராபிக்கையும் தற்போது பார்க்கலாம். ஆனால், போராட்டக்காரர்கள் அதிகம் குவிந்திருக்கும் மெரினா கடற்கரையை காட்டும் போது, சிவப்பு நிறத்தில் காட்டுகிறது கூகுள் வரைப்பட மேப்.

ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவனைக் கொன்று தின்ற 16 வயதுச் சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் தீபு குமார் (9) என்ற சிறுவன் கடந்த திங்களன்று காணாமல் போனான். மறு நாள் செவ்வாய்க்கிழமையன்று அவனது தலையற்ற உடல் ஒரு வெட்டவெளியில் வீசப்பட்டிருந்தது.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கெமரா ஒன்றில் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் சிறுவனுடன் தீபு குமார் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதன் அடிப்படையில் குறித்த சிறுவனை பொலிஸார் விசாரணை செய்தபோது அதிர்ச்சித் தகவல்கள் சில வெளியாகின.

சந்தேக நபர் அளித்த வாக்குமூலத்தில், திங்கட்கிழமை மதியம் சுமார் ஒன்றரை மணியளவில், பட்டம் விடும் நூலை தருவதாகக் கூறி தீபு குமாரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தீபுவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து குளியலறையில் வைத்து தலையை வெட்டியெடுத்தபின் உடலைக் கூறு போட்டதாகவும், தீபுவின் உடல் பாகங்களைக் கடித்துத் தின்றதாகவும், வழிந்த இரத்தத்தைக் குடித்ததாகவும் தெரிவித்துள்ளான்.

மேலும், தனது ஆசிரியர்கள் மேல் இருந்த வெறுப்பினால், தீபுவுன் இதயத்தை தான் கல்வி கற்றுவரும் பாடசாலையின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்து அந்தப் பாடசாலை வளவுக்குள் வீசியதாகவும் குறிப்பிட்டுள்ளான்.

சந்தேக நபருக்கு ஏற்கனவே இறைச்சியைப் பச்சையாக உண்ணும் வழக்கம் இருந்திருக்கிறது. கோழி இறைச்சியை பச்சையாகவே சாப்பிடுவதையும், எதுவும் கிடைக்காதபோது தனது கையையே கடித்துச் சாப்பிட முயன்றதையும் வாக்குமூலத்தில் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.

இதையடுத்து குறித்த சந்தேக நபர் மீது பொலிஸார் நரமாமிசத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, அவனை மனவள ஆலோசகரிடம் பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்துள்ளனர்.

கொல்கத்தாவில் பள்ளி மாணவன் ஒருவன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'குட் பாய்' என்று பதிவிட்ட பின் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பதினோராம் வகுப்புப் படித்து வரும் சம்ப்ரித் பானர்ஜி, கடந்த புதன்கிழமை இரவு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'குட் பாய்' என்று பதிவிட்டு, வீட்டில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மறுநாள் சம்ப்ரித்தை எழுப்ப வந்தபோது, அவர் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது. 


நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதால் கவலையில் இருந்த சம்ப்ரித் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சம்ப்ரித்தின் பெற்றோர்கள் அவரது படிப்பை கருத்தில் கொண்டு எப்போதும் கண்டிப்புடன் நடந்துக் கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர்.


இந்நிலையில், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சம்ப்ரித்தை வணிக ஆசிரியர் கொடுமைப்படுத்தி வந்ததாக ஆசிரியர் மீது அவரது தாயார் அபர்ணா குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



     
45-வது அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்க துணை அதிபராக மைக்கெல் பென்ஸ் பதவியேற்றார். வாஷிங்டன், கேபிடல் ஹில்லில் நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில் முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்சேல் ஆகியோரும் ஹிலாரி கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.














Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.