Latest Post

தூத்துக்குடியில்  திருச்செந்தூர் சாலை பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அப்துல் கபூர்(60). இவரது மனைவி சரோஜா(58). இவர்களது மகன்கள் சலீம் என்ற முகமது சலீம், புகாரி. இவர்கள் இருவரும் பிரபல ரவுடிகள்.

இவர்கள் மீது 2 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள், கஞ்சா விற்ற வழக்குகள் என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தூத்துக்குடி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.   கஞ்சா விற்பனை மற்றும் கொலை வழக்குகள் தொடர்பாக இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூட்டாளியான சபரிக்கும்  முன்விரோதம் இருந்துவந்தது.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் வீட்டின் உள்ளே  சலீமும், வெளியே புகாரியும் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ராஜபாண்டி நகரை சேர்ந்த சபரி என்ற செல்வகுமார் (43), பாலஆறுமுகம் (44) உள்ளிட்ட 5 பேர் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர்.

வெளியே படுத்திருந்த புகாரியை சரமாரியாக வெட்டி சாய்த்ததோடு உள்ளே சென்று சலீமையும்  வெட்டினர். அப்போது அவரும் பதிலுக்கு அரிவாளால் சபரி கும்பலை வெட்டினார். இதில் பாலஆறுமுகத்துக்கு வெட்டு விழுந்தது. ஆனாலும் புகாரி, சலீம் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  காயமடைந்த பாலஆறுமுகத்திடம் போலீசார் நடத்திய  விசாரணையில் சபரி மற்றும் சலீம், புகாரி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கூட்டாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும், தொழில் போட்டியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதும்  தெரியவந்தது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


பிரித்தானியாவில் நிலவிவரும் கடுமையான பனிமூட்டமான காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்துக்களில் பல்வேறு தடைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பிரித்தானியாவின் தென்பகுதி கடுமையான உறைபனிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் ஹீத்ரோ விமான நிலையத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், லண்டன் நகர விமான நிலையத்தில் 37 விமானங்களும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்துத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, லண்டன் முழுவதற்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த எச்சரிக்கையானது பிரித்தானியாவின் தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளிலும் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் கடுமையான உறை பனி மூட்டம் காரணமாக அடுத்த இரண்டு நாட்கள் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பனி மூட்டத்தின் தாக்கம் தொடர்ந்தும் இரண்டு நாட்களில் அதிக அளவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. வானிலை ஆய்வு நிலையத்தின் திடீர் எச்சரிக்கையால் பிரித்தானிய மக்களிடையே பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்





சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் 185 அணு குண்டுகள் ஒன்றாக வெடித்தால் எப்படி அதிருமோ, அவ்வாறு ரஷ்யாவின் மையப் பகுதி அதிர்ந்துள்ளது. காரணம் என்னவென்றால் பெரும் விண் கல் ஒன்று அன்று தான் பூமி மீது மோதி அது ரஷ்யாவில் இந்த இடத்தில் விழுந்துள்ளது. அருகில் இருந்த செடி கொடிகள் பல கருகி. அங்கே பெரும் நெருப்பு வலையம் உருவாகியது. ஆனால் இன்று விண் கல் விழுந்த அந்த பெரும் பரப்பு ஏரியாக மாறியுள்ளது.

அதாவது குறித்த பெரும் கல் அந்த இடத்தில் நிலத்தின் கீழ் புதையுண்டு உள்ளதால். நீர் மேலே தங்கி. அது ஒரு அழகான ஏரியாக மாறியுள்ளது. ஆனால் விடையம் தெரிந்த சிலர் அந்த ஏரிக்கு மேல் படகில் சென்று. கீழ் உள்ள கல்லை சிறிதாக நோண்டி அதில் உள்ள சிறு துகள்களை எடுத்துச் செல்வது வழக்கமாம். ஏன் எனில் அந்தக் கல், வேற்றுக் கிரக கல். அது பூமிக்கு சொந்தமானது அல்ல.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்




கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏ. நாகூரை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்அங்குள்ள நர்சிங் கல்லூரியில் 2- ஆண்டு படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கார்த்திக் (18). நர்சிங் மாணவிக்கும் கார்த்திக்கிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. அவர்கள் பல இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

அப்படி சென்றபோது எல்லையை மீறி இருவரும் உல்லாசம் இருந்தனர்.  உல்லாச காட்சிகளை மாணவிக்கு தெரியாமல் கார்த்திக் தனது செல்போனில் படம் பிடித்துக்கொண்டார். பின்னர் உல்லாசம் அனுபவித்த வீடியோ பதிவுகளை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார் அந்த காட்சியை பார்த்த நெகமத்தை சேர்ந்த வெள்ளச்சாமி என்பவரது மகன் கார்த்திக் (23) ஆபாச காட்சியை மாணவியிடம் காண்பித்து உல்லாசத்துக்கு வரவேண்டும் இல்லை என்றால் இந்த காட்சிகளை பரப்பி விடுவேன் என்று மிரட்டினார்.

அதிர்ச்சியில் உறைந்த மாணவி அவருக்கு பணிந்தார். அடுத்தபடியாக பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்த சபரீஸ்வரன் (20) என்பவர் அதே வீடியோ காட்சியை காண்பித்து மாணவியை கற்பழித்தார்.  இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள 3 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள். 
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


பெண் ஒருவரை இளைஞர் குழுவொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காட்சியை பேஸ்புக் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்த அதிர்ச்சி சம்பவம் சுவிடனில் பதிவாகியுள்ளது. சுவிடனின் தலை நகரான ஸ்டோக்ஹோம் நகரின் வடக்கு பகுதியில் உள்ள உப்சாலா பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்ததாவது,

பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் மூன்று இளைஞர்கள், ஒரு பெண்ணை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். குறித்த சம்பவம் சில மணி நேரங்கள் நீடித்த நிலையில் குறித்த சம்பவ நிகழ்ந்த பகுதியை பொலிஸார் இணங்கண்டுள்ளனர்.

இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை கடந்த வருடத்தில், பேஸ்புக் நேரடி ஒளிபரப்பு மூலம், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்தமை மற்றும் அமெரிக்காவில் வெள்ளை இன விசேட தேவையுடையவரை நான்கு கறுப்பினத்தவர்கள் கொடுமை படுத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


கனடா ரொரண்டோவில் 883,000 ஆயிரம் டாலர்களை ஆட்டையை போட்டு, தலைமறைவாகியுள்ள சாம்பசிவம் பாலமுருகானந்தம் என்னும் நபரை தான் தொடர்ந்தும் தேடிவருவதாக கனேடியப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அதி தீவிரமாக தேடுவேர் பட்டியலில் அவரை தாம் இணைத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

சாம்பசிவம் என்னும் இன் நபர் நூதனமான முறையில், 883,000 ஆயிரம் கனேடிய டாலர்களை தனது வங்கி அக்கவுண்டுக்கு மாற்றி. பின்னர் அதனை தங்கமாகவும், வெளிநாட்டு நாணயமாகவும் மாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளார். அவர் இன்னும் கனடாவில் தான் இருக்கிறாரா என்பது சந்தேகமே.

இருப்பினும் பிடியாணை பிறப்பித்து அவரை பொலிசார் தேடிவரும் நிலையில். இவர் தொடர்பான தகவலை தமக்கு தந்தால் 200,000 ஆயிரம் கனேடிய டாலர்களை தாம் பரிசாக தரவுள்ளதாக பொலிசார் தற்போது அறிவித்துள்ளார்கள்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.