Latest Post

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்னுவிற்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது.

ஒளி வடிவான இறைவனை தீபன் ஏற்றி வழிபடும் மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிராகாசிக்க செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையுல் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்,

கார்த்திகை மாத சிறப்பு:
கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்திம் பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமயலறை, துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும்:
கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம்.
பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.
சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.
தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும்.
திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலம் தீயவைகள் வீட்டில் அண்டாது.
மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.

விளக்கேற்றும் திசை:

  • கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி.
  • மேற்கு - கடன், தோஷம் நீங்கும்.
  • வடக்கு - திருமணத்தடை அகலும்.
  • தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)


எண்ணெயின் பலன்:
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.

  • நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்.
  • நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்.
  • தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்.
  • இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி.
  • விளக்கெண்ணெய் - புகழ் தரும்.

இன்றைய காலத்தில் பெண்களுக்கு தாடி வைத்திருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு, பல ஆண்களும் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெண்களைக் கவர வேண்டுமென்று தாடி வளர்க்க ஆரம்பிப்பவர்கள், இக்கட்டுரையை முதலில் படியுங்கள்.

தாடி வைக்கும் முன் ஒருவர் தங்களின் முக வடிவத்திற்கு எந்த ஸ்டைல் தாடி நன்றாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் மேற்கொண்டால், அவரது தோற்றம் இன்னும் சிறப்பாக காட்சியளிக்கும்.

ஆகவே ஆண்களே எந்த முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது . அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

கடன் தொல்லை நம்மை நிம்மதியாகவே இருக்கவிடாது. நாமும் எவ்வளவு தான் நெருக்கிப் பிடித்து சிக்கனமாக இருந்தாலும் கடன் தொல்லை நம்மை விட்டு விலகாமல் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும்.

இதற்கு நம்முடைய கிரகங்களும் கூட காரணமாக இருக்கும். அதனால் கடன் தொல்லை தீர நிறைய பரிகாரங்கள் உண்டு. ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பரிகாரங்கள் வேறுபடும்.

அப்படி எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்ய வேண்டும்?

மேஷம்
தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவுக்குக் கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.

ரிஷபம்
ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம்.

மிதுனம்
தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும்- கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்துக்கு முன் செய்து வரவும்.

கடகம்
ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும்-ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியைக் குரங்குகளுக்கு கொடுத்து வரவும்.

சிம்மம்
ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்.

கன்னி
சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம்.

தனுசு
வீடிழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.

மகரம்
சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்.

கும்பம்
வியாழன் மாலை 5-6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றோருக்கும் தானமாய் / பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் அடைபடும்.

மீனம்
தொழுநோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் கொடுத்து வர கடன்கள் வேகமாக அடையப ஆரம்பிக்கும்- குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்.

அழகைப் பராமரிப்பது அவ்வளவு சாதாரண விஷயமெல்லாம் கிடையாது. அதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டுமானால், அதற்கு நாம் நிச்சயம் மெனக்கெட வேண்டும். அழகும் இளமையும் மாறாமல் நீடித்திருப்பது மட்டும் எளிதாக வாய்த்துவிடுமா என்ன?

கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டும். சிரமத்தைப் பார்த்தால், வெளியில் பேரழகியாக உலா வர முடியுமா?

அப்படி உங்கள் சருமத்தை மிகவும் இளமையாக வைத்திருக்க வேண்டுமென்றால் என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?

வெந்தயம் உடல் சூட்டைத் தணிக்கும் மிகச்சிறந்த பொருள்.

வைட்டமின் பி3 மற்றும் நியாசின் ஆகியவை வெந்தயத்தில் நிரம்பியிருக்கின்றன.

அது சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்கிவிடும். ஒரு கைப்பிடியளவு வெந்தயத்தை 2 மணி நேரம் வரையிலும் ஊற வைத்து, நன்கு மை போல அரைத்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும். தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.

மத்திய கிழக்கு நாடுகளில் பெண்கள் உடல் எடையை அதிகரிப்பதற்காக சர்க்கரை, ஆலிவ் ஆயில் உடன் வெந்தயம் சேர்த்து சாப்பிடுவது அந்த காலத்தில் வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்த பொடி தயாரிப்பது அவ்வளவு பெரிய விஷயமெல்லாம் கிடையாது.

வெறும் வாணலியில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து பொடி செய்யவும். சிலருக்கு இது அதிக கசப்பாக இருப்பதுபோல் இருந்தால், வெந்தயத்துடன் சிறிது வேர்க்கடலை அல்லது பாதாம், வால்நட் ஏதாவது ஒன்றையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

தினமும் இரவு படுக்கைக்கு போகும்முன் மிதமான சூடுள்ள பாலில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து குடித்து வரலாம்.

இட்லி, தோசை மற்றும் சூடான சாதத்துடன் நெய் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தையோ அல்லது வெந்தயப் பொடியையோ காய்ச்சி கொடுத்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

மாதவிலக்கு காலத்தில் அதிகமான ரத்தப் போக்கையும் கட்டுப்படுத்தும்.

இரவில் ஊற வைத்து காலையில் அரைத்து முடியில் தடவி ரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கொட்டுவது, பொடுகு, அரிப்பு போன்ற பிரச்னைகள் தீரும்.

முடி அடர்த்தியாகவும் வளரும்.

வெந்தயத்தை பருக்கள் மீது தடவினால் முகப்பரு நீங்கும்.

இது எப்போதும் நம்மை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

ஒருவர் பாலியல் உணர்விலுள்ளார் என்பதை அறிய சில வழிமுறைகள்.

மக்கள் பொதுவாக பிறரிடமுள்ள பாலுறவு ஆர்வத்தை உடல்மொழியின் மூலம் வெளிப்படுத்துவார்கள், இருப்பினும் அதன் துல்லியமான வடிவம், அளவு ஆகியவை கலாச்சாரம், காலம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆர்வத்தை வெளிப்படுத்தும் சில அடையாளங்களில் மிதமிஞ்சிய உடல் அசைவுகள் மற்றும் இயக்கங்கள்,

எதிரொலித்தல் மற்றும் பிரதிபலித்தல், அறை முழுதும் அளக்கும் பார்வைகள், கால் மேல் கால் போடுதல், மூட்டுகளைக் குறித்தல், முடியைக் கோதுதல் அல்லது தொடுதல், தலை சாய்த்தல், இடுப்பை சுழற்றுதல், மணிக்கட்டைக் காண்பித்தல்,

ஆடை சரிசெய்தல், சிரித்தல் மற்றும் புன்னகைத்தல், பார்வைத் தொடர்பு, தொடுதல், விளையாட்டாக இருத்தல் மற்றும் நெருக்கமாக இருப்பது ஆகியவை அடங்கும்.

மனிதர்களும் பாலுறவு உணர்வு எழும்போது, கருவிழி விரிதல் போன்ற உடலியக்கவியல் ரீதியான செய்கைகளின் மூலம் அதை வெளிப்படுத்துகின்றனர்.
எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை எமக்கு வழங்குங்கள்.

எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை எமக்கு வழங்குங்கள்.

ஒவ்வொருவருக்கும் விரல்கள் வேறுபடும். அது வடிவம் மற்றும் நீளத்தில் மட்டுமின்றி, கைவிரல்களில் உள்ள மூன்று பகுதிகளிலும் வேறுபாடு இருக்கும்.

மேலும் சில மக்கள் சுண்டு விரல் ஒருவரது குணநலன் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாக நம்புகின்றனர். இப்போது சுண்டு விரலில் உள்ள மூன்று பகுதிகள் ஒருவரது குணநலன்களைப் பற்றி சொல்வது என்று பார்ப்போம். கீழே இருக்கும் படத்திருக்கும் கலரினை ஒப்பிட்டு பார்க்கவும்.

சிகப்பு: சுண்டு விரலின் மேல் பகுதி நீளமாக இருந்தால் அவர்கள் பல மொழிகளை அறிந்தவராக அனைவரையும் கவரக்கூடியவறாக இருப்பர். மேலும் இத்தகையவர்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது.

பச்சை: சுண்டு விரலின் இரண்டாம் பகுதி நீளமாக இருந்தால், அவர்களிடம் உதவும் மனப்பான்மை அதிகமாகவும், மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பர். மருத்துவர்கள், உடல்நல நிபுணர்கள் இந்த வகையினராக இருக்க வாய்ப்புள்ளது.

மஞ்சள்: சுண்டு விரலின் கடைசி பகுதி நீளமாக இருந்தால், நேர்மையானவர்களாக, எப்போதும் உண்மையையே பேசுபவர்களாக இருப்பர். மேலும் இவர்கள் நல்ல சொற்றொடர்பு உள்ளவர்களாக, சமூக திறமை கொண்டவர்களாக இருப்பர். அதுமட்டுமின்றி இத்தகையவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவர்.

சிகப்பு: இந்த வகை மக்கள், மற்றவர்கள் விரும்பத்தகாத வகையில் இருப்பர். மேலும் இவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.

பச்சை: சுண்டு விரலின் இரண்டாம் பகுதி குட்டையாக இருந்தால், பிடிவாத குணமிக்கவர்களாகவும், சிறிது சோம்பேறியாகவும் இருப்பர். மேலும் இந்த வகையினர் மற்றவர்களுக்காக தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

மஞ்சள்: சுண்டு விரலின் மூன்றாம் பகுதி குட்டையாக இருப்பின், அவர்கள் அப்பாவியாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பர். இந்த வகையைச் சேர்ந்தவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்கள் இவர்களை எளிதில் தன்வசப்படுத்திக் கொண்டு, வேலையை செய்து முடிப்பார்கள்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.