Latest Post

இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், கல்லூரி மாணவனை இழுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் நெல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் – நெல்லை மாவட்டம் பேட்டை செந்தமிழ் நகரை சேர்ந்த தம்பதியினரின் மகன், ஒரு நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. சிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டில் இருந்த படி அவர் தினமும் அவர் கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த திங்கட் கிழமையன்று கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவே இல்லை. நண்பர்கள், உறவினர்கள் என எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் பதட்டமடைந்த மாணவரின் பெற்றோர் நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவற்துறையினரின் விசாரணையில், பேட்டை, எம்.ஜி.டி நகரைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் அவர் சென்றுவிட்டார் என்பது தெரிய வந்தது.

அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 3 பேருடன் திருமணம் நடந்துள்ளது. ஒவ்வொருவரிடம் சில ஆண்டுகள் மட்டுமே குடும்பம் நடத்தும் அவர், அவ்வப்போது கணவரை மாற்றி வந்தார். அவருக்கு 2 குழந்தைகளும் இருக்கிறது.

தற்போது 4-வதாக பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவரின் பராமரிப்பில் அவர் இருந்து வந்துள்ளார்.

அந்த ஆணும் ஏற்கனவே திருமணமானவர். எனவே, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், அவருடன் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

அந்த நிலையில்தான், அந்த பெண், கல்லூரி மாணவரை தன்னுடைய வலையில் அவர் சிக்க வைத்துள்ளார்.

கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, அந்த பெண்ணின் விட்டிற்கு சென்று தங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார் அந்த மாணவர்.

தற்போது அந்த மாணவனை இழுத்துக் கொண்டு அந்த பெண் தலைமறைவாகி விட்டார்.

அவரின் 2 குழந்தைகளையும் அவருடனேயே அழைத்துச் சென்றுள்ளார்.

அடிக்கடி தங்கள் இருப்பிடத்தை அவர்கள் மாற்றிக் கொண்டே இருப்பதால் அவர்களை பிடிக்க காவற்துறையினர் போராடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நெல்லை பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வழிகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்தில், குழந்தையின் எடையானது 1.5 – 1.8 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறக்கும் போது, அதன் எடை ஆரோக்கியமான அளவில் இருக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் மருத்துவர் வயிற்றில் வளரும் குழந்தை எடை குறைவாக உள்ளதாக கூறினால், குழந்தையின் எடையை அதிகரிக்க கர்ப்பிணிகள் முயல வேண்டும்.

• கர்ப்பத்தின் கடைசி மூன்று மாத காலத்தில் தினமும் உட்கொள்ளும் கலோரிகளை விட கூடுதலாக 300 கலோரிகளை எடுக்க வேண்டும். அதற்கு பழங்கள், புரோட்டீன் உணவுகள், முழு தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை சற்று அதிகமாக சாப்பிட வேண்டும்.

• அன்-சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், தொப்புள் கொடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். ஆகவே ஆலிவ் ஆயில், நட்ஸ், அவகேடோ, விதைகள், சால்மன் மீன் போன்றவற்றை சற்று அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும்.

• மன அழுத்தம் அல்லது பதற்றத்துடன் இருந்தால், அது உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்து, குழந்தையின் எடையைப் பாதிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, யோகா, தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

• பொதுவாக மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். அந்த வைட்டமின் மாத்திரைகளை எடுத்து வருவதன் மூலம், குழந்தைக்கு கூடுதலாக சத்துக்கள் கிடைத்து, குழந்தையின் எடை ஆரோக்கியமாக இருக்கும்.

ஒருவரின் எதிர்காலம், அதிர்ஷ்டம் போன்றவை எப்படி இருக்கும் என்பதை பழங்காலத்தில் கைரேகைகளைக் கொண்டு ஜோதிடர்கள் கணித்து வந்தனர். கைரேகைகளானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். கையில் உள்ள 4 முக்கிய ரேகைகளைத் தவிர, சிலருக்கு நடுவிரல் மற்றும் மோதிர விரல்களுக்கு அடியில் வளைந்த நிலையில் ஒரு ரேகை செல்லும். இப்படி நடுவிரல் மற்றும் மோதிர விரல்களுக்கு அடியே வளைந்தவாறு செல்லும் ரேகை ஒரு வட்ட வளையத்தை உருவாக்கும்.

இது தான் சுக்கிர வளையம் அல்லது காதல் பெல்ட்.ஒருவேளை இந்த ரேகை இல்லாவிட்டால் கவலைப்பட வேண்டும். இது அனைவருக்குமே இருக்காது. மிகவும் சென்சிடிவ்வானவர்கள் மற்றும் காதல்பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு தான் இருக்கும். கையில் உள்ள முக்கிய ரேகைகளில் ஒன்று தான் இதய ரேகை. இந்த ரேகை சுண்டு விரலின் கீழே ஆரம்பமாகி நடுவிரல் அல்லது ஆள்காட்டிவிரலை நோக்கி சென்றவாறு இருக்கும். உங்களுக்கு படத்தில் காட்டப்பட்டவாறு, இதய ரேகை நடுவிரலின் மேலே ஏறுவது போன்று இருந்தால், நீங்கள் மிகவும் புத்திசாலி, லட்சியக்காரர் மற்றும் யாரையும் சார்ந்த வாழ விரும்பாதவர்களாக இருப்பர்.

ஆனால் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் சிறப்பானதாக இருக்கும் மற்றும் சுயநலவாதியாக இருப்பர். ஒருவேளை உங்கள் இதய ரேகை படத்தில் காட்டப்பட்டவாறு நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடையே சென்றால், கருணை உள்ளம் மற்றும் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பர்.

அதே சமயம் அதிக உணர்ச்சிவசப்படுவீர்கள். இதய ரேகை ஆள்காட்டி விரலின் மேலே ஏறினால், நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பர். முக்கியமாக இந்த வகையினர் எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும், மனம் தளராமல் எதிர்கொள்வர் மற்றும் எப்போதும் சந்தோஷமாக இருப்பர். இந்த வகையான இதய ரேகையைக் கொண்டவர்கள், பொறுமைசாலி, அக்கறையுள்ளவர்கள்,

அமைதியானவர்கள் மற்றும் அநியாயத்திற்கு நல்லவர்களாக இருப்பர். மொத்தத்தில் தன்னலமின்றி, பிறர் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பர். 

நாம் அனைவருமே அழகான பொலிவான முகத்தை பெற விரும்புவோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கி முகத்திற்கு பயன்படுத்தி வருகின்றோம். நம் முகத்தின் அழகை நிரந்தரமாக எப்போதும் பொலிவாக வைத்துக் கொள்வதற்கு நம் வீட்டிலேயே உள்ளது சிறந்த பொருட்கள்.

பப்பாளி: பப்பாளி இயற்கையாகவே சிறந்த மருத்துவக் குணம் கொண்ட ஒரு பழ வகையாகும். எனவே தேவையான அளவு பப்பாளி பழத்தை கூழ் போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் 1/2 டீஸ்பூன் சந்தனம், 4 துளி ரோஸ் வாட்டர், 1/4 டீஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல செய்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பேஸ்ட்டை நம் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 30 நிமிடம் கழித்து சூடான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் அகற்றப்பட்டு முகம் பொலிவாக இருக்கும்.

வாழைப்பழம்: வாழைப்பழம் நமது சருமத்தை மென்மையாக்கும் தன்மைக் கொண்டது. எனவே வாழப்பழத்தை அரைத்து, அதனுடன் 3/4 டீஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றைக் கலந்து நம் முகத்திற்கு பேஸ்பேக் போட்டு, 20 நிமிடம் கழித்து காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் நமது முகத்தின் கருமை நிறம் மாறி பிரகாசமாக இருக்கும்.

தக்காளி: தக்காளி நமது சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் சருமத்தை நீக்கும் தன்மைக் கொண்டது. எனவே தக்காளிச் சாறுடன், சிறிதளவு சர்க்கரையை கலந்து கொள்ள வேண்டும். பின் இதை நம்முடைய முகத்தில் தடவி, மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் நம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் எண்ணெய் சருமங்களை தடுத்து, பளபளப்பான சருமத்தின் அழககைத் தருகிறது.

தர்ப்பூசணி: தர்ப்பூசணி பழமானது, நமது சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குகள் ஆகியவற்றை நீக்கி சருமத்தைப் பொலிவுறச் செய்கிறது. 2 டேபிள்ஸ்பூன் தர்ப்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் சாறு எடுத்துக் கொண்டு அதனுடன் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் பால் பவுடரைக் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து நீரில் கழுவினால், முகம் பளபளப்பாக இருக்கும்.

ஆப்பிள்: ஆப்பிள் பழத்தினை தினமும் சாப்பிட்டு வந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆப்பிள் பழத்தை பேஸ்ட் செய்து, அதனுடன் 1 டேபிள்ஸ்பூன் தேன் கலந்து, அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, சூடான தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் பளபளப்பாக இருக்கும்.

வெள்ளரிக்காய்: 1 டேபிள்ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதை காட்டன் பஞ்சைக் கொண்டு முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, சூடான தண்ணீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.