Latest Post

புனேயில் மென்பொறியிலாளரொருவர் தனது மனைவியைக் கொன்று சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தவர் ராகேஷ் (வயது 34). அவரது மனைவி சோனாலி (வயது 28). இவர்களுக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணமானது.
இந்த தம்பதிக்கு பிள்ளைகள் இல்லை என்ற போதிலும் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், குடும்ப விவகாரங்களை சோனாலி தனது நண்பர்களுடன் சமூகவலைத்தளத்தினூடாக பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. இதனால், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்தே ராகேஷ் தன் மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதற்கேற்ப, தற்கொலைக்கு முன்னதாக மராத்தி மொழியில் ராகேஷ் எழுதியுள்ள கடிதத்தில் கொலைக்கு தானே காரணம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அமெரிக்காவில் 19 வயதான இளைஞனை கத்திமுனையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிச்சிகன் மாநிலத்தின் சஜினேவ் நகரில் இந்தப் பாலியல் வல்லுறவுச் சம்பவம் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெஸ்டினா மேரி ஸ்மித் எனும் 17 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவர், 19 வயதான இளைஞர் ஒருவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வைத்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட லெஸ்டினா மேரி ஸ்மித், சஜினேவ் கவுன்ரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  எதிர்வரும் 3 ஆம் திகதி அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.





 உலகில் லேசர் ஒளிக்கற்றை கண்டுபிடிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. ஆனால் அதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்த இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதேவேளை லேசரை ஆயுதமாக பயன்படுத்துவது தொடர்பான காட்சிகள் சினிமாவில் அதுவும் ,விண்வெளியில் கலத்தில் நடப்பது போல பல படங்கள் உள்ளது. ஆனால் அதனை நிஜமாக்கும் வகையில் தற்போது ரஷ்யா ஒரு ஆயுதத்தை தயாரித்துள்ளது என்கிறார்கள்.

லேசர் கதிரை ஆயுதமாகக் கொண்டுள்ள இந்த ஆயுதத்தை நகரும் ஜீப் வண்டி ஒன்றில் பொருத்தி உள்ளார்கள். இதனூடாக நகரக் கூடிய பொருட்களை கூட இந்த லேசர் ஆயுதம் தாக்க வல்லது என்று நிரூபித்து காட்டியுள்ளது ரஷ்யா . இதனை அவர்கள் பிளாஸ்மா லேசர் ஆயுதம் என்று கூறுகிறார்கள்.





ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற காரணத்தை கூறி, பீட்டா அமைப்பு 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு நீதிமன்றம் தடைவிதித்தது. எனவே, அந்த தடையை விலக்க வேண்டும் மற்றும் பீட்டா அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் எங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காளைகள் மனிதர்களிடம் பாசமாக பழக்கூடியவை என்பதை நிரூபிக்கும் வகையில், ஜல்லிக்கட்டு காளை ஒன்று,  ஒரு குழந்தையிடம் பாசமாக விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

நைஜீரிய விமானப் படை தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் அகதிகள் முகாமிலிருந்த 52 பேர் பலியாகினர். 120 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து மெடிசின்ஸ் சான்ஸ் மனித உரிமை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில், இஸ்லாமிய அமைப்பான போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரிய விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் அகதிகள் முகாமிலிருந்த 52 பேர் பலியாகினர். 120 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.

இந்த வான்வழித் தாக்குதலில் நைஜீரிய செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் பலியனாதாகவும், 13 பேர் காயமடைந்தாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் கிளர்ச்சியில் இதுவரை 15,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து போகோ ஹராம் இயக்கத்தினர் நைஜீரிய அரசுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை போகோ ஹராம் இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் ஷேக்கவ், சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், 'சமீபத்தில் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைப் படை தாக்குதலை எங்கள் இயக்கம்தான் நடத்தியது' என்றார். இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலில் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலிக்க வற்புறுத்தியோ அல்லது காதலில் ஏமாற்றப்பட்டதாலோ பெண்கள் மீது ஆண்கள் அமிலத்தை வீசும் செய்திகளைத்தான் இதுவரை கேட்டிருக்கிறோம். ஆனால், தன்னைக் காதலித்துவிட்டு ஏமாற்ற நினைத்த காதலன் மீது பெண் ஒருவர் அமிலத்தை வீசியெறிந்த சம்பவம் பெங்களூரில் இடம்பெற்றுள்ளது.

லிடியா ஃபிஸ்பா (26) என்ற இளம் பெண் தனியார் மருத்துவமனைத் தாதியாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், இவரது வீட்டுக்கு அருகாமையில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவருக்கும் இடையில் கடந்த 2011ஆம் ஆண்டு காதல் மலர்ந்திருக்கிறது.

எனினும், இவர்கள் இருவரும் வெவ்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பரஸ்பரம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. என்றபோதும், லிடியாவைத் தவிர வேறு பெண்ணைத் தான் திருமணம் முடிக்கப்போவதில்லை என ஜெயக்குமார் உறுதியளித்திருந்தார்.

இதனிடையே ஜெயக்குமார் கிறிஸ்தவராக மாறினால் அவரை ஏற்றுக்கொள்வதாக லிடியாவின் குடும்பத்தினர் கூறவே ஜெயக்குமாரை சமயம் மாறும்படி லிடியா வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், என்ன நடந்தாலும் லிடியாவைத் திருமணம் செய்துகொள்ளத் தயார் என்றும், அதற்காக சமயத்தை மாற்றிக்கொள்ள முடியாது என்று ஜெயக்குமார் கூறி வந்துள்ளார். இந்தப் பிரச்சினை இவர்களது காதல் முறிவுக்குக் காரணமாகிறது.

ஜெயக்குமாருக்கு வேறு இடத்தில் மணம் முடித்துவைக்க அவரது குடும்பத்தினர் முயற்சி செய்வதை அறிந்த லிடியா ஜெயக்குமாரைப் பழிவாங்க எண்ணினார். ஜெயக்குமார் ஒவ்வொரு திங்களன்றும் குறித்த ஒரு கோயிலுக்குச் செல்வதை அறிந்திருந்த லிடியா, தனது உறவினர் ஒருவருடன் குறித்த கோயிலுக்கு காரில் சென்று காத்திருந்தார்.

ஜெயக்குமார் தனது நண்பர் ஒருவருடன் கோயிலுக்கு வருவதைக் கண்ட லிடியா, திடீரென காரை விட்டிறங்கிச் சென்று ஜெயக்குமாரின் முகத்தில் அமிலத்தை வீசியெறிந்தார். மேலும், தன் வசமிருந்த சிறு கத்தியால் ஜெயக்குமாரின் இரண்டு பக்கக் கன்னங்களையும் வெட்டிக் கிழித்துவிட்டுத் தப்பிச் சென்றார்.

உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜெயக்குமாருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜெயக்குமாரின் முறைப்பாட்டின் பேரில் லிடியாவும் அவருக்கு உதவியாக இருந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.