இந்த காலத்து பெண்கள் வருங்கால கணவர்களிடம் எதிர்பார்க்கும் 10 விடயங்கள்..!

80-களில் தங்கள் எதிர்கால கணவன் மீது பெண்களுக்கான எதிர்பார்ப்பு என்பது அரசாங்க உத்தியோகம் என்பதாக தான் இருந்தது. நல்ல வேலை, நிலையான வாழ்க்கை. ஏனெனில், அந்த காலத்தில் பெரும்பாலும் பெற்றோர்களின் ஆதிக்கம் பெண் பிள்ளைகள் மீது அழுத்தம் கொண்டிருந்தது.

90-களில் தான் பெண்கள் வெளியுலகில் அதிகம் தங்களது காலடியை எடுத்து வைக்க ஆரம்பித்தனர். எனவே, தங்கள் கனவுகளுக்கு இடமும், மதிப்பும் தரும் ஆணாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.

2000-த்துக்கு பிறகு ஆண்களுக்கு நிகர் என்பதை காட்டிலும், ஆண்களுக்கு மேல் என பெண்கள் வளர தொடங்கிய பொற்காலமாக அவர்களுக்கு மாறியது. சமூக மாற்றம், குடும்ப பொறுப்பு என அவர்கள் வளர் தொடங்கினர்.

இன்றைய இளம் யுவதிகள் பல இடங்களில் ஆண்களுக்கு மேல் நாங்கள் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமநிலை காலத்தில் இவர்கள் தங்கள் வருங்கால கணவரிடம் என்ன எதிர்பார்ப்பு கொண்டிருக்கிறார்கள் என காணலாம்.

எதிர்பார்ப்பு 1

வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இது இன்றைய குடும்பங்களுக்கு அவசியமும் கூட. ஆனால், இந்த வேலைக்கு தான் போக வேண்டும், இந்த வேலைக்கு போக கூடாது என தடை கூற கூடாது.

எதிர்பார்ப்பு 2

இருவரும் அலுவலக வேலைக்கு சென்று வருவதால். வீட்டு வேலைகளில் சமப்பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

எதிர்பார்ப்பு 3

அலுவலக வேலை பளு, இல்லறத்தை நிலையாக அமைக்கும் வரையிலும் குழந்தைப் பெற்றுக் கொள்ள அவசரம் காட்டக் கூடாது.

எதிர்பார்ப்பு 4

திருமணமான பிறகு தனது சம்பளத்தை புகுந்த வீட்டிற்கு தான் தர வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது. எனவே, பிறந்த வீட்டிற்கு பணம் அனுப்ப தடை கூறக்கூடாது.

எதிர்பார்ப்பு 5

வேலை விஷயமாக நீங்கள் வெளியூர் சென்று வருவது போல, தானும் செல்ல வேண்டிய நிர்பந்தம் வரும் பொழுது வெளியூர் பயணங்களுக்கு நோ சொல்லக் கூடாது. நீங்கள் நண்பர்களுடன் சென்று வருவது போல, தாங்களும் தோழிகளுடன் வெளியிடங்களுக்கு சென்று வர நோ சொல்லக் கூடாது.

எதிர்பார்ப்பு 6

கணவனாக இருப்பதை காட்டிலும் நல்ல நண்பனை போல பழக வேண்டும் என்பது இக்காலத்து யுவதிகளின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில், தோழமை பண்பு தான் எளிதாக இருவரையும் புரிந்துக் கொள்ள உதவும் என இன்றைய இளைஞர்கள் எண்ணுகிறார்கள்.

எதிர்பார்ப்பு 7

கணவன் என்பதால் தன் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது. இருவரும் சமநிலை எனும் போது ஒருவர் மட்டும் மற்றொருவர் மீது ஆதிக்கம் செலுத்துவது எப்படி நியாயம் ஆகும். தவறு எனும் பட்சத்தில் யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கலாம்.

எதிர்பார்ப்பு 8

ஆண், பெண், கணவன், மனைவி என பாலின பேதமின்றி நல்லது யார் கூறினாலும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

எதிர்பார்ப்பு 9

இன்றைய பெண்கள் மத்தியில் குடி என்பது பெரிய தவறாக இல்லை. ஆனால், அளவாக இருக்க வேண்டும். குடித்துவிட்டு ரோட்டில் விழுந்துக்கிடந்தால், மறுநாள் கோர்ட் வாசலில் நிற்க வேண்டிய கட்டாயம் வரும்.

எதிர்பார்ப்பு 10

முன்பெல்லாம் பிக்னிக் என்பது ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை என்பது போல இருக்கும். வருடா வருடம் தேர்வு விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சென்று வருவோம். ஆனால், இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்வியலில், ரிலாக்ஸ் ஆக வேண்டும் என்று எண்ணம் பிறக்கும் போது எந்த மறுப்பும் இன்றி நீங்கள் பிக்னிக் சென்று வர வேண்டும்.

Tags

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.