உங்க எதிர்காலத்த பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க…

எதிர்காலத்தை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் ஜோதிடம் பார்ப்பது வழக்கம். நமது ஊர்களில் கைரேகை ஜோதிடம், கிளி ஜோதிடம், குறி சொல்லுதல் போன்றவை பிரபலம். சிலர் இதை மூட நம்பிக்கை என்று கூட கூறுவார்கள்.

உங்க ராசிக்கு எந்த தொழில் சிறப்பா அமையும்-னு உங்களுக்கு தெரியுமா? வளர்ந்து வரும் அறிவியல் விஞ்ஞான உலகத்தில் இதை எல்லாம் யாராவது நம்புவார்களா என பலர் கூறுவதுண்டு. ஆனால், இந்த ஜோதிடம், குறி சொல்லுதல் போன்றவை எல்லாம் நமது நாட்டில் மட்டும் பின்பற்றப்படும் ஒன்றல்ல.

உங்கள் செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி உங்கள் ராசி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசையா? சீனா, எகிப்து, ஐரோப்பிய, ஆப்ரிக்கா என பல உலக நாடுகளில் பண்டையக் காலத்தில் இருந்தே இவை பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முறையில் எதிர்காலத்தை பற்றி குறி சொல்லுவது நடைமுறையில் இருந்துள்ளன….

ஆரக்கிள்
ஆரக்கிள் பேசுவது கடவுளே நேரில் பேசுவது போன்றும், அவர் கூறும் வார்த்தைகள் கடவுளின் வாக்கு என்றும் கடைப்பிடிக்கப்பட்டது. நாம் கூட நமது ஊர்களில் இதை காண முடியும். ஆனால், இன்று நிறைய போலிகள் தான் இருக்கிறார்கள்.

சீட்டு
சீட்டுகளைக் கொண்டு குறிசொல்லும் கலை சீட்டு ஆட பயன்படும் சீட்டு கட்டு கார்டுகளை கொண்டு குறி சொல்லும் முறை ஆகும். 18, 19-ம் நூற்றாண்டுகளில் இது மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. ஆசியா, எகிப்து, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் இவை செயல்பாட்டில் இருந்தன.

ரூன்ஸ் (Runes)
ரூன்ஸ் என்பது பண்டையக் காலத்து ஜெர்மானிக் எழுத்து ஆகும், இதை எழுதவும், தெய்வ வாக்கு கூறவும், மந்திரஜாலம் செய்யவும் பயன்படுத்தி வந்தனர். ஏறத்தாழ 1500 வருடங்களுக்கு முன்னர் இது வடக்கு கோதியர்களால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து, ஸ்காண்டிநேவியா போன்ற பகுதிகளில் பின்னர் இந்த முறை தோன்ற ஆரம்பித்தது. ஒரு கிறிஸ்துவ புத்தகத்தில் இது பேகன் நடைமுறையில் இருந்து வந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.. ரூன் எனும் வார்த்தைக்கு இரகசியம், மர்மம் போன்ற அர்த்தங்கள் கூறப்படுகின்றன.
ஒருவர் தனது சூழ்நிலை பற்றி அறிந்துக் கொள்ள முனையும் போது ரூன்ஸ் படிக்கப்படுகிறது. சில சமயங்களில் இது தெளிவற்றும் இருக்கிறது என கூறுகிறார்கள்.

பகடை முறை
பகடை உருட்டி குறி சொல்லும் முறை இது. வரலாற்றில் மிகவும் பழமையான முறையில் இதுவும் ஒன்றாகும். பண்டைய கிரேக்க முறையில் குறி சொல்வதற்கு இந்த பகடை முறை பின்பற்றப்பட்டுள்ளது. ரோமர்கள் இதை தலி (Tali) என்று கூறிவந்துள்ளனர். நான்கு பகடைகளை ஒரே நேரத்தில் உருட்டி அதில் விழும் எண்களை வைத்து குறி கூறப்படுகிறது.
இதில் 1,3,4,6 என விழுந்தால் மிகவும் நல்லது என்றும், 1,1,1,1 என்று விழுவது மிகவும் மோசமானது என்றும் கூறப்படுகிறது. சில சமயங்களில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று என பகடைகளை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் மூன்று பகடைகள் உருட்டும் முறை பிரபலமாக.
எட்டு அங்குல சுற்றளவில் வரையப்பட்ட ஓர் வட்டத்திற்குள் தான் இந்த பகடைகள் உருட்டப்படுகின்றன. வட்டத்தை விட்டு வெளியே போகும் பகடைகள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டாது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.