எண் 7 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் ~ tamil Numerology


எண் 7 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - கேது (Dragon's Head) :
இப்போது இல்லற சந்நியாசிகளாக 7ம் எண்காரர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். சோதிட நூல்கள் எல்லாம் இந்தக் கேதுவைப் பற்றி மிகவும் பயமுறுத்துகின்றன. கேதுவைப் போல் கெடுப்பானில்லை! இராகுவைப் போல் கொடுப்பானில்லை என்று சோதிட சாத்திரங்கள் கூறுகின்றன. இவர் விஷ்வபாகு என்ற அரக்கனேயாவார். (புராண காலத்தில்) பல்வேறு காரணங்களினால் தேவர்கள் மிகவும் பலவீனமாகவும் சோர்ந்தும் இருந்தார்கள். அசுரர்களைவிட தேவர்கள் மிகவும் பலம் குன்றியிருந்தனர். அசுரர்களின் செல்வாக்கு அப்போது ஓங்கியிருந்தது! தங்களது பலவீனத்தை எப்படி போக்குவது என்ற சிந்தனையில் தேவர்கள் ஆழ்ந்தனர்.
மகா விஷ்ணுவின் ஆலோசனைப்படி தேவர்களும், அசுரர்களும் (இவர்கள் பாற்கடலைக் கடையச் சம்மதிக்க வைத்தது தனிக் கதை) ஒன்று சேர்ந்து, உலக நன்மைக்காகப் பாற்கடலை, மேருமலையை மத்தாகக் கொண்டு கடைந்தனர்.

பாற்கடலைக் கடையும்போது, திடீரென அதன் அச்சு சாய்ந்துவிட்டது! அதைச் சீர்ப்படுத்தவே தேவர்களின் பிராத்தனையின்படி திருமால் மச்ச அவதாரம் எடுத்து மேருமலையை நிமிர்த்திக் கொடுத்தார். தேவர்கள் மீண்டும் கடைவதற்கு உதவினார்.
பின்பு பாற்கடலில் இருந்த, முதன்முதலாகக் கொடிய விஷம் திரண்டு வந்தது! அதைப் பார்த்துப் பயந்து ஓடிய தேவர்கள், சிவபெருமானைச் சரணடைந்தனர். அவரும் அந்த ஆலகால நஞ்சைத்தானே எடுத்து அதை அருந்தினார். ஆனால் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற எண்ணிய பார்வதி தேவி, சிவபெருமானின் கண்டத்திலேயே (தொண்டை ஸ்ரீ அந்த நஞ்சை நிறுத்தி விட்டார். அன்றிலிருந்து சிவபெருமானும் திருநீலகண்டர் என்று அழைக்கப்படுகிறார்) பாற்கடலிலிருந்து இதன்பிறகு காமதேனு, லட்சுமி போன்ற தேவர்களும் மேலும் அரிய பொருகளும் பாற்கடலிருந்து தோன்றின! இறுதியாகத் தன்வந்திரி பகவான் தன் கையில் அமிர்த கலசத்துடன் வெளிவந்தார். அதைத் தாங்களே பங்கு கொள்ள என்று தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் பிரச்சினை எழுந்தது! தேவர்கள் மீண்டும் மகாவிஷ்ணுவிடம் ஓடினார்கள். அமுதத்தை தங்களுக்குப் பெற்றுத் தரும்படி வேண்டினார்கள்.
எனவே விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று. தன்னுடைய அழகால் அசுரர்களின் மதியினை மயக்கினார். தேவர்களை ஒரு வரிசையாகவும், அசுரர்களை எதிர் வரிசையாகவும் அமர்த்தி, முதலில் மிகவும் சாமர்த்தியமாகத் தேவர்களுக்கு அளித்தார்.
இந்தச் சூழ்ச்சியைத் தன்னுடைய ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்டு விஷ்வபாகு என்ற அசுரன் சாமர்த்தியமாகத் தேவர் உருவம் எடுத்துக் கொண்டு, சூரிய, சந்திரர்களிடையில் வந்து அமர்ந்து கொண்டார். பின்பு அமிர்தம் அவரது கைக்கு வந்தவுடனே, மிகவும் அவசர அவசரமாக உட்கொண்டார். சந்தேகமடைந்த சூரிய சந்திரர்கள் விஷ்வபாகு என்ற அந்த அரக்கனின் சூழ்ச்சியைத் திருமாலிடம் காட்டிக் கொடுத்தனர். இதையறிந்த திருமாலும் அரக்கன் மேல் மிகவும் கோபம் கொண்டு, அமிர்தம் ஊற்றயி சட்டு வந்தால் (கரண்டி), அசுரனின் உடலைத் துண்டித்துவிட்டார். அமுதம் உண்டதால் அந்த அரக்கன் சாகவில்லை! பாம்புவின் உடலைப் பெற்றுச் சிரஞ்சீவியானான்.
விஷ்வபாகு என்ற அந்த அரக்கனின் உடலானது பாம்புவின் தலையைப் பெற்றுக் கேது (Kethu) வானர், விஷ்வபாகுவின் தலையானது பாம்புவின் உடலைப் பெற்று இராகுவானது.
நைசிர்க (இயற்கை) பலத்தில் இராகுவும், அதைவிடக் கேதுவும் பலம் பெற்றவர்கள். சூரியனைவிட இவர்கள் பலம் பெற்றவர்கள் (மற்ற ஆறு கிரகங்களைவிடப் பலம் வாய்ந்தவர் சூரியன்தான்) இந்த இராகு கேது பற்றிய புராணக்கதை வாசகர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் சுருக்கமாக இந்தக் கதையை கொடுத்துள்ளேன்.

சிவபெருமான், ஆலகால நஞ்சை உண்ட பின்பு தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஆனந்த தாண்டவம் ஆடினார். அம்பாளும் அவருடன் இணைந்து ஆடினார். இதையே பிரதோஷ கால நடனம் என்பார்கள். அந்த அரிய சிவபார்வதி நடனத்தைத் தேவர்கள் அனைவரும் கண்டு களித்தனர். தங்களது வேதனைகளையும், தோல்விகளையும், பாவங்களையும் தேவர்கள் போக்கிக் கொண்டனர். அந்தப் புண்ணியதினம்தான் பிரதோசம் என்று அழைக்கப்படுகிறது! திரயோதசி திதி வரும் தினத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ நேரம் மிகவும் புண்ணியமானது. எந்த ஒரு பாவத்தையும் நீக்கி வல்லது! பிரதோஷ காலவிரதமே அனைத்து விரங்களயும்விட, மிகவும் சக்தி வாய்ந்தது எனக் கருதப்படுகிறது!

இது புராண நூல் இல்லை என்றாலும், இராகு, கேதுகளின் பிறப்பைப் பற்றியும் வாசகர்கள் அறிந்து கொண்டால்தான் இராகு, கேதுக்களின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். வெளிநாட்டினருக்கு, இந்தக் கதை தெரிந்ததால்தான் இராகுவை Dragons Tail என்றும், கேதுவை Dragons Head . என்றும் அழைத்தனர்.
இந்த எண் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது! மற்ற எண்களெல்லாம், மனிதனின் பிராத்தனைகளுக்கும், சக்திக்கும், வசியங்களுக்கும் கட்டுப்பட்டவை! ஆனால் இந்த 7 எண் மட்டும் இறைவனின் சர்வ வல்லமை மிகுத் எண்ணாக உள்ளது!
இவர்களது பேச்சில் எப்போதும் பரம்பொருள், விதி, இறைவன் என்ற வார்தைகள் மிகுந்திருக்கும் 7ம் எண்ணானதும் இளமைக் காலத்தில் போராட்டங்களையும், வறுமையையும் (பெரும்பாலோர்க்கு)க் கொடுக்கும். ஆனால் நடு வயதிற்கு மேல் பெருத்த யோகங்களையும், பெரும் செல்வத்தையும் கொடுத்துவிடும். இவர்கள் தங்களின் கடுமையான உழைப்பில் வந்த பணத்தை, ஏழைகளின் நல்வாழ்க்கைக்காகவும், ஆலயத் திருப்பணிகளுக்காகவும், பொதுத் தொண்டிற்காகவும் அனாதை ஆசிரமத்திற்காகவும் செலவழிப்பார்கள்.

இவர்கள் உடையிலே எளிமையும், ஆனால் சுத்தமும் இருக்கும். தங்களது கடமையிலேயே மிகவும் கவனமாக இருப்பார்கள். இவர்களது செயல்களில் ஒரு கண்ணியம், கட்டுப்பாடும் இருக்கும். உலகத்தை உய்விக்க வந்த இயேசு கிறிஸ்து (Jesus Christ) ஆதிசங்கராச்சாரியார், ரவீந்திரநாத தாகூர் ஆகியோரெல்லாம் இந்த 7ம் எண்ணில் பிறந்தவர்களே!
இவர்களுக்குச் சித்து விளையாட்டுக்கள் எல்லாம் எளிதில் கைகூடும்! இவர்கள் உலகப் பயணம் செய்து, தங்களது அனுபவங்களை உலகத்தாருக்கு அழகுடன் எடுத்துரைப்பார்கள். பொருளாதார நிலை 7ம் எண் அன்பர்களுக்குத் திருப்திகரமாக இருக்காது! வேதனைகளும், சோதனைகளும் இவர்களைத் தொடர்ந்து வரும். எந்த ஒரு செயல் தொடங்கினாலும் அதை நிறைவேறுவதற்காகப் பல தடைகளைச் சந்திக்க வேண்டி வரு. கேது பகவான் கொடுக்க ஆரம்பித்தால் அதை வேறு யாரும்(கிரகங்கள்) அழிக்கவோ, தடுக்கவோ முடியாது என்பது சோதிட உண்மையாகும். எப்படியும் நல்ல வளமான வாழ்க்கையைத் தங்களது வாழ்நாளில் அடைந்து விடுவார்கள்.
7ம் எண்ணின் பலம் குறைந்த அன்பர்கள் பலர் உயர் கல்வி அமைந்திருந்தும், திறமைக்கேற்ற ஊதிம் கிடைப்பது மிகுந்த தடைப்படும். பெரும்பாலான 7&¢ம் எண்காரர்கள் இதனை நினைத்து வேதனையும், வாழ்க்கையில் விரக்தியும் அடைகின்றனர்.

பல இலட்சக்கணக்கான மூலதனத்தைப் போட்டும், செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காணாத நபர்களின் எண்கள் 7 ஆக இருப்பதைக் காணலம். அதே போன்று இந்த எண்காரர்கள் தொழில் திடீரென தாழ்ந்து மஞ்சள் கடிதம் (Insolvency Petition) கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கும் ஆளாகின்றார்கள்.

ஆனால் இந்த அன்பர்கள் சலிக்காமல் மனோ தைரியத்துடன் வாழ்க்கையில் போராடுவார்கள். 3ம் எண்காரர்கள், போன்று இவர்களும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள். அண்ணன் சொத்து எடுத்துக் கொண்டாரா, பரவாயில்லை! மனைவி அவமதிக்கிறாளா& என் தலைவிதி! என்று இருப்பார்கள். உற்றாரும், ஊராரும் மதிப்பதில்லையே என்னை ஒருநாள் மக்களும், உறவினர்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையும், எதையும் தாங்கிக் கொள்ளும் மனோபலமும் உண்டு! மனத்தில் கற்பனை வளரும். பிரபஞ்ச சக்தியுடன் உடனடித் தொடர்பும் இவர்களுக்கும்க் கிடைக்கும். தங்களது வாழ்க்கையில் கடினமாக உழைத்துத்தான் முன்னேற வேண்டுமே தவிர அடுத்தவர்கள், உறவினர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது!
ஒன்பது எண்களிலும் 9ம் எண்ணுக்கே முன்கோபம் உண்டு. அதை அடுத்து இந்த 7ம் எண்காரர்களுக்கும் முன்கோபம் அடிக்கடி வரும். இந்தக் குணத்தினாலேயே, இவர்களது நல்ல செயல்களும், குணங்களும் மக்களால் மறக்கப்படுகின்றன!
பொதுவாகத் தங்கள் மனத்தில் உள்ளதை அப்படியே வெளியில் சொல்லிவிட மாட்டார்கள். இவர்கள் ஆத்மபலம் மிகுந்தவர்கள். அடுத்தவர்களின் தூண்டுதலை எதிர்பார்க்கமாட்டார்கள்.
இவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் போராடுவார்கள், மக்களுக்காக மனம் விரும்பி உழைப்பார்கள். அவர்களின் செய்நன்றியைப் பிரதிபலனாக எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதே இவர்களின் உயர்ந்த குணமாகும்.

இவர்களது தொழில்கள்
இவர்கள் சினிமா நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பார்கள். இந்த எண்காரர்கள் பிரபல பாடர்களாக, கலைஞர்களாக, கவிஞர்களாக, புகழ்பெற்ற எழுத்தாளர்களாக பெரிய விடுதிகளின் உரிமையாளர்களாக இருப்பார்கள்.
சவுளித் தொழில், பெட்ரோல், டீசல், பால், தயிர், சோடா பானவகைகள், ஐஸ்கிரீம், புகையிலைப் பொருள்கள்(பீடி, சிகரெட்) விற்பனை போன்ற தொழில்கள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். திரவ சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்களும் இவர்களுக்குப் பெருத்த இலாபங்களைக் கொடுக்கும். உத்தியோகங்களில் சிறப்பிருக்காது! அதாவது பதவி உயர்வுகள் ஏதாவது ஒரு காரணம் முன்னிட்டு இவர்களுக்குத் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும். சமையல் கலைகளிலும், பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

சட்டம், நீதித்துறை ஆகியவற்றிலும் வேலைகள் அமையும். மருந்துக் கடையும் இவர்களுக்குச் சிறந்த இலாபத்தைத் தரும். அயல்நாட்டு வியாபாரங்களும், ஏற்றுமதி& இறக்குமதி வியாபாரமும் இவர்களுக்குச் சிறந்தது! பத்திரிகை வெளியிடுதல், வியாபாரம் இவர்களுக்கு ஒத்துவரும்.
ரேடியோ, டெலிவிஷன், டெலிபோன், (STD, ISDபூத்) Fax, Xerox கடை ஆகியவையும் அமைக்கலாம். இவர்கள் சினிமா சம்பந்தப்பட்ட எந்தத் தொழிலிலும் ஈடுபடலாம். நடிப்பு, இயக்கம், படப்பிடிப்பு சம்பந்தமான அனைத்திலும் இவர்கள் தொடர்ந்து முயன்றால் முன்னேறலாம்.
போட்டோ ஸ்டூடியோ, கடிகாரம் (Watch) போன்ற தொழில்களும் சிறந்தவை! சிற்பம், சங்கீதம், நாட்டியம் போன்றவையும் சிறந்தவையே!
திருமண வாழ்க்கை
இல்லறத் துறவிகள் என்பவர் இவர்கள்தான். இவர்களுக்குத் திருமணம் காலம் கடந்துதான் நடக்கும். குடும்பத்தினர்கள் இவர்களின் திறமையை பாராட்டுவது அரிதாகும். திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். சில பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். பெரும்பாலோர் சுமாராகத்தான் இருப்பார்கள். தொழில் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டிலும், வெளியூரிலும் இருப்பவர்கள் இவர்கள்தான்.
இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். 8&ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும். திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது! 9ம் எண் நடுத்தரமானதுதான். இல்லற வாழ்வில் மட்டும் ஏனோ தகுந்த வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமைவதில்லை. பிரிவு சோகமும் இவர்களைத் தொடர்ந்து வரும்.
இவர்களது நண்பர்கள்
1, 2, 5, 6 தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். 2ம் எண்காரர்களில் இவர்களுக்கு பெருத்த உதவியும், முன்னேற்றமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலும் இவர்களுக்கு ஒத்துவரும்.
நோய்கள்
1. மனக்கவலைகளும், மனச்சோர்வும் அடிக்கடி இவர்களைப் பாதிக்கும். சிறிய தொல்லைகளையும் பெரிதுபடுத்தி, கவலைப்படும் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இவர்களுக்குச் சீரணக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள் போன்றவற்றால் அடிக்கடி பாதிப்பு உண்டு.
மலச்சிக்கலுக்கு, ருமேட்டிஸம் (Rhymatism) போன்ற பல நோய்களும், தோல் வியாதிகளும் இவர்களுக்கு ஏற்படும்.
உடம்பில் நீர்த்தாகம் அதிகமுண்டு. எனவே ரசமுள்ள பழங்களை அடிக்கடி உணவில் கொண்ண வேண்டும். உடம்பில் கட்டிகள், கொப்புளங்கள் அடிக்கடி வரும்.
இவர்களுக்கு மண் பாத்திரங்களில் செய்யப்படும் உணவுகள், பானங்களால் நன்மையே விளையும். இவர்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்கள் இதனால் கட்டுப்படுத்தப்பட்டு விடும்.

கேது யந்திரம் & கேது & 39
14 9 16
15 13 11
10 17 12

கேது மந்திரம்
பலாச புஷ்ப ஸ்ங்காஸம்
தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்!

எண் 7& சிறப்புப் பலன்கள்
இப்போது உலகில் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் 7ம் எண்காரர்களின் வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம். இது நெப்டியூன் என்னும் கிரகத்தைக் குறிப்பாக இருக்கிறது என்று மேல்நாட்டினர் கூறுவர். இதைச் சந்திரனின் பிரதிபலிப்பு என்றும் கூறுவார்கள்.
இவர்கள் தெய்வீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள். கடவுள் பக்தி அதிகம் நிறைந்தவர்கள். மனஅமைதி குறைவானவர்கள். இவர்கள் மனத்தில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த எண்களில் பிறந்தவர்கள் உள்ளூரில் புகழ் பெற முடியாது. வெளியூர், வெளிநாடு என்று பணத்திற்காகவும், தொழிலுக்காகவும் புறப்பட்டு விடுவார்கள். தூரத்திலுள்ள நாடுகளின் மீது மிகுந்த ஆர்வமும், அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் அதிகமாக இருக்கும். பயண நூல்களை எல்லாம் விருபிப் படிப்பார்கள்.
இவர்களில் பெரும்பாலோர் நல்ல எழுத்தாளராகவோ, ஓவியர்களாகவோ, கவிஞர்களாகவோ ஆகின்றனர். சிறந்த நடிகர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள் எல்லாம் இவர்களே! 2&ம் எண்ணின் மறுபக்கம் இந்த எண்ணாகும். இவர்கள் தாங்கள் செய்யும் தொழிலில் எப்போதும் மிகுந்த ஈடுபாட்டோடும், நேரம் பார்க்காமலும் தொடர்ந்து ஈடுபடுவார்கள். குடும்பம் என்பது இரண்டாம் பட்சம்தான். பணம், தொழில் என்று எப்போதும் சுற்றுவார்கள். தர்ம ஸ்தானங்களுக்கும். தெய்வத் திருப்பணிகட்கும் செலவிடத் தயங்க மாட்டார்கள்.
7&ம் எண்காரர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களாகப் புகழ் பெறுவார்கள். தங்களது மதங்களில் தீவிரமாக நாட்டம் கொள்வார்கள். வழக்கமான பாதையில் செல்வது இவர்களுக்குப் பிடிக்காது. எனவே, மக்களின் சீர்திருத்தத்திற்காகப் போராடுவார்கள்.
இவர்களுக்குப் பிரபஞ்ச இரகசியங்கள் எல்லாம் எளிதில் கிடைத்துவிடும். இவர்களின் கனவுகள் பலிதமாகும். அனைத்து செயல்களையும் அறிந்து கொள்ளும் உள்ளுணர்வு நிறைந்தவர்கள். ஐம்புலன்களுக்கும் எட்டாத அரிய செயல்களையும் இயற்கையிலேயே உள்ளுணர்வாக அறிவார்கள். இவர்களிடம் பிறரை வசியப்படுத்தும் சக்தியுண்டு! மிக எளிதாக எவரையும் இவர்கள் வசியப்படுத்தி விடுவார்கள். கடுமையான உழைப்பும், எதையும் ஒழுங்காகவும், சரியாகவும் செய்து முடிக்கும் இயல்பும் இவர்களை வெற்றிப் பாதையில் ஏற்றிவிடும். இராஜயோகம், மந்திரம், தியானம் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள். முழு மனதுடன் அவைகளை அப்பியாசிப்பார்கள். இவர்கள் சுத்தமான ஆடைகளையே விரும்பி அணிவார்கள். இல்லறத் துறவிகளாகவே பெரும்பாலோர் இருப்பார்கள்.
வார்த்தைகளை இவர்கள் நிதானமாகவே பேசுவார்கள். யாரிடமும் கலகலப்பாக இருக்கமாட்டார்கள். ஏதோ சிந்தனையில் இருப்பது போல் தோன்றுவார்கள். ஒரு பெரிய காரியத்தை எடுத்துக் கொண்டு, மிகுந்த பொறுமையுடன் செயலாற்றி, வெற்றி பெற்றும் விடுவார்கள்.
இவர்களுக்கு இளவயதில் பல தடைகளும் கசப்பான அனுபவங்களும் ஏற்படும். திருமணம் அமைவதில் தாமமமாகும். திருமண வாழ்விலும் பல தடைகள் உண்டு; வேலை விஷயமாகவோ, அல்லது வேறு பிரச்சினைகள் காரணமாகவோ, அடிக்கடி மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிய நேரிடும்.
கேதுவின் ஆதிக்கம் குறைந்தால், கெட்ட காரியங்களிலும் துணிந்து ஈடுபடுவார்கள். காவி உடை கட்டிய வேஷதாரியாவார்கள். இவர்களது முயற்சிகளெல்லாம், ஏதாவது ஒரு காரணத்தால், கடைசி நேரத்தில் பாதிக்கப்படும். மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை பலபேருக்கு அமையும். சிறு வயது முதலே, தன்னம்பிக்கைதான் இவர்களது முதல் நண்பன் 7&ம் எண்காரர்கள் பிறக்கும்போது, அவர்கள் குடும்பத்திற்குப் பல சோதனைகளும், விரயங்களும் ஏற்படும். இளம் வயதிற்குப் பின்புதான்(25 வயதிற்குப் பின்பு) இவர்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டத் திருப்பங்கள் ஏற்படும்.
இவர்கள் பெரிய மதத் தலைவராகவோ, கலைஞராகவோ, தொழிலதிபர்களாகவோ முன்னேறிப் பெரும் பணம், புகழ் குவிக்கும் யோகம் உண்டு.
தங்களுக்கு வரும் இடையூறுகளைக் கண்டு கலங்கமாட்டார்கள். உடல், பொருள், ஆவி மூன்றையுமே பொது வாழ்க்கைக்கென அர்ப்பணம் செய்வார்கள். எவ்வளவு வந்தபோதிலும், தங்களது லட்சியத்தைக் கைவிடாமல், பிடிவாதத்துடன் செயலாற்றி, வெற்றி அடைவார்கள்.
மனைவி மட்டும் பல அன்பர்களுக்குத் திருப்திகரமான அமையாது. அப்படி அமைந்துவிட்டால் பிரிவும், மனைவிக்கு நோய்களும் அடிக்கடி ஏற்படும். சில சமயங்களில் மட்டு கலகலப்பாகப் பழகுவார்கள். பல சமயங்களில் தனிமையை விரும்புவார்கள். 6&ம் எண்காரர்கள் எதையும் பணத்தில் நாட்டம் கொண்டு பார்ப்பார்கள். ஆனால் இவர்களோ கலைக்காகவே அதில் ஈடுபடுவார்கள். இவர்கள் அரசியலில் ஈடுபட்டால், மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவே, தங்களது வாழ்க்கையைச் செலவிடுவார்கள்.
உடல் அமைப்புறி Physical Appearance
இந்த எண்காரர்கள் பொதுவாக உயரமும், சற்று மெலிந்த உடலும் கொண்டிருப்பார்கள். உடல் உறுப்புகள் மிகவும் கச்சிதமாக அமைந்திருக்கும். மூக்கு சற்று நீண்டு வளைந்து காணப்படும். கை, கால் விரல்கள் திருத்தமாகவும் அழகுடனும் இருக்கும். சில அன்பர்களுக்குச் சிறு உடல் குறைவும் அமைந்து விடுகிறது.
அதிர்ஷ்ட இரத்தினங்கள் Lucky Gems
இவர்களுக்கு வைடூர்யம் (CAT'S EYE) இரத்தினமே மிகவும் அதிர்ஷ்டகரமானது! சந்திர காந்தக்கல்லும் (MOONSTONE) நன்மையளிக்கக்கூடியதே!
MASSAGATE மற்றும் OPAL (வெள்ளை நிறம்) ஆகிய இரத்தினக் கற்களையும் உபயோகிக்கலாம். நன்மையே தரும். TIGER-EYE எனப்படும் கல்லும் யோகமான பலன்களைக் கொடுக்கும்.
அதிர்ஷ்ட தினங்கள் LUCKY DATES
ஒவ்வொரு மாதமும் 2, 11, 20, 29ந் தேதிகள் மிகுந்த அதிர்ஷ்டகரமானவை. 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் நன்மையே அளிக்கும்.
7, 16, 25 ஆகிய நாட்கள் சுமாரான பலன்களையே கொடுக்கும். எனவே தவிர்த்து விடவும். கூட்டு எண் 7 அல்லது 8 வரும் நாட்களையும் ஒதுக்கி விடவும். அதே போன்று கூட்டு எண் 2 மற்றும் 1 வரும் நாட்கள் அதிர்ஷ்டமானவை.
அதிர்ஷ்ட வர்ணங்கள்
வெண்மை நிறம் மிகவும் ஏற்றது. இலேசான மஞ்சள், பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களும் சிறந்தவையே. கரும் சிவப்பையும், கருப்பு நிறத்தையும் தவிர்க்க வேண்டும். ஞிவீsநீஷீ(பல வர்ண) வர்ண உடைகளும் அதிர்ஷ்டமானவை.

7&ஆம் தேதி பிறந்தவர்கள்:
வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உடையவர்கள். இவர்களுக்கு மனைவியும் வெளிநாடு, அன்னிய சம்பந்தம் அல்லது அடுத்த ஜாதி போன்றவற்றில் அமைவர். இவர்கள் மிகவும் கண்டிப்பு மிக்கவர்கள். நேர்மையை மிகவும் மதிப்பார்கள். ஆன்மிகத்தில் மிகுந்த விருப்பமுடையவர்கள். நல்ல ரசிப்புத் தன்மையும் உடையவர்கள். மற்றவர்களின் கருத்தைக் கேட்பவர்கள். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படும். மனைவியை ஓரளவு அனுசரித்துச் சென்றால் நல்ல வாழ்க்கை அமையும்.

16&ஆம் தேதி பிறந்தவர்கள் : 
இவர்கள் கலை உள்ளம் நிறைந்தவர்கள். துணிச்சலும் அறிவுத் திறமையும் உண்டு. நன்றாக முன்னுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் திடீரென தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு பொருள்களை இழக்கும் அபாயமும் உண்டு. எனவே, கவனமாக இருக்க வேண்டும். மனோசக்தி மிகுந்தவர்கள். இவர்களுக்கு குழந்தை பிறப்பது சற்றுத் தாமதமாகும். இவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். முறை தவறிய காதல் விவகாரங்களில் ஈடுபடாதிருக்க வேண்டியது மிகவும் அவசியம். திடீர்ப் புகழ் உண்டு.
25&ஆம் தேதி பிறந்தவர்கள்: இவர்கள் தெய்விகத் தன்மை நிறைந்தவர்கள். மக்களக்கு வழிகாட்டவே பிறந்தவர்கள். சிறந்த கற்பனைவாதிகள். குடும்ப வாழ்க்கை சரிவர அமையாது. எனவே ஆன்மிகத் தலைவராகவோ, நீதிபதியாகவோ மாறி விடுவார்கள். பேரும் புகழும் அடைவார்கள். இவர்கள் நல்ல திறமைசாலிகள். இவர்கள் அரசியலிலும் ஈடுபட்டு எம்.எல்.ஏ, எம்.பி போன்ற பதவிகளை அடைந்து, மக்களுக்கு உண்மையான சேவைகள் செய்வார்கள்.

எண் 7க்கான (கேது) தொழில்கள்
இவர் ஆகாயத்தோடு தொடர்புடைய தொழில்களில் வெற்றியைத் தருபவர். Computer, Sattelite தொழில்கள், Cable Operators போன்ற தொழில்களில் ஈடுபடுவார்கள். உத்தியோகத் துறையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காது.
இவர்கள் தண்ணீரின் மூலம் செய்யும் தொழில்களில் வெற்றி பெறுவார்கள். சமையல் தொழில், சித்திரம் வரைதல் தொழிலும் நன்கு வரும்.
இவர்கள் மத விஷயங்களில் தீவிரமாக ஈடுபடுவார்கள் அல்லது எதிர்ப்பார்கள். பெரிய புகழும், பொருளும் இறுதிக் காலத்திற்குள் சம்பாதிப்பார்கள். மதவழச் சொற்பாளர்கள், கம்ப்யூட்டர் கல்வி பயிற்றுவிப்பாளர்களாகவும் வெற்றி பெறுவார்கள். பலர் வெளிநாடுகளில் பணியாற்றுவார்கள்.
மர விற்பனை, மரச்சாதனங்கள் விற்பனை, பாத்திரங்கள் தயாரித்தல் T.V. Computerஉற்பத்தி செய்தல் மற்றும் பழுது பார்த்தல் தொழிலிலும் நன்கு அமையும்.
மருந்துகள், மருத்துவம் தொடர்பான தொழில்கள், வியாபாரங்கள் அமையும். மிகப்பெரிய நடிகர்கள், நடிகைகள் கலைஞர்கள் இவர்களே!
கதை, கவிதை, வேதங்கள் ஆன்மீகம், சமூக சேவை செய்தல், Grainite Tiles வியாபாரம் போன்றவையும் ஒத்து வரும்.
பிராணிகளைப் பிடிக்கும் தொழில், விஷ சம்பந்தமான பொருட்கள் தயாரித்தல் போன்றவையும் நன்கு அமையும். சூஷ்மமான மூளைத் தொழிலாலான Scientist, Research துறை, Space-craft துறையும் நன்கு அமையும். நியாயம், நேர்மையை அதிகம் மதிப்பவர்கள் இவர்கள். நீதிபதிகள், வக்கீல்கள், மருத்துவர்கள் (Doctors) ஆகிய தொழில்களும் நன்கு இருக்கும். பலர் அரசியல் வானிலும் பிரகாசிப்பார்கள்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் நன்கு அமையும். தொழிலுக்காக குடும்பத்தினரை அடிக்கடி பிரிவார்கள்.

Numerology, tamil Numerology, எண் ஜோதிடம், எண் 7 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.