கருந்துளை வழியாக வந்து செல்லும் வேற்று கிரகவாசிகள்!

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து ள்ளனர். பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் அடிக்கடி வந்து செல்கின்றார்கள், பூமி முழுவதும் அவர்கள் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றவாறு பல செய்திகள் அன்றாடம் வெளி வந்த வண்ணமே இருக்கின்றது.

   
இருந்தாலும் உண்மையில் பூமி வாசிகளுக்கு அவ்வாறான பிரபஞ்சங்களுக்கு இடையே ஓர் விண்வெளி பயணத்தினை மேற்கொள்ள முடியவில்லை என்ற கேள்விக்கு இன்று வரை விளக்கம் கிடைக்கவில்லை வேற்றுக்கிரகவாசிகள் பூமியைத் தாக்கவும் ஆயத்தமாகி வருவதாக மேற்குலக ஊடகங்களில் அதிக செய்திகள் வெளிவருகின்றன.ஆனாலும் அது சாத்தியம் எனவும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு எவ்வாறு வந்து செல்கின்றார்கள் என்ற கேள்விக்கும் கருந்துளை என்பதை வழியாக காட்டுகின்றார்கள் விஞ்ஞானிகள்.

கருந்துளை எனப்படுவது தனது எல்லைக்குள்ளே செல்லும் ஒளி உட்பட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியில் இருக்கும் ஒரு பகுதியாகும். குறிப்பாக ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் இதில் இருந்து தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பது எதனையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. அதே சமயம் நட்சத்திரங்களின் இறுதிக்கட்டத்திலேயே கருந்துளை உருவாகி வருகின்றதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான மர்மமான கருந்துளைகள் மூலமாகவே ஓர் உலகில் இருந்து மற்றொரு உலகிற்கு வேற்றுக்கிரக வாசிகள் பயணிக்கின்றார்கள் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் இதனை ஒப்பு கொண்டுள்ளார். அத்தோடு பூமி முழுவதும் இவ்வாறான கருந்துளைகள் நிறைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதோடு, அவ்வாறான கருந்துளைகள் அளவில் மிகச் சிறியதாக இருக்கும் காரணத்தினால் அவற்றை எம்மால் கண்டு பிடிப்பது இலகுவானது இல்லை.

மேலும் குறிப்பிட்ட நேரத்தில் இவை உருவாகி மறைந்து விடுவதால் அதனை எம்மால் பயன்படுத்திக் கொள்ள முடிவது இல்லை. என்றாலும் அவ்வாறான கருந்துளைகளை செயற்கையாகவும் உருவாக்க முடியும். அதனை கண்டு பிடித்து விட்டால் வேரு பிரபஞ்சத்திற்கு எம்மால் பயணிப்பது இலகு எனவும் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.

இதே வகை கருத்து வேற்றுக்கிரக வாசிகள் பூமியை வந்து செல்வதிலும் ஒத்துப்போகின்றது. அதாவது குறிப்பிட்ட நேரப்பகுதியில் மட்டுமே வேற்றுக்கிரகவாசிகளின் கலங்கள் பூமியில் காணப்படுகின்றது. எங்கே வருகின்றார்கள்? எப்படி வருகின்றார்கள்? என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கின்றது. ஆக அவர்களின் பாதை இவ்வாறான கருந்துளைகளே எனவும் அடித்துக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்து போனது எமது சூரியனில் இருந்து வேற்றுக்கிரகவாசிகள் சக்தியை உறுஞ்சுவதாக அண்மையில் நாசா வெளியிட்ட காணொளி. இதன் மூலம் வேற்றுக்கிரக வாசிகள் எத்தகைய கதிர் தாக்கத்தையும், வெப்பத்தினையும் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பத்தில் பயணிக்கின்றார்கள் எனவும் கூறப்படுகின்றது.

அவர்கள் நட்சத்திரங்களின் சக்திகளைப் பயன்படுத்தி அதன் மூலமாகவே வேரு உலகங்களுக்கு பயணம் செய்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. எப்படி எனினும் அந்த அளவிற்கு தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்த வேற்றுக்கிரக வாசிகளின் தொழில் நுட்பத்தை நாம் நெருங்க இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும் என்பது தெரிய வில்லை.

ஆனாலும் அவர்கள் திடீரென்று பூமியைத் தாக்குவார்கள் எனில் நரகத்தை கண்முன்னே காட்டிவிட்டு சென்று விடுவார்கள் என்ற அச்சம் தற்போது மேற்குலகத்தில் அதிகமாக நிலவி வருகின்றது. ஆனாலும் எப்போதும் அதற்கு தயாராக எமது பூமின் சக்திக்கு ஏற்ப அதி பயங்கர ஆயுதங்களும் உருவாக்கப்பட்டும் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.