பெங்களூர் அருகே ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றுபவர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வேலையின் காரணமாக அத்திப்பள்ளியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார்.சுரேஷ் விடுமுறையின் போது தனது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அப்படி வந்து செல்லும்போது இவரது வீட்டிற்கு அருகே வசித்து வந்த வள்ளி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
வள்ளிக்கு கணவர் மற்றும் எட்டு வயதில் ஒரு மகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சுரேஷ்க்கும், வள்ளிக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இதனால் வள்ளியை பார்ப்பதற்காகவே சுரேஷ் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சுரேஷ்க்கு அவரது பெற்றோர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ததாக தெரிகிறது. இதனையறிந்த வள்ளி, சுரேஷிடம் போன் மூலம் விசாரித்திருக்கிறாள். வள்ளிக்கு விஷயம் தெரிந்ததையடுத்து சுரேஷ் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார். சுரேஷின் திருமணத்திற்கு வள்ளி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
வள்ளியையும், அவரது மகளையும் அத்திப்பள்ளியில் உள்ள தனது ரூமிற்கு கூட்டிவந்து சமரசம் செய்ய முயன்றிருக்கிறார். அப்போது வள்ளியிடம் உனக்கு திருமணமாகி மகள் இருக்கிறாள். எனக்கு இனிமேல் தான் திருமணமாக போகிறது. எனக்கு திருமணம் ஆனாலும் உன்னையும் வைச்சுக்கிறேன் என்றும் சுரேஷ் கூறியிருக்கிறார்.
ஆனால், சுரேஷின் எந்த பேச்சுக்கும் வள்ளி இணங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் எனக்கு இடையூறு செய்தால் உன்னைக் கொன்றுவிட்டு உனது மகளையும் பலாத்காரம் செய்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.
இதனால், ஆவேசமடைந்த வள்ளி, சமையல் செய்யும் குக்கரால் சுரேஷின் தலையில் அடித்திருக்கிறார். பின் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தனது மகளுடன் வீட்டிற்கு வந்திருக்கிறார். சுரேஷை கொலை செய்த வள்ளியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒரு பெண்ணால் இப்படியும் கொலை செய்ய முடியுமா என்று போலீசாரே பதறிப்போனதாக கூறுகின்றனர்.